வன்னி மாணவர்களின் நலன்களுக்கான கல்வியமைச்சின் குழுவில் தமிழர்கள் இல்லை

வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக செயற்படுவதற்கு கல்வியமைச்சின் செயலாளர் நியமித்த குழுவில் பெரும்பான்மையினத்தவர்கள் பெருமளவில் நியமிக்கப்பட்டுள்ளதுடன் தமிழர்கள் எவருமே நியமிக்கப்படாதது குறித்து தமிழ்க் கல்விமான்கள் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளனர். இக்குழுவில் ஏழு பெரும்பான்மையின அதிகாரிகளும் மூன்று முஸ்லிம் அதிகாரிகளும் உள்ளனர். முஸ்லிம் அதிகாரிகள் வடமாகாணத்தைச் சேராதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்குழுவினர் நலன்புரி நிலையங்களுக்கு ஆரம்பத்தில் நேரடியாகச் சென்றிருந்தனர். ஆனால் மொழிப் பிரச்சினையால் உரிய முறைப்படி இவர்களால் செயற்பட முடியவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே இக்குழுவில் வடமாகாணத்தைச் சேர்ந்த கல்வி அதிகாரிகளை நியமித்தாலே வன்னி மாணவர்களின் பிரச்சினைகள், தேவைகளைக் கண்டறிந்து விரைவாகச் செயற்பட முடியும் என வன்னி மக்களின் புனர்வாழ்வு மீள்குடியேற்ற, மீள் நிர்மாணத்துக்கான அமைப்பு கல்வியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்காக இந்த அமைப்பு தற்போது செயற்பட்டுவருகிறது

Show More
Leave a Reply to je Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

11 Comments

  • je
    je

    பேரினவாதம் அப்படித்தான். சிலருக்கு பேரினவாதம் இனிக்கிறது.

    Reply
  • thurai
    thurai

    சிஙகளவர்களையும் தமிழர்களையும் எதிரிகளாக்கி அரசியல் பிழைப்பு நடத்தியவர்களாலேயே இலங்கைக்கும் அழிவு தமிழர்களிற்கும் அழிவு.

    இதனைப் புரியாமல் இனவாதம் பேசுவது புத்திசாலித்தனமான செயலல்ல.ஆனையையும், சிஙகத்தையும் பழக்கி பிழைக்கத் தெரிந்ததே மனித இனம். மனிதருடன் மனிதனாக் வாழத் தெரியாமல் மொழி இனமென்ற கோசங்களை எழுப்பி ஒரு சாரார் பிழைப்பதும் இன்னொருசாரர் உணர்ச்சி வசப்பட்டு அழிவதும் தமிழருள்ழும்,இலங்கையிலும் சரியான தலைமைத்துவம் இல்லாமலேயே காரணம்.

    துரை

    Reply
  • மாயா
    மாயா

    முஸ்லீம்களும் தமிழர்கள்தானே? தமிழ் பேசும் மக்கள் தமிழர்கள் இல்லையெனில் மத ரீதியாக பிரிவினை கோர வேண்டி வரலாம். சில வேளைகளில் தமிழர்கள் சரியாக நடந்து கொள்ளாமல் இருக்கிறார்களோ என்னவோ?

    பெரும்பாலான தமிழர்கள் கடமையை விட தமது சாதிகளுக்கு அல்லது கட்சிகளுக்கு அல்லது தம்மை சார்ந்தவர்களுக்கு உதவுபவர்களாகவே கடந்த காலங்களில் முகாமில் செயலாற்றியிருக்கிறார்கள். அல்லது பயங்கரவாதத்துக்கு துணை போயிருக்கிறார்கள். நேர்மையாக இருந்தால் நிச்சயம் எல்லாம் சரியாகும்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    தமிழர்கள்தான் தமிழர்களுக்கு எதிரி என்பதை அரசு உணர்ந்துள்ளதால் இந்நிலை போலும். தமிழர்கள் பிரச்சனை தீர்வதை விட பிரச்சனை தொடர்வதையே விரும்புகிறார்கள். உதாரணத்துக்கு வன்னித் தேர்தலில் தோற்ற புளொட் சித்தார்த்தனது அறிக்கையில் இன்னும் புலி ஆதரவான தமிழர்கள் இருக்கிறார்கள் என்பதால்தான் கூட்டமைப்பு வெற்றி பெற்றது என பேசி மக்களை சினம் கொள்ள வைத்துள்ளது.

