நாட்டில் இதுவரை 225 டெங்கு நோயாளிகள் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் இந்நோயினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தையும் தாண்டிவிட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
டெங்கு நோயை பரப்பும் நுளம்புகள் பரவுவதைத் தடுக்கும் வகையில் பொது இடங்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்கள் போன்றவற்றை சுத்தமாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அறிவுறுத்தல்களுக்கு அமைவாக செயற்படாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
டெங்கு நோயால் பாதிப்புள்ளானவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கான சகல முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.