வடக்கின் வசந்தம் கருத்திட்டத்தின்கீழ் வடக்கில் 20 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் மரமுந்திரிகையைப் பயிரிட இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மன்னார் பிரதேசத்தில் 6000 ஏக்கரில் நடப்பட்டிருந்த மரமுந்திரிகை மரங்களை புலிகள் தறித்து அழித்துள்ளனர். இதன்பின்னர் இப்பிரதேசத்தில் மரமுந்திரிகைப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படவில்லை என மரமுந்திரிகைக் கூட்டுத்தாபன பிரதித் தலைவர் பிரியநாத் பியதாச தெரிவித்தார்.
நாட்டில் தற்போது வருடமொன்றுக்கு 11ஆயிரம் தொன் மரமுந்திரிகை உற்பத்தி செய்யப்படுகின்றது. இதனை எதிர்வரும் ஐந்து வருட காலத்துக்குள் 50 ஆயிரமாக உயர்த்தவும் மரமுந்திரிகை உற்பத்தி நாடுகளில் முதல் 10 நாடுகளுக்குள் இலங்கையை உள்ளடக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.