    தேர்தலுக்கான கவர்ச்சி புளொட்டிடம் இருந்ததாக பார்க்க முடியவில்லை. தேர்தலில் நின்றவர்களும் கவர்ச்சியானவர்களாக இல்லை. இந்த ஏழ்மை தோற்றம் எல்லாம் நம் மக்களுக்கு இவர்களாவது திறமையாக செயல்படுவதாவது என சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    புலிகள் மடத்தனம் செய்தாலும், புலிகளிடம் இருந்த கவர்ச்சியே மக்களை நம்ப வைத்தது. அதுபோல எதிர்காலத்தில் சற்று கலக்கினால் தமிழன் நம்புவான். படிக்காத கருணா கோட்டு சூட்டோடு ஆங்கிலத்தில் விளாசித் தள்ளும் போது , சித்தார்த்தனும் , டக்ளசும் தேசிய உடையும் சோலா பையோடும் திரியிற ரிப்போட்டர்கள் மாதிரி திரிந்தால் மக்களுக்கு அந்த திரில் வராது. எதிலும் கவர்ச்சி தேவை.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ’…படிக்காத கருணா கோட்டு சூட்டோடு ஆங்கிலத்தில் விளாசித் தள்ளும் போது , சித்தார்த்தனும் , டக்ளசும் தேசிய உடையும் சோலா பையோடும் திரியிற ரிப்போட்டர்கள் மாதிரி திரிந்தால் மக்களுக்கு அந்த திரில் வராது. ….’

    கவனம் நண்பன், சமாதானப் பேச்சுக்கு போன புலியளுக்கு இங்கிலீஸ் தெரியாது எனச் சொன்ன சங்கரிக்கு 424 வோட்டுகள் தான்! ஏற்கனவே சிக்கலில் இருக்கிற சித்தாத்தனை பப்பாவில ஏற வழி சொல்லுறியள்?

    Reply
  • KAMALAKANNAN.
    KAMALAKANNAN.

    IN BURMA THERE ARE FEW MINORITY GROUPS LIVE THERE BENGLIS IS ONE OF THEM BUT THEY HAST BEEN RECONIZED AS BURMES THEY STILL FIGHT FOR THEIR RIGHTS AND IN MALASIYA ONE MILLION LIVES THERE ONLY MINORITY YOUNG TAMILS WHOM KNEW TAMIL LANGUAGE BUT THEY CANT CALLED THEMSELF MALAY THEY STILL INDU, AND SOUT AFRICA AND REST OF THE WORLD AS WELL. IN SRILANKA MUSLIMS WHO BETTER IN TAMIL THEN THE TAMILS, THEY ARE GOOD WRITERS, SINGER AND MANY TALENT, BUT THEY DONT WANT TO CLAIM TO BE TAMIL MUSLIM. I THINK POLITICAL RESONS THEY MIGHT HAVE LOST FAITH IN TAMILS.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    கல்வி அமைச்சின் குழுவில் பதவி வகிக்க வேண்டியவர்கள் போர்களம் போய் மாண்டு போனார்கள். போர்களம் போகவில்லை என சிலர் மாள்ளடிக்ப் பட்டார்கள். மிகுதிப்பேர் உயிரையும் வாழ்வையும் பாதுகாக்க புலத்துக்கு வந்துவிட்டார்கள். இங்கேயெல்லாம் வந்து கல்விஅமைச்சில் தமிழன் இருக்கிறானா? எனப்பார்த்தா? நாமும் படிச்சோம். பிள்ளைகளையும் படிக்க வைத்தோம். டாக்டர்கள் பொறியியல்யாளர் அரசியல்வாதிகளாக வரவில்லையா? ஏன் நாளை ஒரு மகாத்மாக்கள் கூட உருவாகலாம்!.

    கேள்விகேட்பதற்கும் போராட்டம் நடத்துவதற்கும் குறைகளை கண்டுபிடிப்பதற்கும் ஒரு விவஸ்தை வேண்டாமா? குருவை போட்டுதள்ள அனுமதி கொடுத்த தமிழர் அல்லவா நாங்கள். மலையகமக்களின் வாக்குரிமை வாழ்வுரிமை பறிக்கப்பட்டால் நமக்கென்ன? நாங்கள் தமிழர் அல்லவா? விசேஷமா யாழ்பாணத் தமிழரல்லவா? வீட்டுவேலைக்கும் தேனீர்கடைகளுக்கும் தோட்டங்களைப் பார்க்கவும் “கூலிகள்” வந்தால் போதும். எமக்கு தேவைகள் வரும் போது மட்டும் “உறவுக்கு கை கொடுப்போம்” என்ற கோஷத்தை எழுப்புவோம். ஏன்னென்றால் நாம் தமிழர்கள்.

