மியன்மார் வெளிவிவகார அமைச்சர் நியான் ஸின் இரண்டு நாள் உத்தியோகபூhர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஆகஸ்ட் 3 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மியன்மாருக்கு அன்மையில் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தபோது அவர் விடுத்த அழைப்பினை ஏற்றே மியன்மார் வெளிவிவகார அமைச்சர் இங்கு வருகை தரவுள்;ளாதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மார் வெளிவிவகார அமைச்சருடன் அந்நாட்டு வர்த்தகர்கள் குழுவொன்றும் வருகை தரவுள்ளது. வடபகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கென குறைந்த செலவில் வீடுகளை நிர்மாணிக்கும் சாத்தியம்பற்றி ஆராய்வதற்காக இக்குழுவினர் நலன்புரிக் கிராமஙகளுக்கும் விஜயம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் மூலம் இரு நாடுகளுக்குமிடையேயான உறவுகள் மேலும் பலமடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.