இந்தோ னேசியாவின் சுமத்ரா தீவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று காலை ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தின் அளவு 6.1 ரிக்டராக பதிவாகியுள்ளது. இருப்பினும் இது 6.2 என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.
வனாட்டு தீவிலும்…
ஆஸ்திரேலியா அருகே பசிபிக் கடலில் உள்ள வனாட்டுத் தீவிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் இந்த தீவில் இருந்த கட்டடங்கள் அதிர்ந்தன. நில நடுக்கம் ரிக்டர்கோளில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளது.