வட மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமானது புதிய தொழில்நுட்பத்தின் அடிப் படையில் மீள் வடிவமைக்கப்பட்டு வட மாகாண ஆளுநர் மேயர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறியால் திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ் விணையத்தளத்தில் வட மாகாண சபையின் நிகழ்வுகள், ஆவணங்கள், சுற்று நிருபங்கள்வட மாகாண பிரதேச கோள வரைபடங்கள், பரீட்சைப் பெறுபேறுகள் மற்றும் வட மாகாணத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள் பற்றிய விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், வட மாகாணத்தில் அமுல்படுத்தப்படுகின்ற “வடக்கின் வசந்தம்’ தொடர்பாகத் தகவல்களும் வட மாகாணச் செய்திகளும் விரைவில் இதில் வெளியிடப்படவிருக்கிறது.
திங்கள் காலை 9.30 மணிக்கு ஆளுநரின் செயலகத்தில் நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் மாகாண சபையின் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், அமைச்சின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும் தகவல் செயற்பாட்டுக் குழு அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.