யாழ்ப்பாணத்தில் ஈபிடிபியும் வவுனியாவில் ரிஎன்எயும் வெற்றி

election000.jpg யாழ்ப்பாணத்தில் அமைதியாகவும் ஜனநாயக முறைப்படியாகவும் தேர்தல் நடைபெற்ற போதிலும் வாக்களித்தவர்களின் பங்களிப்பு குறைவானதாகவே காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது யாழ்ப்பாணத்தில் ஈபிடிபியினர் முழுமையான வெற்றி பெற்றுள்ளதாகவும் அறியப்பட்டுள்ளது.

வவுனியாவிலும் தேர்தல்கள் ஜனநாயக முறைப்படியும் அமைதியாகவும் நடைபெற்றதாகவும் வவுனியாவில் ரிஎன்ஏ 148 வாக்குகளால் 7ஆசனங்களையும், புளொட் 3 ஆசனங்களையும், இதர கட்சிகள் 2 ஆசனங்களையும் பெற்றுள்ளதாக அறியப்படுகின்றது.

வவுனியாவில் அளிக்கப்பட்ட தபால்மூல வாக்குகளில் ரிஎன்ஏ 86 வாக்குகளையும், புளொட் 65 வாக்குகளையும், அரசஆதரவு கட்சிகளின் கூட்டணி 25 வாக்குகளையும், முஸ்லீம் காங்கிரஸ் 2 வாக்குகளையும் பெற்றிருந்தது தெரிந்ததே. இதே விகிதாசாரத்தில் மக்கள் வாக்களித்துள்ளதும்; மக்கள் அரசை திட்டவட்டமாக புறம்தள்ளியே தமது பிரதிநிதிகளை தெரிவு செய்துள்ளததுமாக மக்கள் பலரும் அபிப்பிராயப்படுகின்றனர்.

Jaffna Municipal Council
Final Result
 
Party Name Votes % Seats
 
     United People’s Freedom Alliance  10602      50.67%      13
 
     Ilankai Tamil Arasu Kachchi  8008      38.28%     8
 
     Independent Group 1  1175       5.62%      1
 
     Tamil United Liberation Front  1007       4.81%     1
 
     United National Party  83       0.40%      0
 
     Independent Group 2     47   0.22%      0
 
Valid 20,922     93.90%
Rejected 1,358        6.10%
Polled 22,280        0.00%
Electors      100,417

Vavuniya Urban Council
Final Result
 
Party Name Votes % Seats
 
     Ilankai Tamil Arasu Kachchi    4279     34.81%      5 *
 
     Democratic People’s Liberation Front     4136     33.65%     3
 
     United People’s Freedom Alliance     3045    24.77%      2
 
     Sri Lanka Muslim Congress      587     4.78%         1
 
     United National Party     228     1.85% 0
 
     Sri Lanka Progressive Front  10     0.08%     0
 
     Independent Group 1      6        0.05% 0
 
     Independent Group 3     1       0.01% 0
 
     Independent Group 2      0     0.00% 0
 
Valid 12,292       95.66%
Rejected 558       4.34%
Polled 12,850      0.00%
Electors 24,626

Show More
Leave a Reply to thurai Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

26 Comments

  • senthil
    senthil

    புளோட்டின் கோட்டையாக கருதப்பட்ட வவுனியாவில் எதுவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் த.தே.கூட்டமைப்பு வென்றுவிட்டது. எனினும் யாழ்ப்பாணத்தில் 18 வீதமானவர்களே வாக்களித்து ஈபிடிபி வென்றபோதிலும் வாக்களிக்க அக்கறையில்லாத 80விதத்தினரின் உண்மையான ஆதரவு யாருக்கு என்பது இன்றைய நெருக்கடி மிகுந்த சூழலில் வெளிப்படுத்தவில்லை. இந்த இபிடிபியின் வெற்றியை வெற்றியாக கொள்ள முடியவே முடியாது. ஒட்டுமொத்தத்தில் புலிகள் இல்லாத சூழலில் வவுனியாவில் த.தே.கூ பெற்ற வெற்றி அதுவும் வவுனியாவில் மகத்தானது. இன்னமும் தமிழ்தேசியம் அழியவில்லை என்பதற்கு இந்த வெற்றி ஒன்றே போதும். இப்போதாவது தமிழ் தேசிய எதிர்ப்பாளர்கள் புரிந்துகொள்வார்களா?

    Reply
  • thalaphathy
    thalaphathy

    Dear Friends,

    What are your opinions and comments about northern polls in Sri Lanka?
    Please share your thoughts.

    Remarks:
    Please do not forget that we are students in the political subject.

    Thank you
    Best regards
    S. K.M
    Switzerland

    Reply
  • menike PK
    menike PK

    while 22 of the 24 incidents were of a minor nature, the two other were an altercation between EPDP and TULF in Jaffna an incident of shooting and assault in Bibile. However, nobody was killed or injured.

    Reply
  • bandulla
    bandulla

    Less than 20% of the Jaffna people participated the most RIGGED polls. How can you expect the TRUE measure when only 20% of the people voted. Plus, EPDP did lots of vote rigging.

    We have come to understand that 21% of the total votes in Jaffna was casted during this election. So, the UPFA has acquired 12.63 % of the elligible voters support in Jaffna and won JMC. Well done UPFA and longlive for SriLankan DEMOCRACY!What happened to the International society are you still sleeping ?

    people are scared to vote.How to bring a normal democratic situation in Jaffna. That is the most important problem of not only in jaffna but in the whole country.

