கே.பிக்கு எதிராக சட்ட நடவடிக்கை

pathmanathan.jpgஆசிய நாடொன்றிலிருந்து கைது செய்யப்பட்ட புலிகளின் தற்போதைய தலைவர் என தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் நேற்றுக் காலை கொழும்புக்கு கொண்டுவரப்பட்டதாக பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்றுத் தெரிவித்தார்.

பாதுகாப்புப் பிரிவினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கே.பி, இலங்கை சட்டத்தின் பிரகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்றும் அமைச்சர் கெஹலிய கூறினார். கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஊடக மத்திய நிலையத்தில் நேற்று செய்தியாளர் மாநாடொன்று நடந்தது. இந்த மாநாட்டிலேயே அமைச்சர் கெஹலிய மேற்கண்டவாறு கூறினார்.

தன்னைத்தானே தலைவரென உரிமை கோரியிருந்த கே.பி.யின் கைது ஊடாக உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டாலோ, புலிகளின் தலைவர்தான் தானென கூறிக்கொண்டிருந்தாலோ அவர்களை கைதுசெய்யும் ஆற்றல் இலங்கை பாதுகாப்புப் பிரிவினருக்கு உண்டு என்பதை கே.பி.யின் கைது மூலம் சர்வதேசத்துக்கு உணர்த்தியிருக்கிறோம் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பிரபாகரன் கொல்லப்பட்டதையடுத்து புலிகளின் அடுத்த தலைவர் நான்தான் என கூறிக் கொண்டு அறிக்கைகளை வெளியிட்டு வந்த கே.பி, சர்வதேச பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த நபர் மட்டுமன்றி, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையுடன் நேரடி தொடர்பு கொண்டவராகவும் தேடப்பட்டு வந்துள்ளார்.

இவரைக் கைது செய்வதற்காக இலங்கைப் புலனாய்வுப் பிரிவும் ஆசிய நாடுகளின் புலனாய்வுப் பிரிவொன்றும் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுத்திருந்ததாக அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.

கே.பி. எந்த நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்? என செய்தியாளர் ஒருவர் கேட்ட போது:

பலராலும் தேடப்பட்டுவந்த கே.பி, இப் போது கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டும் விட்டார். அவர் ஆசிய பிராந்திய நாடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டார் என்று மட்டுமே கூறமுடியும் என்றார்.

ஆசிய பிராந்தியத்திலுள்ள எமது நட்பு நாடுகளின் புலனாய்வுப் பிரிவும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளது என்றும் அமைச்சர் கெஹலிய தெரிவித்தார்.

குமரன் பத்மநாதன் அல்லது கே.பி. பல நாடுகளினாலும் தேடப்பட்டு வந்தவர். இந்தியாவும் அவரை கைது செய்யவிருந்தது. இந்த நிலையில் இவ்வாறான நாடுகள் அவரை தம்மிடம் ஒப்படைக்கும் படி கேட்டால் ஒப்படைப்பீர்களா? ஏதாவது ஒரு நாடு இவ்வாறான கோரிக்கையை முன்வைத்திருக்கிறதா? என செய்தியாளர் ஒருவர் கேட்டார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல:

எந்தவொரு நாடும் தனிப்பட்ட விதத்தில் இவ்வாறான கோரிக்கையை இதுவரை விடுக்கவில்லை. எனினும் பொது நலவாய நாடுகளுக்கிடையே இவ்வாறான கைதுகள் பரிமாற்றம் தொடர்பான ஒவ்வொரு விதமான உடன்படிக்கைகள் அமுலில் உள்ளன. இவ்வாறான உடன்படிக்கைகளை நாம் மதிக்கின்றோம். அவற்றின் பிரகாரம் செயற்படவும் நாம் ஆயத்தமாகவும் உள்ளோம் எனவும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் கெஹலியவுடன் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, கடற்படை பேச்சாளர் கப்டன் டி.கே.பி. ரத்நாயக்க, விமானப்படை பேச்சாளர் விங்கமாண்டர் ஜனக நாணயக்கார, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேக்கர, ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்ல ஆகியோர் கலந்து கொண்டனர்.

1955 ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி காங்கேசன்துறையில் பிறந்த கே.பி.யின் இயற்பெயர் சன்முகம் குமரன் தர்மலிங்கம் ஆகும்.

தமிழ், ஆங்கிலம், பிரெஞ் மற்றும் சிங்கள மொழிகளில் இவர் நல்ல பரிச்சயமிக்கவர். 1983 ஆம் ஆண்டு இவர் இலங்கையை விட்டு வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • அழகசுந்தரம்
    அழகசுந்தரம்

    இலங்கை மண்ணையும் இலங்கையரையும் அவர்கள் பிள்ளைகளையும் காப்பாற்றிய துணிச்சலும் தீரமும் மிக்க ராஜபக்சே குடும்பம் தான் ஐந்நூறு வருடத்திற்குபின் இலங்கை மக்களுக்கு உண்மையான விடுதலையை பெற்று கொடுத்திருக்கிறார்கள்- அல்வாய் அழகசுந்தரம்-

    Reply
  • itam
    itam

    புலித் தலைவரின் வாரிசாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டும் புதிய புலித் தலைவராக புறப்பட்டிருக்கும் பத்மனாதன் என்பவர் பிரபாகரன் பாணியிலேயே மனித அழிவுகளையும் பொருட் சேதங்களையும் இலங்கை மக்களுக்கு ஏற்படுத்தும் முன்னரே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு அடிக்கப்போகும் சூறாவளியொன்று அடிக்கு முன்னே அடக்கப்பட்டு விட்டது என்று முழு இலங்கைவாழ் மக்களும் நின்மதிப் பெருமூச்சு விட்டார்கள்… இனியாவது வன்னிச் சனத்துக்கு நல்ல காலம் பிறக்கட்டும் இதுவும் புலிகளின் உள்வீட்டு விளையாட்டாகத்தான் இருக்கும் …

    Reply
  • மாயா
    மாயா

    உருத்திரகுமாரின் தகவலின் அடிப்படையிலையிலேயே கே.பி. கைது நாடகம்!

