தோழர் பத்மநாபாவின் 20வது நினைவு தினம் 19 June 2010 4.30 pm – 9.00 pm, Southfields Community College Hall, 333 Merton Road, London SW18 5JU (Entrance via Burr Road) அனுஸ்டிக்கப்படுகிறது. அதையொட்டி இந்தக்கட்டுரையை மீள்பிரசுரம் செய்கிறோம். இக்கட்டுரையானது பத்மநாபாவின் 2008ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி ஈபிஆர்எல்எவ் அமைப்பின் முக்கிய உறுப்பினர் ஒருவரால் எழுதப்பட்டது.
அது 1990 யூன் மாதம் 19ந் திகதி!
மானுடவர்க்கத்தின் மனிதப் பண்புகளுடன், அமைதி, சமாதானம், ஜனநாயகம் நிறைந்த சமதர்த வாழ்வை தமிழ்பேசும் மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க போராடி மரணித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் தோழர் பத்மநாபாவும், பன்னிரு தோழர்களும், சென்னையில் பாசிசப் புலிகளால் கோழைத்தனமாகப் படுகொலை செய்யப்பட்ட நாள்!
ஈழத்தமிழர் வரலாற்றின்; சோகமிகு இந்நாளே, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினால், தியாகிகள் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு ஒவ்வொரு வருடமும் நினைவு கூரப்பட்டு வருகிறது.
ஈழத் தமிழர்களுக்கான உரிமைப் போரட்டத்தில் ஒரு இயக்கத்தினர் மட்டும் மரணிக்கவில்லை. சகல இயக்கங்கள், கட்சிகளைச் சாhந்தோரும் உயிரை அர்ப்பணித்தல் உட்பட சகலவித தியாகங்களையும் செய்திருக்கின்றார்கள்.
தமிழ்பேசும் மக்களுக்காகப் போராடி இலட்சியப் பாதையில் மரணித்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஆற்றல் மிகு தோழர்களுக்கும், சகஇயக்கப் போராளிகளுக்கும், வினையாளர்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள் பொதுமக்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் தினமே தியாகிகள் தினம்!
அந்தக் கரிநாளுக்குப் பின்னர் இற்றைவரையான பத்தொன்பது ஆண்டுகளுக்கு பின்னரும் அதற்கு முன்னருமான காலகட்டத்திலும், தமிழ்ப் பயங்கரவாதிகள் ஒரு பக்கத்தாலும், சிங்களப் பேரினவாதம் மறுபக்கத்தாலும் நாளாந்தரம் நசுக்க, தமிழ்பேசும் மக்கள் இருதலைக் கொள்ளி எறும்புகளாக சொல்லொணா இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள்.
சமாதானம் அமைதி என்பதெல்லாம் கானல் நீராகிப் போய் விட்ட துர்ப்பாக்கிய நிலையில், கொலை, கொள்ளை, கப்பம், பட்டினிச்சாவு, வறுமை எனும் வாழ்க்கை முறைக்குள் வலுக்கட்டாயமாகத் தமிழ் மக்கள் திணிக்கப்பட்டிருக்கிறார்கள்.
குருட்டுத் துப்பாக்கி ஏந்தும், வரட்டுச் சித்தாந்தம் கொண்ட முரட்டு வாதிகளால், இடிபாடுகளுக்கு மத்தியில் இருட்டு வாழ்க்கையில் செக்காடுகள் போல், செம்மறி ஆடுகள் போல் தமிழ் மக்கள் என்று தம் வாழ்வு விடியும் என்ற ஏக்கத்துடன் வாழ்கிறார்கள்.
நிலங்களற்று, நிலையிழந்து, பலமிழந்து, மலங்க விழித்து, மக்கள் கலங்கி நிற்கிறார்கள்.
சிங்களப் பேரனினத்திற்கு எதிராக, தமிழர்களின் விமோசனத்திற்காக போராட தங்கள் உயிரைத் துச்சமாக எண்ணிப் போராட முன்வந்த எத்தனை எத்தனை நல் மாந்தரை நாம் பறிகொடுத்து விட்டோம்!
வீழ்ந்த போராளிகள் அனைவருமே எதிரியான சிங்களப் பேரினவாதத்தின் அரச படையினரால் மட்டும் கொல்லப்படவில்லை. உயிர்ப் பலியெடுக்கப்பட்ட அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும், புத்திஜீவிகளும், கல்விமான்களும், வினையாளர்களும், பொதுமக்களும் எதிரியினால் மட்டும் காவுகொள்ளப்பட வில்லை. உண்மையில் இவர்களில் அதிகமான எண்ணிக்கையினர் சொந்த சோதரர்களாலேயே – குறிப்பாகவும், அதிக எண்ணிக்கையாகவும் புலிகளாலேயே – சுட்டும் வெட்டியும் வீழ்த்தப் பட்டவர்கள் என்பதுதான் வேதனையானதும், வெட்ககரமானதுமானதும், கசப்பானதுமான உண்மை! தமிழர் வாழ்வை வளம்படுத்த வேண்டிய ஆர்வமும் தகுதியும் கொண்ட எத்தனை எத்தனை தளிர்கள் கருக்கப்பட்டு விட்டன!
புலிகளின் ஏதாச்சாதிகார வேட்கையால் ஏற்படுத்தப்பட்ட இப் படுகொலைகளுடன் ஈழப் போராட்டத்தின் தார்மீகம் அழிந்து விட்டது. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உட்பட சக இயக்கங்களின் தடை, மக்களின் ஜனநாயக உரிமைகள் மறுப்பு ஆகியவையுடன் ஈழப் போராட்டம் தடம் புரண்டு விட்டது. பிரேமதாசாவிடம் பணமும், ஆயுதங்களும் பெருவாரியாகப் பெற்று இந்தியாவுடன் புலிகள் யுத்தத்தை தொடர்ந்தவுடன் ஈழத்தமிழர்களின் அரசியல் போராட்டம் அஸ்தமித்துவிட்டது.
இவைதான் பேரினவாத ஸ்ரீலங்கா அரசின் மக்கள் மீதான இராணுவ நடவடிக்கைகள் உக்கிரமம் அடைவதற்கும், வடக்கு கிழக்கின் அவலங்களுக்கும், போரின வாதிகளின் கைகள் ஓங்கியிருப்பதற்கும் மூல காரணிகளாக அமைந்து விட்டன!
பாசிசப்புலிகளின் பேடித்தனமான படுபாதக கொலைகளுக்குப் பலியாகிப் போன மாந்தர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்கா!