    Reply
  • True Yalbani
    True Yalbani

    Friends,
    Normally in Jaffna municipality election 55% to 70% of cast their vote. But this time people are sad about the death of their national leader and also they don’t won’t to vote for the election under srilankan constitution they still supporting the concept of Tamil ealam.

    Reply
  • thurai
    thurai

    //இன்னமும் தமிழ்தேசியம் அழியவில்லை என்பதற்கு இந்த வெற்றி ஒன்றே போதும். இப்போதாவது தமிழ் தேசிய எதிர்ப்பாளர்கள் புரிந்துகொள்வார்களா?//

    இலங்கைத் தமிழரின் அரசியல் தமிழ்த்தேசியமும், சிங்கள எதிர்ப்பையுமே கருவாகக் கொண்டது. இதனாலேயே தமிழரிற்கும் இலங்கைக்கும் அழிவினை ஏற்படுத்தியது.

    இதற்கேற்ரவாறு சிங்கள அரசியல் தலைமையில் மாற்ரம் ஏற்பட்டால் மட்டுமே இந்த் அழிவிலிருந்து யாவரும் தப்பலாம். தமிழ்த்தேசியம் தமிழரை அழிவிற்கே கொண்டு செல்லும். தமிழ் மொழியை வைத்தே பிழைப்பு நடத்துவோரின் வெற்ரிகள் தற்காலிக வெற்ரியே.

    துரை

    Reply
  • suban
    suban

    வவுனியா மற்றும் யாழ் தேர்தல்லகளில் அரசு தோற்றாலும் வென்றாலும் அரசுக்கு வெற்றிதான். ஜனநாய வெற்றியாக இதை பறைசாற்றிக் கொள்ளும். வவுனியாவில் 140 வாக்க வித்தியாசத்தில்தான் கூட்டமைப்பு 2 மேலதிக ஆசனங்களைப் பெற்றிருக்கிறது. கூட்டமைப்பு பெற்றி வாக்குகளைவைிட வெற்றிலைச்சின்னமும் புளொட்டும் இணைந்து பெற்ற வாக்குகள் அதிகம். இதுவும் கூட்டமைப்புக்கு எதிரான வாக்குகளே!
    பெரும்பாலான மக்கள் தேர்தலில் அக்கறையில்லாதிருக்கின்றனர். கூட்டமைப்பின் கோரிக்கையோ புலம்பெயர்ந்த தமிழர் பேரவையின் வேண்டுகோளையும் கூட மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தத் தேர்தல் அற்ப நம்பிக்கையேனும் தோற்றுவித்திருக்கிறது. நம்பிக்கை வழிநின்று நல்லதொரு ஜனநாயகச்சூழலுக்கு மேலும் வழிகோலுவதே இன்றுள்ள தேவை.

    Reply
  • mike
    mike

    வடக்கில் மக்கள் சுதந்திரமாக வாழ வழி கிட்டும்வரை, எந்தத்தேர்தலிலும் எவருக்கும் நிரந்தர வெற்றி கிடைக்காது என்பதை முடிந்த தேர்தல் முடிவாக உணர்த்தியுள்ளது என்பதனை எவரும் மறுக்கமுடியாது. 50%த்தில் பெற்ற வெற்றி வெற்றியுமல்ல, 18%த்தில் வாக்குகள் நியாயமான தேர்தலுமல்ல.இதை உணராதவர்கள் அரசியல்வாதிகளுமல்லர்.

    Reply
  • T Sothilingam
    T Sothilingam

    யாழ்ப்பாணத்தில்:

    யாழ்ப்பாணத்தில் ஈபிடிபியினர் பல வருடங்களாக தொடர்ந்து மக்களுடன் ஈடுபாடு கொண்டிருப்பதனால் ஈபிடிபியினர் தனித்து இந்த தேர்தலை சந்தித்து இருந்திருந்தால் மக்கள் பெரும்பான்மையாக முன்வந்து வாக்களித்திருப்பார்கள் என்றும் அதுவும் பெரும்பான்மையினர் ஈபிடிபிக்கு வாக்களித்திருப்பார்கள் என்றும் எதிர்பார்க்க முடியும்.

    ஆனால் ஈபிடிபியினர் அரசுடன் கூட்டுச்சேர்ந்து தேர்தலை சந்தித்ததால் மக்கள் பெரும்பான்மையானோர் இவர்களையும் ஒதுக்கிவிட்டிருப்பார்கள் என்றே கருத முடியும். காரணம் மக்கள் இன்னும் இலங்கை அரசுடன் கூட்டுச்சேர்வதை விரும்பவில்லை என்றே கருத முடியும். இலங்கை அரசு ஒரு அரசியல்த்தீர்வை முன்வைத்து அமுல்ப்படுத்தியிருந்தால் சிலவேளை வரவேற்றிருப்பார்கள் – இதுவே யாழில் மக்களில் பெரும்பான்மையானோர் வாக்களிக்க செல்லாது பறக்கணித்தனர் என்றே கருதமுடியும்

    இலங்கை அரசு புலிகளின் அழிவின்பின்னர் தமிழ் மக்களின் அரசியல்த்தீர்வில் பேய்க்காட்டல் செய்யும் என்ற எதிர்பார்ப்பு பரவலாக யாழ் மக்களிடம் இருந்ததையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இதைவிட யாழ் மக்கள் மிகவும் கவனமாக இந்த அரசியல்வாதிகளிடமும் இயக்கங்களிடமும் நடந்து கொண்டு தமது அன்றாட ஜீவாதார பிரச்சினைகளை தீர்க்கும் முகமாகவே இந்த அரசியல்க்கட்சிகளுடனும் இயக்கங்களுடனும் ஜால்ரா போட்டுக்கொண்டிருக்கிறார்களோ என்றும் கருத இடமுண்டு காரணம் இந்த மிகவும் ஆபத்தான காலகட்டங்களில் தமது உயிரை பாதுகாக்கும் பொருட்டு வாழ்வை நடாத்திய மக்கள் மிகவும் தந்திரோபாயமாக இலங்கை அரசுக்கு எதிர்ப்பையும் காட்டியுள்ளார்கள் என்று ஏன் எதிர்பார்க்கக் கூடாது.

