‘இரு இளைஞர்கள் கொலை; அங்குலானையில் பெரும் பதற்றம் – பொலிஸார் மீது கல் வீச்சு; ஓஐசீ உட்பட 7 பேர் இடமாற்றம்

angulana.jpgஅங்குலான பொலிஸாரால் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறி பிரதேசவாசிகள் நேற்றுக் காலை முதல் அங்குலான பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டம் செய்ததுடன் தாக்குதல்களையும் மேற்கொண்டனர்.

பிரதேசவாசிகள் நடத்திய தாக்குதல்கள் காரணமாக பொலிஸ் நிலையம் சேதமாக்கப்பட்டதுடன் பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் காயமடைந்துள்ளனரென கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த தனுஷ்க உதயகுமார (வயது – 21), தினேஷ் தரங்க (வயது – 27) ஆகிய இரு இளைஞர்களே கொல்லப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளவென 3 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமாகிய ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தின்போது கடமையில் இருந்த பொலிஸ் பொறுப்பதிகாரியும் அவருடன் இணைந்து கடமையில் ஈடுபட்டிருந்த ஆறு பொலிஸாரும் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அந்த இடத்திற்கு புதிதாக இன்ஸ்பெக்டர் ஒருவரும், உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் 12 பொலிஸ் கான்ஷ்டபிள்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :-

அங்குலான கூட்டுறவு கடைக்கு அருகில் வசிக்கும் இளைஞர்கள் இருவரும் நேற்று 13ம் திகதி அதிகாலை 2.30 மணியளவில் அங்குலான பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரால் அழைத்துச் செல்லப்பட்டனர் என்று பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு இளைஞர்களின் சடலங்களும் அங்குலான பொலிஸ் நிலையத்துக்கு அண்மையில் உள்ள பாலத்திற்கு அருகிலும், ரயில் பாதைக்கு அருகிலும் கிடந்துள்ளன. அவர்களது உடலில் துப்பாக்கிச் சூட்டு காயங்களும் காணப்பட்டன.

இந்தச் சம்பவத்தை அடுத்து ஆத்திரமடைந்த பிரதேச மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு ஸ்தலத்திற்கு இராணுவம் அழைக்கப்பட்டதுடன் கண்ணீர் புகை பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது.

இரண்டு இளைஞர்களின் கொலைகளுக்கும் அங்குலான பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களே பொறுப்பு கூறவேண்டும் என்றும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

அதிகாலை 2.30 மணியளவில் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட தனது மகன் விடியும் போது சடலமாக கிடப்பது எவ்வாறு என்று அவரது பெற்றோர்கள் கேள்வி எழுப்பினர். அன்றைய தினம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொறுப்பதிகாரி உட்பட சகலரும் கைதுசெய்யப்பட்டு பக்கச் சார்பற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

இதேவேளை இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டமைக்கான எந்தவித எழுத்து மூல ஆவணங்களும் இல்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பான மஜிஸ்திரேட் விசாரணைகளும் நேற்று மேற்கொள்ளப்பட்டன.

இந்தக் கொலையைக் கண்டித்து பிரதேச மக்கள் நேற்று நண்பகல் வரை ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பிரதேச வாசிகளால் பொலிஸ் நிலையம் சுற்றி வளைக்கப்பட்டதால் அதன் பொறுப்பதிகாரி உட்பட பொலிஸார் வெளியேற முடியாமல் இருந்தனர். பின்னர் கலகம் அடக்கும் படையினரினதும், இராணுவத்தினரினதும் உதவி பெறப்பட்டு அங்குலான பொறுப்பதிகாரி ரி. டபிள்யூ. நியுடன் உட்பட சகலரும் மீட்டெடுக்கப்பட்டனர்.

அவரை ஏற்றிச் சென்ற வாகனம் மீதும் பொதுமக்கள் கற்கள் எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தக் கல் வீச்சு காரணமாக ஊடகவியலாளர் ஒருவரும் காயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் காரணமாக கரையோர ரயில் போக்குவரத்து நண்பகல் 12.00 மணிவரை பாதிக்கப்பட்டிருந்தன. பிரதேச மக்கள் ரயில் பாதைகளை இடைமறித்தும் எதிர்ப்புக்களை தெரிவித்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • Rupasinghe
    Rupasinghe

    Those who promote police killings, Now see what is happening? Where is the rule of law? You will regret this trend when one of your loved one get shot dead and typical hand grenede excuse given or abducted and asaulted by mistake. This killingspree by poice should be stopped. Catch the gangsters confiscate their wealth and send them to prison. Why is secratary Gotabhaya silent on this killings?

    Reply
  • upul shantha
    upul shantha

    1. This is very funny, they just get away with murders with a simple transfer to another location. Is human life is so cheap in Sri Lanka.

    2. And yes he and all embroiled in this must be investigated. This is really really bad.

    3. So much for the Ranaviru mentality, the Police and all other law enforcement agencies must be reprimanded irrespective of their rank. We are so short sighted and that is seen in some of the remarks being made about those in IDP camps and those not in them etc.. what is happening now is the result lawlessness.

