ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் தேர்தல் விதிகளையோ அரசியல் அமைப் பையோ பகுதிபகுதியாக திருத்துவதற்கு அரசாங்கம் தயா ரில்லையென்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். நடைபெறவுள்ள தேர்தலில் மக்கள் வழங்கவுள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில், எல்லாத் திருத்தங்களை ஒரே நேரத்தில் செய்வதற்கே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராகவுள்ளார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அரசியல் தீர்வுக்காக தேசிய ஒருமைப்பாட்டுக்கு வருவதற்கு ஜனாதிபதி எண்ணியுள்ளாரென தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அதனை மக்களுக்கு சமர்ப்பித்து அதன் அடிப்படையில் தீர்வைக்கான முற்படுவதாகவும் அவர் கூறினார். நாரஹேன் பிட்டியிலுள்ள தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சில் நேற்றுக்காலை விசேட செய்தியாளர் மாநாடு இடம்பெற்றது. இதன்போதே அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாமல் செய்ய வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி கோரியுள்ள போதிலும் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை என்று கூறிய அமைச்சர், அன்று அரசுக்கு ஆதரவு வழங்கிய ஜே.வி.பி. திடீரென அரசிலிருந்து விலகி அரசுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியது. அரசாங்கத்துடன் ஒப்பந்தத்தை செய்து கொண்ட மக்கள் விடுதலை முன்னணியே அந்த ஒப்பந்தத்தை மீறி அரசி யலிலிருந்து விலகிக்கொண்டது.
நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகளின்படி தனியான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை நிறுத்தவோ அரசியல் ரீதியில் வேறு ஒரு கட்சிக்கும் உதவி செய்ய தேவையான வாக்குப் பலமோ தற்பொழுது இல்லாமல் போயுள்ளது. இந்நிலையிலேயே ஜே.வி.பி. இவ்வாறான கோரிக்கைகளை விடுக்கின்றது. இந்நிலையில் பொதுவான மாற்றத்தை தவிர பகுதி பகுதியான மாற்றங்களை மேற்கொள்ள அரசு தயாரில்லை.
இதேவேளை, தேர்தல் ஆணைக்குழு ஒன்றை நியமித்து தென்மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் கயந்த கருணா திலக்க எம்.பி.யின் கூற்று தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமைச்சர், தேர்தல் ஆணைக்குழுவை நியமித்தோ சட்டதிட்டங்களை மாற்றியமைத்தோ தேர்தலை வெற்றி கொள்ள முடியாது. அதற்கு பதிலாக மக்கள் மத்தியில் சென்று மக்களின் மனதை வெல்லவேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
1977ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர்.ஜயவர்தனவும், 1996ம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் தேர்தல் ஆணைக்குழுவை நியமித்தா வெற்றி கண்டனர் என்று அமைச்சர் கேள்வி எழுப்பினார். கிழக்கு மாகாணத்திலிருந்து தொடர்ச்சியாக நடை பெற்ற தேர்தல்களில் அரசுக்கு அதிகூடிய வெற்றிகள் கிடைத்ததாக தெரிவித்த அமைச்சர், ஊவாவை விட தென் மாகாண தேர்தலில் மக்களின் ஒத்துழைப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.