    யாழ்மக்களில் தமது ஜீவாதாரத்துக்கு பல உதவிகள் செய்த ஈபிடிபியை ஆதரித்தும் இனிமேலும் தமது உதவிகளுக்கு ஈபிடிபி தேவை என்றும் ஆதரித்தும் இனப்பிரச்சினையில் எமக்கு இன்றும் தீர்வை முன்வைக்காத அரசுக்கு எதிர்ப்பையும் காட்டியுள்ளனர் என்றே கருத முடியும்.

    ஈபிடிபி யினரக்கு அடுத்ததாக மக்கள் ரிஎன்ஏ யினரையே ஆதரித்ததும் இது மக்கள் கட்சிகள் ஜக்கியமாக – கூட்டாக இயங்குவதையே விரும்புவதையும் வெளிப்படுத்தி தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னணி பிரபல்யமான அரசியல்வாதி ஆனந்த சங்கரிக்கு அளிக்கப்பட்ட வாக்குகளின் தொகையின் அடிப்படையிலும் த.வி.கூ கடந்தகால தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய மிதவாத கட்சியை புறம் தள்ளியுள்ளதையும் அவதானிக்க வேண்டும்.

    வவுனியாவில்:

    புளொட் அமைப்புக்கும் ரிஎன்ஏ யினருக்கும் வாக்குகள் அடிப்படையில் பாரிய வித்தியாசம் இல்லை ஆனால் புளொட் தனித்து நின்று பெற்ற வாக்குகளே இந்த தொகையானது ஆனால் ரிஎன்ஏ கூட்டு கட்சிகள் பெற்ற வாக்குகளே ஆகும். புளொட்க்கு அளிக்கப்பட்ட வாக்குகளில் முன்னாள் நகரசபைத் தலைவர் திரு லிங்கநாதன் மிகப் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றிருந்தார் வவுனியாவில் புளொட் அமைப்பினருக்கு பலமான ஒரு அடித்தளம் வவுனியாவில் உள்ளதை அவதானிக்க முடியும். இது இவர்களது அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு பலமாகவே பார்க்கப்பட வேண்டும். தற்போதுள்ள விகிதாசார தேர்தல் அடிப்படையில் புளொட் சிலஆசனங்களை குறைவாக பெற்றுக்கொள்ள முடியும் ஆனால் பலமான எதிர்த்தரப்பினராகவும் ரிஎன்ஏயினரில் கடந்தகால புலிகளுடனான கூட்டுறவு அரசியலுக்கு பலமான விமர்சனத்தையும் ரிஎன்ஏ மீதான கடந்தகால புலிகளின் அரசியல்த் தவறகளுக்கான பொறுப்பையும் புளொட்டினால் புரியவைக்க முடியும்.

    வவுனியா தேர்தலிலும் மக்கள் அரசையும் அரச ஆதரவு கூட்டணியையும் எதிர்த்தே வாக்களிக்கப்பட்டுள்ளதை கவனிக்க வேண்டும் மக்கள் மிகப் பெரும்பான்மையினர் புளொட்டையும் ரிஎன்ஏயுமே ஆதரித்துள்ளது இதற்கு சான்றாக உள்ளது வவுனியா பிரதேசத்தில் புளொட் அமைப்பின் மிகப்பெரும்பான்மையான ஆதரவுப் பிரதேசங்கள் இரண்டில் மக்கள் சில அசம்பாவிதங்கள் காரணமாக மதியம் 12 மணிவரை வெளியே வந்து வாக்களிக்க தயங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு விடயம் சிலவேளை ஒரு 148 வாக்காளர்களை வாக்களிக்க செல்லாது தடுத்திருக்க முடியும். இது வவுனியா பிரதேசசபையின் தலைவிதியை மாற்றியிருந்திருக்கும்.

    ரிஎன்ஏ யின் கட்சிகளில் ரெலோ (சிறீ-ரெலோ அல்ல)மிகக் கூடுதலான வாக்குகளையும் பெற்று நகராட்சித் தலைவராக வரவுள்ளார். ரெலோ கடந்தகாலங்களில் வவுனியா வன்னிப்பிரதேசங்களில் 3 பா.உறுப்பினர்களை கொண்ட கட்சி என்பதும் குறிப்பிடத்தக்கது. இது ரெலோ அமைப்பினருக்கு வவுனியாவில் பலமான ஒரு அடித்தளம் உள்ளதையும் கடந்த காலத்தில் நிரூபித்துள்ளது.

    சிலர் ரிஎன்ஏ யினரின் வெற்றி வாக்குகளை புலிகளின் ஆதரவு வாக்குகள் என்ற தப்புக் கணக்குகளையும் இங்கே வைக்கவும் வாய்ப்புக்கள் உண்டு. புலிகளின் இறுதி 7 மாத காலங்களில் புலிகளின் பிரதேசங்களின் நிலைமைகளை புரிந்து கொள்ளாதவர்கள் அல்லது புரிய மறுப்பவர்கள் இந்தமாதிரியான வாததிற்கு இவற்றை இட்டுச் செல்வர்.

