அமைச்சர் அம்மானுக்கு மனைவி வித்யா ஒரு மாத காலக்கெடு

Karuna_ColVidyawadi_Muraleetharanகருணா அம்மான் என்று அறியப்பட்ட இலங்கையின் தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு அவருடைய மனைவி ஒரு மாத காலக்கெடு வழங்கி உள்ளார். அமைச்சர் முரளீதரன் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாக சிறிலங்கா கார்டியன் இணையத் தளத்திற்கு வழங்கிய பேட்டியில் (July 22)தெரிவித்துள்ள வித்தியாவதி முரளீதரன் அவர் ஒரு மாத காலத்திற்குள் தனது தவறுகளைத் திருத்திக்கொள்ளத் தவறினால் அவர் பற்றிய இரகசியங்களை வெளிப்படுத்தப் போவதாகத் தெரிவித்து உள்ளார்.

கருணா அம்மான் 2007 நவம்பர் 2ல் தனது குடும்பத்தினரைக் காண லண்டன் வந்திரந்த வேளையில் ஸ்கொட்லன்ட் யாட் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு போலிக் கடவுச்சீட்டு மோசடிக்காக 9 மாதங்கள் சிறை வைக்கப்பட்டு 2008 யூலை 3 ல் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பின் இலங்கை சென்ற கருணாவிற்கு முதலமைச்சர் பதவிக்குப் பதிலாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஏற்கனவே தற்போதைய முதலமைச்சர் பிள்ளையானுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே கருணா வெளிநாடு செல்ல வேண்டிய நிர்ப்பங்தம் ஏற்பட்டதாகவும் அப்போது செய்திகள் வெளியாகி இருந்தது.

தாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து வந்த போது தனது கணவரிடம் தீர்க்கமான நோக்கம் இருந்ததாகக் குறிப்பிடும் வித்தியாவதி முரளீதரன் தற்போது முரளீதரன் தமிழ் மக்களுக்கும் தமிழ் தலைமைக்கும் துரோகம் இழைப்பதாகக் குற்றம்சாட்டி உள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘ஓம்’ போடும் ஒரு தலையாட்டியாக சுயநலத்துடன் செயற்படுவதாகத் தெரிவித்து உள்ளார். பீடில் வாசித்துக் கொண்டிருக்கும் நீரோ மன்னனின் நிலையில் தனது கணவர் இருப்பதாகவும் வித்தியாவதி முரளீதரன் குறிப்பிட்டு உள்ளார்.

Vidyawadi_Muraleetharanவித்தியாவதி சாதாரண குடும்பத் தலைவி மட்டுமல்ல தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண்கள் பிரிவின் தலைவிகளில் ஒருவர். கணவர் கருணாவுடன் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்தவர். தற்போது இவர் தனது மூன்று பிள்ளைகளுடன் ஸ்கொட்லன்ட் பகுதியில் வசிக்கின்றார். கடைசியாக லண்டன் கென்சிங்ரன் பகுதியில் குடும்பத்தினருடன் இருந்த வேளையிலேயே கருணா கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

கருணா லண்டனில் இருந்து கடந்த யூலையில் திருப்பி அனுப்பபட்ட பின்னர் கடந்த ஒரு வருடமாக தனது குடும்பத்தினரை நேரடியாகச் சந்திக்கவில்லை. அவருடைய பதவியும் அதையொட்டிய நடவடிக்கைகளும் குடும்ப உறவைப் பாதித்துள்ளதை வித்தியாவதி முரளீதரனின் நேர்காணலில் வெளிப்பட்டு உள்ளது. தொலைபேசியூடாக நான்கு மணிநேரம் இடம்பெற்ற நேர்காணலில் பல பகுதிகளை ஊடக நாகரீகம் கருதி வெளியிடவில்லை என ஸ்ரீலங்கா கார்டியன் இணையத் தளம் தெரிவித்து உள்ளது.

புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து சென்ற குழுவினரைச் சந்திக்க வந்திருந்த முரளீதரன் மது போதையில் காணப்பட்டதாகவும் அவர் கிழக்கு மாகாண முதலமைச்சர் பற்றி மோசமான கருத்துக்களை வெளியிட்டதாகவும் அக்குழுவில் சென்ற சிலர் கருத்து வெளியிட்டு இருந்தனர். அமைச்சர் முரளீதரனுடைய கவனம் செக்ரிறரியில் இருந்த அளவிற்கு ஏனைய விடயங்களில் இருக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசன் சந்திரகாந்தன் 13வது திருத்தச்சட்டங்களில் உள்ள அதிகாரங்களைக் கோரி அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றார். கிழக்கு மாகாண சபையின் அங்கிகாரம் இன்றி அரசு தனியாருக்கு நிலங்களை வழங்குவதற்கு எதிராக கிழக்கு முதல்வர் நேற்று (யூலை 23) மாகாண சபையில் தீர்மானமும் இயற்றி உள்ளார். ஆனால் அமைச்சர் முரளீதரன் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் அவசியமில்லை என அரசுக்கு ஒத்திசைவாக செயற்பட்டு வருகின்றார்.

தொடரும் கருணா – பிள்ளையான் முரண்பாடு கிழக்கு மாகாண சபையை பலவீனப்படுத்துவதாக கிழக்கு முதல்வர் பிள்ளையானுக்கு நெருங்கிய ஒருவர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். கருணா அம்மானின் நிலைப்பாடு மாகாண சபைக்கு கூடுதல் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதில் தடைக்கல்லாக இருப்பதாகவும் அவர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.

இதுவரை பிள்ளையானிடம் இருந்து எதிர்ப்பை எதிர்கொண்டு வந்த அமைச்சர் அம்மான் தற்போது மனைவி பிள்ளைகளிடம் இருந்து காலக்கெடுவை எதிர்நோக்கி உள்ளார். ஸ்கொட்லன்டில் வாழும் வித்தியாவதி முரளீதரனின் காலக்கெடுவை வெறும் அடுப்பு ஊதும் குடும்பப் பெண்ணின் மிரட்டலாக அமைச்சர் அம்மானால் தட்டிக் கழிக்க முடியுமா?

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

29 Comments

  • sekaran
    sekaran

    கருணா! என்னா பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது. முதல்வேலையாய் மனைவியை மீட் பண்ணவும். கையைப் பிடித்தோ காலைப்பிடித்தோ (அல்லது காலில் விழுந்தோ) ஆளை ஷேப் பண்ணவும். (பரிசுகள் ஒன்றுக்கு டபுளாய் வாங்கிப்போகவும்.) ரெண்டாவது தேன்நிலவு பற்றி ஐடியா இருந்தால் இன்னும் நல்லது. சுவிஸ் பயணம் பற்றி பிறகு யோசிக்கலாம். (பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்னு சும்மாவா சொல்லி வச்சிருக்காங்க!) Best of luck!

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    நீரா அக்கா விடாதையுங்கோ. கே.பி இல்லாட்டி உருத்திரா ஏதாவது பதவி தருவார்கள். இனிமேல் மகிந்தாவோட சரிவராது. அவர் ஆனானப்பட்ட டக்ளக்சுகே………. ……………. ……….

    அதுசரி கருணாவைச் சந்திச்சவை அவர் மப்பில இருந்தவர் எண்டும் செக்கிரட்டரியை சைற் அடிச்சவர் எண்டதையும் சொன்னதை தேசமும் ‘ஊடக நாகரிகம்’ கருதித்தான் அப்போது வெளியிடேல்லையோ?

    மணி விளையாட்டு..தொடருங்கோ!

    Reply
  • muniamma
    muniamma

    கணவன் இலங்கையில் அமைச்சராக இருக்கும்போது மனைவிக்கு இங்கிலாந்தில் என்ன வேலை. முதல்வேலையாக இப்பெண்ணையும் குழந்தைகளையும் உடனே இலங்கைக்கு அனுப்பவேண்டும். இவர்கள் அங்கே எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாக வாழலாம்.தகுந்த காரணமின்றி ஒரு குடும்பத்தை பிரித்து வைத்திருப்பது மனித உரிமை மீறலாகும்.இதை ஏன் பிரித்தானியா செய்கின்றது. கண்ணில் எண்ணையை ஊற்றிக்கொண்டு காத்திருக்கும் சில விஷமிகளின் வாய்க்கு அவல் போடும் விடயமாக ஒரு குடும்பம் ஆகிவிடக்கூடாது.ஒரு குடும்பத்தில் பிரிவு என்றொரு விவகாரம் நீதிமன்றத்தால் முடிவெடுக்கப்படவேண்டிய விடயமே தவிர வீதியில் நிற்பவர்களாலல்ல.- வீடுவரை உறவு, வீதிவரை மனைவி, காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ????

