அனர்த்த முகாமைத்துவ நிலைய இணைப்பாளர் ஜயசிங்க நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மிரிஹான பகுதியிலுள்ள இவரது வீட்டிற்கு திங்கட்கிழமை இரவு சென்ற மிரிஹான விஷேட பொலிஸ் குழுவொன்றே இவரைக் கைதுசெய்துள்ளது.
கொலைகள் மற்றும் கொள்ளைகள் தொடர்பான குற்றச்சாட்டின் பேரிலேயே மேலதிக விசாரணைகளுக்காக இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நேற்றுக் காலை பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது வீட்டிற்கு முன்னால் வாகனங்களில் வந்திறங்கியவர்கள் வீட்டுக்குள் நுழைந்து இவரை பலவந்தமாக இழுத்துச் சென்றதால் இவர் கடத்தப்பட்டதாக முதலில் செய்திகள் வெளியாகியிருந்தன.
இவர் மீது சுமத்தப்பட்ட பல குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாயா
இவரைப் போல் கருணா தரப்புகளையும் போலீசார் கைது செய்ய வேண்டும்.
இன்று வவுனியா முகாமுடன் தொடர்பு கொண்ட போது , புலிகளில் இருந்த ஒருவர் எங்கே இருக்கிறார் என்று சொல்லும்படி முகாமிலிருக்கும் ஒரு சில குடும்பங்களை கருணாவின் பரிவாரங்கள் மிரட்டியிருக்கின்றன. அவர்கள் தாமும் மக்களோடு மக்களாக வந்ததால் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
அப்படியானால் வெளிநாட்டு உறவுகளோடு கதைத்து குடும்பத்துக்கு 15 லட்சம் வாங்கித் தருமாறும் இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்று தெரியாது என்றும் முகாமுக்குள் வைத்து வெருட்டியதோடு , அவர்களது பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டை போன்றவற்றை பலாத்காரமாக எடுத்துச் சென்றுள்ளனர்.
நான் அவர்களுக்கு இது சம்பந்தமாக செஞ்சிலுவை சங்கத்தோடு முறையிடுமாறும் , வேறு சில தொடர்பு இலக்கங்களை கொடுத்தேன். அத்தோடு அரச அதிபருக்கு இது குறித்து அறிவிக்குமாறு அரச அதிபரோடு நெருங்கியவர்களிடம் தெரிவித்துள்ளேன்.
தேசத்தை பார்க்கும் எவருக்கும் இது குறித்த தகவல்களை அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலர் கோட்டபய போன்றோருக்கு அறிவிக்க முடிந்தால் அறிவிக்கவும்.
இவை மிக கேடு கெட்ட துச்சமான செயலாகும். புலிகளது அதே குணாதிசயங்களோடு வளர்ந்த இவர்களது அழிவும் என்னைப் பொறுத்தவரை மிக அத்தியாவசியமானது. பாதாள கோஸ்டிகளை களை எடுப்பது போல் இவர்களையும் களையெடுப்பது மிக முக்கியமானதாகும்.
பார்த்திபன்
உண்மை தான் மாயா மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல் சில குழுக்களின் அட்டகாசங்கள் அகதி முகாங்களில் நடப்பதாக நானும் சில நண்பர்கள் மூலமாக அறிந்தேன். இவர்களை விட்டு வைப்பது மிகவும் ஆபத்தானது. உடனடியாக அரச அதிபர் மூலமாக இதற்கோர் முடிவு கட்ட வேண்டும். வவுனியா அரச அதிபர் மக்களுக்கு தன்னாலியன்ற அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றார். அவர் இப்படியான நடவடிக்கைகளுக்கும் உரிய நடவடிக்கை எடுத்து ஆவன செய்வாரென்று நம்புகின்றேன்.
பல்லி
பார்த்திபன் அரசாங்க அதிபரின் புலம்பலும் எம்மைபோல்தான் உள்ளது; அவர் கூட இந்த மக்களுக்கு இந்த கொடியவர்களால் ஒரு விடிவு வராதா என புலம்புவதாக வன்னி செய்தி,
மாயா
இது குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களது நெருங்கிய பெளத்த குருமாருக்கு தெரிவித்தேன். அத்தோடு சிங்கள ஊடகங்களுக்கும் அறிவித்துள்ளேன். இவர்கள் கூடிய விரைவில் இதை முடிவுக்கு கொண்டு வர தம்மால் இயன்றதை செய்வதாக தெரிவித்தார்கள்.