மாதிரிக்கு மட்டும் சிலரைப் பார்ப்போமானால், –
வடக்கு கிழக்கு மாகாண அரசின் தலைமைச் செயலகம் அமைந்திருந்த திருகோணமலையிலிருந்து நிலாவெளியில் ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் உரையாற்றவதற்காக ஜீப்பில் சென்றுகொண்டிருந்த வேளையில்; ஸ்ரீலங்கா இராணுவத்தின் கூட்டு முயற்சியுடன் புலிகள் பதுங்கியிருந்து தாக்கியதில் படுகொலை செய்யப்பட்ட, ஈழமக்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான சர்வதேச அபிப்பிராயத்தை உருவாக்கும் வேலைத்திட்டங்களில் பங்கெடுத்தக் கொண்ட, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தோழர் ஜோர்ஜ், சகதோழர்கள்,
புலி இயக்கத்தின் உட்கட்சிச் சதியால் தன் காலை இழந்த கிட்டுவிற்காக அருணா என்ற புலியால் அநியாயாகமாகப் படுகொலை செய்யப்பட்ட புலிகளால் சிறைபிடிக்கப்பட்டிருந்த, ஈபிஆர்எல்எவ், புளொட் உறுப்பினர்கள் உட்பட்ட 60 இளைஞர்கள்
ரெலோ இயக்கத் தலைவர் சிறீசபாரத்தினமும், உறுப்பினர்களும்,
யாழ் மருத்தவக் கல்லூரி உடல் கூற்றியல் துறைத் தலைவர், ரஜனி திரணகம,
தமிழர் விடுதலைக் கூட்டணி செயலதிபர் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன், திருமதி யோகேஸ்வரன், பொன் சிவபாலன்,
பரியோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராசா,
யாழ் முன்னாள் அரச அதிபர் பஞ்சலிங்கம்,
யாழ் பல்கலைக்கழக மாணவன் விஜிதரன்,
பெண் கவிஞர் செல்வி,
கிழக்கின் விடிவெள்ளி சாம் தம்பிமுத்து, அவரது மனைவி,
ஈபிஆர்எல்எவ் தலைவர்கள் தோழர்கள் பத்மநபா, ரொபேர்ட், இன்னும் பலர்
புளொட் இயக்கத் தலைவர் வாசுதேவா,
புலிகளச் சேர்ந்த மாத்தையாவும், இதர போராளிகளும்,
இணையற்ற புத்திஜீவிகளாகிய நீPலன் திருச்செலவம், கேதீஷ் லோகநாதன் இன்னும் எத்தனையோர் தேசத் துரோகிகள், சமூக விரோதிகள் எனப் போலியாகச் சித்தரிக்கப்பட்டு கொலை செய்ப்பட்டுவிட்டார்கள். சொல்லி மாளா அவர்தம் பட்டியல்!
இந்தக் கொலைப்பட்டியல் இன்னமும், இன்றும் தொடர்கிறது – நீண்டு கொண்டே போகிறது!
சிங்களவர் தமிழரைக் கொன்றால்; அது இனப் படுகொலை!
இலங்கை இராணுவம் தமிழரைக் கொன்றால் அது ஆக்கிரமிப்புக் படுகொலை!
தமிழர்கள் தமிழரைக் கொன்றால் அதற்குப் பெயர் தமிழ் ஈழ விடுதலையா?
இத்தனை கொடூரங்கள் நடந்த போதும் மக்கள் மௌனமாக இருந்தார்கள். புலிகளால் மற்றைய இயக்கங்கள் தடை செய்யப்பட்டபோது மௌனமாக இருந்தார்கள். மற்றைய இயக்கப் போராளிகள், தலைவர்கள் குற்றியிரும் குலையுயிருமாக எரியூட்டப்பட்டபோது மௌனமாக இருந்தார்கள்! எம்முடன் ஒன்றாக வாழ்ந்த முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டபோது, இரவோடிரவாக விரட்டப்பட்டபோது மௌனமாக இருந்தார்கள்!
– இறுதியில், நாமே அழிவின் விளிம்பில் நிறுத்தப்பட்டிருக்கிறோம் – ஏனென்று கேட்க யாரும் இல்லை! ஈவிரக்கமற்ற யுத்தத்தினாலும், தமிழர்களின் ஏகபோக தலைமை என்று துப்பாக்கிமூலம் அந்தஸ்து கோரும் சர்வாதிகாரப் போக்கினாலும், ஈழத்தமிழினம் தேய் பிறையாகி வருகிறது!
உள்நாட்டுப் பத்திரிகைகளும், புலம் பெயர்ந்தோர் நடாத்தும் புலிசார்பு ஊடகங்களும். உண்மை நிகழ்வுகளை அறியாதவாறு இருட்டடிப்புச் செய்கின்றன, அல்லது திரித்துக் கூறுகின்றன. உண்மைக்குப் புறம்பான கருத்துக்கள் கூறப்படுகின்றன. உண்மைக் காரணங்கள் தெரிவிக்கப்படுவதில்லை.
போததற்கு, சிங்களவர்கள் எல்லோருமே கொடியவர்கள் என்றே சித்தரிக்கப்படுகிறார்கள். பேரின வாதிகள் வேறு, சாதாரண சிங்கள மக்கள் வேறு என்று தெரிவிக்கப்படவில்லை. தமிழ்மக்கள் பேலவே, அப்பாவிச் சிங்களப் பொது மக்களும் வகைதொகையின்றி கொல்லப்படுகின்றார்கள். ஏழைத் தமிழ் மக்களின் பிள்ளைகள்போல் ஏழைச் சிங்கள மக்களின் பிள்ளைகளே இந்த யுத்தத்திற்கு பலிக்கடா வாக்கப்படுகின்றார்கள்.
நாம் பயத்திலிருந்து விடுபடவேண்டும். சுதந்திரமாக எவர்க்கும் அஞ்சாமல் கருத்துக் கூறும், செயற்படும் நிலை ஏற்பட வேண்டும்.
ஒரு எஜமானர்களின் அடிமையிலிருந்து எங்களை மீட்பது இன்னொரு எஜமானர்களின் அடிமைக்கு நாம் ஆளாவதாக அமைந்துவிடக் கூடாது.
ஈழவிடுதலைப் போருக்காகத் தம்மை அர்ப்பணித்த தியாகிகள் அனைவரையும் இத் தியாகிகள் தினத்தில் நாம் நினைவு கூருவோhம்!
தலை வணங்குவோம் அத் தியாகிகளுக்கு!




T Sothilingam
கடந்த வருடம் இந்த கட்டுரைக்கு எழுதப்பட்ட பின்னூட்டங்களைப் பார்க்கும் போது இந்த வருடம் ஏற்பப்ட்டுள்ள மாற்றங்களும் தமிழ் பேசும் மக்களின் நிலைகளும்……….
Kusombo
மறுக்கப்பட்ட பேனாக்கள் மீண்டும் உயிர்பெறத்தொடங்கியுள்ளன என்பதில் மகிழ்ச்சி. எத்த ஒரு தோழமைக் கொலையும் ஏற்கக் கூடியது அல்ல. இப்படியாக கட்டுரைகள் தொடர்ந்து வெளிவரவேண்டும். 30வருடங்களுக்கு மேலாக புலிகளும் அவர்களின் பிரசாரப்பீரங்கிகளும் தம்தவறுகளை நியாயப்படுத்திக் கொண்டே இருந்தன. முத்திரைகள் மட்டும் துரோகிகள் துரோகிகள் என்று குத்தப்பட்டுக் கொண்டு இருந்தன. இன்று வரலாறு எமக்குச் சொன்ன உண்மை புலிகளே தமிழ்மக்களின் துரோகிகள் என்று.
ராபின் மெய்யன்
பத்மநாபாவின் நினைவு தமிழ் மக்களின் விடுதலைக்காக உயிர் துறந்த அனைத்துப் போராளிகளினதும் நாளாக நினைவு கூரப்பட வேண்டும். தமிழ் மக்கள் சகோதரக் கொலைகளை ஏற்றுக் கொண்டார்கள் என்பதை விட ஏற்ற்க்கொள்ள ஆயுதமுனையில் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்பதுதான் சரியானது. ஈழ மக்கள் புரட்சிகர முன்னணி தத்துவார்த்த ரீதியில் முந்திநின்ற போதிலும்,நடைமுறைத் தந்திரோபாயத்தில் அவர்கள் புலிகளின் பின்னாலேயே ஓடினார்கள். அவர்கள் மக்களிடமிருந்து அன்னியப் படுத்தப்படுவதற்கு இதுதான் பிரதான காரண்ம் என்பதை (முன்னாள்) தோழர்கள் ஏற்றுக் கொள்வார்களா தெரியவில்லை.