    Reply
  • Kirupa
    Kirupa

    மோசம், திருட்டு, துரோகம்..
    எருமை தோலுக்கு ஏன் இந்த பன்னிர்ச் செய்திகள்.
    இது குடும்ப பிரச்சினை………..

    Reply
  • Sinna
    Sinna

    Very good!
    Shanthi Perera olso comming from colombo tamil family. She was a active person in NIP. started her carrier as a translater for CID. She has a son and to former husband. one tamil and one sinkala. Lasantha Wikramasinka meet Karuna and Shanthini when he and Sonali were in Benttodde hotel in newyear eve in 2008. Lasanthas news peapper, sunday leder was the first media published the news about Karuna and Shanthi.

    Reply
  • சவுக்கு
    சவுக்கு

    -பல்லவன் பல்லவி பாடட்டுமே பார்த்திபன் காதலி ஆடட்டுமே-

    இந்த விடயத்தில் புலி எதிர்ப்பு விஞ்சானிகள் தங்களது பீரங்கிகளை தமிழ் முதலாளித்துவத்தின் ஒரு பிரிவினருக்கு புதிய வழிகளை காட்டிக்கொடுத்த கேணல் கருணா மீது திருப்புவது புத்திசாலித்தனமிலை.

    பிள்ளையானின் மகாண சபை கோமாளிக் கூத்து புலி மீண்டும் இந்த சபைகள் மூலம் புலி உள்ளடுவதட்கு வாய்ப்பு கிடைக்கும். கருணா இதை அறிந்து கொண்டதால் தான் தமிழ் கட்சிகளை எல்லாம் தேசியக் கட்சிகளில் சேரும் படி கேட்கின்றார். பலர் இதை மனதிற்குள் நினைத்தாலும் கொள்கை வடிவத்தில் முன்வைத்த தீர்க்கதரிசனம் கருணா வினையே சாரும். தமிழ் மக்களை பொறுத்த வரையில் காலத்திற்கு முந்திய ஒரு தலைவர்.

    புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து சென்றவர்களை [ Stuttgart 21] சந்திக்கும் போது மது அருந்தி இருந்ததாக சொல்லப்ப்படுவது தொடர்பாக பெரிதாக எடுக்க தேவை இல்லை. ஜனநாயகத்தின் பிறப்பிடமான பிரித்தானிய பாராளுமன்றத்தின் கண்டீன் இலேயே மது விற்கப்படுகின்றது. அது மட்டுமல்ல கருணா அலுமாரிக் குடியினை முழுமையாய் வெறுப்பவர். வெளிநாடுகளில் தலைவர்களாக விரும்புபவர்கள் ஒழித்துக் குடித்து வெள்ளைக்கு நிற்பதை வெறுப்பவர் .

    உண்மையில் Stuttgart 21 குழுவினருக்கு கருணா மறை முகமாக தெரிவித்திருந்தார் மந்திரிப் பதவியோ அல்லது மக்களுக்கு உதவி செய்வது என்பதோ பெரிய தியாகங்கள் செய்வதுடன் சம்பந்தப் பட்டது என்பதை வெளிநாடுகளில் வெறுமனே புலி எதிர்ப்பு விஞ்சானம் பேசுவதை அவர் மட்டுப் பட்டுத்தப்பட்ட போராட்டமாகவே கருதினர். எனவே நாங்கள் எங்கள் செயல்பாடுகளை இந்தசந்தர்ப்பத்தில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    அத்துடன் பிரபாகரனை கோமணத்துடன் காட்சிக்கு வைத்த சுதந்திர போர் கருணா அம்மான் இல்லாமல் முடியுமா என்பதை நெஞ்கில் நிறுத்திப் பார்க்க வேண்டும்

    இறுதியாக வித்தியாவின தற்போதைய தாக்குதல் எந்த அளவிற்கு பத்மநாதனின் புதிய புலித் தலைமயுடன் தொடர்புபட்டது என்பதை கவனத்தில் எடுக்க வேண்டும். புலிகள் வித்தியாவை விலைக்கு வாங்கி விட்டார்களா?. வித்தியாவின் சுதந்திர தாகத்தினை தொலைத்து விட்டார்களா? இது புலியின் சதி? .