    Reply
  • BC
    BC

    //நண்பன் – சித்தார்த்தனும் ,டக்ளசும் தேசிய உடையும் சோலா பையோடும் திரியிற ரிப்போட்டர்கள் மாதிரி திரிந்தால் மக்களுக்கு அந்த திரில் வராது//
    உண்மை.கவர்ச்சியை மட்டுமே பார்த்து விரும்புபவர்கள் தான் இலங்கை தமிழர்கள்.
    இதனால் தான் புலி தலைவரும் ஸ்டைலான சபாரி உடையில் தோன்றினார்.

    கல்வியமைச்சின் குழுவில் தமிழர்கள் சேர்க்கப்பட்டால் அந்த தமிழர்களில் இயக்கத்திற்காக போராட வேண்டிய வயதில் இவர்களுக்கு எதற்க்கு படிப்பு என்று நினைக்க கூடிய தமிழரும் வந்து மாணவர்களின் தலையில் மண்ணை போடலாம் என்று அரசு யோசித்திருக்கலாம்.

    Reply
  • Rao
    Rao

    அறிவு ஜீவிகள் எல்லோரும் புலிகளின் காலத்தில் வெளிஎற்றப்பட்டர்கள்.
    இப்ப நாட்டில் அனுபவமிக்க தமிழ் அறிவு ஜிவிகளையும் புத்தி ஜிவிகளையும் எங்கே தேடுவது??

    Reply
  • Logan
    Logan

    தேசம் இணையம் தேசத்தில் வைத்துள்ள அக்கறைக்கு எப்படி நன்றி சொல்லாதிருப்பது? நீங்களும் உங்கள் கட்டுரை…………….. வன்னி மாணவர் நலன்களில் அரசுக்கு அக்கறையில்லை என எழுதுங்கோ இல்லை அக்கறை காட்டினால் தமிழாpல்லை அதுவும் யாழ்ப்பாணத் தமிழாpல்லை என்று எழுதுங்கோ! நடைமுறையில் எப்படிப் போகிறது எனப் பார்த்து விடயங்களைத் திருத்தும் போது பிரதேச மொழி சார்ந்தவர்கள் தேவை என்ற அவசியம் ஏற்பட்டால் அதைக் கேட்டுப் பெறலாம். அதைவிடுத்து குட்டையைக் குளப்பும் கட்டுரைகளை…………….. ……………….. ………… ……. அச்சேற்றாதீர்.

    வன்னித் தமிழ் யாழ்பாணமுமல்ல பாPட்சைத் தமிழ் பரவலாக இலங்கைத் தமிழ் என்பது தொpயாமலுமல்ல இஸ்லாமியர் மதத்தால் மட்டுமே மொழியால் தமிழின் ஆதிக்கத்தையும் இலக்கணம் இலக்கியத்தையும் நிலை நிறுத்திக்கொண்டிருப்பவர்கள்.

    கல்வி வரலாறு தொpயாத …………………. கட்டுரை எழுதக் கூடாது. இலங்கையின் பாடவிதான சபை கடந்த நாற்பதாண்டு வரலாற்றில் நுமான் உட்பட்ட மூன்று இஸ்லாமியரை தமிழ்பிராpவுக்கு வைத்திருந்த போது தமிழ் கல்வி பாழடிக்கப்பட்டதா?
    வீம்புக்குப் பேசுவதும் எழுதுவதும் ஒரு சமூகத்தை பாழடிக்கும் என்பதைப் பூpந்துகொள்ள வேண்டிய முதல் மனிதர்கள் நீங்கள்!.நேர்மையிருந்தால் இதை இப்படியே அச்சேற்றுங்கள்.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    நண்பர் லோகன்
    இலங்கை அரசு வன்னி மாணவர்களில் அக்கறையில்லை என்றே நான் கருதுகிறேன் இந்த மாணவர்கள் புலிகளின் கொலைக்களத்திலிருந்து வெளியேறி இத்தனை மாதங்களாக என்ன சுதந்திரமாகவா இருக்கிறார்கள் அல்லது நீங்கள்; இந்த மக்கள் சுதந்திரமாக இருப்பதாகவா கூறிக் கொண்டு கருத்து எழுதுகிறீங்கள். இலங்கை அரசுக்கு இந்த 3 மாதகாலம் போதும் நிலக் கண்ணிவெடிகளை அகற்ற ஆனால் இன்னும் அதை செய்து முடிக்கவில்லை என்பது ஒன்றே போதும்; அரசு என்ன செய்கின்றது என்பதை ஊகித்துக்கொள்ள: 30 வருடங்களாக இருந்த இயக்கத்தை திட்டமிட்டு ஒரு நாளைக்கு பல மில்லியன்கள் செலவழித்து பேராராடிய அரசு எத்தனை இராணுவத்தை இந்த நடவடிக்கைக்கு பாவித்தது எனபதும் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?