நாம் இனிமேலாவது நடைமுறையிலுள்ள் பிரச்சனைகள் பற்றி சிந்தித்து அவற்றிற்கான தீர்வுகளுக்கான வழிகளைத் தேடும் முயற்சியில் மற்றவர்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டும். இனிமேலும் தனித்துநிற்பதால் எதுவும் சாதிக்கப்படப் போவதில்லை.
இன்றைய தினத்தில் தமிழ் மக்களுக்காக உயிர் துறந்த அனைத்துப் போராளிகளும் நினைவுகூரப்படவேண்டிய அதே வேளையில் தமிழ் பேசும் மக்களது விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்தவர் பலரது குடும்பங்கள் வாழ வழியின்றி வறுமையாலும் சமூகத்தால் கைவிடப்பட்ட விரக்தியாலும் பாதிக்கப்பட்டுள்ளதை சமூக அக்கறை கொண்ட அனைவரும் அறிவர். இன்றைய தினததில் அக்குடும்பங்களுக்கு உதவக்கூடிய வகையில் ஏதாவது முயற்சியை முன்னெடுக்க முனைந்தால் அதுவே தோழர் பத்மநாபாவுக்கும் ஏனைய தியாகிகளுக்கும் நாம் செய்யும் சிறந்த நினைஞ்சலி…
Desi
மனித நேயத்திதின் விளைநிலமே!…. பத்மநாபா
(தோழர் ஜேம்ஸ்)
எஸ்ஜி தோழர் என எல்லோராலும் அறியப்பட்ட அழைக்கப்பட்ட தோழர் நாபாவின் 19 நினைவு தினம் இன்று. பாசிச புலிகளினால் தமிழ் நாட்டின் சென்னையில் வைத்து கோழைத்தனமாக கொல்லப்பட்டு இன்றுடன் 19 வருடங்கள் நகர்ந்து சென்று விட்டன. நாபா தோழர்; விட்டுச்சென்ற மக்களுக்கான பணிகளை உங்கள் சிந்தனைகளின் அடிப்படையில் எடுத்து சென்ற பல தோழர்கள் இன்று எம்மோடு இல்லை. அவர்களும் புலிகளினால் பலி எடுக்கப்பட்டு விட்டார்கள். உங்களை நேசித்த ஒரு காரணத்திற்காக பல ஆயிரம் பொது மக்களும் புலிகளின் வதை முகாங்களில் அடைக்கப்பட்டு சித்திரவதையின் பின் கொல்லப்பட்டு விட்டார்கள். தோழர் றொபேட் எம்மோடு இல்லை. தோழர் ஐயா இல்லை. தோழர் சாமி இல்லை. இப்படி அடிக்கிக் கொண்டே போகலாம்.
ஆனால் நீங்கள் எம்மிடம் விட்டுச் சென்ற மக்கள் பணி மட்டும் எங்களிடம் மிஞ்சி இருக்கின்றது. எங்களிடம் பணம் இல்லை. வளங்கள் இல்லை. வசதிகள் இல்லை. ஒரு இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு நகர வாய்ப்புக்கள் இல்லை. ஆனால் மக்களின் விடிவிற்கான நல் கொள்கைகள் உள்ளன. வேலைத்திட்டங்கள் உள்ளன. தோழர் சுகு இருக்கின்றார். தோழர் மோகன் இருக்கின்றார். தோழர் இரத்தினம் இருக்கின்றார். இன்னும் ‘முகம் அறியாத’ பல ஆதரவாளர்கள் இருக்கின்றனர். எல்லோருக்கும் நல்ல ஆலோசனை வழங்க நல்ல ஆசான் தோழர் வரதர் இருக்கின்றார்.
இன்னும் எமக்;கு முகம் தெரியாத பல தோழர்கள் உயிர் அச்சுறுத்தல்கள் பல ஏற்பட்டபோதும் மக்களோட மக்களாய் செயற்பட்டவண்ணம்; ஈழத்தில் மரணத்தின் விளிம்புகளில் தம்மை இழப்பதற்கும் தயாராக கடந்த 19 வருடங்களாக ஒரு வேளை சாப்பாடு மட்டும் உண்டு, எந்த நேரமும் கொல்லப்படலாம் என்ற புலிகளினால் எம்மீது திணிக்கப்பட்ட போர் சூழலில் அச்ச நிலமையில் வாழ்ந்து வந்திருக்கின்றனர். கடந்த காலங்களில் இலங்கையில் அரசுகள் மாறின அரசுத் தலைவர்கள் மாறினார்கள் ஆனால் நாங்கள் மட்டும் மாறவில்லை. அரசு மாற்றத்திற்கும் அரசுத்தலைவர் மாற்றத்திற்கும் ஈடுகொடுத்து எம்மை நாம் மாற்றவில்லை. எம் கொள்கை பிடிப்பில் உறுதியாக நிற்கின்றோம். நீங்கள் எங்களை நல்ல கொள்கை உடையவர்களாக வளர்தெடுத்து எம்மை விட்டு பிரித்தெடுகப்பட்டீர்கள். உங்கள் வழித்தோன்றல்களாக இன்றும் நாம் நிமிர்ந்து நிற்கின்றோம்.
‘ஐக்கியமே எமக்கு முக்கியம்’ என்று உரைத்து ஈழவிடுதலை ஆயுதப் போராட்டம் உக்கிரமா இருந்த காலகட்டத்தில் ஐக்கியத்திற்காக உழைத்தீர்கள். ஈழவிடுதலை அமைப்புக்களுடையே ஐக்கியத்தையும் ஏற்படுத்தினீர்கள். இதன் வழித் தோன்றலாகத்தான்; ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றில் பல மிக்க கால கட்டமாக திம்பு பேச்சுவார்த்தை கால கட்டம் இருந்தது என்ற நிலமை ஏற்பட்டது. ஆயுதம் ஏந்திய ஈழவிடுதலை அமைப்புக்களையும், மிதவாத அமைப்புக்களையும் பேச்சுவார்த்தை மேசையில் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்த உழைப்பு உங்களையே சாரும். அதன் தொடர்சியாக நல்ல கொள்கை வகுப்பாளர்கள் கேதீஸவரன், வரதராஜப்பெருமாள் இருவராலும், ஏனைய தலைவர்களுடன் இணைந்து வரையப்பட்ட 4 அம்ச கோரிக்கையை சகலரது பொது முடிவாக திம்பு பேச்சுவார்த்தை மேசையில் முன்வைத்து இந்திய அரசின் வேண்டுகொளையும் அனுசரித்து(தனிநாடு தவிர்த வேறு கோரிக்ககைகளை முன்வையுங்கள் என்ற இந்திய அரசின் வேண்டுகோள்) அதேவேளை தமிழ் மக்களின் அன்றைய பிரதான கோரிக்ககையான தனிநாட்டு கோரிக்ககையை 4 அம்சக் கோரிக்கைகூடாக கேட்டு ஜேஆர் அரசை பேச்சு வார்த்தை மேசையில் அம்பலப்படுத்தி திணரடித்து எங்கள் பலத்தை ஐக்கியத்தின் ஊடு நிலைநாட்டிய திறமைஇ பெருமை, இராஜதந்திரம் எல்லாம் உங்களையே சாரும். கடந்த கால ஆயுத வன்முறை காலகட்டத்தில் மறைக்க முற்பட்டபோதும் இன்று ஏற்பட்டுள்ள ‘ஜனநாக நிலைமை’கள் இவற்றை தூசி தட்டப்பார்க்கும் நிலைமைகளை ஏற்படுத்தி இருக்கின்றது என்றால் மிகையாகாது.
