5 கிலோ எடையுள்ள20 கிளேமோர் குண்டுகள் நேற்று வானிலிருந்து மீட்பு – மன்னார் உப்புக்குளத்தில் சம்பவம்

mannar-van.jpgமன்னார் உப்புக்குளம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ எடையுள்ள 20 கிளேமோர் குண்டுகளுடன் கூடிய வானொன்றை இராணுவத்தினர் நேற்று அதிகாலை மீட்டுள்ளனர்.

கொழும்பு கல்கிஸ்ஸை பகுதியில் கைதான புலி உறுப்பினர்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் கூறியது.

கல்கிஸ்ஸை, படோபிடிய பகுதியில் வைத்து நேற்று முன்தினம் (10) இரு புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் பகுதியில் மற்றொரு புலி உறுப்பினரை கைது செய்யப்பட்டதாக ஊடக நிலையம் கூறியது.

இவர்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் படி ஹையஸ் வானொன்றில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த கிளேமோர் குண்டுகளே மீட்கப்பட்டன.

கொழும்பிலிருந்து சென்ற கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இந்தத் தேடுதலில் ஈடுபட்டனர். இந்த கிளேமோர் குண்டுகள் கொழும்பில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்காக மறைத்து வைக்கப் பட்டிருந்ததாக கைதான புலி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாக ஊடக மத்திய நிலையம் கூறியது. கைதான புலி உறுப்பினர்கள் தொடர்ந்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்படுகிறது.

Show More
Leave a Reply to மகுடி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • sanath ekanayake
    sanath ekanayake

    I believe this is not from LTTE, then who? Our imagination is running riot! Sooner we know is better.

    May be DULLEWE, knows him !!!!

    “One who protects Dhamma, will be protected by Dhamma”. We Sri Lankans are lucky that you escaped. Sri Lanka cannot think of a another leader like for at least another century!! May Triple Gems Bless You!!!!

    The way Police and the politicians have been fabricating stories to achieve their desired goals, it is hard to believe even if it is true. Lies after lies either to get sympathy or to fool the gullible masses.

    Reply
  • அல்வாய் அழகசுந்தரம்
    அல்வாய் அழகசுந்தரம்

    இலங்கைக்கு ஆயுதம் வழங்கி உதவியதில் புலிகளே முன்னணியில் இருக்கின்றார்கள். வெளி நாட்டில் வாழும் இலங்கையர் புலிகளுக்கு கொடுத்த பணமே இன்று இலங்கை ராணுவத்திற்கு ஆயிரக்கணக்கில் ஆயுதமாக சேர்ந்திருக்கிறது.
    நன்றி நன்றி

    Reply
  • மகுடி
    மகுடி

    இது வாஸ் குணவர்தன எனும் புலனாய்வு அதிகாரி , நிபுண ராமனாயக்க மீது நடத்திய தாக்குதல் பிரச்சனையை திசை திருப்புவதற்காக நடத்தப்பட்ட நாடகம் என தெரியவருகிறது. மன்னாரில் இருந்து வெடி பொருட்களால் நிரப்பப்பட்ட வாகனம் கொழும்பு கொண்டு வந்தே சோதனையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதில் சந்தேகம் கொண்டு நிமல் லெவிகே இச் சம்பவம் குறித்து பரிசீலிக்குமாறு ஒரு விசேட குழுவை பணித்துள்ளார். கடமையை செய்ய வேண்டியவர்கள் பாதாள குழு போல் செயல்படுவதாக சிங்கள அமைச்சர்கள் வாஸ் மீது கடும் கணைகளை தெரிவிக்கின்றனர்.

    Reply