‘உயிர்க்கும் தமிழீழம்’ – நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்குழு உறுப்பினர்கள் ஐரோப்பா வருகை

rudrakumaaran_v.jpgஐரோப்பிய நாடுகளுக்கான பயணத்தினை மேற்கொள்ளவிருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்குழு உறுப்பினர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1 ஆம், 2 ஆம் நாட்களில் சுவிஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைப் பிரகடனத்தையும் வெளியிடவுள்ளனர். ‘உயிர்க்கும் தமிழீழம்’ என்ற பெயரில் இந்த மாபெரும் பேரெழுச்சி நிகழ்வுகள் இடம்பெறவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் உயிர் கொடுத்து வளர்த்த தலைவன் இலட்சியம் தோற்காது என்ற கொள்கைப் பிடிப்போடு அணிதிரளுமாறும் ஐரோப்பா வாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பான விடுதலைப் புலிகளின் கொள்கை விளக்கப்பிரகடனமும் இந்நிகழ்வில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 1 ஆம் 2 ஆம் நாள் நிகழ்வுகளில் சுவிஸ், யேர்மனியில் நடைபெறும் கருத்தமர்வுகளில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் எதிர்வரும் 2 ஆம் நாள் சுவிஸ் சூரிச் அல்விஸ் கூட்டிலி மண்டபத்தில் நடைபெறும் மாபெரும் பேரெழுச்சி நிகழ்வான ‘உயிர்க்கும் தமிழீழம்’ நிகழ்விலும் கலந்துகொண்டு புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்படவேண்டிய எதிர்காலப் பணிகள் தொடர்பாக கருத்துரை வழங்கவுள்ளனர்.

நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்குழுவின் ஒருங்கிணைப்பாளரும் சட்டத்தரணியுமான விசுவநாதன் உருத்திரகுமாரன் உட்பட முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்நிகழ்வில் கலந்துகொள்ளுமாறும் சுவிஸ் தமிழர் பேரவை தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

38 Comments

 • Constantine
  Constantine

  Please let me know the full details . I need to book a holiday. I cannot wait….

  Reply
 • சாண்டில்யன்
  சாண்டில்யன்

  தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் மிகவும் நன்றாக உள்ளார். மிக பத்திரமாக இருக்கிறார். எந்த கட்டத்திலும் மீண்டும் தோன்றி தமிழீழ போராட்டத்துக்கு தலைமை தாங்கி போராடுவார். அதை அவரே அறிவிப்பார். பிரபாகரன் இறந்து விட்டார் என்பது திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்தி. விடுதலைப்புலிகளின் சர்வதேச செய்தி தொடர்பாளர் பத்மநாபன், பிரபாகரன் இறந்ததாக செய்தி வெளியிடும் முன்பு என்னை தொடர்பு கொண்டு பேசினார். அவ்வாறு செய்தி வெளியிட நீங்கள் யார்? என்று கேட்டேன். எனது கேள்விகளுக்கு அவரால் பதில் அளிக்க முடியவில்லை.

  நம்மை குழப்பவும், போராட்டத்தை வலுவிழக்க செய்யும் வகையிலும் பரப்பப்படும் பொய் செய்திகளை யாரும் நம்பக்கூடாது. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று எனக்கு உறுதியான செய்தி களத்தில் இருந்து கிடைத்து உள்ளது. தம்பி பிரபாகரன் தலைமையில் போராட்டம் முன் நிறுத்தப்படும். அப்போது உலக தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்கும். அதுவரை நாம் ஒன்று திரண்டு எந்த ஒரு குழப்பத்துக்கும் ஆளாகாமல் போராட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  இவ்வாறு பழ. நெடுமாறன் பேசினார்

  Reply
 • thevi
  thevi

  ஆகா திருவிழா ஆரம்பம். கொத்துரொட்டி கட்டாயம் கிடைக்கும். அத்தோடு இந்த முறை எள்ளுப்பாகு ஸ்பெசலாம். (வல்வெட்டித்துறையில் இருந்து இறக்குமதி)

  Reply
 • நண்பன்
  நண்பன்

  நெடுமாறனிடம் , கேபீ பிரபாகரன் இறந்து விட்டார் என்று அறிவியுங்கள் என்று சொன்னதை, தான் செய்யவில்லை என்று தெரிவத்துள்ள நெடுமாறன் கேபீ யார் என்று கேள்வி கேட்டுள்ளார்.

  கேபீதான் பிரபாகரன் நம்பிய மிக முக்கியமான நண்பன் என்பது இந்தியர்களுக்கு மட்டுமல்ல பல புலிப் புண்ணாக்குகளுக்கும் தெரியாது. இதையே தெரியாமால் மகாவம்சம் , தமிழர் சரித்திரம் குறித்து பேசுவது நகைப்புக்கிடானது.

  நல்ல காலம் பிரபாகரன் சாகும் போது , ஆயுதம் தாங்கிய அடுத்தவர்களும் சாகடிக்கப்பட்டார்கள். சிறீலங்கா அரசு பிரபாகரனை மட்டும் கொன்றிருந்தால் , வன்னியில் இருந்தவர்கள் பல குழுக்களாக பிரிந்து ஆளாளுக்கு வெடி வைத்துக் கொண்டு செத்திருப்பார்கள். இவர்கள் செத்தால் கூட பரவாயில்லை. அனைத்து மக்களையும் குழு சார்பாளர்களாக நினைத்து கொன்றிருப்பார்கள். வவுனியா முகாம் ஒன்று தேவைப்பட்டே இருக்காது. வன்னிக்கு வெளியிலும் புலித் தொடர்பாளர்களும் கொல்லப்பட்டிருப்பார்கள்.

  Reply
 • msri
  msri

  விடுதலைப் புலிகளின் அழிவு> ஓர் சுனாமி போன்றதே! இது புலிகளுக்கு கெளரவப் பிரச்சினையும் பெரும் அவமானமும் ஆகும்! இதை நிவர்த்தி செய்யவே இப்படியொரு நடவடிக்கை! இது மகிந்தப் பேரினவாதத்திற்கு (தமிழ்மக்கள் அரசியல் தீர்வில்+மீள் குடியேற்றத்தில்) நொண்டிக் குதிரைக்கு சறுக்கின சாட்டாகப் போகின்றது!