    வடக்குபிரதேச மக்களில் த.வி.கூட்டணியினரின் ஆதரவுதளம் இயக்க அரசியலுடன் மல்லுக்கட்டுவதை இந்த தேர்தல் முடிவுகள் தெரிவித்துள்ளதுடன் வவுனியா பிரதேமக்கள் தமிழர் அமைப்புக்கள் கூட்டிணைவாக செயற்பட வேண்டும் என்ற விருப்புடையவர்களின் வாக்குகளையும் இந்த ரிஎன்ஏயினர் பெற்றிருக்க வாய்ப்புக்கள் உண்டு.

    இந்த இரண்டு தமிழ்ப் பிரதேசங்களின் தேர்தல் முடிவுகள் வடமாகாணத் தமிழ்ரக்ள் இலங்கை அரசின் மீது நம்பிக்கை அற்றவர்களாகவே இருப்பதையும் இது கடந்தகால இராணுவ நடவடிக்கைகளின் பாதிப்பினாலும் தமிழ்பேசும் மக்களின் அரசியல்த்தீர்வில் இலங்கை அரசு நடந்து கொள்ளும் நடைமுறைகளையும் இந்த பிரதேச மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே கருத முடியும்.

    Reply
  • thurai
    thurai

    //Friends, Normally in Jaffna municipality election 55% to 70% of cast their vote. But this time people are sad about the death of their national leader and also they don’t won’t to vote for the election under srilankan constitution they still supporting the concept of Tamil ealam.// True Yalbani

    Jaffna Mayor Thuraiyappa was killed by your death National leader. At that time Jaffna people never voted to your Leader. Tamil ealam only for Asylum seekers who make illegal money, not for Tamils in Sri Lanka.

    Thurai

    Reply
  • Ranjan
    Ranjan

    வவுனியா நகரசபைத் தேர்தலின் போது நங்கூரம் சின்னத்தில் போட்டியிட்ட புளொட் வேட்பாளர்களின் விருப்பு வாக்குவீதம் பின்வருமாறு..! // யாழ். மாநகரசபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டவர்களின் விருப்பு வாக்குகளின் விபரங்கள்..!

    வவுனியா நகரசபைத் தேர்தலின்போது ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) நங்கூரம் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் விருப்பு வாக்குவீதம் பின்வருமாறு, முதன்மை வேட்பாளரான ஜீ.ரி.லிங்கநாதன் 2958, குமாரசாமி 952, பார்த்தீபன் 832, ராஜேஸ்வரன் ரஞ்சன் 796, எஸ்.ரவீந்திரன் 631, என்.சோதிமதி 626, ஜோயல் நிரோஷன் 618, எஸ்.ருசாந்த் ரமணன் 615, யோகராஜா 606, ஏ.தர்சன் 507, எஸ்.நாகலிங்கம் 396, எஸ்.சிவம் 396, சுகந்தராஜா 231, கே.நிரோசன் 119, சண்முகநாதன் 100. வவுனியா நகரசபைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளிலும் அதிகூடிய விருப்பு வாக்குகளை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) முதன்மை வேட்பாளரான முன்னாள் வவுனியா நகரபிதா விசுபாரதி என்கிற ஜீ.ரி.லிங்கநாதன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    யாழ். மாநகரசபைத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டவர்களின் விருப்பு வாக்குகளின் விபரங்கள் சில இங்கு தரப்படுகின்றன. வீ.ஆனந்தசங்கரி 424, கெங்காதரன் 286, ரட்ணசிங்கம் 190, தி.சிறிதரன் 136, தர்மலிங்கம் நடேன் 128, மோகன் 122, சர்மிளா 110, ரவி 104, செல்லன் கந்தையா 85, நடராஜா மதி 70, ஆசீர்வாதம் பெர்ணான்டோ 63, குணசீலன் 46 ஆகும். தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் (பத்மநாபா) அணியினர் இணைந்து இத்தேர்தலில் போட்டியிட்டிருந்தனர்.

    வவுனியாவில் வெற்றிலைச் சின்னத்தில் அரசு சார்பில் போட்டியிட்ட ஈ.பி.டி.பி, ஈரோஸ், சிறிடெலோ அமைப்புகளின் சார்பில் போட்டியிட்ட எவரும் தெரிவாகவில்லை!

    வவுனியா நகரசபைத் தேர்தலில் அரசு சார்பில் போட்டியிட்ட ஈ.பி.டி.பி, ஈரோஸ், சிறிடெலோவுக்கும் புளொட்டுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்புகள் மற்றும் புளொட் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதை தடுக்கும் முயற்சிகளில் மேற்படி கட்சிகள் குறிப்பாக ஈரோஸ், சிறிடெலோ பொலீசாரின் உதவியுடன் முனைப்புக் காட்டியமையே தமிழரசுக் கட்சி இத்தேர்தலில் வெற்றிபெறக் காரணமாக இருந்ததாகவும், இந்நிலையில் 143வாக்குகளால் இரண்டாம் நிலைக்கு புளொட் வந்ததாகவும் அதனாலேயே போனஸ் ஆசனங்கள் இரண்டும் தமிழ் கூட்டமைப்புக்குச் சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக புளொட் அமைப்புக்கு பெருமளவு செல்வாக்கு மிக்க பிரதேங்களான கோயில்குளம், திருநாவற்குளம் போன்ற பிரதேசங்களில் ஆளும் கட்சியுடன் போட்டியிட்ட ஈ.பி.டி.பி, ஈரோஸ், சிறிடெலோ அமைப்பினர் மக்கள் வாக்களிக்கும் நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. மேற்படி வெற்றிலைச் சின்னத்தில் அரசு சார்பில் போட்டியிட்ட ஈ.பி.டி.பி, ஈரோஸ், சிறிடெலோ அமைப்புகளின் சார்பில் போட்டியிட்ட எவரும் இத்தேர்தலில் வெற்றி பெறவில்லையென்றும் தெரிவிக்கப்படுவதுடன், வெற்றிலைச் சின்னத்தில் அரசுடன் இணைந்து போட்டியிட்ட முஸ்லிம் பிரதிநிதியொருவரும், சிங்களவர் ஒருவருமே அரசு சார்பில் போட்டியிட்டு தெரிவானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Reply
  • je
    je