    பல்லவன் பல்லவி பாடட்டுமே பார்த்திபன் காதலி ஆடட்டுமே

    Reply
  • babu
    babu

    வித்யா நல்லதொரு விடயத்தை முன்னெடுத்திருக்கிறீங்கள். வாழ்த்துக்கள். புலிகளுடனான உங்கள் தொடர்பில் இருந்து ஆரம்பித்தீங்கள் என்றால் நல்லது. அப்பத்தான் புலிகள் போராட்டம் என்ற பெயரில் நடத்திய உள்விடயங்களை வெளிக்கொணரலாம்.

    Reply
  • sivaji
    sivaji

    /தாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து வந்த போது தனது கணவரிடம் தீர்க்கமான நோக்கம் இருந்ததாகக் குறிப்பிடும் வித்தியாவதி முரளீதரன் தற்போது முரளீதரன் தமிழ் மக்களுக்கும் தமிழ் தலைமைக்கும் துரோகம் இழைப்பதாகக் குற்றம்சாட்டி உள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘ஓம்’ போடும் ஒரு தலையாட்டியாக சுயநலத்துடன் செயற்படுவதாகத் தெரிவித்து உள்ளார்//
    வித்தியாவதி- தவிபு இல் இருக்கும்போதான தீர்க்கமான நோக்கம் உங்களுக்கு என்ன இருந்தது என்றும், பிரிந்து வந்தபின் என்ன தீர்க்கமான நோக்கம் வைத்திருந்தீங்கள் என்றதையும், இந்த 4, 5 வருடகாலத்தில் உங்கள் இலக்கை நோக்கி எத்தனை அடி பயணித்தனீங்கள் என்றதையும் முன்வையுங்கோ.

    கருணா பிள்ளையான் முறுகல் நேரத்தில் அதுபற்றிய உங்கள் அறிக்கை ஏன் வரவில்லை.??

    Reply
  • kamal
    kamal

    நல்லது வித்தியாவதி உங்களின் புலிப்பிரவேசத்தில் இருந்து கதைக்க ஆரம்பியுங்கள். நல்லகாலமோ என்னவோ மதியக்கா குடும்பத்தோடை போய்ச் சேர்ந்திட்டா. இல்லையென்றால் அவவும் உண்ணாவிரத காலத்தில் இருந்து தனக்கு நடந்த நிர்ப்பந்களை பிட்டுப்பிட்டு வைத்திருப்பா. பழைய தளபதிகள் பாடு……………

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    கருணா ஒன்றும் உத்தமர் இல்லையென்பது அனைவரும் அறிந்த விடயமே. தற்போது அவரது மனைவி தமது சொந்த குடும்பப் பிரைச்சினைக்காக ஏதோ தான் தமிழ் மக்களில் பற்று வைத்திருப்பவர் போல் நாடகமாட மட்டுமே இந்த அறிக்கை உதவியிருக்கின்றது. கருணா விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த போது மட்டும் என்ன உத்தமரா? என்பதை இவர் மறந்து விட்டாரோ என்னவோ??

    Reply
  • Colvin
    Colvin

    பார்த்திபன்
    கருணா அரசுடன் இணையும் போது மகிந்த, கோதபாய கருணாவினை கேட்கவில்லை அவர் உத்தமரோ என்று. அரசில் சேர்ந்த பின்னர் சொல்லவுமில்லை அவர் உத்தமர் என்று. அத்துடன் புலி மறு பிறப்பிலும் உத்தமராக இருக்க முடியாது. மந்திரி பதவி கிடைத்தால் மட்டும் மாறிவிடுமோ.

    கருணா உத்தமர் இல்லாவிட்டலும் மக்களின் தலைவர், வித்தியாதிவதி உத்தமியாக இருந்தாலும் மக்களின் எதிரி. அவ குடும்ப பிரசினையெய் முன்னுக்கு வைக்கும சுயநல வாதி.