  Reply
 • sekaran
  sekaran

  அய்ரோப்பா வாழ் புலம்பெயர் தமிழர்களே!

  அம்ம்மெரிக்க்காவிலிருந்து உங்கள் தலையில் மிளகாய் அரைக்க ஒரு கூட்டம் வருகிறது. பத்திரமாய் அவர்களை திருப்பி அனுப்பிவிடுங்கள்.

  Reply
 • Kathees
  Kathees

  இப்பிடியே கருத்துக்காரரும் பின்னூட்டக்காரரும் பிலாக்கணம் பாடிக் கொண்டிருக்க வேண்டியது தான். புலி உயிர்த்தால் என்ன செய்யிறது எண்ட சிம்ம சொப்பனத்திலையே இவையள் பாடிக் கொண்டிருக்கப் போகினம்.

  இந்தக் கருத்துக்காரரும் பின்னூட்டக்காரரும் நம்ம சனத்துக்கு என்ன எதிர்காலம் எண்டு யோசிக்கிறதோடை எப்பிடி ஒரு தீர்வு வாறது சரி எண்டும் அந்தத் தீர்வைக் கிட்ட என்ன முயற்சி எடுக்கினம் எண்டதையும் சொல்ல வேணும்.

  ரகசியமாக சொந்தப் பேர் சொல்ல வக்கில்லாமல் மகிந்தவுக்குக் கால் பிடிக்கப் போன 21 பேரை விட இந்த செயற்குழுவை மதிக்கலாம் எண்டு நான் நினைக்கிறன். எனக்கு உருத்திரகுமர்ரிலை நம்பிக்கை இல்லை. ஆனால், சனநாயக முறையிலை அவையள் செய்யிற முயற்சியளுக்கு தடை போடக் கூடாது எண்டு எனக்குப் படுகுது.

  Reply
 • BC
  BC

  Kathees , உருத்திரகுமார் குழுவோடு சேர்ந்து நீங்களும் அய்ரோப்பா தமிழர்களுக்கு பூ சுத்த முயற்ச்சிக்கிறீர்கள்.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  இவருக்கும் மாபியாக்களும் என்ன தொடர்பு..இதில் எப்படி உருத்திரகுமார்?.
  தொழில் ரீதியாகத் தான் புலிகளுடன் தொடர்பு என்பதை உருத்திரகுமார் தெளிவுபடுத்த வேண்டும். என்னிடம் மூன்று கேள்விகள்.
  புலிகளுடன் தொழில்ரீதியான தொடர்பா?
  வக்கீல் தொழில்லில் தமிழ்மக்களுக்கு ஒரு விமோசனத்தை கண்டு பிடிப்பது கஷ்ரமான காரியமா?
  அல்லது ஈழத்துதமிழ்மக்கள் யாழ்பாணத்து தமிழ்வக்கீல்களால் நொந்து உருக்குலைந்து சுவடுஇல்லாமல் போகவேண்டும் என்பது விதியா?.

  Reply
 • மாயா
  மாயா

  Kathees, உங்களைப் போன்ற புலத்து புண்ணாக்குகளினாலும் அறிவிப்புகளாலும், வவுனியா முகாமை விட்டு தப்பிய அறிவுக் களஞ்சியங்களின் பேட்டிகளாலும் இதுவரை வைத்தியசாலை மற்றும் அத்தியாவசியம் கருதி வெளியே வர முடிந்த மக்களுக்கு கொடுத்த அனுமதி இறுக்கப்பட்டுள்ளது. இப்படியானவர்களுக்கு ராஜதந்திரம் என்றால் என்ன என்று தெரியுமா? மக்கள் வேதனை என்றால் என்ன என்று தெரியுமா?

  புலிகள் ஒரு போதும் மக்களுக்காக போரிட்டவர்கள் இல்லை. மக்களைக் கேடயமாக அல்லது மக்களை பகடைக் காய்களாக வைத்துக் கொண்டு தமது சுயநல மாபியா கூட்டத்தை வளர்த்தவர்கள். மகிந்த காலைப் பிடித்து கெஞ்சிய 21 பேர் போல பலர் அந்த மக்களது வாழ்வுக்காக சுயநலமின்றி எதையாவது செய்வதாகவே அறிகிறேன். புலி புலத்து புண்ணூக்குகள் , உயிரோடு இருக்கும் மக்களை பூண்டோடு அழிக்கும் அறிவிப்புகளை விடுத்தவாறு அவர்களது அழிவுக்கே வழி தேடுகிறார்கள்.

  புலத்தில் இருந்து முகத்தை மறைத்துக் கொண்டு அறிவித்தல் விடும் கேபீ அல்லது உருத்திரகுமார் அல்லது புலத்த புலிப் புண்ணாக்குகள் சிறீலங்காவுக்கு சென்று சனநாயக முறையில் ஏதாவது செய்வார்களா? ஒரு வணங்கா மண் கப்பலையே சரியாக அனுப்ப வக்கற்ற புலிகள், சனநாயக முறையில் நாடு பெற்றுத் தருவார்கள் என்று இனியும் நம்புபவர்கள் மண்டை சுகமில்லாத அல்லது மண்டைக்குள்ள ஒன்றுமில்லாதவர்களாகவே இருப்பார்கள்.

  தீர்வுகள் நடக்க தடையாக இருப்பவர்கள் புலத்து புலிப் புண்ணாக்குள்தான்.
  1500 புலிகள் இருக்கிறார்கள் என்றால் அந்த 1500யும் பிடிக்கும் வரை முகாம்களில் வாடும் அப்பாவி மக்கள் ( புலிகளது வியாக்கியானத்தில் துரோகிகள்) சாகும் வரை நாடு கடந்து என்ன அதுக்கு மேலயும் தமிழீழம் வாங்கித் தருவதாக ஏமாற்றுவார்கள். அனைத்தும் அவர்களது இருப்புக்கான சுயநலமே.