புலிகள் மேல் உள்ள கோபத்தால் அப்பாவிகளை யார் கொடுமைப்படுத்தினாலும் அவர்களை கொடியவர்களாகவே நாம் கருத வேண்டும். கருணாவின் காலம் வெகு கெதியாக முற்றுப் பெறும். புலிகளோடு இருந்ததாலோ அல்லது புலிகளில் இருந்த முக்கியமானவர்களது குடும்பம் என்பதாலோ வெற்றுக் கையோடு தினமும் உயிருக்கு அஞ்சி வாழும் நிலையில் முகாமில் இருப்போரை துன்புறுத்துவது அல்லது அவர்களிடம் பணம் பறிப்பது சரியானதல்ல. இந்த கொடுமையை செய்ததற்கு உங்களுக்கும் இறைவன் அதையே பரிசாக தருவான். அது விரைவில் நடக்கும்.
vanthiyadevan
karuna is…………………………. he is the big enemy for all tamils in srilanka
பார்த்திபன்
பல்லி
வவுனியா அரச அதிபர் பெண்ணாக இருப்பதால், அவரால் சில எல்லைகளை கடந்து செயற்பட முடியாமல் இருக்கலாம். ஆனால் வன்னி மக்களும், புலம்பெயர்ந்து வாழும் மக்களும் இந்தக் குழுக்களின் முகத்திரையை மாயா சொல்வது போல் சகல ஊடகங்கள் மூலமாகவும் கிளித்தெறிய வேண்டும். இப்படியானவர்களை சமுதாயத்தை விட்டு ஓட ஓட விரட்டணும். அப்போ தான் அந்த மக்கள் நிம்மதியாக வாழ முடியும்.
Kirupa
கோத்தபயா, சரத், மகிந்த வட்டதில் சமிபமாகாலத்தில் உருவாகி வரும் பனிப்போர், விரைவில் கருணா போன்றவர்களுக்கு சங்கு என்பதில் சந்தேகம் இல்லை.
சிங்கள பத்திரிகையாளர்களும், ஆங்கில பத்திரிகையாளர்களும், பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளும் கருணாகத்துக்கு முன்ன்ரே சங்கு சத்த்தம் கேக்கும் அபாயத்தில் இருக்கிறார்கள். ?
நண்பன்
அரசின் எதிரிகளை, படுகொலை மற்றும் கடத்தி வந்த பாதாள கோஸ்டியினரும் தற்போது பாதுகாப்பு தரப்பினரால் என்கவுண்டர் முறையில் படுகொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இவர்கள் செய்த செயல்கள் வெளியே வந்துவிடும் என்ற நிலையிலும், ஏனைய பகுதிகளை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம் எனும் நிலையிலும் பாதாளக் கோஸ்டியினர் என கைது செய்யப்பட்டு அல்லது , சரணடைந்தவர்கள் பின்னர் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகிறார்கள். இவர்கள் கொலையுண்ட பின்னர் சொல்லும் காரணம் ஆயுத காட்டிக் கொடுப்பின் போது தாக்க முற்பட்ட வேளை கொலை செய்யப்பட்டார்கள் என்பதேயாகும். இப்படி இதுவரை 100க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளார்கள்.