    உத்தமர், உத்தமி என்பது அரசியலில் இறுதியானது இல்லை என்பதை தெளிவாக்கிய திரு பார்த்திபனுக்கு நன்றிகள்.

    புலியினை உண்மயாக எதிர்க்க நினைப்பவர்கள் இந்த கருத்தை எழுதி வைத்து படிக்கவேண்டும்

    Reply
  • BC
    BC

    //பார்த்திபன் – தற்போது அவரது மனைவி தமது சொந்த குடும்பப் பிரைச்சினைக்காக ஏதோ தான் தமிழ் மக்களில் பற்று வைத்திருப்பவர் போல் நாடகமாட மட்டுமே இந்த அறிக்கை உதவியிருக்கின்றது.//

    இது தான் உண்மை.

    Reply
  • nsk
    nsk

    என் செய்வன் பராபரமே. வேலை இல்லாமல் புலிகளை திட்டி அதில் இன்பம் காணுபவர்களே, தயவு செய்து நீங்கள் கொஞ்சம் தரமான விடயங்களை எழுதுங்கோ. புலி தானே போய் விட்டது. ஏன் இன்னும் அவங்களை திட்டுகிறீர்கள். சாந்தன் on July 24, 2009 5:59 am வாசிக்கக் கூடி இல்லை கமெண்ட் எழுதுகிறார்.

    muniamma on July 24, 2009 6:30 am குடும்பத்தை பிரித்து வைத்திருப்பது மனித உரிமை மீறலாகும் என்று சொல்கிறா.

    என்ன செய்வது நீங்கள் எல்லாம் காசு வாங்கி தான் கமெண்ட் எழுதுகிறீர்களோ என்று தான் தோன்றுகிறது. ஜனநாயகதிற்கு மறு விளக்கம் புலி எதிர்ப்பு என்று எண்ணும் தேச பக்தர்களே உங்கள் பணி தொடரட்டும்.

    நன்றி
    வணக்கம்
    பிட் குறிப்பு : எவ்வளவு பிட்சை பணம் நீங்கள் எடுக்கிறீங்கள். வேலை இல்லாமல் எழுதி தள்ளுகிறீர்கள் அதுதான்.

    Reply
  • சாண்டில்யன்
    சாண்டில்யன்

    ///nsk on July 24, 2009 1:02 pm
    புலி தானே போய் விட்டது. ஏன் இன்னும் அவங்களை திட்டுகிறீர்கள்///

    புலி போனாலும் சில வேளைகளில் பேயாக, பிசாசாக திரிய இடமிருக்கு ஆதலால் ஜனாயக பாதுகாப்பிற்காக தொடர்சியான புலி விமர்சனம் தேவை. எறியிற கல்லை எறிவோம் விழுகிற பேய் விழட்டும். எங்கடை பேய் விழுந்தாலும் பரவாயில்லை.

    இவ்வளவு வருடங்களுக்கு பிறகு வித்தியாவின் இந்த திடீரென்ற வாய் புலம்பலுக்கு பின்னால சிலவேளை பேய் இருக்குமோ?

    Reply
  • Sendoor
    Sendoor

    nsk on July 24, 2009 1:02 pm //புலி தானே போய் விட்டது. ஏன் இன்னும் அவங்களை திட்டுகிறீர்கள்///

    சிங்கள அரசுகள் விட்ட தவருக்காகத்தான் இவ்வளவு நாளும் திட்டிக்கொண்டு இருக்கிறோம்.

    அதை விட பெரிய தவறு செய்த புலிகளையும் திட்டத்தான் முடியும்.

    புலிகள் இருக்கும் போது திட்டியிருந்தால் கொலை செய்து இருப்பார்கள்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    புலிகள் போய்விட்டது தான். புலிச்சிந்தனை போகவில்லை. அதுவும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியில் ஒரு மெளனத்தையும் ஒரு பக்க விரக்தியையும் ஏற்படுத்தி இருக்கிறதேதொழிய “வானவில் பார்கிற ஆசைகள்” நீங்கவில்லை. இந்த புலிகளின் சித்துவிளையாட்டுகள் ஆரம்பிக்கப்டுவிட்டன. இது ஊடகத்திலும் காணக் கூடியதாகயிருக்கிறது.