    யாழ் மாநகரசபைக்கு இடம்பெற்ற தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என்று நல்லூர் கந்தனிடம் வேண்டுதல் வைத்த ஈ.பி.டி.பி.யினரின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு கந்தன் அருள் பாலித்துள்ளார். கந்தனின் துணையால் யாழ் மாநகரசபையின் ஆட்சியை அரசுடன் இணைந்து வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்ட ஈ.பி.டி.பி கட்சி பெற்றுக்கொண்டது.

    புகைப்படங்களுடன் நெருப்பு விசமத்தனமான செய்தியை வெளியிட்டுள்ளது. எப்போதோ எடுக்கப்பட்ட புகைப்படங்களை இப்படி நக்கலடிப்பதற்கு பாவிப்பது தவறாகும். விமர்சனங்ளை செய்யுங்கள். புலி போல் செயற்படாதீர்கள்.

    Reply
  • Anonymous
    Anonymous

    யாழ்ப்பாணம் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களின் போது மக்களின் வாக்களிப்பைத் தடுத்த கட்சிகள்-

    யாழ். மாநகரசபை, வவுனியா நகரசபை மற்றும் ஊவா மாகாணசபை ஆகியவற்றுக்கான தேர்தல்கள் நேற்றையதினம் இடம்பெற்றது. இந்நிலையில் யாழ். மாநகரசபைத் தேர்தலின்போது போலியான தேசிய அடையாள அட்டைகள் பல தயாரிக்கப்பட்டு வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு வாக்களிக்கப்பட்ட சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளன. இந்நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிலர் கைதுசெய்யப்பட்டும் உள்ளனர். ஆளும் கட்சியில் போட்டியிட்ட ஈ.பி.டி.பியைச் சேர்ந்தவர்கள் இந்நடவடிக்கையினில் ஈடுபட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவிர வவுனியா நகரசபைத் தேர்தல் நேற்றுக்காலை ஆரம்பமானபோது வவுனியா பட்டாணிச்சூர் பகுதிகளில் ஆளும்தரப்பின் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலானவர்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினருக்குமிடையில் முறுகல் நிலை மற்றும் கைகலப்பு என்பன இடம்பெற்றுள்ளன.

    இதனைத் தொடர்ந்து புளொட் அமைப்பிற்கு மக்கள் செல்வாக்கு மிக்க பிரதேசங்களான கோயில்குளம், திருநாவற்குளம் பிரதேசங்களில் மக்கள் வாக்களிப்புக்கு செல்வதைத் தடுக்கும் பணிகளில் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிட்ட ஈ.பி.டி.பி, சிறிடெலோ மற்றும் ஈரோஸ் அமைப்பினர் பொலீஸ் பாதுகாப்புடன் ஈடுபட்டுள்ளனர். இதன்போது புளொட் அமைப்பைச் சேர்ந்த தீபன் என்பவர்மீது சிறிடெலோ தலைவர் உதயகுமார் என்கிற உதயன் தாக்குதல் நடத்தியதில் தீபன் காயமடைந்துள்ளார். அத்துடன் கோயில்குளம் பிரதேசத்திற்கு ஈ.பி.டி.பியுடன் சென்றிருந்த பொலீசார் புளொட் அமைப்பின் வேட்பாளர் வீட்டிற்கு சென்று தாக்கியதுடன், அங்கிருந்த ஆதரவாளர்கள்மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கும் மக்களை வெளியேற விடாது தடுக்கும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டிருந்துள்ளனர். தவிர நேற்றுப்பகல் கோவில்குளம் பிரதேசத்திற்கு ஆயுதம் தாங்கிய பொலீசாருடன் சென்றிருந்த ஆளும் கட்சியில் போட்டியிடும் ஈ.பி.டி.பி, சிறிடெலோ, ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பொலீசார் ஆயுதங்களை உயர்த்திப் பிடித்தவாறு செல்ல இவர்கள் பின்தொடர்ந்து சென்று மக்கள் வாக்களிக்கச் செல்வதைத் தடுக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்நடவடிக்கைகள் சுமார் 1750ற்கும் மேற்பட்ட வாக்குகளைக் கொண்ட கோயில்குளத்தில் சுமார் 800வாக்குகளே அளிக்கப்பட்டுள்ளன. தவிர மேற்படி குழுவினர் புளொட்டின் குடியேற்றக் கிராமமான திருநாவற்குளம் பிரதேசத்திற்கு பொலீஸ் பாதுகாப்பில் சென்று அங்குள்ள புளொட் காரியாலயத்தைச் சேர்ந்தவர்கள்மீது தாக்குதல் நடத்தியிருப்பதுடன், அங்கு வாக்களிக்கச் சென்றவர்களையும் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக சுமார் 350ற்கும் மேற்பட்ட மக்களின் வாக்குகள் அங்கு பதிவு செய்யப்படாதிருந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாக ஈரோஸ் அமைப்பைச் சேர்ந்த துசி என்பவர் அப்பிரதேச மக்கள்மீது அச்சுறுத்தல் விடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் புளொட் உறுப்பினர்களோ, புளொட் வேட்பாளர்களோ மற்றும் ஆதரவாளர்களோ அமைதியான தேர்தலை நடத்தும் பொருட்டு வெளியில் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. புளொட்டின் வெற்றி 143 வாக்குகளால் தடுக்கப்பட்டிருப்பது ஆளும் கட்சியில் போட்டியிட்ட குறிப்பிட்ட கட்சிகளினாலேயே என்றும், எனினும் ஆளும் கட்சியில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்ட ஈ.பி.டி.பி, ஈரோஸ், சிறிடெலோவைச் சேர்ந்த எவரும் இத்தேர்தலில் வெற்றிபெறவில்லையென்பதும், ஆளும் கட்சியில் போட்டியிட்ட முஸ்லிம் ஒருவரும், சிங்களவர் ஒருவருமே வெற்றிபெற்று 02 ஆசனங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Reply
  • Ganesh
    Ganesh