ஐக்கியத்தின் தேவைகளையும்இ நியாதாதிக்கத்தையும் புரிந்து கொண்ட நீங்கள் எப்போதும் சகோதர படு கொலை தவிர்த்தும் எதிர்த்தும் வந்துள்ளீர்கள். எங்கள் துப்பாக்கிகள் எதிரிக்கு எதிராக மட்டுமே உயர்தப்படுமே ஒளிய சகோதரர்களுக்க எதிராக தூக்கி நாம் சகோதர யுத்தம் செய்யத் தயார் இல்லை என்றீர்கள். இதனால் தோழர் றேகன், அமீன் உட்பட பல தோழர்களை இழந்தபோதும் சகோதர யுத்தத்தை தவிர்த்து கனத்த நெஞ்சங்களுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு ஐக்கியத்தை முன்னிறுத்திய விடுதலைப் போராளி நீங்கள்.
இயக்கத்திற்குள்ளேயும் வெளியேயும் சகோதர படுகொலையை தவிர்த்த தலைவன் நீ. இயக்கத்திற்குள் ஏற்பட்ட பல முரண்பாடுகளை விமர்சனம், சுயர்விமர்சனம் என்ற வழிமுறைகளை மட்டுமே கடைப்பிடித்து தீர்த்து வைத்து ஜனநாக மத்தியத்துவத்தை பேணிய முற்போக்குவாதி. இன்று எஞ்சியிருக்கும் உங்கள் முன்னாள் சகாக்களும், இன்னாள் சகாக்களும் இதனை மறுத்துரைக்க முடியுமா? ‘அமையும் ஐக்கிய முன்னணியில் எமக்கு தலைமை பொறுப்பு வேண்டாம்’. ‘அமையும் ஐக்கிய முன்னணியில் பிரதிநிதுத்துவம் மட்டும் போதும்’. எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது எங்கள் பிரதிநிதித்துவம் மூலம் சரியான கருத்தை எங்களால் அங்கு நிலை நாட்ட முடியும் என்று கூறி அவ்வாறு செயற்பட்டு உங்கள் பதவிமோகம் அற்ற நிலைப்பாட்டை செயற்பாட்டின் மூலம் காட்டி வந்தீர்கள். இதன் வெளிப்பாட்டை இன்று கூட மாநகரசபைத் தேர்தலில் தோழர் சுகுவின் நிலைபாட்டில் நான் கண்டு சந்தோஷம் அடைந்தேன். தோழரே இன்றும் இன்னும் நீங்கள் எங்களுடன் வாழ்கின்றீர்கள் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள் என்பதையே எமது செயலாளர் நாயகம் தோழர் சுகுவின் செயற்பாடுகள் எடுத்தியம்பி நிற்கின்றன.
திருகோணமலை சிறிமாபுரத்தில் இலங்கை இராணுவத்திற்கு எதிரான மோட்டார் தாக்குதல் சம்பவத்தில் தாக்குதல் சிங்கள் மக்கள பொது மக்களை நோக்கி தாக்கப்பட்டதாக செய்திகள் வந்ததும் இவ்நிகழ்வு உண்மையானால் தாங்கள் வகித்து வந்த செயலாளர் நாயகம் பதவியை துறக்கப் போவதாக நீங்கள் முயன்றது, வேற்றின இன மக்கள் மீதான தாக்குதல்களை நீங்கள் எப்போதும் ஏற்றதும் இல்லை அனுமதித்ததும் இல்லை என்ற மனித நேயத்தின் வெளிப்பாடாக சகல இனத்தவராலும் பார்க்கப்பட்ட ஒன்று. மூவின மக்களும் இணைந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் இன ஐக்கியத்தை கட்டியெழுப்ப நீங்கள் செய்த போராட்டங்கள் இன்றும் எம்மை வழிநடத்திச் செல்கின்றன.
முயல்வோம்! வெல்வோம்!! உளம் சோரோம்!!! என்ற வாசகத்தின் உண்மைத்தன்மையை எமக்கு உணர்த்திய தலைவன், ஆசான், நண்பன் நீங்கள். மக்களுக்கான போராட்ட வாழ்வில், எவ்வளவு மிக்க பெரிய சிக்கலான விடமாக இருந்தாலும் ‘No Proplem’ எனக் கூறி எம்மை உற்சாகப்படுத்தி எமக்கு அதற்கான தீர்வையும்இ செயற்பாட்டு வழி முறைமைகளையும் காட்டி நாம் சோர்ந்திருக்கும் போது எம்மை இயக்கியதை நாம் எப்படித்தான் மறக்கமுடியும். எதுவும் எம்மிடம் இல்லாபோது எம்மால் முடியும் என்று தட்டிக்கொடுத்து நீங்களும் எங்களுடன் பட்டினி கிடந்து, நடந்து திரிந்து, வெறும் தரையில் உறங்கி கட்டிய மனைவியையும் தனித்திருக்க செய்து சக தோழர்களின் உணர்வுகளில் நீங்களும் ஒருவராக இருந்ததை இன்று நினைத்தால் கண்களில் நீர் வருவதை தவிர்க்க முடியவில்லை தோழரே! என் மகனாக நீங்கள் இன்னும் ஒரு முறை பிறந்திருக்கக் கூடாதோ என்று இயற்கையின் நியதிகளுக்கு அப்பால் மனம் தவிப்பதை தவிர்க்க முடியவில்லை தோழரே! தவிர்க்க முடியவில்லை தோழரே!
இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் புலிகளைத் தவிர ஏனையோர் ‘பார்வையாளர்கள்’ என்ற புலிகளின் ஏகபோக நிலைப்பாட்டை ‘அனுசரித்த’ இந்தி அரசின் நிலைப்பாட்டை ஏற்று, எம் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வுத்திட்டம் மூலம் நல்வாழ்வு அளித்திட ‘பார்வையாளர்’ ஆக நின்று ஒத்துளைத்ததையும்இ தேர்தல் ஜனநாக அரசியல் சூழலில் எங்களுக்கு எதிர்கட்சி அரசியலே ஆரம்பத்தில் நல்லது என்று புலிகளின் இடைக்கால ஏகபோக அரசிற்கு வழிவிட்டு நின்றீர்கள். பதவிகளை விட மக்கள் சேவையை, தேவையை முன்னிறுத்தி செயற்பட்டீர்கள். இது இன்றைய தலைமுறையினர் பலருக்குத் தெரியாது. இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு பின் புலிகள், இந்தியாவினால் நம்பப்பட்டு பின்பு, அதே புலிகளினால் ஏமாற்றப்பட்ட இந்தியாவின் உணர்வுகளை, தர்ம சங்கடங்களைப் புரிந்து கொண்டு மாகாண அரசை அமைத்து மக்கள் சேவை செய்ய முன்வந்தீர்கள். இதில் மிகச்சிறந்த நிர்வாகியும், மக்கள் நலன்களை எப்போதும் முன்னிறுத்திச் செயற்படுத்தும் வரதராஜப் பெருமாளை முதல் அமைச்சர் ஆக்கி உன் சிந்தனைக்கு வடிவம் கொடுத்து பதவி தவிர்த்து நின்ற போது நீங்கள் ஒரு தலைவனாக மேலும் உயர்தீர்கள்.
