தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வாக அமையும் அதிகாரப் பரவலாக்களை ரணில் தலைமையிலான ஐ.தே.க.வினால் மட்டுமே முன்வைக்க முடியுமெனத் தெரிவித்த அக்கட்சியின் பொருளாளர் டி.எம்.சுவாமிநாதன் தமிழ் மக்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும் வடக்கு உள்ளூராட்சி தேர்தலில் அரசின் சலுகைகளுக்காக வாக்குகளை வீணடிக்காது நீண்ட கால நன்மைக்காக ஐ.தே.க. வுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமெனவும் கோரினார்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வுகள் குறித்து அரசு பலவற்றைக் கூறுகின்றது. தீர்வு தொடர்பில் புதிய அரசியலமைப்பை அரசு முன்னெடுத்தாலும் அது எழுத்தில் மட்டுமிருந்தால் எந்தப் பிரயோசனமுமில்லை. அத்துடன் அதனை தமிழ் மக்கள் ஏற்கப் போவது மில்லையெனவும் அவர் மேலும் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.