    முப்பது வருடமாக வடக்கு கிழக்கில் ஆயுதங்கள் பேசியது.

    இப்ப திடிரென்று எப்படி நூறு வீத ஜனநாயக நிகழ்வுகளை எதிர்பாக்க முடியும்.

    Reply
  • sanath ekanayake
    sanath ekanayake

    1.Less than 20% of the Jaffna people participated the most RIGGED polls. How can you expect the TRUE measure when only 20% of the people voted. Plus, EPDP did lots of vote rigging.

    2.We have come to understand that 21.5% of the total votes in Jaffna was casted during this election. So, the UPFA has acquired 12.63 % of the elligible voters support in Jaffna and won JMC. Well done UPFA and longlive for SriLankan DEMOCRACY!What happened to the International society are you still sleeping ?

    3.people are scared to vote. How to bring a normal democratic situation in Jaffna. That is the most important problem of not only in jaffna but in the whole country.

    4.people have reject the sepereitisum and they want live in peace and harmony

    5.I didn’t go for voting since i m abroad. Hope my vote also might have been casted in that 50.67%.

    6. What a tragedy for UNP in Jaffna & Vavunia results. All genuine or coward efforts of Dr. Jayalath Jayawardena in vain?

    7.majority of the Jaffna people didn’t go to vote..those who went voted for ITAK.What UPFA got is the vote taken by EPDP by cash/threat.How can anyone expect Tamils to Vote to UPFA while 300,000 of their relatives,parents/sisters brother still in the so call jailed refuge camp. Its not people support for LTTE. Most of the people hate LTTE after the way they treated people in Vanni.. but UPFA can never win the Tamil people’s mind unless they treat Tamils as human being.

    8.16% turn out means people were not at all ready for this election, still Mahinda Bros Co Ltd forced this election on them. Shame! Shame!!

    Reply
  • Anonymous
    Anonymous

    என்ன தலைப்பு இது?
    EPDP,TNA என்கிறது தலைப்பு.
    United People’s Freedom Alliance, Ilankai Tamil Arasu Kachchi என்கிறது

    Reply
  • Kusumbo
    Kusumbo

    இச் செய்தியை சோதிலிங்கம் அவர்கள் மிகச்சுருக்கமாகவும் அழகாகவம் கொடுத்துள்ளமை மிகச் சிறப்பே. முக்கியமாக யாழ்பாணத்தில் 80சதவீதமானவர்களின் தேர்தல் அலட்சியத்துக்குக் காரணம் என்ன? அவர்களின் அரசியல் நிலைப்பாடு என்ன? எதிர்கால எண்ணம் என்ன என்பதும். வன்னியில் த.வி.கூ வென்றுள்ளது இதன் காரணமும் மக்கள் கருந்தும் ஆய்வுக்குள்ளாக்கப்பட வேண்டியவையே. புரளிகளையும் கட்டுக்கதைகளையும் அவிட்டு விடுவதை விட்டுவிட்டு இன்று அங்குள்ள மக்களின் உண்மை நிலை> நோக்கம் என்பனவும் ஆய்வுந்தறிவது இன்றைய தேவை என்பதை அறிக.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    //கவனம் நண்பன், சமாதானப் பேச்சுக்கு போன புலியளுக்கு இங்கிலீஸ் தெரியாது எனச் சொன்ன சங்கரிக்கு 424 வோட்டுகள் தான்! ஏற்கனவே சிக்கலில் இருக்கிற சித்தாத்தனை பப்பாவில ஏற வழி சொல்லுறியள்?- சாந்தன்//

    விளங்கினதுகள் போயிருந்தால் வீரபாண்டிய கட்டப்பொம்மன் போல வளவளத்து இப்படி ஆகியிருக்க மாட்டார்கள். பேச்சு வார்த்தைக்கு போனவனுக்கும் நடக்கப் போறது விளங்கயில்லை. போய் வந்தும் வெளிய நடக்கிறதை சொல்ல சமார்த்தியமும் இருக்க இல்லை. தைரியமும் இருக்க இல்லை.

    பப்பா மரத்தில ஏத்தினவங்கள் , இப்ப கப் சிப். எல்லாம் நம் இணைய புலிகளும் , விழுந்தெழும்பின புலத்து கற்பனை ஆசிரியர்களும் ( ஊடகங்கள் ) செய்த தவறு. அதை நாங்களாவது திருத்த பார்ப்போம்.