இவ்மாகாண சபையை கூட ஒரு ஐக்கிய முன்னணி அமைப்பின் மூலம் ஏற்படுத்தி ஐக்கியமுன்னணியின் தேவையையும், அதன் நியாயத்தன்மையும் மீண்டும் ஒரு முறை நிலை நாட்டினீர்கள். அமைந்த மந்திரிசமையில் ஒரு முஸ்லீம் பிரதிநிதி, ஒரு சிங்களப்பிரதி நிதி ஒரு கிழக்கு மாகாணப் பிரதிநிதி என இனங்களையும், பிராந்தியங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி இனங்களுக்கும், பிரதேசங்களுக்கும் இடையேயான ஐக்கியத்தை செயற்பாட்டின்மூலம் நிறுவிய இராஜ தந்திரி, செயல் வீரன் நீங்கள்.உங்களை கொலை செய்ய பிரபாகரனால் பயிற்றுவிக்கப்பட்டு அனுப்பப்பட்ட 3 பெண் புலிகளை மட்டக்களப்பில் வைத்து சக தோழர்கள் கைது செய்தனர். இச் செய்தியை உங்களிடம் கொண்டு வந்த போது அவ் மூன்று பெண்களையும் உடனடியாக விடுவிக்குமாறு வேண்டினீரகள். ஊங்களைக் கொல்ல வந்தவர்களையே மன்னித்து அவர்களை விடுவித்தது மனித நேயத்தின் உச்சத்தை தொட்ட சந்தர்பங்களில் ஒன்றாக அமைந்தது. இதற்கான காரணத்தை நீங்கள் கூறுகையழல், எமது சமூக அமைப்புக்குள் உள்ள ஒடுக்கு முறைகளை உடைத்து போராட புறப்பட்ட பெண்களின் முற்போக்குத்தன்மையை நான் மதிக்கின்றேன் எனவே அவர்களை விட்டு விடுங்கள் என்றீர்கள். மனித நேயத்துடன் கூடின பெண்விடுதலைக்கான உங்கள் உறுதிப்பாட்டை இங்கு நான் கண்டு வியந்ததுண்டு.
தோழரே உங்களின் பல தாக்கங்கள் இன்று என்னிடமும், எம்மிடமும் உள்ளன. உங்கள் மனித நேயம் எங்களையும் ஆட் கொண்டதினாலதான்; எம்மை அழிக்க துப்பாக்கியுடன் வந்த பலர் பிறிதொரு காலகட்டத்தில் தமது உயிரைக்காக்க ஓடியபோது எம்மால் அவர்கள் காப்பாற்றப்பட்டதே வரலாற்று நிகழ்வுகள். எம் ‘எதிரிகள்‘ பலர் இதனை நன்கு அறிவர். இவ் உணர்வுகள் செயற்பாடுகள் இன்றும்; தொடர்கின்றன, இனியும் தொடரும். எந்த மரணத்தையும் கண்டு நாம் சந்தோஷப்படவில்லை தோழரே!. எம் எதிரியின் மரணத்தைக் கண்டும் நாம் சந்தோஷப்படவில்லை தோழரே!
மனித நேயத்தின் விளைவால் வாழ்பவனும் வாழ்வை இழந்தவனும் நீயெ என்றால் மிகையாகாது. உனக்கு புலிகளால் நிகழ்ந்த மரணத்திற்கும் இதுவே காரணம். கூட இருந்த புறூட்டஸ் தக்க சமயத்தில் நழுவ நீ கொல்லப்பட்டது சதியோ என எம்மை இன்று எண்ண வைப்பதில் நியாயங்கள் இல்லாமல் இல்லை. உங்களுடன் இருந்த புறூட்டஸ் உன்னை கொன்றவனுடன் சங்கமாகி பொட்டனின் மாத் கொடுப்பனவில் இருந்தது யாவரும் அறிந்ததே.
சமகாலத்தில் வாழ்ந்த விடுதலைப் ஈழ விடுதலை போராட்டத் தலைவர்களுள் மனித நேயத்தில் உன்னை விஞ்ச யாரும் இல்லை. எதிரிகள் கூட உன் மனித நேயத்தின் முன் தலைவணங்கிச் சென்றனர் என்றால் மிகையாகாது. உன் மனித நேயத்தை எதிரி தனக்கு சாதகாமாகப் பாவித்து உன்னை நம்ப வைத்தான். படிப்பதற்கும் சாப்பிடுவதற்கும் ஒதுங்குவதற்கும் இடம் வழங்க உன்னை இசைய வைத்தான், நம்ப வைத்தான். தோழர்கள் எச்சரித்தும், உன் மனித நேயத்தை முன்னிறுத்தி நீ அவர்களை நம்பினாய், உதவினாய், உணவு கொடுத்தாய், உறைவிடம் கொடுத்தாய் கூடவே கற்க உதவியும் செய்தாய்
அவர்கள் மாற்றீடாக துப்பாக்கி ரவைகளை உனக்கு காணிக்கையாக்கினார்கள். தமிழக அரசும் அரசு இயந்திரமும் பாராமல் இருந்து அவர்களுக்கு உதவ நீ மரணித்தாய். நீ மரணித்தாய் தோழரே. கை தூக்கி முழந்தாள் இட்டு சரண் அடையவில்லை. விருந்தோம்பி கழுத்தறுக்கப்பட்டாய். சீ கொலை வெறியர்களே! மிருகங்களே நீங்கள் எல்லாம் மானிடப்பிறப்பா என அவர்களை எங்களால் ஏச முடியவில்லை. நீங்கள் எங்களை அவ்வாறு வழி நடத்தவில்லை, வாக்கு கூறவில்லை. எனவே எங்கள் இனிய பண்புகளை சுமந்து நாங்கள் நீங்கள் தூக்கிய கொடிகளை இன்னும் உயரத்தூக்கி போராடினோம் மனிதப்பண்புகளை மதித்து போராடினோம், மக்களையும் ஜனநாயக சக்திகளையும் இணைத்துக்கொண்டு போராடினோம். இன்று உன்னை அழித்தவர்கள் தங்களை தாங்களே மௌனித்து முழந்தாள் இட்டு சரணடைந்து அழிந்த கொண்டனர். வரலாறு பின்னோக்கிச் செல்வதில்லை தோழரே இறுதியில் வென்றது நீங்களே உங்கள் மனித நேயமே நீங்கள் எங்களுக்கு கற்றுக் கொடுத்த மனித நேயமே!
