கொழும்பு மருதானை தொழில் நுட்பக் கல்லூரியில் நாளை 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள டெக் 115 கண்காட்சி ஊடாக தொழில் சந்தை ஒன்றை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொழில் மற்றும் தொழில் நுட்ப பயிற்சி அமைச்சர் பியசேன கமகே 19 ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 2;30 க்கு இந்தக் கண்காட்சியை வைபவ ரீதியாக திறந்து வைக்க உள்ளார்.
இந்தக் கண்காட்சியும் தொழில் சந்தையும் தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 9.00 மணிவரை நடைபெற உள்ளது.