அமைச்சர் மெர்வின் சில்வாவின் கையாளான குடு லால் ( தூள் லால்) எனும் பாதாள உலகத்தை சேர்ந்தவரையும் பாதுகாப்பு தரப்பு என்கவுண்டர் செய்ய திட்டம் தீட்டியதை உணர்ந்த மெர்வின் உடனடியாக குடு லாலை , லண்டனுக்கு விமான நிலையம் வரைச் சென்று ஏற்றி அனுப்பியுள்ளார். லால் ஏறிய விமானம் கட்டுநாயக்காவை விட்டுச் செல்லும் வரை மெர்வின் சில்வா விமான தளத்தில் நின்றதோடு , ஏனைய பாதுகாப்பு மற்றும் சுங்க துறையினர் செய்வதறியாது அடுத்த பக்கம் திரும்பிக் கொண்டு இருந்துள்ளனர். மெர்வின் சில்வாவை கட்டுப்படுத்தும் பலம் அதிபர் ராஜபக்ஸவிடம் கூட இல்லாத ஒரு நிலை பல காலமாக இருந்து வருகிறது. அதிபர் மகிந்தவுக்கு விசுவாசமாக இருந்து கொண்டு , செய்யும் அடாவடித்தனங்கள் உச்சத்தை அடைந்தாலும் , சில காரியங்களுக்கு மெர்வினின் பங்களிப்பு தேவையாக இருக்கிறது. ஊவா மாகாண தேர்தல் கள பொறுப்புகள் கூட மெர்வினுக்கு தற்சயமயம் கையளிக்கப்பட்டுள்ளது. பலாத்காரத்தின் வழி எதையும் செய்யத் துணிந்தவர் மெர்வின். இது பலரிடம் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
இதற்கு ஒப்பான காரியங்களே கருணாவும் , கருணாவின் குழுவினரும் செய்யும் அடாவடித்தனங்கள்.
முகாம்களில் இருக்கும் மக்களை விரைவில் குடியமர்த்த வேண்டும் என்ற கருத்தை ஜனாதிபதி மகிந்த முன் வைத்த போது, கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு , வன்னியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமான பின்னர் மக்களை மீள் குடியமர்த்த சரத் பொண்சேகா தமது கருத்துகளை முன்வைத்தார். இதுவே சரத் மற்றும் ஜனாதிபதி இடையே முறுகலை தோற்றுவிக்கக் காரணமாகியுள்ளது. ஜனாதிபதிக்கு மேலாக இராணுவ தளபதி பேசுவதை மகிந்த விரும்பவில்லை. புலிகளை முடித்துவிட்ட களிப்பில் அவரது பேச்சுக்கள் இராணு ஆட்சியின் தோற்றத்தை உருவாக்க வழி செய்வதாக பலர் உணர்ந்தனர்.
எனவே ஜனாதிபதி , சரத் பொண்சேகாவை கட்டுப்படுத்த அவரை முப்படைத் தலைமையகத்துக்கு மாற்றி கோத்தாபய ராஜபக்ஸவின் பலத்தை அதிகரிக்க சரத்தின் இடத்துக்கு ஜகத் ஜயசூரியவை பதவியமர்த்தினார். தவிரவும் வன்னி மோதல்களில் சரத் பொண்சேகாவுக்கு கீழ் வன்னி நடவடிக்கைகளில் இருந்த தளபதிகளையும் வேறு பதவிகளுக்கு மாற்றியுள்ளனர்.
வன்னி நடவடிக்கை வரையிருந்த முக்கியமானவர்கள் தற்போது மாற்றப்பட்டுள்ளனர். அடுத்த கட்ட பணிகளுக்கு இனி புதியவர்களே தலைமையேற்பார்கள். இவ்வகையில் பாதாள கோஸ்டிகள் மட்டுமல்ல ஏனைய ஆயுதக் குழுக்களுக்கும் கடைசி அத்தியாயம் வெகு விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.
இவர்கள் செய்த நடவடிக்கைகளை படையினரும் போலீஸாரும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் இல்லாமல் போகும் வரை இலங்கையில் பயங்கரவாதம் என்பது பயங்கரவாதிகளின் கைகளில் இருந்து அரச பயங்கரவாதிகளான பாதுகாப்பு தரப்பினரிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாக நேற்று முன்தினம் குற்றத் தடுப்பு அதிகாரியான வாஸ் குணவர்தனவின் மகனின் பள்ளியில் கற்கும், மாணவன் நிபுண ராமனாயக்க போலீசாரால் கைதாகி தாக்கப்பட்டு பாதாள உலகத்தினர் போல கொலை செய்யப்பட இருந்த சமயம், நிபுணவின் நண்பர்கள் மற்றும் பெற்றோரது உடனடி செயல்பாட்டினால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
தற்போது கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிபுண , ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதை தவிர்த்து வருகிறார். அது தமது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என மட்டும் தெரிவித்துள்ளார்.
இது போன்ற நிலையில் சிறீலங்காவில் உண்மையான அமைதி திரும்ப இன்னும் வெகு நாட்கள் எடுக்கும் என நினைப்பதைத் தவிர வேறு எதுவும் சொல்வதற்கில்லை.