மக்கள் இல்லா மண்ணை நான் நேசிக்வில்லை என்று கூறுவீர்கள். பாசிச புலிகள் மக்கள் இல்லாத மண்ணை நேசிக்கின்றோம் என்றனர் எக்காளம் இட்டு செயற்பட்டனர். இன்று இறுதியல் மண்ணும் போய் மக்களும் போய் தாங்களும் மண்ணோடு மண்ணாய் கலந்து மக்கள் மனதிலும் இல்லாமலும் போய்விட்டனர். பாசிசத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும். ஐக்கியமே எமக்கு முக்கியம். எமக்கு தலைமை தேவையில்லை. அமையும் ஐக்கிய முன்னணியில் எமக்கும் ஒரு பிரநிதித்துவத்தை தாருங்கள் எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது சரியானதை நிலைநாட்டி மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்று கூறுவீர்கள். எவ்வளவு தீரக்கதரிசனமான விடயம். அன்று தோற்றது போல் தோன்றினாலும் இன்று வென்று மக்களையும் வெல்ல செய்து வெற்றிவாகை சூடியுள்ளீர்களே.
சூத்திரம்.கொம்
Vannikumaran
ஈழத்தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் ஆயுதம் ஏந்திய இயக்கங்குளுள்ளே ஈரோஸ் தவிர்ந்த மற்ற எல்லா இயக்கங்களும் அமைதியான யதார்த்த பூர்வமான அமைதியான அரசியல் வாழ்வை முன்னிலைப் படுத்தி ஆயுதத்தை பயன் படுத்தவில்லை. ” ஈரோஸ் இயக்கம் கலைக்கப் பட்ட போது யாழ் பல்கலைக்கழக நூலகத்தில் பாலகுமார்; பரா ஆகியோர்கள் நண்பர்கள் என்ற முறையிலும் அந்த இயக்கத்தில் நீண்டகால உறுப்பினராக இருந்ததின் உரிமையிலும்அதன் தலைவர் பாலகுமாரையும் மூத்த உறுப்பினர் பராவையும் சந்தித்து எவ்வளவு கஷ்டப்பட்டு கட்டி வளர்த்த எம் இயக்கத்தை ஏன் இப்படிச் செய்தீர்கள் பாலா என்று கேட்டபோது அதற்கு பாலகுமார் சொன்ன அந்த அமைதியான விளக்கம் இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அது இது தான்…
அந்த சூழ்நிலையில் இலங்கை அரசுடன் சேர்ந்து தமிழினத்தை காட்டிக் கொடுத்து ஈபிஆர்எல் எவ் மாதிரி எம்மக்களின் அழிவிற்கு விடுதலை பெற்றுத்தருகிறோம் என்ற பெயரில் நாம் துரோகம் செய்யத்தயாராக இல்லை. அப்படி இனத்தைக் காட்டிக்கொடுக்கும் ஈனமான செயல் எம் நோக்கமுமல்ல.
அதே நேரம் அன்று பலமான மக்கள் ஆதரவுடன் இருக்கும் புலிகளுடன் சண்டையிட்டு அவர்களை அழித்து எம் இனத்துள்ளே எம் சகோதரர்களை அழித்து புலிகள் போல் அதற்காக எம்பலத்தையும் எமது இயக்க உறுப்பினரின் விலைமதிப்பற்ற உயிர்களையும் அநியாயமாக வீணடிக்கும் நோக்கமும் எமக்கில்லை.என்றார்.
அப்படியானால் புலிகளுடன் எம் தோழர்களை ஏன் இணைத்தீர்கள் என்று கேட்டதிற்கு….
நான் அதை செய்யவில்லை என்றார்..
அப்படியானால் நீங்கள் அவர்களுடன் சேர்ந்திருக்கிறீர்களே என்று கேட்டேன்
அது என் விருப்பம் தவிர இறுதியாக இராணுவ அரசியல் பொறுப்புக்களில் இருந்தவர்களை அழைத்து எனக்கு சொன்னமாதிரித்தான் சொல்லி வெளிநாடுகளுக்கு செல்ல விருப்பமான அனைவருக்கும் அதற்குத் தேவையான ஒழுங்குகள் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகவும் மற்றவர்களில் பெரும்பாலானோர் விடுதலைப்புலிகளுடன் இணைந்து தொடர்ந்தும் போரட்டத்தில் பங்கு கொள்ளவிரும்பினார்கள் ஆனால் விடுதலைப் புலிகளுடன் சேருங்கோ என்று யாருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் சொல்லவில்லை என்றும் விடுதலைப் போராட்டத்தில் தொடரவிரும்புவோர் உங்களுக்கு தற்போது விடுதலைப் போராட்டத்தை யார் தொடருகிறார்களோ உங்கள் விருப்பத்தின் பேரில் சேருங்கள் என்று ஆற்றுப்பதடுத்தியகாகவும் கூறினார்…..
அப்படியானால் ஆயுதங்களை ஏன் விடுதலைப்புலிகளிடம் கொடுத்துர்கள் என்று கேட்டதிற்கு ….
உழவனிடம் தானே கலப்பையைக் கொடுக்க வேண்டும் கசாப்புக் கடைக்காரனிடம் கொடுக்க முடியுமா? என்றார்.
அதாவது ஆயதங்களை இலங்கை அரசிடமோ அல்லது அன்று இலங்கை அரசுடன் சேர்ந்து தமிழர்களைக் கொலை செய்து கொண்டிருந்த ஈபிஆர் எல் எவ் இடமோ கொடுக்க முடியாது அதை தேவையானவர்களுக்கு விடுதலை நோக்கி போராடுபவர்களுக்கு கொடுத்தால் பயன் படும் என்ற நோக்கிற்காகவும் எம்மிடம் இருந்த போராளிகளைவிட பல அதிக மடங்கான ஆயுதங்கள் இருந்ததால் அதை புலிகளுடன் இணைந்த எமது உறுப்பினர்களினூடாக வழங்க முடிவு செய்தோம்.
அதாவது அரசுடன் இணைந்து தமிழர் விடுதலைப் போரட்டத்தை காட்டிக் கொடுக்கவோ அன்றி விடுதலைப் பாதைக்குப் புறம்பாக புலிகளுடன் சண்டையிட்டு புலிகளை அழித்தோ அல்லது புலிகளால் தாங்கள் அழிக்கப்படவோ வழிவகுக்கப்படக் கூடாது என்பதால் இந்த முடிவை எடுத்தோம் என்று கூறி இந்த சூழ்நிலையில் எம் இயக்கத்தின் கோட்பாட்டிற்கு அமைய இதைவிட சிறப்பாக எமது போராளிகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதும் தமிழ் மக்களை பாதிக்ககாததுமான வேறு எந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என என்னைக் கேட்ட போது அந்த சூழ்நிலையில் அவர் எடுத்த முடிவு சரியென ஏற்றுக் கொண்டேன். அவரும் இறுதிவரை ஒரு தமிழ் போராளியாக இருந்தாரே ஒழிய புலிப் போராளியாக புலி இயக்கத்தின் சீருடை அணிவதை தவிர்த்து வந்தார்.
ஆனால் ஈபிஆர்எல்எவ் தனது ஆயுத போராட்ட இறுதிக்காலத்தில் தமிழ் இளைஞர் யுவதிகளை ஆடு மாடுகளைப் பிடிப்பது போல் ஆயுதத்தால் துரத்தி வேட்டையாடியபோது நல்லூர் தேர்முட்டிக்குள்ளே நான் ஒழிந்து தப்பியதையும் மாண்புமிகு வடக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தமிழ் மக்களின் முதாலாவது முதலமைச்சர் என்ற பெருமைக்குரிய பதவி ஏற்றசில நாட்களின் பின்பு யாழ்- சின்னக்கடையில் சறத்தையும் மடித்துக்கட்டிக் கொண்டு எம்மைத்தாக்கியதையும் ஓடிவந்த சயிக்கில் களையும் போட்டுவிட்டு நானும் என்நண்பர்களும் உயிர் தப்பினால் காணும் என்று ஓடியதையும் என் வாழ் நாளில் மறக்கமுடியாது.இதைவிட இந்திய இராணுவத்துடன் இவர்கள் சேர்ந்து செய்த கொடுமைகளையும் இந்த சந்தர்ப்பத்தில் நினைவு கூரவேண்டும். பச்சை மட்டை அடி .பச்சை மிளகாய் தீத்தியது போன்ற இவர்களின் புதுமையான தமிழர்களுக்கான தண்டனை முறைகளையும் நினைவு கூரவேண்டும்.