    புலிகளின் புதிய தலைவராக பொறுப்பேற்ற கே.பி என்று அழைக்கப்படும் செல்வராஜா பத்மநாதன் மலேசிய இலங்கை புலனாய்வு பிரிவினரால் தீடிர் முற்றுகையில் கைது செய்யப்பட்டு உடனடியாக கொழும்புக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். புலிகளின் நிழல் அரசின் செயற்குழு பொறுப்பில் இருந்த சட்டத்தரணி உருத்திரகுமார் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே கே.பி.யின் கைது நாடகம் அரங்கேற்றப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    பிரபாகரனின் மறைவையடுத்து நாடுகடந்த தமிழீழ நிழல் அரசை அமைக்கும் முயற்சியில் புலிகளுக்கிடையே இழுபறிகள் நிலவி வந்தன. இவ் இழுபறி கே.பி.க்கும் உருத்திரகுமாருக்கும் இடையே முற்றிய நிலையில் கே.பி.யின் இருப்பிடம்பற்றிய தகவலை இலங்கை புலனாய்வுதுறைக்கு சட்டத்தரணி உருத்திரகுமாரே வழங்கியதாகவும்; செய்திகள் தெரிவிக்கின்றன.

    நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு ஜனநாயக வழியில் முறையாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்று கே.பி. விரும்பியதாகவும் எனினும் நிழல் அரசின் தலைமை பொறுப்பின் தலைவராக தானே இருக்க வேண்டும் என்று உருத்திரகுமார் விரும்பியதாகவும் அதன் இழுபறி காரணமாக காட்டிக்கொடுப்பு இடம்பெற்றதாகவும் அறியவருகின்றது.

    பாலசிங்கம் இறந்தபொழுதும் அந்த இடத்திற்கு தன்னை நியமிக்கும்படி உருத்திரகுமார் எதிர்பார்த்து அதற்குரிய முஸ்தீபு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் பிரபாகரன் அவர் மீது நம்பிக்கையின்றி நிராகரித்திருந்தார். பின்னர் பிரபாகரன் கொல்லப்பட்ட நிலையில், புலிகளின் பொறுப்பு அனைத்தும் சர்ச்சைக்கு மத்தியில் கே.பி.யின் கைகழுக்கு சென்றது.

    கே.பி. ஏற்கனவே சர்வதேச பொலிஸாரரினால் (இன்ரப்போல்) தேடப்பட்டு வருகையில் அவரது போக்குவரத்து சுதந்திரங்கள் முற்றாக தடுக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் உருத்திரகுமாரை நாடவேண்டிய நிற்பந்தத்திற்கு சர்வதேச புலிகள் தள்ளப்பட்டனர். இறுதியில் கே.பி.க்கும் உருத்திரகுமாருக்கும் இடையே ஏற்பட்ட உள்மோதல் காரணமாக கே.பி.யை சந்திக்க சென்ற நடேசனின் சகோதரர் குடும்பத்தின் சந்திப்பு ஒழுங்குகளை செய்த உருத்திரகுமாரின் தகவலின் அடிப்படையில் தீடிர் என்று கே.பி.யை முற்றுகையிட்ட மலேசிய இலங்கை கூட்டு புலனாய்வு அதிரடிப்பிரிவினர் எதிர்பாரத முறையில் கே.பி.யை புதன்கிழமையே கைது செய்துவிட்டனர் என்றும் தெரியவருகின்றது.

    உருத்திரகுமார் குறுக்கு வழியில் புலிகளின் தலைமை பொறுப்பை ஏற்கலாம் என்ற சூழ்ச்சியில் இருந்து விலகி தற்போது தொலைபேசிகளை தவிர்த்து வருவதோடு புலிகளுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று தனது நெருங்கிய புலிகள் வட்டத்திற்கு தெரிவித்து வருவதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

    – நெருப்பு

    Reply
  • Appu Hammy
    Appu Hammy

    That is right! why are these guys, Sinhalese and Tamil leaders running to India for everything from A to Z instead of talking to each other. Haven’t you all realised what damage these Indians have done to Tamils and Sinhalese. They are the worst enemies of the Tamils and Sinhalese, Showing the head to one and the tail to the other like an eel. One aspect has come very clear that Srilanka has to keep dancing to the tune of these countries with no prospects any peaceful condition in the country for years and years to come. Srilankans were at each others throat and were hell bent on destroying each other without realising how others,foreign and local, are using both of them for their gains

    Reply
  • kumarathasan
    kumarathasan

    appu hammy is a great philpsober not a good reader,point is india turning to srilanka not srilankans.we on a good location which more atractive to our neighbours that the main reson.india is our label and india cannot be our enemy. …….india is a regional power and we are connected to india……………..

    Reply