கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு யாழ். சென்றுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. வடக்குக் பாடசாலைகளின் குறைப்படுகள் தொடர்பாக நேற்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டார்.
அதிபர், ஆசிரியர் தொடர்பான வெற்றிடம் மற்றும் நிர்வாக பிரிவுகளில் நிலவும் குறைபாடுகளை நிறைவு செய்வதாக அமைச்சர் உறுதியளித்தார்.
கல்வி நிர்வாக சேவையுடன் இணந்த பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக அதிபர், ஆசிரியர் மற்றும் உத்தியோகத்தர்கள் கூட்டத்தில் அமைச்சரிடம் எடுத்துரைத்தனர். இதனையடுத்தே அமைச்சர் மேற்கண்ட உறுதிமொழியை வழங்கினார்.
கல்வி அமைச்சு செயலாளருடன் கோப்பாய் கல்விப் பீடத்தையும் அமைச்சர் குழுவினர் பார்வையிட்டனர்.