  இன்னும் புலிகள் காசு சேர்க்கின்றனர்? ஏன்? எதற்கு? Kathees பதில் சொல்வீர்களா?
  ஆயுதம் வாங்கி அரசுக்கு அனுப்பவா?

  Reply
 • நண்பன்
  நண்பன்

  // chandran.raja on July 28, 2009 7:36 am யாழ்பாணத்து தமிழ்வக்கீல்களால் நொந்து உருக்குலைந்து சுவடுஇல்லாமல் போகவேண்டும் என்பது விதியா?//

  யாழ்பாணத்து வக்கீல்களால் காணிப் பிரச்சனைக்கு வாதாடி முடிந்து, தீர்வு வரும் போது , வக்கீல் செலவாக வீட்டையும் விக்கிற நிலைக்குத்தான் மக்கள் தள்ளப்பட்டனர். கேபீ அமெரிக்காவுக்காக கொலைகளை செய்தவர். உருத்திரகுமாரும் அமெரிக்காவுக்காக அரசியல் நடத்த இறங்கியிருப்பவர். இவர் வாதாடிய வழக்குகளில் எத்தனை வென்றது அல்லது தோற்றது என்று யாருக்காவது தெரியுமா? வேலையற்ற வக்கீலால்தான் இப்படி ஊர் சுற்ற முடியும். அதாவது இவர் நல்ல வக்கீல் இல்லையோ?

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  ‘..இன்னும் புலிகள் காசு சேர்க்கின்றனர்? ஏன்? எதற்கு? Kathees பதில் சொல்வீர்களா?
  ஆயுதம் வாங்கி அரசுக்கு அனுப்பவா?….’

  ஏன் கேதீசை கேக்கிறியள். அவங்கள் தானே ஐரோப்பா வாறம் …விளக்கம் தாறம் என்கிறாங்கள்.வெயிற் பண்ணுங்கோ. அங்க போய் கேளுங்கோ. ……….

  Reply
 • மாயா
  மாயா

  சாந்தன் அங்க சொன்னா 400 பேருக்கு தெரியும். இங்க சொன்னா 4 லட்சம் பேருக்குத் தெரியும். நான் அந்த நாட்டில இல்லை. இல்லையென்றால் போயிருப்பன்.

  அது சரி, ஏன் இவங்கள் சுவிஸ் – ஜேர்மனியிலயிருந்து துவங்கிறாங்கள்? அங்க மந்தைகள் அதிகமோ? புலத்து வானோலி , தொலைக் காட்சி மற்றும் சுருட்டுறவங்கள் இந்த நாடுகளைத்தான் முதல்ல குறி வைக்கிறாங்க? யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கோ?

  Reply
 • Kathees
  Kathees

  //Kஅட்கேச், உங்களைப் போன்ற புலத்து புண்ணாக்குகளினாலும் அறிவிப்புகளாலும், வவுனியா முகாமை விட்டு தப்பிய அறிவுக் களஞ்சியங்களின் பேட்டிகளாலும் இதுவரை வைத்தியசாலை மற்றும் அத்தியாவசியம் கருதி வெளியே வர முடிந்த மக்களுக்கு கொடுத்த அனுமதி இறுக்கப்பட்டுள்ளது. //

  இப்பிடியே கருத்துக்கு மறு கருத்துச் சொல்ல வக்கில்லாமல் சொல்ல வந்தவனை வசை பாடியே காலம் கழிக்கிற சிலரிட்டை வேறை என்னத்தை எதிர்பாக்க முடியும்?

  //மகிந்த காலைப் பிடித்து கெஞ்சிய 21 பேர் போல பலர் அந்த மக்களது வாழ்வுக்காக சுயநலமின்றி எதையாவது செய்வதாகவே அறிகிறேன். //

  கால் பிடிச்சுக் கெஞ்சித் தான் தமிழன் வாழ வேண்டியிருக்கிறதை மாத்த வழி தேடுறதை விட்டிட்டு சும்மா புலி வசை பாடுறதிலையே இருங்கோ, தமிழ் இனம் வாழ்த்தும்.

  Reply
 • kumarathasan
  kumarathasan

  these … mens started from swiss and germany because tamils have a small world their way of life different than here(uk) they are few who think well in france too, but still france tamil under this … mens.

  in hype park corner we have this kind of people but ordinary citizens looked them as funny mens,unfortunetly we gave them a important.

  as bob marley song you can fool people some time but you can not fool them all the time

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  ‘…..அது சரி, ஏன் இவங்கள் சுவிஸ் – ஜேர்மனியிலயிருந்து துவங்கிறாங்கள்….’
  உங்களுக்கு யார் சொன்னது சுவிசில் தொடங்கியது எண்டு? போன மாதமே அமெரிக்காவில் தொடங்கி விட்டார்கள்.

  சரி ஒரு பேச்சுக்காதல் சுவிஸ் இல தான் தொடங்கிறது எண்டு வைப்போமே. சுவிஸ் இல பல பேச்சுவார்த்தைகள் நடை பெற்றன அல்லவா? அதுவும் காரணமாக இருக்கலாம் அல்லவா?

  ‘….சாந்தன் அங்க சொன்னா 400 பேருக்கு தெரியும். இங்க சொன்னா 4 லட்சம் பேருக்குத் தெரியும்….’