    இந்த சித்தம்கெட்ட புலிகள் மாற்றவன் குடையில் ஒதிங்கி நின்று கொண்டு தமது தாய் நாட்டிற்கே தீ வைக்க தயங்காதவர்கள். இந்தியாவை காட்டிக்கொடுக்க தயங்காதவர்கள். இந்தியா வேறு இந்திய அரசியல் வேறு என்பதை பிரித்தப் பார்கத் தெரியாத அற்பபதிர்கள். காலம் கடந்தாவது இந்த உண்மை துல்லியமாக புலப்படும்.

    ஒரு வாசகரின் கருத்தின்படி அது பார்திபன்னாகயிருக்கலாம் அல்லது மாயா வாகயிருக்கலாம் புலி எதிர்ப்பும் புலியொழிப்பும் இன்னும் ஐந்து வருடத்துக்கு தொடர்ந்து இருந்தாக வேண்டும். அதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். புலம்பெயர் நாட்டிலில் மனிதநேயம்மிக்க அறிவுள்ள தமிழன் மிகமிக சொற்பமாக இருந்த போதிலும் அதுவே மனிதன் மனிதனுக்காக செய்யக் கூடிய சேவையாகும்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    கருனா புலிகளுடன் இருந்தாலும் கூட புலிகள் தோற்றுதான் போயிருப்பார்கள். கருனா ஆயிரம் கொலை செய்தவர் தான். அப்பாவி தமிழ்மக்களுக்கு இந்த பிரபாவுக்கு எதிராக எந்த அஸ்திரவும் பாயமுடியாது என்ற வேளை துணிகரமாக வெளியேறிவந்தது தமிழ்மக்களுக்கு அழிவை ஏற்படுத்த தவிர்ததோடு கிழக்கையும் பாதுகாத்தார் என்பதைத்தான் வரலாறு பதிவு செய்யும். அதில் கருனாவின் தனிப்பட்ட நலன்கள் இருந்தாலும் கூட.

    புலிகளின் பெண்கள் அரசியல் துறைக்கு பொறுப்பாக இருந்த தமிழினியே சயினட்டையும் யந்திரதுப்பாக்கியையும் தூக்கியெறிந்து உயிரை பாதுகாக்க இடைதங்கல் முகாமிற்கு வந்தபோது இந்த சின்ன வித்தியா எந்த மூலைக்கு. புலம்பெயர்ந்த புலிகளின் சித்துவிளையாட்டுக்கள் ஆரம்பமாகி இருக்கின்றன. இதில்லிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டியது விரல்விட்டு எண்ணக்கூடிய மனிதநேயமிக்க தமிழ்அறிவாளிகள் மட்டுமல்ல மனிதநேயமிக்க ஊடகங்களும் தான்.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    ‘…புலி எதிர்ப்பும் புலியொழிப்பும் இன்னும் ஐந்து வருடத்துக்கு தொடர்ந்து இருந்தாக வேண்டும். அதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்….

    போட்டதுதான் போட்டீர்கள், ஒரு 10 அல்லது 15 வருடத்தை போடுவதுதானே. கேட்டால் 30 வருட பாசிசத்தை எப்படி 5 வருடத்தில் முடிப்பது 15 வருடமாவது தேவை என கதை அளக்கலாம். ஒரு மாதிரி இப்ப காலத்தை ஓட்ட வழி கண்டு பிடிச்சிட்டியள்! மாற்றுக்கருத்து, மாற்றுத்திட்டம் எண்டு கதைவிட்டு காலத்தை ஓட்ட இப்ப……

    Reply
  • BC
    BC

    //எவ்வளவு பிட்சை பணம் நீங்கள் எடுக்கிறீங்கள்.//
    பிட்சை பணம் எடுப்பவர்களையே மிரட்டி பணம் பறிக்க முயற்ச்சித்தவர்கள் தான் புலிகள். புலி எதிர்ப்பும் புலியொழிப்பும் இன்னும் ஐந்து வருடத்துக்கு தொடர்ந்து இருந்தாக வேண்டும் என்று மனிதநேயமுள்ளவர் கூறியது நியாயமானதே.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //போட்டதுதான் போட்டீர்கள், ஒரு 10 அல்லது 15 வருடத்தை போடுவதுதானே//