    அரசு இந்த இந்தளவு இராணுவத்தை 2 கிழமை உபயோகித்தாலே போதும் இந்த நிலக் கண்ணி வெடிகளை முழு வட மாகாணத்திலிருந்தும் அகற்றிவிடலாம். ஆனால் அப்படி செய்யவில்லை ஏன்? இங்கே தான் அரசின் பின்புல திட்டமிடலும் செயலாக்கமும் எதை நோக்கியுள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது.?

    வன்னி மாணவர்களுக்கு உதவி செய்வதாயின் வன்னி மக்களுக்கு உதவி செய்வதாயின் இந்த மூன்றாம் மாதம் வன்னி அகதி முகாம்களை மூடியிருக்கலாம்; அரசு போர் செய்த அதே வேகத்தில் இந்த மக்களை மீள குடியமர்த்த இயங்கவில்லை என்பதே எமது அபிப்பிராயம். இங்கே தான் சந்தேகங்கள் வலுக்கிறது. இதைத்தான் நாம் புலிகள் வன்னியில் அடைத்து வைத்திருந்த மக்களை அரசு முகாம்களில் அடைத்து வைத்திருக்கிறது என்று சொல்ல வருகிறோம் சிலவேளை புலிகள் பரந்த காட்டுப் பகுதிக்குள் இந்த சிறைச்சாலையையும் அரசு குறுகிய நிலப்பரப்புக்குள் சிறைச்சாலையையும் வைத்திருக்கிறதா? ஏன்று தமிழ்பேசும் மக்கள் குழம்பிக் கொண்டிருப்பதை உணரமுடியவில்லையா?

    இது ஒரு செய்தியாகத்தானே தேசம் நெற்றில் வெளிவந்துள்ளது. கட்டுரையாக அல்ல.

    அது இருக்க…
    முஸ்லீம்கள் தனியான இனம் என்று நாம் அங்கீகரிக்கிறோம் அதற்கு முதலாவது காரணம் புலிகள்; அவர்கள் ஒரு தனியான இனம் என்ற காரணத்தால் அவர்கள் மீது பாவித்த பலாத்காரமும் அவர்கள் தனியான இனமாக நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டியுள்ளது. இனிமேல் அவர்கள் தாம் ஒரு தனி இனமா? மத அடிப்படையிலான இனமா அல்லது தமிழ் மொழியை பேசும் தமிழ்பேசும் மக்கள் என்ற அடையாளத்துடன் தம்மை இனமாக வெளிப்படுத்துவார்களா என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கவேண்டும். நாம் எல்லோரும் தமிழ்பேசும் மக்கள் என்ற கோட்பாட்டுடன் இலங்கையில் தமிழ்பேசும் சிங்கள மொழிபேசும் மக்கள் என்ற கோட்பாட்டில் வாழமுடியும்.; பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் என்று ஆரம்பகால போராட்ட கருத்துக்களுக்கு சிலவேளை நாம் மீண்டும் வரலாம் பொறுத்திருக்க வேண்டியுள்ளது.

    அரசு அக்கறை காட்டினால் தமிழர் இல்லை என்று எழுதுங்கோ (செய்தி இப்படியாக வெளிவந்ததை குறிப்பிட்டு இருந்தீர்கள்) தமிழர்கள் இன்றும் அரசை நம்புகிறார்களா இல்லையா என்பதை கடந்த வவுனியா யாழ் தேர்தல்கள் எடுத்துக் காட்டியுள்ளதை அவதானிக்கவும்.