    திரும்பவும் சொல்றன் , யாழ்பாணத்தில் மட்டும் டக்ளஸ் கவனம் செலுத்தியிருக்க வேணும். புளொட்டை வவுனியாவில் வர விட்டிருக்க வேணும். ஆனால் அதை இந்த புலி எதிர்ப்பாளர்கள் செய்யவில்லை. எனவே இவர்களது வீழ்ச்சி , எனக்கு மகிழ்ச்சியே. உங்களால் ஒற்றுமையாக ஒரு தேர்தலில் கருத்துகளை பகிர்ந்து கொண்டு , விட்டுக் கொடுத்து போக முடியாது போனால் , புலியை குறை சொல்ல இவர்களுக்கும் தகுதியில்லை.

    சித்தார்த்தன் , இன்னும் புலிகள் இருக்கிறார்கள் என்று சொன்னதில் டென்சனாகியிருப்பது புரிகிறது. இருந்தாலும் 25-30 வருடமாக சொன்ன கருத்துகள் : நல்ல அரசியல் ஞானம் உள்ளவர் என்ற கருத்துகள் எல்லாம் அடிபட்டு போய் விட்டது.

    புலிகளால் வதை பட்டு முகாம்களில் அடைபட்டு இருக்கும் அப்பாவிகளுக்கு நேர்மையாக உதவியிருந்தால் , நிச்சயம் நங்கூரத்தை போட்டு வெத்திலை போட்டு வீணை வாசிச்சிருக்கலாம். எல்லாம் வாணியாக வடிஞ்சு போச்சு.

    இவர்களை விட கூட்டணியே பரவாயில்லை என்ற மனநிலையோடு மக்கள் மனம் மாறி , தாங்கள் செத்தாலும் பரவாயில்லை என்று அளித்த வாக்குகள். அரச செல்வாக்கு இருந்தும் செய்ய முடியாத உங்களால் வர முடியுமா?

    எதிர்காலத்தில் பெரிய கட்சிகளுக்கே மக்கள் வாக்களிப்பார்கள். ஏனையோர் விரைவில் இல்லாவிட்டாலும் சுயேற்சையை விட மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

    இனியாவது திருந்தி நேர்மையாக யாரையும் சுருட்டாமல் அரசியல் செய்யுங்கள். அதுவே உங்களை நிலைக்க வைக்கும். புலிதான் இல்லையே. இன்னும் ஏன் உங்கள் அராஜகங்கள்?

    சிந்தியுங்கள். வரப் போகும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

    Reply
  • je
    je

    ஏன் சித்தார்த்தனின் கருத்தை திரித்து பரப்புகிறீர்கள்? புலிகளுக்கு ஆதரவும் அனுதாபமும் இருக்கிறது என சொன்னாரா புலி இருக்கிறது என சொன்னாரா?

    புலிகளுக்கு அனுதாபமும் ஆதரவும் இருக்கிறது என அவர் சொன்னது தமிழ் மக்கள் தமது பிரதேசம் மொழி கலாச்சாரம் போன்றன பாதுகாக்கப்பட வேண்டும் அதை தாம் இழக்க மாட்டோம் என்ற நிலையில் இருக்கிறார்கள். அது அவர்களின் விருப்பம். அந்த விருப்பத்தை பேசியவர்கள் கூட்டமைப்பினர். அதற்காகவே வாக்களித்தார்கள்.

    உங்களுக்கு மக்களின் விருப்பங்கள் குறித்து அக்கறையில்லை.(கூட்டமைப்பிற்கு வாக்குகள் விழுந்து விட்டதே என்பதுதான் உங்கள் குமுறல்) சித்தார்தனுக்கு அவை புரிகின்றன. அதை அவர் வெளிப்படையாக கூறியும் உள்ளார்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    ஜி
    நீங்கள் ஏன் நண்பனின் கருத்தில் முரண்படுகின்றீர்கள். அவர் சொன்னதில் என்ன தவறு. ஈ.பி.டி.பி மற்றும் புளொட் அமைப்பினர் புலிகளின் அழிவிற்குப் பிறகு, மக்களுக்கு ஏதாவது நன்மை செய்யலாமென எண்ணுவதை விட்டு, தமக்குத் தற்போது சந்தர்ப்பம் கிடைத்து விட்டதாகக் கருதி அந்த மக்களிடமே சுருட்ட முனைந்தது உண்மை. அதன் பலன் தான் அவர்கள் தேர்தலில் பெற்றார்கள். அதைப் பொறுக்க முடியாமல்த் தான் சித்தார்த்தன் மக்களை இன்னும் புலியாதரவாளர்களாக சித்தரிக்க முயன்றுள்ளார். இன்னும் தங்கள் தவறுகளைத் திருத்தும் எண்ணம் இவர்களுக்கு இல்லை.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ‘…புலிகளுக்கு அனுதாபமும் ஆதரவும் இருக்கிறது என அவர் சொன்னது தமிழ் மக்கள் தமது பிரதேசம் மொழி கலாச்சாரம் போன்றன பாதுகாக்கப்பட வேண்டும் அதை தாம் இழக்க மாட்டோம் என்ற நிலையில் இருக்கிறார்கள். …
    இங்கு எங்கே சித்தார்த்தனின் கருத்து திரிக்கப்பட்டது. அவர்களின் கட்சி தளத்தில் இருந்தே பெறப்பட்டது. சொல்லப்போனால் கட்&பேஸ்ற் செய்யப்பட்டது.
    மேலும் நீங்கள் சொல்வதன்படி புலிகள்தான் தமிழ் மக்களின் பிரதேசம் மொழி கலாச்சாரம் போன்றன பாதுகாக்க பாடுபட்டவர்கள் என்கின்ற உண்மை வெளிவருகிறதல்லவா? இல்லை என்றால் புலிகளைத்தவிர்ந்த எல்லோரும் இவ்விருப்பங்களுக்கு எதிரானவர்கள் அல்லது எதிரானவர்களுக்கு துணைபோனவர்கள் அல்லது எதிர்ப்பின் கதகதப்பில் குளிர்காய்ந்தவர்கள் என்கின்ற உண்மையாவது புரியும் என நினைக்கிறேன்!