  அதாலதான் சொல்லிறன். அவசரப்படாதையுங்கோ. …………………

  வணங்கா மண்ணை ஒழுங்காக அனுப்பத்தெரியாது என்கிறியள். நல்லது தேசத்தில் ஒருவர் 15 நாள் தவணை கொடுத்திருந்தவர் டொக்டர் மூர்த்திக்கு. என்னாச்சு போராட்டம்? …………………………

  Reply
 • மகுடி
  மகுடி

  கடன் காசு கட்ட சுவிஸில காசு சேர்க்கினமாம்.
  // கால் பிடிச்சுக் கெஞ்சித் தான் தமிழன் வாழ வேண்டியிருக்கிறதை மாத்த வழி தேடுறதை விட்டிட்டு சும்மா புலி வசை பாடுறதிலையே இருங்கோ, தமிழ் இனம் வாழ்த்தும்.//
  வணங்கா மண்ணை கொண்டு போய் கொட்டுறதுக்கு மகிந்தவிட மட்டுமா எத்தனை இந்திய துரோகளிட கால்களை பிடிச்சவை. மறந்துட்டாங்கள் போல? இருந்தும் வணங்கா மண் சாமான்கள் சுங்க இலாகாவில எல்ல இறுகி கிடக்குது?

  Reply
 • thurai
  thurai

  யாழ்ப்பாணத்திலை, கோட்டடியிலும், மாநகரசபையிலும். கொழும்பிலை பாராழுமன்றத்திலும் வாலை ஆட்டிவாழ்ந்த கூட்டம்தான் இவர்கள். தம்பியை நம்பி தமிழீழத்தையும் புலியின்ரை வாலையும் பிடித்து வாழ்ந்தவர்கள்.

  இப்ப எல்லாம் போச்சு ஒருவரை ஒருவர் சந்தித்து ஆறுதல் கூற உலகவலம் வருகின்றார்கள். இன்னமும் வருசையிலை எத்தனையோ பேர் இருக்கினம். எலிப்புத்துக்குளை இப்பதான் தண்ணி போயிருக்கு பொருத்திருந்து பார்ப்போம். எல்லோரும் வெளியிலை வருவினம்.

  துரை

  Reply
 • சட்டம் பிள்ளை
  சட்டம் பிள்ளை

  புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்கள், வன்னித் தமிழர்களுக்கு பெரும் சிரமங்களுக்கு மத்தியில் அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களை எடுக்க செஞ்சிலுவைச் சங்கத்தினர் யாரும் வரவில்லையாம். இதனால் அந்தப் பொருட்களை ஏலம் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  //கால் பிடிச்சுக் கெஞ்சித் தான் தமிழன் வாழ வேண்டியிருக்கிறதை மாத்த வழி தேடுறதை விட்டிட்டு சும்மா புலி வசை பாடுறதிலையே இருங்கோ, தமிழ் இனம் வாழ்த்தும் – Kathees //

  யாராவது அரசுடன் பேச்வார்த்தை நடாத்தி அந்த மக்களுக்கு ஏதாவது விடிவு காண முயன்றால் அவர்களை உங்களைப் போன்றவர்கள் மகிந்தவின் காலில் விழுவதாக கதை விடுவீர்கள். உங்க தலைவர் தமிழ் மக்களை ஏமாற்றி, தமிழீழம் காணப் போவதாக கதை விட்டே காசு பார்த்தார். முழுத் தமிழர்களையும் இன்று மகிந்தவின் காலடியில் போட்டுவிட்டு அவர் போய்ச் சேர்ந்துவிட்டார். அந்த மக்களை மீட்டு மீண்டும் சுயகெளரவத்தோடு வாழ வைக்கவே பலர் இன்று பாடுபடுகின்றார்கள்.

  Reply
 • msri
  msri

  மகிந்தா! தமிழ்மக்களின் அபிலாசைகளை கணக்கில் எடுத்து> அர்த்தமுள்ள அரசியல் தீர்வு> மீள்குடீயேற்றம் போன்றவைகளை செயதால்> உந்த “உயிர்க்கவுள்ள” யாவும் மரணித்தே போகும்! இதை “புலி ஒப்பாரி” வைப்பவர்கள் சிந்திக்கவேண்டும்!

  Reply
 • BC
  BC

  //தமிழ்மக்களின் அபிலாசைகளை கணக்கில் எடுத்து அர்த்தமுள்ள அரசியல் தீர்வு மீள்குடியேற்றம் போன்றவைகளை செயதால் உந்த “உயிர்க்கவுள்ள” யாவும் மரணித்தே போகும்!//
  எந்த விதமான அரசியல் தீர்வு வந்தாலும் அவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்.
  30 வருடங்களாக தமிழர்களை ஏமாற்றி கணக்கற்ற பணம் சம்பாதித்து சுவை கண்டவர்கள்.

  Reply
 • thevi
  thevi

  கால் பிடிச்சுக் கெஞ்சித் தான் தமிழன் வாழ வேண்டியிருக்கிறதை மாத்த வழி தேடுறதை விட்டிட்டு சும்மா புலி வசை பாடுறதிலையே இருங்கோ, தமிழ் இனம் வாழ்த்தும்”//

  தலைவர் மட்டும் என்ன செய்தவராம்? முன்பு புலிக்காக எள் என்றால் எண்ணையாக நின்றவர்கள் எல்லாம் தங்களுக்கு ஒரு அலுவல் தேவை என்றவுடன் டக்ளஸிடம் ஓடுகினம். டக்ளஸ் தங்கள் சொந்தம் என்றும் சொல்ல தொடங்கியுள்ளார்கள். இன்னும் சிலர் யாழ்ப்பாணம் போக கோதபயவின் நண்பனை தெரியும் என சொல்லிக் கொண்டு புறப்பட்டு விட்டார்கள். எங்கேயும் காலில் விழுந்து பழக்கப்பட்டவர்களுக்கு இது எல்லாம் பெரிய விடயமில்லை.

  இதற்குள் சிலருக்கு கெளரவப் பிரச்சனை வேறு!

  Reply
 • மாயா
  மாயா

  தற்போது எனக்கு கிடைத்த மின் அஞ்சல், புலிகளது திறன் இதிலிருந்து தெரியும்
  ___

  புலம் பெயர்ந்து வாழ்ந்து வரும் ஈழத் தமிழர்கள், வன்னித் தமிழர்களுக்கு பெரும் சிரமங்களுக்கு மத்தியில் அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களை எடுக்க செஞ்சிலுவைச் சங்கத்தினர் யாரும் வரவில்லையாம். இதனால் அந்தப் பொருட்களை ஏலம் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு ஐரோப்பிய தமிழர்கள் உணவு, உடை, மருந்து என 884 டன் நிவாரண பொருட்களை வணங்காமண் கப்பலில் அனுப்பினர். அதை இலங்கை அரசு திருப்பி அனுப்பியது

  இதையடுத்து சென்னை துறைமுகத்துக்கு வெளியில் பல நாட்கள் வணங்காமண் கப்பல் தத்தளித்தது. முதல்வர் கருணாநிதியின் நடவடிக்கையை அடுத்து, 27 கன்டெய்னர்களில் நிவாரணப் பொருட்கள் அடைக்கப்பட்டன. அவை சென்னை துறைமுகத்தில் உள்ள சிசிடிஎல் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

  அவர்கள், கொலராடோ என்ற சரக்கு கப்பலில் நிவாரணப் பொருட்களை ஏற்றி இலங்கையில் உள்ள செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்க கடந்த 7ம் தேதி இலங்கைக்கு அனுப்பினர். இந்த கப்பல் 9ம் தேதி கொழும்பு துறைமுகம் சென்ற பின்னரும், நிவாரணப் பொருட்களை வாங்க செஞ்சிலுவை சங்கத்தினர் இதுவரை வரவில்லை. இதனால் கொழும்பு துறைமுகத்தில் நிவாரணப் பொருட்கள் கடந்த 19 நாட்களாக கேட்பாரற்று இருக்கின்றன.

  இது குறித்து சம்பந்தப்பட்ட கன்டெய்னர் நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், எங்கள் நிறுவன கன்டெய்னரில் தான் நிவாரணப் பொருட்கள் கப்பலில் இலங்கை சென்றன. நிவாரணப் பொருட்களை எடுக்க அங்குள்ள செஞ்சிலுவை சங்கத்தினர் யாரும் வராததால் எங்கள் கன்டெய்னர்களும் அங்கேயே உள்ளன.

  கொழும்பு துறைமுகம் விதிமுறைகளின்படி 21 நாட்களுக்கு மேலானால், அவர்கள் அந்த பொருட்களை ஏலம் விடுவதற்கு அதிகாரம் உள்ளது. இது தொடர்பாக வணங்காமண் கப்பல் ஏஜென்ட், டெல்லியில் உள்ள செஞ்சிலுவை சங்கம், மனிதம் மனித உரிமை அமைப்பு, லண்டனில் உள்ள மெர்ஸி மிஷன் அமைப்புக்கு தகவல் அனுப்பி உள்ளோம் என்றார்.

  பாடுபட்டு ஈழத் தமிழர்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் வீணாகாமல் தடுக்க தமிழக முதல்வர் கருணாநிதி மத்திய அரசுடன் பேசி, இலங்கை அரசை நிர்ப்பந்தப்படுத்தி அவற்றை தமிழ் மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள்.
  மானம் இல்லாத தமிழ் புத்துஜீவிகளே,வக்கீல்களே,மனித் உரிமை பேசுபவர்களே இந்த சந்தர்பத்திலாவது உதவுங்கள்

  – காஞ்சி பெரியார் திராவிடர் கழகம்
  ____
  இது குறித்து இலங்கை செஞ்சிலுவை சங்கம் என்ன சொல்கிறது என்று கேட்டோம்.

  அவர்கள் தந்த பதில்: பொருட்கள் சுங்க இலாகாவில் இருக்கிறது. அதை கிளியர் பண்ண அனைத்து பொருட்கள் குறித்த தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் தேவை. அவற்றை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் கேட்டோம். அதை லண்டன் மெர்ஸி மிஷனிடம் வாங்கிக் கொள்ளுங்கள் என்கிறார்கள். எமக்கும் லண்டன் மெர்ஸி மிஷனுக்கும் எந்த தொடர்பாடல்களும் வைத்துக் கொள்ள முடியாது. நாங்கள் இப் பொருட்களை இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடம் இருந்தே பெற்றுள்ளோம். அதை வாங்கித் தருவது இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் வேலை. அந்த பொருட்கள் குறித்த தகவல்கள் அடங்கிய பத்திரங்கள் வந்தாலன்றி பொருட்களை எடுக்க முடியாது. இது சுங்க இலகாவின் நடைமுறைப் பிரச்சனையும், அது எல்லோரும் பொதுவான நியதியும் என்கின்றனர்.

  நாடு கடந்து தமிழ் எடுக்கும் ஆக்களைப் பாருங்க. ஒரு கப்பலிலேயே தெரியிறது இவர்களுடைய ஜம்பம்.

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  என்னப்பா நடக்குது? வணங்கா மண் எம்ரியா போகுது. புலியள் காசை‘சுருட்டி’ விட்டாங்கள். டொக்ரர் மூர்த்திக்க்கு 15 நாள் கெடு. வீட்டுக்கு முன்னால போராட்டம் எண்டாங்கள். இப்ப கொழும்புத்துறைமுகம்…புலித்திறன்…..செஞ்சிலுவைச்சங்கம்…எண்டெல்லாம் கதை போகுது!
  வெறுங்கப்பல் போனது ..அங்க சாமான் ஒண்டுமில்லை…இல்லாத சாமானுக்கு ஏன் இவ்வளவு கூப்பாடு? சுவிசுக்கு ‘புலிப்பினாமி’ வருகுது..கொஞ்சம் பொறுங்கோ எண்டு சொல்லுறன். நீங்களோ??

  Reply
 • thevi
  thevi

  விடுங்கள்- சட்டம் , விதிகள், நடைமுறைகள் என எதனையும் அனுசரிக்க முடியாதபடி கள்ளக்கடத்தல் வழியில் வந்தவர்களுக்கு இப்படித்தானே நடக்கத் தெரியும். செஞ்சிலுவைச் சங்கத்தையும் துரோகி என எழுதுவார்கள்.

