கொழும்பில் தமிழ்க் கைதிகள் உண்ணாவிரத போராட்டம்

_jail_.jpgகொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் தடுப்புக் காவல் உத்தரவில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தம்மை விடுதலை செய்ய வேண்டும், அல்லது பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும், வழக்கு தொடரப்பட்டால் தத்தமது பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்றப்படவேண்டும் அல்லது தமக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விரைவாக விசாரணை நடத்தி நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜரபடுத்த வேண்டும் என  உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்க் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

Show More
Leave a Reply to பல்லி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • mike
    mike

    ஆயுதம் ஏந்தியவர்களுக்கு மறுவாழ்வும் மன்னிப்பும், ஆனால் புலிகளென சந்தேகத்துடன் கைது செய்யப்பட்டு அநியாயமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவிகளுக்கு என்னதான் முடிவு. இதைப்பற்றி எவருமே கவலைப்படுவதாக தெரியவில்லையே. இதன் பெயர்தான் மகிந்த சிந்தனையில் ஜனநாயகமா? அல்லது ஜனாதிபதிக்கு இதைப்பற்றி எதுவுமே தெரியாதா?

    Reply
  • மாயா
    மாயா

    இவர்கள் பாவம் மைக். இவர்கள் யாருக்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்களோ , அவர்கள் கூட இவர்கள் குறித்து சிந்திப்பதே இல்லை. இவர்களில் பெரும்பாலோனோர் அப்பாவிகள். அவர்களது குடும்பமும் அவர்களுமே அவர்களது விடுதலைக்காக போராட வேண்டியுள்ளது.

    எனது அனுபவத்தில் ஒரு நிகழ்வை பலரது விழப்புணர்வுக்காக இணைக்கிறேன். நான் ஒரு இயக்கத்தில் இருந்த போது , என்னைத் தேடி வந்த போலீஸார் படித்துக் கொண்டிருந்த என் தம்பியை பிடித்து பூஸா முகாமில் 18 மாதம் போட்டார்கள்.

    தம்பியை வெளியே கொண்டு வர ஏதாவது செய்ய முடியுமா என இயக்க தலைமைகளிடம் கேட்டேன். “போராட்டம் என்றால் இப்படியானவை நடக்கும். இது போன்ற பிரச்சனைகளை தீர்க்க நாங்கள் இறங்கினால் , எமது போராட்டத்தை முன்னெடுக்க முடியாது” என்ற பதில் எனக்கு தரப்பட்டது.

    இருந்த சொத்துகளை விற்றும் கூட தம்பியை வெளியே எடுக்க முடியாமல் போனது. அதன் பின் நான் இயக்கத்தை விட்டு வெளியேற முடியாத நிலையில் குடும்பத்தினரோடு எதுவித தொடர்பும் இல்லாமல் இருந்தேன். தம்பியை வெளியே எடுக்கும் முயற்சிகள் தோல்வி கண்டன. இந்த சோகத்தில் என் தந்தையார் இறந்தார். பின்னர் இந்திய இராணுவம் இலங்கை வந்த போது பொது மன்னிப்பு வழங்கப்பட்டு தம்பி வந்த போது அப்பா இறந்த சேதி தெரிந்தது. அதைக் கூட அவன் வேதனைப்படுவான் என்று யாரும் சொல்லவில்லையாம்.

    நானும் இயக்கத்தை விட்டு வெளியேறி வெளிநாடு ஒன்றுக்கு அகதியாக வந்த பின்னரே தெரிய வந்தது. இதுபோல ஆளாளுக்கு ஒவ்வொரு கதையிருக்கும்.

    இளைஞர்களே அவதானமாக இருங்கள். உணர்ச்சி வசப்பட்டு விட்டில் பூச்சுகள் போல் உணர்ச்சி வசப்படுவோர் விளக்குகளில் விழுந்து எரிந்து போகாதீர்கள். உங்கள் வாழ்வு அழிந்து விடும். அதன் பின்னர் எம்மைப் போல் வயதாகி இப்படி எழுதித்தான் சுகம் காண வேண்டி வரும்.

    எங்கு வாழ்ந்தாலும் கல்வி கற்றுக் கொள்ளுங்கள். இருக்கும் நாடு சரயில்லையா? வெளிநாடு ஒன்றுக்கு சென்று கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் ஒவவொருவரது உயர்வும் , நாளைய எமது சமுதாயத்தின் உயர்வாகும்.

    ஒவ்வொரு கல்லும் ஒரு கட்டிடத்தை உருவாக்க உதவுவது போல, ஒவ்வொரு இளைஞரது செயலும் நமது சமுதாயத்தை கட்டி எழுப்ப வழி வகுக்கும். அதற்கு அரசியல் தேவையில்லை.

    Reply
  • பல்லி
    பல்லி

    இவர்களது அழுகை சத்தம் கொழும்பை தலமையகமாக வைத்து செயல்படும் சகல தமிழர் அமைப்புக்கும் தேர்தலுக்கு முன்பு கேக்குமா? கேக்க வேண்டும் என்பது பல்லியின் ஆதங்கம்;

    Reply
  • BC
    BC

    மாயா, தமிழ் இளைஞர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய அறிவுரை. தங்கள் சுயநலங்களுக்காக போராட்டம் என்ற பெயரில் இளைஞர்களின் வாழ்வை பாழ்படுத்த பலர் தயாராக இருக்கிறார்கள்.

    Reply