ஆசிரியர்களும் ‘மொபைல்’ உபயோகிப்பது தடை

images-teli.jpgமாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களும் பாடசாலைக்குள் கையடக்கத் தொலைபேசியை உபயோகிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தெளிவுபடுத்திய ஜனாதிபதி அண்மைக்காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களைச் சுட்டிக்காட்டியதுடன் ஆசிரியர்களும் பாடசாலைக்குள் கையடக்கத் தொலைபேசியை உபயோகிக்கக் கூடாதென தெரிவித்தார்

அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற ஆசிரிய நியமனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி; இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது; மாணவர்களைப் போன்றே ஆசிரியர்களும் ஒழுக்கத்தினைப் பேணுவது அவசியம் எத்தகைய சூழ்நிலையிலும் உணர்ச்சிகளுக்கு அடிமைப்படாமல் தமது பதவியின் கெளரவத்தைப் பாதுகாப்பது அவசியம்.

அரசாங்கம் அரச துறையில் பாரிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளது. யுத்தம் நடைபெற்ற காலத்திலும் அரச ஊழியர்களுக்கான சலுகையோ அபிவிருத் தியோ நிறுத்தப்படவில்லை. இந்த வருடத்தில் மாகாண சபை பாதைகளை அபிவிருத்தி செய்வதற்கென 360 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

 • பல்லி
  பல்லி

  பாராட்டபட வேண்டிய செயல்; அதை நடைமுறை படுத்த அதிகாரிகள் செயல்பட வேண்டும்; இலையேல் அவர்கள் மீது கடும் சட்ட நடவெடிக்கை எடுக்க வேண்டும்;

  Reply
 • மாயா
  மாயா

  நவீன உலகில் இது ஒரு முட்டாள்தனமான செயல். கைத் தொலைபேசிகள் தொல்லை கொடுப்பது அதன் பயனை அறியாதவர்களால்தான். ஒரு அவசர தேவைக்கோ, அல்லது ஒரு விபத்தின் போதோ மட்டுமல்ல ஒரு நபர் எங்கே இருக்கிறார் என்று அறிவதற்கும் கைத் தொலைபேசி அறிவியல் ரீதியாக பல நன்மைகளையே செய்கிறது.

  பாவிப்போர் தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்தலாம். மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவதற்கு ஒப்பானது இச் செயல். கடந்த காலங்களில் இலங்கையில் கடத்தப்பட்ட பலரில் சிலர் கைத்தொலைபேசி இருந்தமையால் உயிர் தப்பினர்.

  1. தமது நிலையை குடும்பத்தினர் மற்றும் பாதுகாப்பு துறைக்கு அறிவித்து
  2. கைத்தொலைபேசி இருக்கும் இடத்தை அறிந்து
  3. கைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட இலக்க நபர்களை கண்டறிந்து என பல காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். எமன் எங்கிருந்து வருவான் எனத் தெரியாது.

  ஒருவர் கைத்தொலைபேசி வழி காதலித்ததுக்கு ஒரு நாடே தண்டனை அனுபவிக்க வேண்டுமா? வளரும் விஞ்ஞானத்தோடு நகராத செயலாகவே இருக்கிறது. பாடசாலை நேரங்களில் கைத் தொலைபேசி பாவிக்க தடை விதிக்கலாம். அதற்காக பாடசாலைக்குள் கைத் தொலைபேசி பாவிக்கக் கூடாதென்றால், அமைச்சர்கள் கூட்டங்களில் மற்றும் பாராளுமன்றத்தில் கூட கைத்தொலைபேசி வழி பேசிக் கொண்டு அடுத்தவருக்கு இடைஞ்சலாக இருக்கிறார்களே? இவை எப்போது தடுக்கப்படும்?

  Reply