  Reply
 • நண்பன்
  நண்பன்

  முள்ளிவாய்க்கால் சண்டை நேரத்தில் புலத்தில் புலிக் கொடியோடு போராட்டம் , உண்ணவிரதம் , வீதிமறியல் எல்லாம் நடந்தது. மக்கள் கொல்லப்படுகிறார்கள் அல்லது அல்லல்படுகிறார்கள் என்றுதானே? இப்பவும்தான் மக்கள் அல்லல்படுகிறார்கள். ஆனால் அன்று போராட்டங்களை நடத்திய எவரும் முகாம்களில் இன்று அல்லல்படுவோரை விடுவியுங்கள் என்று ஒரு போராட்டத்தை கூட நடத்தவில்லை? ஏன்?

  அன்று நடந்த போராட்டங்கள் பிரபாகரன் என்ற தனி மனிதளைக் காப்பாற்றவா? அல்லது மக்களை காப்பாற்றவா?

  மக்களைக் காப்பாற்றத்தான் என்றால், புலத்து மக்கள் மீண்டும் போராட்டத்தை தொடர வேண்டும். பிரபாகரன் சாகலாம் அல்லது புலிகள் அழியலாம். ஆனால் எமது மக்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள். உலக தமிழருக்கு ஒரு தேசம் எடுத்துக் கொடுக்கத்தானே போராடினீர்கள்? அந்த மக்களுக்காகத்தானே போராட துணிந்தீர்கள்? எனவே இன்றை நிலையில் முகாம்களில் உள்ள அப்பாவித் தமிழரை விடுவியுங்கள் என்று போராட்டம் தொடர வேண்டும். குற்றவாளிகளையும் புலிகளையும் நீதியின் முன் கொண்டு வாருங்கள். ஆனால் அப்பாவிகளை விடுவியுங்கள் என்று களத்தில் இறங்குங்கள். அதன் பின்னரே இந்த அரசியல் கட்சி அமைப்பது மற்றும் ஜனநாயக பாதை குறித்து அரசியல் பேச அல்லது அரசியலில் இறங்க வேண்டும்.

  இல்லை, ஜனநாயக கட்சி அமைப்பதுதான் இப்போதைய தேவையென்றால் , அந்த மக்கள் தேவையில்லை . அந்த மக்களை விட கட்சிதான் முக்கியம். இதுதான் உண்மை. இல்லை, அந்த மக்களுக்காகத்தான் போராடினோம் என்றால் , கட்சியை எப்ப வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். மக்களை காக்க குரல் கொடுப்போம். மக்கள் இருந்தால்தானே கட்சி வாழும்? எனவே உண்மையான மக்கள் நேசம் கொண்டவர்களாக இருந்தால் தொடர்ந்து வீதகளில் இறங்குங்கள்.

  அதற்காக இன்னும் காட்டுக்குள்ளும், மக்களோடு மக்களாகவும் புலிகள் இருக்கிறார்கள் என்று போராட களம் இறங்காதீர்கள். அப்பாவிகளை வெளியேற்ற மட்டும் குறியாகக் கொண்டு போராடுங்கள். அதை மட்டும் கோஸமாக வையுங்கள். அப்படி ஒரு புதுமை நடக்காது என நம்புகிறேன். அப்படி போராட களம் இறங்க முடியாவிட்டால் தயவு செய்து அவர்கள் பெயரில் அரசியல் செய்ய உங்களில் எவருக்கும் அருகதை இல்லை. எனவே ஆயுதங்களை மட்டுமல்ல உங்கள் செயல்பாடுகளையும் மெளனிக்கச் செய்யுங்கள். அதுவே நீங்கள் செய்யும் உன்னதமான அரசியல். அவர்கள் விதியை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும்.

  நட்புடன்
  நண்பன்

  Reply
 • mano
  mano

  உலகத்தில் எந்தவொரு கப்பலும் இந்தளவு பிரசித்தம் அடைந்திருக்காது.
  துறைமுக விதிகளின்படி பொருட்கள் ஏலத்தில் விட்டாலும் அதை எடுக்க யார் வருவார்கள் என்பதும் பிரச்சினை! கடலில் துரக்கி எறிய முன்னர்> இந்த டொக்டர் மூர்த்தியை எங்கிருந்தாலும் தேடிப் பிடித்து> துறைமுகச் செலவு கப்பல் செலவு எல்லாத்தையும் செலுத்தி> பொருட்களின் விபரத்தையும் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்து இந்த நாடகத்தை முடிவுக்குக் கொண்டுவரும்படி கேட்டுக் கொள்கிறோம். தமிழ் தொலைக்காட்சி சீரியல் மாதிரி இழுபடுகுது. மக்கள் நலன் என்று பேய்க்காட்டலை விட்டுவிட்டு பொருட்களைக் காப்பாற்றுங்கள்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  //என்னப்பா நடக்குது? வணங்கா மண் எம்ரியா போகுது. புலியள் காசை‘சுருட்டி’ விட்டாங்கள். டொக்ரர் மூர்த்திக்க்கு 15 நாள் கெடு. வீட்டுக்கு முன்னால போராட்டம் எண்டாங்கள். இப்ப கொழும்புத்துறைமுகம்… //

  சிலருக்கு கப்பல் போனாலும் வெற்றி போகாட்டிலும் வெற்றி எண்டு கதை விடுவதிலேயே இன்பம். கப்பல் வெறுமனே போகுது எண்டு ஒருதரும் சொல்லவில்லை. சேர்த்த பொருட்களனைத்தையும் கொண்டு செல்லவில்லை என்றே சொன்னார்கள். அது போல் சேர்த்த பணத்தையும் முழுதாகச் செலவளிக்கவில்லை. கல்கத்தாவிற்கு உடைக்கப் போன கப்பலிலை சாமான்களை கொண்டு போவதற்கு குறைந்த கட்டணத்திலேயே வாடகைக்கு அமர்த்தினார்கள். கப்பலில் வந்த பொருட்களின் விபரங்களிருந்தால்த் தான், அவற்றை துறைமுகத்திலிருந்து வெளியிலெடுக்கலாமென்ற விபரம் கூடத் தெரியாதவர்கள் தான் நாடு கடந்த தமிழீழம் அமைத்து உள்ளதையும் நாசமாக்க திட்டமிடுகினமென்பது கூட, கருத்தென்ற பெயரில் கூடிக் கும்மாளம் அடிப்பவர்களுக்கு புரியவில்லை. ஏனெனில் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே!!