    அதுமட்டுமல்ல அரசுடன் கூட்டுச்சேர்வதைக்கூட அவர்கள் விரும்பவில்லை என்பதை அவதானிக்கவும். நல்ல உதாரணம் ஈபிடிபி யினர்க்கு யாழ்ப்பாணத்தில் நல்ல பெரும்பான்மை வாக்குகள் அளிக்கப்படாமை. காரணம் அரசுடன் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் நின்றதே என்று நான் கருதுகிறேன். ஈபிடிபி தனியாக தேர்தலில் தமது கட்சியின் பெயரில் தேர்தலை சந்தித்து இருந்தால் நல்ல பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருப்பார்கள் என ஒரு ஈபிடிபி உறுப்பினரே யாழ்பாணத்திலிருந்து தனது கருத்தை தேசம்நெற்றுக்கு கூறியிருந்தார்.

    அரசு ஈபிடிபியினர் மற்றும் கட்சிகள் மீது பிரயோகிக்கும் அழுத்தங்களையும் எம்மால் மிகவும் துல்லியதாக அவதானிகக் கூடியதாக உள்ளதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

    தமிழர்கள் இன்னும் அரசில் நம்பிக்கையில்லாது இருக்கும் சூழ்நிலையும் அரசு தமிழர்களை தெரிவு செய்யாது விட்டதும் பாரதூரமானதாவே நான் கருதுகிறேன் இப்படியான விடயங்களும் தமிழர்கள் அரசக்கு எதிராக போராட காரணமாக இருந்ததை ஏற்றுக்கொண்ட அரசு இதை எப்படி கவனம் எடுக்காமல் விட்டது.

    ஏன் நீங்கள் எழுதிய விடயங்களை சற்று கவனம் எடுக்கவும் நாம் தேசம்நெற் இலங்கை தமிழர்கள் தமிழ் பேசும் மக்கள் சம்பந்தமான எந்த விடயங்களுக்கும் களம் அமைக்க தயாராகவே இருக்கிறோம். இதுபற்றிய எந்த விவாதங்களுக்கும் தேசம்நெற் தயாராகவே உள்ளது.

    இஸ்லாமியர் மதத்தால் மட்டுமே மொழியால் தமிழின் ஆதிக்கத்தையும் இலக்கணம் இலக்கியத்தையும் நிலை நிறுத்திக்கொண்டிருப்பவர்கள். // இந்தவிடயம் யாரும் சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லாதது. இஸ்லாமியத் தமிழர்கள் தமிழர்க்கு செய்யும் தொண்டுகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. இஸ்லாமியர்கள் தமிழின் நாதமாக தமிழிலிருந்து பிரிக்கமுடியாத தொண்டாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.; அது அவர்களது மொழியும் அவர்களது வாழ்க்கையும் என்ற யதார்த்தத்தை மறந்து அவர்கள் தமிழுக்கு சேவை செய்கிறார்கள் என்று எமது உடைமையாக்கும் பழக்கத்தை மாற்றிக் கொள்ளவேண்’டும்

    இதன் காரணமாகவே இஸ்லாமியர்களும் தமிழ் பேசும் மக்கள் என்ற அடையாளத்தை போராட்ட ஆரம்பகாலங்களில் குறிப்பிடப்பட்டது. இதன் அடிப்படையில் இஸ்லாமியர்கள் தமிழ் இயக்கங்களில் பாரிய பங்காளிகளாக இருந்ததை யாரால் மறைக்க முடியும்.

    இஸ்லாமியர்கள் மீண்டும் தமிழ்பேசும் மக்கள் என்ற அடையாளத்துடன் வருவது அந்த இஸ்லாமிய மக்களினால் செய்யப்பட வேண்டிய முடிவு. அதற்கு நாம் யாரும் எதுவும் செய்ய முடியாது. இப்படியாக இஸ்லாமியர்கள் தம்மை முஸ்லீம்கள் என்ற அடையாளத்திலிருந்து தமிழ்பேசும் மக்கள் என்ற அடையாளத்திற்கு வர – தம்மை முஸ்லீம்கள் என்ற அடையாளத்தை (தமிழர்கள் சார்பில் புலிகளால் ஏற்ப்படுத்தப்பட்ட நம்பிக்கையின்மையே) உருவாக்க காரணியாக இருந்த காரணங்களின் அழிவே உதவி செய்யும். இதைவிட முஸ்லீம்கள் என்ற இனம் ஒருபலம் பொருந்திய இனமாக இலங்கைத் தீவில் இரண்டாம்தர இனமாக வளர்ந்த வரும் சந்தர்ப்பங்களும் உள்ளதையும் மறந்துவிடலாகாது.

    நண்பர் லோகன் எழுதிய கருத்துக்கள் என்னையும் கருத்துக்கள் எழுத தூண்டியது நன்றிகள்

    Reply