    Reply
  • நண்பன்
    நண்பன்

    //புலிகளுக்கு அனுதாபமும் ஆதரவும் இருக்கிறது என அவர் சொன்னது தமிழ் மக்கள் தமது பிரதேசம் மொழி கலாச்சாரம் போன்றன பாதுகாக்கப்பட வேண்டும் அதை தாம் இழக்க மாட்டோம் என்ற நிலையில் இருக்கிறார்கள்.- je //

    கூட்டமைப்பு வெற்றி பெற்றதில் பிரச்சனையில்லை. அதற்கு வாக்களித்தவர்களது உயிருக்கு ஆபத்து உள்ளது. சித்தார்த்தனது பேச்சு அந்த மக்களையே வாழ்விழக்க வைத்துவிடும். இந்த வகையில் டக்ளஸ் எவ்வளவோ பரவாயில்லை. தனது தோல்விக்காக சிந்திக்கிறாரே தவிர யாரையும் காட்டிக் கொடுக்கும் வார்த்தைகளை கொட்டவில்லை.

    உமாவின் கொலைக்கு சித்தார்த்தனின் அனுசரனை இருந்ததாக பலர் சொன்னார்கள். எனக்கு அப்போது அப்படி இருக்காது என எண்ணினேன். இப்போது? மேலத் தேசத்தில் கற்ற ஒருவர் பேசிய விதம் என்னை விசனப்படுத்தியுள்ளது.

    எந்த இயக்கமும் , எந்தக் கட்சியும் எமக்கு பெரிதாகக் கூடாது. பொது மக்களது வாழ்வை எவராவது உயர்த்த முயல்கிறார்களோ , அவர்களை நாம் உயர்த்த வேண்டும். அடுத்தவர்களை அரசியலில் இல்லாமல் செய்து விட வேண்டும். அதைத்தான் மக்கள் செய்கிறார்கள்.

    சாதி – இன பெயரில் கட்சிகளை அழிக்க வேண்டும் என மகிந்த முயல்கிறார். அதற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் இவை அழிய வேண்டும் என பேசியவர்களாக இருப்பது வேதனையாக இருக்கிறது. இன ரீதியாக ஒடுக்கிறார்கள் என குரல் கொடுப்பவர்களே , இன அடையாள கட்சிகள் வேண்டும் என்று கச்சை கட்டிக் கொண்டு கோதாவில் இறங்கியுள்ளார்கள். இவர்கள் எவருமே மக்கள் நேசம் கொண்டவர்கள் அல்ல. தமது இருப்புக்காக அரசியல் செய்வோராகவே தெரிகிறது. இவர்கள் அனைவரும் அரசியல் ரீதியாக இல்லாதொழிக்கப்பட வேண்டும்.

    Reply
  • je
    je

    பார்த்திபன் அவர்களே
    தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குவது போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது. தான் பிடித்த முயலுக்கு (இலங்கையில் எல்லாம் சரியாக இருக்கிறது. தமிழர்தான் சரியில்லைஎன நினைப்பவர்களை) மூன்று கால் என்பவர்களை சரி செய்வது கஸ்டம். இதைத் தவிர எனக்கு ஒன்றும் தோன்றவில்லை.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சரி ஜி
    எனி உங்கள் தூக்கத்தைக் கலைத்துவிட்டு எழுதுங்கள். அப்போதாவது உண்மை புரிகின்றதா என்று பார்ப்போம்.

    Reply
  • je
    je

    சில சிங்களத் தரப்பினரே தமிழ் மக்களுக்கு உரிமைகள் வேண்டும் என சொல்கையில் இல்லை நாங்கள் தூக்கத்தில் இருந்து எழும்ப மாட்டோம் என இருப்பது நானா நீங்களா? சட்டப்படி இருக்கிற இலங்கை இந்திய ஒப்பந்தத்தை கூட தருவதற்கு மகிந்தவுக்கு மனமில்லை. நீங்களோ எங்களை தூக்கத்தில் இருந்து எழச் சொல்கிறீர்கள்.

    Reply
  • POOR TAMULU
    POOR TAMULU

    முப்பது ஆண்டுகால விடுதலைப் போராட்டம் ஒன்றரை லட்ச மக்களின் உயிர்த் தியாகம், இன அழித்தல் வரை வந்த பேரழிவுகள் இவற்றிற்கெல்லாம் பிறகு… அதுவும் முல்லைத்தீவில் பெருங் கொடுமை நடந்து நூறு நாட்கள் கூட ஆக வில்லை. யாழ்ப்பாண மாநகராட்சி கவுன்சிலர் பதவிகளுக்காய் ராஜபக்சேவிடம் மண்டியிடுகிறார்களே அங்கிருக்கும் தமிழ் கட்சிகள்- தலைவர்கள்… ………. மிகக்குறைந்தபட்சம் “”கொலை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் மூன்று லட்சம் தமிழர்களையும் விடுவியுங்கள், நாங்கள் தேர்தலில் போட்டியிடுகிறோம்” என்று சொல்கிற மிகமிக குறைந்தபட்ச ஒழுக்கம் கூட இல்லாத அந்த தமிழ் அரசியல் கட்சிகளை, தலைவர்களை என்னென்று சொல்வது?

    Reply