ஆயுதம் எந்திய தமிழ் இயக்கங்களுக்குள்ளே எல்லா இயக்கங்களும் தமிழர்களைக் கொன்றன. ஆனால் அவற்றுள்ளே தமக்கும் கொலை செய்யப்படுபவர்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லாமல் காசுக்காக கூலிக்கு கொலைசெய்த இயக்கம் இந்த ஈபிஆர்எல்எவ்
தமிழர் விடுதலைக்கு ஆயதப் போராட்ட உத்தியோ அல்லது அந்த அணுகு முறையோ சரியில்ல்லை என்னும் போது ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்த எல்லா இயக்கமுமே தவறுகளைப் புரிந்துள்ளன.அதனால் ஒருவரை ஒருவர் சரி தப்பு என தர்க்கம் செய்து நியாயப்பதடுத்த நியாயம் இல்லை. அதனால் கடந்தசரிபிழைகளைக்கதைத்து காலத்தயும் கடத்தி காழ்ப்புணர்வுகளையும் வளர்ப்பதை விட்டுவிட்டு அரசாங்கத்தை அண்டியும் தமிழ் மக்களை அடித்தும் வாழும் வாழ்வை விட்டு இனியாவது இதய சுத்தியுடன் இயங்குங்கள். மக்கள் விமர்சனங்களை தயவுசெய்து செவிமடுத்து செயல்படுங்கள் . இராணுவ பலமிருந்தும் அரசியல் ஆற்ற்ல் விமர்சன அனுமதி சுயவிமர்சனம் இல்லாததால் இன்று புலிகளுக்கு நிகழ்ந்தது தமிழர்களுக்காக அரசியல் நடத்தும் உங்கள் எல்லாருக்கும் பாடமாக அமையட்டும் .முடியாவிட்டால் சுருட்டியதை எடுத்துக்கொண்டு உங்கள் பேராசையை சுருட்டிக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு வழிவிடுங்கள்.
வன்னிக்குமரன்
ராபின் மெய்யன்
//கடந்த சரிபிழைகளைக் கதைத்து காலத்தயும் கடத்தி காழ்ப்புணர்வுகளையும் வளர்ப்பதை விட்டுவிட்டு அரசாங்கத்தை அண்டியும் தமிழ் மக்களை அடித்தும் வாழும் வாழ்வை விட்டு இனியாவது இதய சுத்தியுடன் இயங்குங்கள். மக்கள் விமர்சனங்களை தயவுசெய்து செவிமடுத்து செயல்படுங்கள். இராணுவ பலமிருந்தும் அரசியல் ஆற்றல் விமர்சன அனுமதி சுயவிமர்சனம் இல்லாததால் இன்று புலிகளுக்கு நிகழ்ந்தது தமிழர்களுக்காக அரசியல் நடத்தும் உங்கள் எல்லாருக்கும் பாடமாக அமையட்டும் //
வன்னிக்குமரன், உங்களுடைய வேண்டுதலே இன்றைய தமிழ் மக்களின் வேண்டுகோள். தோழர் நாபாவை சாதாரண மனிதனிலிருந்து இன்னொரு சூரியத் தேவனாக மாற்றுவதை தோழர்கள் கைவிட்டு புலிப் போபியாவில் இருந்து மீள வேண்டும்.
vanthijathevan
இந்த ரதன் ரகு எங்கே போனார்கள்…………. . தங்கள் தேசியத் தலைவர் தமிழருக்கு தேடி வைத்த சீரழிவுகளுக்கு எந்த முகத்தோடும் வந்து பதில் சொல்வார்களா? எங்கே பதுங்கியிருக்கிறார்கள்?
palli.
//இந்த ரதன் ரகு எங்கே //
உன்மையில் எனக்கும் இந்த கேள்வி பலநாளாய் உள்ளது; அவர்கள் இருவரும் மட்டுமல்ல சில காலத்துக்கு முன்பு ஜெயபாலன் சிலரது ரதன் ;ரகு அரிசந்திரன் சாம் இப்படி பலரது பெயர்கள் மிக அருமையான பின்னோட்டங்கள் என எழுதி இருந்தார்; ஏன் அவர்கள் தேசத்தை விட்டு
விலகினார்கள்?? தேச நிர்வாகத்துடன் தொடர்பில் இருக்கின்றனரா? தேசம் பலவிடயத்தை தேடி விமர்சித்து இருக்கிறது என்பதுக்கு அன்றய
கட்டுரையும் அதுக்கான இன்றய பின்னோட்டமும் ஒரு சான்று.
vanthijathevan
வன்னிக்குமரன் ராபின்மெய்யன்
தங்கள் கடந்த கால தவறுகளுக்கு சுய விமர்சனம் செய்து கொண்டு மன்னப்புக் கேட்டவர்கள் இந்த ஈபிஆர்எல்எப் உறுப்பினர்கள். ஏன் அவர்களை மேலும் துரத்துகிறீர்கள்?(அந்த அறிக்கை சுபத்திரனால் வெளியிடப்பட்டது) உங்களுக்கும் ஏதோ மனநோய் பாதிப்பு போலும். 1983 ல் இருந்து அந்த மனப் பிரமைகளில் இருந்து வெளியே வாருங்கள்.
ramohan
ஈழவிடுதலைப் போராட்டத்தில், சக அமைப்புகளால் படுகொலை செய்யப்பட்ட, தோழர்களை நினைவுகூறும் இவ்வேளையில், இவர்களால் கொலைசெய்யப்பட்ட, இலங்கை வாழ் அனைத்து இன மக்களையும், நினைவில் கொள்வது எமது கடமை…..
கடந்தகாலத்தை நாம் மறக்க என்னும்போது, சிலர் கடந்தகாலங்களில் தாங்களும் தாம் சார்ந்தவர்களும் செய்த அநியாயங்களையும், கொலை கொள்ளைகலையும், நியாயப் படுத்துவதும், விழக்கம் தருவதும், எமக்கு வேதனையைத்தருகிறது, கடந்த முப்பது ஆண்டு காலம், எமது வாழ்க்கையை தொலைத்து, மந்தைகள்போல் ஐரோப்பா வீதிகளில்!!!
வோண்டாம் இனிமேல் இவ்வாழ்க்கை வோண்டாம், கடந்த வருடம் மே 18க்கு பின், மீண்டும் வாழவோண்டும், என் மண்ணில் என் மக்களோடு என்ற ஆசை தோன்றிவிட்டது, எனவே தயவுசெய்து கடந்தகால கொடுமைகளை மறந்துவிடுங்கள்.