  Reply
 • Vannikkumaran
  Vannikkumaran

  அன்புத் தமிழ் மக்களே
  இனி புலியின் பெயரைச் சொல்லி தமிழருக்கு புடுங்குகிறோம் எண்டு வாற எல்லாரையும் அடிச்சு விரட்டுங்கோ. குறுக்கால போவார் 37வருடங்களாக வருத்தினது போதாதெண்டு வருகினம் திரும்பவும் திரட்டுறதுக்கு. முதலில புலியின்ர சர்வதேசரீதியான சொத்துவிபரத்தை வெளியிடட்டும்.
  அரவணைத்த வன்னி மக்களுக்கே கொள்ளிவைச்ச பாவியள்.நினைக்க நினைக்க வயித்தைப் பத்தி எரியுது.சிங்களவன் தமிழரை வெட்டும் வாள் என்றால் புலிகள் தமிழரைக் கொல்லும் விஷம். விஷத்தை விட வாளிடம் இருந்து தற்காத்துக் கொள்ளுவது சுலபம்.பிரபாகரன் வன்னியை சிங்களவனுக்கு தாரைவார்த்த ஓர் கொடிய தமிழன்.

  வேதனையுடன் வன்னிக்குமரன்

  Reply
 • Kamal
  Kamal

  தமிழ்ச்சனத்துக்கு நிவாரணப்பொருட்கள் ஒருதடவை அனுப்பவே இவ்வளவு காலமும் பணமும் விரயம் (இன்னமும் போய்ச் சேரவில்லை)என்றால் இவர்களின் தமிழினத்துக்கான விடிவை நோக்கிய பயணம் எப்படியிருக்கும்? http://thesamnet.co.uk/?p=14452

  Reply
 • Mariyar (BJ)
  Mariyar (BJ)

  புலிகள் உண்மையிலேயே தமிழ் மக்களுடைய நலன் கருதுவவர்களாக இருந்தால் முதலில் சுய விமர்சனம் செய்ய வேண்டும்.

  முப்பது வருடமாக போராட்டம் என்ற போர்வையில் செய்த கொலைகள், பொய் பிரச்சாரங்கள், கடசி ஆறு மாதங்கள் மே பதினெட்டம் திகதி வரைக்கும் அப்பாவி மக்களை தேவை இல்லாமல் கொன்றதும் பலி கொடுத்ததும் எல்லாவற்றுக்கும் சுய விமர்சனம் செய்ய வேண்டும்

  இன்று செய்ய வேண்டியது மக்களை மீண்டும் பொய்யான வழிக்குள் கொண்டு செல்லாது உண்மையை சொல்லி மற்ற தமிழ் அமைப்புகளுடன் உறவை வளர்த்து தமிழ் மக்களின் நலனைக் கருதி இனியாவது யதார்த்த நிலையை புரிந்து உண்மையான ஜனநாயக பாதையை கடைப்பிடித்து அரசியலை நடத்த முன்வர வேண்டும்.

  Reply
 • பல்லி
  பல்லி

  உரித்திர குமார் உங்களைதான் சில வாரங்களுக்கு முன்பு வந்த சூரியகிரணம் மிகவும் யாலியாய் கவ்வி போட்டுது போலை இருக்கு; நாடுநாடு விட்டு ஈழம் கேக்க நாடு நாடாய் திட்டும் சாபமும் எதுக்கு; கே பி யில் ஏற இருந்த் ஏழரையை தாங்கள் வட்டிக்கு பணம் எடுத்து வாங்கியது போல் உள்ளது உங்களுடைய சமீபகால செயல்பாடுகள்; எது எப்படியோ தாங்கள் ரோட்டால் போன பூனயை வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிடிறியள் இது எங்கு போய் முடியுமோ?? மகிந்தா குடும்பத்துக்குதான் தெரியுமோ என்னவோ;

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  புலிகளின் நடவடிக்கைகள் இரகசியமானவை, சுயவிமர்சனம் அற்றவை, …இப்படி இன்னோரன்ன குற்றச்சாட்டுகள். தாங்கள் படித்த கொமிசப்புத்தகங்களில் வரும் சொற்பதங்களை ஏதோ பாவித்தாக வேண்டும் என்கின்ற நோக்கில் புலிகளுக்கெதிராகப்ப் பாவித்தோர் உருத்திரகுமாரன் ஐரோப்பா வருகிறார் என்றவுடன் வக்கேசன் போகிறார்கள். ஏன் கொழும்புவரை சென்றவர்கள் சுவிஸ் போகமுடியாதா? போய் விவாதிக்கலாம் தானே…கேள்விகள் கேட்கலாம் தானே…அதிகாரத்தை நோக்கி உண்மை பேசலாம் தானே? அமெரிகாவை ஏகாதிபத்தியம் எனும் கூட்டம் கியூபா ஐ.நாவில் ஸ்ரீலங்கா மனித உரிமையை பாராட்டி பத்திரம் படித்தபோது அதிர்ந்துதான் போனார்கள். ஆனால் அவர்களைச் சொல்லி குற்ரமில்லை. அவர்கள் வளர்ந்த்து அப்படி. வெறு கீபோட் (முன்னர் பேனை பென்சில்) போராளிகள்.

