சிறை வைக்கப்பட்டுள்ள 1850 படை வீரர்கள் இன்று விடுதலை செய்யப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி. சில்வா தெரிவித்தார். சேவையில் இருந்து தப்பிச்சென்று மீண்டும் சேவைக்கு சமூகமளிக்காததால் யுத்த நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகக் காணப்பட்ட முப்படை வீரர்களே இவ்வாறு சிறை வைக்கப்பட்டிருந்தனர்.
நாட்டுக்காக போராடிய இவர்கள் மீது கருணைகாண்பிக்கப்பட வேண்டும் என்ற சிபாரிசு முன்வைக்கப்பட்டதையடுத்து அதனைக் கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என மேலும் தெரிவிக்கப்படுகிறது.