தென் மாகாண சபை எதிர்க் கட்சித் தலைவரும் மாத்தறை தொகுதி ஐ. தே. கட்சி அமைப்பாளருமான ஜஸ்டின் கலப்பத்தி, அரசில் இணைய முடிவு செய்துள்ளார்.
தென் மாகாண சபை கலைக்கப்பட்டதும், தான் அரசாங்கத்துடன் இணைந்து, தென் மாகாண சபையின் அங்கத்துவம் பெற்று ஐ. ம. சு. முன்னணியில் தென் மாகாண சபைக்கு போட்டியிடப்போவதாகவும் தெரிவித்தார்.
அவரது இல்லத்தில் கடந்த 1 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில், உரை நிகழ்த்திய ஜஸ்டின் கலப்பத்தி கூறியதாவது:- யுத்தத்தை மூன்றே வருடங்களில் முடிவுக்கு கொண்டு வந்து, பிளவுபட்டிருந்த நாட்டை ஒன்றிணைத்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மக்களின் துயரங்களை போக்கி நாட்டில் சுபீட்சத்தை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கை இருப்பதால், அவரின் கரங்களைப் பலப்படுத்தும் நோக்கில் தான் அரசுடன் இணைய தீர்மானித்ததாக அவர் கூறினார்.