தனியார் பஸ் சங்கங்களுடன் அடுத்தவாரம் நடைபெறவிருக்கும் சந்திப்பை அடுத்து பஸ் கட்டணம் குறித்து முடிவெடுக்கப்படுமென பயணிகள் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண நேற்று வியாழக்கிழமை சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட எம்.பி. யான ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் லசந்த அழகியவண்ண இவ்வாறு கூறினார்.
“”பஸ் கட்டணங்களை 7 சதவீதத்தால் அதிகரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எந்தச் சங்கத்திற்கும் பஸ் கட்டணம் பற்றி தீர்மானம் எடுக்க முடியாது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவே இது பற்றி முடிவெடுக்க வேண்டும்.
அடுத்தவாரம் தனியார் பஸ் சங்கங்களுடன் சந்திப்பொன்று நடக்கவுள்ளது. அதன் பின்னர் பஸ் கட்டணம் குறித்து முடிவெடுக்கப்பட்டு வெளியிடப்படும்’ என்றும் அவர் இதன்போது கூறினார்.