    4. whats the use. they need to be arrested and tried in a court of law.

    5. Is this the best this government/court can do? what is the use of transfer? they should be punished by law n order or soon this country will be in deep trouble…

    6. Keep on transfering will not solve the problems the Government has to take firm action against this kind of incidents (including SLIIT incident) police taking the advantage of Under world Clearing Program.

    7. Authorities should do something to stop these killings mealy transferring the police officer is not a solution, lots of news coming about that police and their kith and kin taken law and order on their hands.

    8. Punish the cops who are mis-using the power assigned within their jurisdiction.These are the underworld cops !!! ANGULANA residents, Elakiri, well done keep it up, small boy who is pointing finger at police,good courage, Malli-Bravo

    9. Those are war heros. We pay our salary for them and held Bodhi Pooja too to protec them while they were in war zone. Now, they turned guns to us.See the deferent.What we have to pay them ?

    10. Give him the same treatment, I think capital punishment is the best

    11. Please note subsequent to their transfer now they have been arrested. Let justice be done.

    12. where is the DIG? is he still incharge?

    13. I think people remember what Lasantha reminded us….. First they came for the Jews and I did not speak out because I was not a Jew. Then they came for the Communists and I did not speak out because I was not a Communist. Then they came for the trade unionists and I did not speak out because I was not a trade unionist. Then they came for me and there was no one left to speak out for me. ”So still lot to come in the future”

    14. how many innocent youths were killed by police in north & east. any policemam get arrested ??

    15. after winning the war, Govt.think that they can encounter anyone who is against UPFA. by hook or crook they want everyone to join SLFP. Some of Those who joined SLFP came from other parties not for anything but for fear of their lives. but stiil Govt Talks about DEMOCRACY / HUMAN RIGHTS. There is no difference even after the ethnic was is over. earlier the terrorism is done by LTTE. Now it is taken up by the Govt. That’s it.

    16. This is not the first incident that Police is misusing there power. What is the use of too many Police Officers in high ranking positions, if they fail to take right action at right time? If Mr. President needs to develop this country, he has to look all these type of violation without narrow political mind. All the peace expecting people in this country expect justice.

    17. Any news of the Killers of Lasantha Wickramtunga ? If KP can be caught in 2 months why not Lasantha’s murderers ?

    18. We agree that by now they should have caught Lsantha’s murderers but we also think that Richard Soyza’s murderers should have been caught at least decades ago! It is the case of ‘kettle calling the pot black’ !

    APPPE may Srilanka!!

    Reply
  • செல்வன்
    செல்வன்

    அங்குலான பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உள்ளிட்ட ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் சம்பந்தப்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்ததன் பேரிலேயே இக்கைது நடந்துள்ளது

    Reply
  • செல்வன்
    செல்வன்

    அங்குலான பிரதேசத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை பெண் ஒருவரை இளைஞர்கள் இருவர் கேலி செய்துள்ளனர். இது தொடர்பாக அந்தப் பெண் சார்பானோர் அங்குலான பொலிஸ் காவல் நிலையில் முறைப்பாடு செய்துள்ளனர். இதையடுத்து அன்றைய தினம் இரவு பொலிஸார் அவ்விரு இளைஞர்களையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

    இந்த நிலையில் இளைஞர்கள் இருவரும் மறுநாள் அதாவது நேற்று, வியாழக்கிழமை காலையும் வீடுகளுக்கு வந்த சேராததால் குடும்பத்தவர்கள் பொலிஸ் நிலையம் சென்று இளைஞர்கள் பற்றி விசாரித்துள்ளனர். எனினும் அவர்கள் இருவரையும் விடுவித்து விட்டதாக பொலிஸார் தெரிவிக்கவே குடும்பத்தவர்கள் பிரதேசவாசிகளுடன் இணைந்து இளைஞர்கள் இருவரையும் தேட ஆரம்பித்துள்ளனர்.

    இச் சந்தர்ப்பத்தில் மொரட்டுவ லுனாவ பாலம் பகுதியிலிருந்தும் இரத்மாலனை ரயில் பாதையோரமாகவிருந்தும் இரு சடலங்கள் மீட்கப்படவே அவ்விரு சடலங்களும் பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்களுடையதேயென குடும்பத்தவர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    இலங்கை அரசு பாதாளக் குழுவினரை ஒழித்துக் கட்ட நடவடிக்கை எடுக்க, பாதாளக் குழுவின் இடத்தை நிரப்ப சில பொலிஸார் முயல்கின்றனர் போல. இதைத் தான் சாண் ஏற முழம் சறுக்கிறதென்று சொல்லுறவை போல…..

    Reply
  • அருட்சல்வன் வி,
    அருட்சல்வன் வி,

    அங்குலானை கொலைச்சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவும் விசாரணை

    அங்குலானையில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பான விசேட விசாரணை ஒன்று மனித உரிமை ஆணைக்குழுவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களை தொடர்ந்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

    அங்குலானையில் கொலைசெய்யப்பட்ட இரு இளைஞர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டனரா என்பது குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்படும். இதற்காக சிரேஷ்ட விசாரணை அதிகாரிகள் அங்குலானைக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Reply