இடம் பெயர்ந்த மக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வந்த போலிப் பிரசாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வவுனியாவில் தெரிவித்தார். மக்களை முகாம்களில் தடுத்து வைக்கும் நோக்கம் எதுவும் அரசாங்கத்திற்குக் கிடையாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று முன்தினம் (05) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அமைச்சர் முரளிதரன் உரையாற்றியபோதே மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ,“மீள்குடியேற்றம் தாமதமாகுவதாக விமர்சனம் செய்பவர்களுக்குக் கண்ணிவெடியின் தாக்கம் தெரியாது. அவசரப்பட்டு மக்களைக் குடியமர்த்தியிருந்தால், இதுவரை ஆயிரம், இரண்டாயிரம் பேரை இழந்திருப்போம். எனவே அவற்றை அகற்றிப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின்னரே மக்களை மீளக்குடியேற்ற வேண்டும். ஆயுதப் போராட்டத்தின் மூலம் பல்லாயிரம் உயிர்களை இழப்பதைத் தவிர வேறு நன்மை கிடைக்காது என ஐந்து வருடங்களுக்கு முன்பே கூறினோம். ஆனால், அவர்கள் ஏற்கவில்லை.
இனித் தமிழ் மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாகும். அதற்கு ஜனாதிபதியின் கரங்களை நாம் பலப்படுத்த வேண்டும். இன்னும் 2, 5 வருடங்களில் பாரிய அபிவிருத்தி ஏற்படும். நாம் ஜனாதிபதியின் அன்புக்கு உரியவர்களாகவும், விருப்பத்துக்கு உரியவர்களாகவும் மாறவேண்டும். கடந்த கால வடுக்களை மறந்துவிட்டு தன்னம்பிக்கையுடனும், ஆளுமையுடனும் நாம் வாழவேண்டும்” என்றார்.
மாயா
நீங்க புதைச்ச கண்ணி வெடிகளை எடுத்தாலே பாதி கிளியராகிடும். ஆட்கள் முகாமுக்குள் இருந்தால்தான் உங்களாலும் காசு ஆயலாம் அல்லது கறக்கலாம். வார்த்தைகளை விட்டு நேர்மையாக இருக்க முயலுங்கள். உங்களையும் சனம் மதிக்கும். இல்லையென்றால் பிரபா கூட்டம் போல மறக்கும். உயிருக்கு பயந்து ஓடி வந்து அரசோட சாய்ந்ததால உயிரோடு இருக்கிறயள். இல்லையென்றால் நந்திக்கடலில் கரைந்து வெகு காலமாகியிருக்கும்?
இளங்கோ
நேரத்துக்கு சோறு வரும் போது ஏன் சொல்ல மாட்டீர்கள் கருணா அம்மான். இதுவும் சொல்வீர்கள் இன்னும் சொல்வீர்கள். ……….
thevi
முகாமிற்குள அடைபடுவதற்கு முன் அவர்கள் எங்கே இருந்தார்கள்.? விரைவாக குறுகிய காலத்திற்குள் முகாமிற்குள் அடைக்க தெரிந்தவர்களுக்கு வேகமாக மீள குடியேற்ற முடியவில்லை என்பதை நாம் நம்ப வேண்டும்?
Varathan
Ya Murali, we don’t know not only about the effect of landmines but also about
1.how to kill the surrendered policemen
2.how to kill the people in mosques during prayer
3.how to recruite the child soldiers forcefully
4. how to perform the extrajudicial killing
5. how to killer become a minster?
6. how to negotiate the rights for own benefits
You are the one of the suitable person to teach all these things
துவக்கு
மிகச்சரியாக சொன்னீர்கள் கருணா, போர்த் தந்திரோபாயமற்று தங்கள் போராளிகளே (புலிகள்) தப்பியோட முடியாத வகையில் தான் புலிகள் கன்னாபின்னா என கண்ணிவெடியை விதைப்பார்கள் என்பதை விதைத்த நீங்கள் ஏற்றுக் கொண்டதற்கு நன்றி.
தயவு செய்து நீங்கள் சொல்லும் இன ஒற்றுமைக்கும் சமத்துவம் சகிப்புத்தன்மை…… என்பனவற்றிற்காக தொடர்ச்சியாக போராடுங்கள். உங்களையும் சமத்தவமாக நடத்துகிறார்களா? அல்லது ஆறுமுகன் தொண்டமானை செல்லமாக அழைத்தது போல அவ்வப்போது அழைக்கிறார்களா?
இனப்பிரச்சனைக்கான அனைத்துக் காரணங்களையும் பொது மேடையில் விவாதியுங்கள். 83 ம் ஆண்டு தாக்குதலின் பின் புத்துணர்வு பெற்ற புலிகள் தான் காரணம் என தொடர்ந்து ஓதாதீர்கள்.
THEBAN
//இனித் தமிழ் மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாகும். அதற்கு ஜனாதிபதியின் கரங்களை நாம் பலப்படுத்த வேண்டும். இன்னும் 2, 5 வருடங்களில் பாரிய அபிவிருத்தி ஏற்படும். நாம் ஜனாதிபதியின் அன்புக்கு உரியவர்களாகவும், விருப்பத்துக்கு உரியவர்களாகவும் மாறவேண்டும். கடந்த கால வடுக்களை மறந்துவிட்டு தன்னம்பிக்கையுடனும், ஆளுமையுடனும் நாம் வாழவேண்டும் //
ADA ITHUVUM NALAATHAANE IRUKKU.
indiran.raja
மாற்று இயக்க போராளிகளுக்கே கன்னி(கண்ணி) வெடி வைத்த உங்களுக்கு அதன் தாக்கம் அப்போது தெரியாதது………?
பாவம் தமிழ் மக்கள் உங்கள் கதைகளை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
பொட்டம்மான்
நண்பா கருணா நான் (பொட்டம்மான்) உமக்கு உதவியால் தானே (நெருக்கடி தந்து வெளியேற்றியது) இப்பொழுது மேற்கண்டவாறு பேச முடிகிறது. இல்லையென்றால் தலையுடன் (பிரபா) முள்ளிவாய்க்காலில் ……..
ஐயோ தப்பிட்டிர். பொட்டம்மான் என்னுடைய நிலை தெரியும்தானே?
பொட்டம்மான்.