Sampanthan
Kandiah Kandasamy lived and died for the finest cause in the world by Shanie
“Man’s dearest possession is life. It is given to him but once, and he must live it so as to feel no torturing regrets for wasted years, never know the burning shame of a mean and petty past; so live that, dying he might say: all my life, all my strength were given to the finest cause in all the world- the fight for the Liberation of Mankind.”Today, twenty two years ago, Kandiah Kanthasamy, lawyer and human rights activist, was abducted in Jaffna by one of many armed groups that roamed the streets of Jaffna then Those who knew him have written of his unassuming and modest nature but with a total commitment to the cause of peace and justice. Suriya Wickremasinghe, Secretary of the Civil Rights Movement who edited a commemorative volume for Kanthasamy, wrote of him: “His vision of justice knew no narrow boundaries. Through his dedicated work in the Civil Rights Movement he promoted the human rights of all Sri Lankans; in his active membership of Amnesty International he sought to help victims of human rights violations in the rest of the world.”Kanthansamy fell into the category of persons whom Nikolai Ostrovsky, the Soviet writer and activist, had in mind in the above well-known quotation from his writings Kanthasamy’s life and his strengths were devoted to the finest cause in all the world – the liberation pf mankind. Wickramesinghe continues in her introduction: “Kanthasamy was totally non-partisan. He believed that relief and rehabilitation work should be conducted after identifying priorities carefully and according to proper standards and accepted procedures. While recognising the need to have rapport with various political agencies, whether governmental or other, Kanthasamy was adamant that the independence of a non-governmental organisation engaged in such humanitarian work should be preserved and must not be subject to political pressures, from whatever quarter they may come. ‘If we cannot carry on as a free organisation we should close it down’ was what he wrote shortly before his abduction.In documents that he had with foresight left for safe-keeping with the Civil Rights Movement, Kanthasamy speaks of the leaders of the Eelam Revolutionary Organisation (EROS) calling on him on a number of occasions in the months prior to his abduction. Kanthasamy had been one of the founder members in 1977 of the Tamil Refugee Rehabilitation Organisation (TRRO, not to be confused with the present TRO) and was actively engaged in relief and rehabilitation work in the North and East. In this work, he had circulated a memorandum detailing the work being done and the work that needed to be done.Kanthasamy writes of the meeting he had at his office with three representatives of EROS who had called there: “The discussion was centred round the memorandum circulated by TRRO under my signature. They said they would disrupt any rehabiltation work not in conformity with their policy, and no work will be tolerated except with their permission (as an after-thought they added with the permission of LTTE). When I asked them what their policy was, they said they cannot announce it, but permission should be obtained case by case. They also reminded me that Kathiramalai was killed because he acted against the policy of EROS, and that would be the fate of others as well.”
The end and the means
It was clear as to which group was the primary suspect in Kanthasamy’s abduction. But irrespective of which group was involved in this case, one needs to question the wisdom of violence in achieving one’s objectives. Regi Siriwardena, in a memorial lecture on the first anniversary of Kanthasamy’s abduction, stated: “There is in fact a deadly symmetry between the logic of ruling powers and the logic of militant groups engaged in mortal combat with them. Both believe that the end justifies the means. In the one case, it is the end of preserving democracy, restoring law and order, protecting national integrity; in the other case, it is the end of national liberation or social liberation. In either case, the lives of individual human beings are considered to be a small price to exact for the cherished end.”What makes this logic unacceptable are not just human considerations which some people will dismiss as sentimental moral squeamishness. It is the fact that the means you use determine the end you reach. As the German socialist Lassale wrote in the last century:
Show us not the aim without the way.
For ends and means on earth are so entangled
that changing one you change the other too.
Each different path brings other ends in view.”
We see the truth of what Siriwardena and Lassale said in our own situation, and have seen the truth of it in the past in many countries. ‘Liberty, Equality, Fraternity’ was the rallying cry of the French Revolution but very soon the revolutionaries under the Jacobins led by Robespierre had instituted a reign of terror. At the trial of the deposed King, Robespierre (or his colleague Danton) had declared: ‘We don’t need to judge the king; we will kill him’ and so the King was executed. Not long after, Robespierre had Danton executed for dissent. It did not take much more time for the tide to turn against Robespierre and he was denounced in the Legislative Assembly and sent to the guillotine. Arrogance and disregard of the rule of law will always end in disaster. As Siriwardena said, it is inane logic to attempt at preserving democracy by undemocratic methods and upholding law and order by breaking the law.Mahesway Velautham, also a lawyer and an activist, was yet another victim to the violence of one of the militant groups in Jaffna. She dared to be independent. But twenty years before the assassin’s bullet got her, she wrote of Kanthasamy: Those who killed him have committed an enormous crime against our society. Kanthasamy acted nobly without swerving from his ideals, never was afraid to do right, never hesitated. Siriwardena said: It isn’t difficult to see that the very existence of such a man was a challenge to any group which was seeking to enforce uniformity of opinion. Kanthasamy can rightly be honoured as a martyr to a cause which too few people are prepared to defend today in this country.
Why Human Rights is important
The UN adopted the Universal Declaration of Human Rights in 1948. Almost all countries have a chapter on fundamental rights written into their Constitutions and many have ratified optional human rights treaties. The issue of human rights is not to be dismissed as some sort of sentimental airy-fairy concept. It is related to real life. In almost all countries, there are issues of violence based on race, ethnicity, religion, caste, gender and politics. Domestic violence, violence against women and children, violence against political dissidents and discrimination in various forms are every-day life situations for many even in Sri Lanka. That is why it is important to ensure that fundamental rights are not only entrenched in our Constitution but enforced. Those who violate them have to be made accountable for their actions. Very often, violation of fundamental rights by agents of the state are not properly investigated and our justice system has time and again proved ineffective. Suriya Wickremasinghe in the same commemorative volume raises some very pertinent issues which all those who wish for a Sri Lanka where peace and justice prevails must ponder: “What is the role of the moderate, nonpartisan activist in human rights and relief work in Sri Lanka today? What is the role of the truly independent non-governmental organisation in this field? Traditionally, threats have been seen to come from the State, one has learned to cope with and to live with such dangers. How do individuals and organisations now face up to new threats from other and hitherto unexpected quarters?” Wickremasinghe was talking primarily of militant groups who then abducted and killed people like Kanthasamy. But even today those concerns are still valid with armed groups still active not only in the North and East but also in other parts of the country as well.Human rights, justice and democratic freedoms can be preserved and the rule of law upheld only if we have courageous people like Kanthasamy, who will speak up for these freedoms and stand in solidarity with such courageous people who struggle for such freedoms. Wickremasinghe concludes: “Everyone concerned with human rights and relief work must face up to and discuss these issues. Most important, the public must be made aware of them. For in the last analysis it is the responsibility of the people to decide on and demand the standards they expect of their leaders, and the nature of the society in which they aspire to live.”
Varathan
EPRLF also acted brutally like LTTE during IPKF time. People in Jaffna know how EPRLF and ENDLF tortured/killed and forcefully recruited the youths in Jaffna during 88-90. EPRLF mandaian group introduces sack-bodies in Jaffna town in Sep 89 to terrorize the people. Still I could remember the those scenes. Somebody can simply say like Gothapaya… no meaning to go back. But people who lost their love ones by LTTE,EPRLF, ENDLF and other armed groups, and SLA wanted to go back to get justice.
kanapathi
பத்பநாபா நினைவு மலரில் பத்மநாபா பற்றி தலைவர்கள் சொன்னவை
http://www.pathmanabha.blogspot.com/