யாழ்ப் பாணத்துக்கும் வவுனியாவுக்குமிடையே இருவழிப் பயணமாக தினமும் ஆயிரம் பேர் பயணம் செய்கின்றனர். யாழ். நகரிலிருந்து தினமும் முற்பகல் 11 மணிக்கு ஏழு இ.போ.ச. பஸ்களும் குளிரூட்டப்பட்ட இரு தனியார் சொகுசு பஸ்களும் படையினரின் பாதுகாப்புடன் வவுனியா நோக்கி புறப்பட்டு பிற்பகல் 3 மணியளவில் வவுனியா டிப்போவை வந்தடைகின்றன.
இந்த பஸ்கள் மாலை 4 மணிக்கு மீண்டும் வவுனியா றம்மியா கவுஸ் இராணுவ முகாம் முன்பாகவிருந்து புறப்பட்டு இரவு 8 மணியளவில் யாழ் நகரை சென்றடைகின்றன.
வவுனியாவிலிருந்து பயணம் செய்வோர் உரிய பத்திரத்தினை சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும். யாழ். நகரிலிருந்து வந்தவர்கள் பயண அனுமதிப் பத்திரத்தை சமர்ப்பித்து பஸ் பதிவுகளை மேற்கொள்ளலாமென அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமும் இந்த சேவை நடைபெற்று வருகின்றது. இதில் சுமார் ஆயிரம் பேர் போக்குவரத்து செய்கின்றனர்.