வவுனியா நகர சபைத் தலைவராக எஸ்.என்.ஜீ. நாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையாளருக்கு இன்று அறிவிக்கவுள்ளார்.
இந்த நகர சபைக்கான பிரதித் தலைவராக என்.எஸ்.முகுந்தரன் நிய மிக்கப்பட்டுள்ளார் என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.