  இவ்வலவு நாளும் மாற்றுத்திட்டம் என்றார்கள். ஒன்றுமில்லை என இப்போது தெரிகிறது. அத்திட்டத்தை எடுத்துச் சென்று மீற்றிங் வாசலில் வினியோகம் செய்ய வேண்டியது தானே? போட்டோகொப்பி மெசின் கடத்துவதற்கு (இவர்கள் பாசையில் புரட்சி) சொல்லித்தர வேண்டுமா என்ன? ஒன்று ஏலாது…. அது தான் வக்கேசன் என ஓடுகிறார்களோ. கொழும்புக்கூட்டம் கையில் என்ன திட்டத்துடன் போனார்கள் என்று தேசத்தில் படித்தோம் தானே. ஒரு வேளை இவர்களின் திட்டத்தையும் பாசிசப்புலிகள் எரித்துவிட்டனரோ?

  போங்கள் மீற்றிங் மண்டபத்துக்கு போங்கள். ரிக்கற் வாங்கவேணும் எண்டாலும் வாங்கியாதல் போங்கள். முதலாளித்துவ நாடுகளில் ‘உலகத்தொழிலாளர்கள்’ ஒன்றுபட்டு உழைத்த காசு கொஞ்சமாதல் இருக்காதா? ’புலன் பெயர்’ கோஷ்டிதான் புலிக்கு கொடுத்தௌ கையில் இல்லாமல் இருக்குது. உங்களிட்டை இல்லையா..ஸ்ரீலங்காவுக்கு ஒரு சதம் கூட கொடுக்கவில்லை என ஸ்ரீலங்கா அமைச்சர் குற்றம் சாட்டினாரே. அந்தக்காசு கூட கையில் மிச்சமில்லையா? துணிச்சல் இருப்பின் அங்கே செல்லுங்கள். கேள்விகள் கேளுங்கள். வந்து தேசத்தில் எழுதுங்கள்.

  Reply
 • eelamaran
  eelamaran

  constantine
  if you have a plan to visit the tamil eelam parliament, please let me know when you book the ticket. i also want to go there o see those doctors.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  சாந்தன்
  நாங்கள் கேட்டால் உருத்திரகுமார் கூட்டம் ஒன்றும் சொல்லுகினமில்லை. ஆனால் உங்களைப் போல அவையளுக்கு வக்காலத்து வாங்குறவர்கள் கேட்டால், சிலவேளை தங்கள் பொன்னான திட்டங்களை அவிட்டு விடுவினம். எனவே தேசம் வாசகர்களுக்காக அவர்களைச் செவ்வி கண்டு ஒருக்கால் தேசத்தில் விபரமாக போட்டு விடுங்கோவன், எல்லோரும் அறிந்து கொள்ள……

  Reply
 • மாயா
  மாயா

  நான் சுவிஸ் புலி தலைகள் சிலரிடம் , உருத்திரகுமார் எதுக்கு வாறார் என்று கேட்டேன். “இருந்து பாருங்களேன் என்ன நடக்கும் என்பதை”என்றார்கள். இப்படிச் சொல்லித்தானே தலைவருக்கும் இப்படி ஆனது என்றேன்.

  சற்று கொதித்துப் போன ஒருவர், “கேபீக்கு தெரியும் அடுத்து என்ன செய்யிறது” என்றார். தலைவருக்கும் எல்லாம் தெரியும் என்று சொன்னீங்கள் , கடைசியில் நடந்திருப்பதை பார்க்கிறீங்கதானே என்றேன். “பொறுங்கோ எல்லாத்துக்கும் முடிவு வரும்” என்றார். அது சரியென்று எனக்குத் தெரிந்த இளையோர் அமைப்பு நிலைப்பாட்டை கேட்க பேசிப் பார்த்தேன்.

  “அங்க எல்லாம் முடிஞ்சு போச்சு. இங்க இவங்கள் நாலு அஞ்சாக அடிபடுறாங்க. ஒரு வழிக்கு வரட்டும். நாட்டில உள்ளவங்களோட போனில கூட கதைக்கேலாது.” என உண்மையை ஒத்துக் கொண்டார் போராட்ட காலத்தில் வீதியில் இறங்கிய ஒரு இளைஞர்.

  பலர் தெளிவடைந்துள்ளனர். சிலர் பிடித்த வாலை விட முடியாமல்….. அதுதான் ஆப்பிளுத்த குரங்கு போல், பிடித்த புலி வாலை விட முடியாமல் சைகோவாகி நிற்கின்றர்.

  Reply
 • மகுடி
  மகுடி

  தமிழீழ விடுதலை போராட்டத்தின் பெயரில் நோர்வே புலிகளால் தமிழ்மக்களிடம் சேகரிக்கப்பட்ட பணம் தனிநபர் ஒருவரின் பெயரில் முதலீடு செய்யப்பட்டுள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது. புலிகளுக்கிடையே ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை தொடர்ந்து மேற்படி விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

  நோர்வேயில் புலிகளின் நெய்தல் கடை என்ற பெயரில் இயங்கி வந்த வர்த்தக நிலையமே அவ் வர்த்தக நிலையத்தினை நடாத்திவந்த கிட்டு என்பவரின் தனிநபர் சொத்தாகியுள்ளது. 5 மில்லியன் குறோனர்கள் முதலீடு செய்யப்பட்டு கிட்டு என்பவரிடம் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்ட மேற்படி வர்த்தக நிலையம், புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு புலிகள் அமைப்பு அழிக்கப்பட்ட நிலையில் தற்போது மேற்படி வர்த்தக நிலையத்தினை சட்டபூர்வமாக தனது சொந்த பெயருக்கு மாற்றியுள்ள கிட்டர் 5 மில்லியன் குறோனர்களையும் தனது சொத்தாக்கியுள்ளார்.

  இது தொடர்பாக நோர்வே புலிகள் கணக்கு கேட்டபோது இது தொடர்பாக தனது வர்த்தக நிலையத்திற்கு யாரவது வருகைதந்தால் பொலிஸாரிடம் பிடித்து கொடுப்பேன் என்றும் பயமுறுத்தியுள்ளார். இவ்வாறுதான் ஏனைய நாடுகளில் தனிநபர் பெயர்களில் உள்ள பல சொத்துக்கள் அவர்களாலேயே முடக்கப்பட கூடிய நிலை ஏற்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. – நெருப்பு

  Reply