    பொதுவாகவே சொல்வார்கள் “புலி வால் பிடித்து விட்டால் அதை விடுவது ஆபத்து” என்று. அது போல் புலிவால் பிடித்து பிழைப்பு நடத்தியவர்களுக்கு அந்த பிழைப்பில் துண்டு விழும் போது எவரைப் பார்த்தாலும் எரிந்து விழத்தான் தோன்றும். புலிகள் சுருடடிய பணத்தையே ஏப்பம் விடும் ஒரு கூட்டம் இருந்து கொண்டு கே.பி தான் தலைவரென்று ஒருசாரார் குடை பிடிக்க, அவரில்லைத் தலைவர் என்று கே.பியை துரோகியெண்டு தூற்றிக் கொண்டு இன்னொரு சாரார் கல்லெறிகின்றார்கள். இவர்கள் என்றாவது அந்த வன்னி மக்களைப் பற்றிச் சிந்தித்தார்களா?? ஆனால் அந்த மக்களைப் பற்றிச் சிந்தித்து ஏதாவது எவராவது செய்ய முற்பட்டால் அது மாற்றுக்கருத்து, மாற்றுத்திட்டமாகத் தான் சிலருக்குத் தெரியும். மக்களையே சுரண்டி வாழ்வது தான் சிலருக்கு பிடித்தமான திட்டம்.

    இன்னொருவர் எவ்வளவு பிட்சை பணம் நீங்கள் எடுக்கிறீங்கள் என்று தனது பழக்க தோசத்தில் கேட்டுள்ளார். புலத்தில் மக்களிடம் கமிசன் அடிப்படையில் சுருட்டி டாம்பீகமாக வாழ்ந்தவர்களுக்கு அந்த நினைப்பிலிருந்து விடுபடுவது சிரமம் தான்.

    Reply
  • msri
    msri

    முதலாளித்துவ பாராளுமன்ற அரசியலில்> அதுவும் ஓர் மந்திரிக்கு> கருணாவின் மனைவியார் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் இருந்தே தீரும்! இதை வித்யா பகிரங்கப்படுத்துகின்றார்! மற்வர்கள் பகிரங்கப்படுத்துவதில்லை! ஓர்மாதம் முடிய தமிழ்மக்களுக்கு தெரிந்த விடயங்களைத்தான் நீங்கள் சொல்லப்போகின்றீர்கள்! அரசியல் ரீதியாக நீங்கள் வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள்>கருணா மாத்திரமல்ல டக்கிளசு சங்கரி போன்றவர்களும்தான் (மகிந்த மன்னனுக்கு பிடில் வாசிக்கினறார்கள்) செய்து கொண்டிருக்கின்றார்கள்! அதுசரி கருணா தனிப்பட்ட ரிதியீல் சிலவேளை உங்களுக்ககாக திருநதலாம்! அரசியல்ரீதியயாக எப்படித் திருந்தவேண்டும்? என்ன செய்ய வேண்டும் எனபதையும் அல்லவா சொல்லியிருக்க வேண்டும்!

    Reply
  • rohan
    rohan

    //கருனா புலிகளுடன் இருந்தாலும் கூட புலிகள் தோற்றுதான் போயிருப்பார்கள். கருனா ஆயிரம் கொலை செய்தவர் தான். அப்பாவி தமிழ்மக்களுக்கு இந்த பிரபாவுக்கு எதிராக எந்த அஸ்திரவும் பாயமுடியாது என்ற வேளை துணிகரமாக வெளியேறிவந்தது தமிழ்மக்களுக்கு அழிவை ஏற்படுத்த தவிர்ததோடு கிழக்கையும் பாதுகாத்தார் என்பதைத்தான் வரலாறு பதிவு செய்யும். //

    என்ன காமெடி பண்ணுகிறீர்களா?

    பிரபாகரன் கடவுள் மாதிரி – தமிழேந்தியும் பொட்டுவும் நடேசனும் வெளியேற்றப் பட்டால் மீண்டும் புலி ஆகத் தயார் என்று பிரகடனம் செய்த பெருமகன் கருணா.

    ஒரு நேர்மையான தேர்தலில் போட்டியிட்டால் கருணாவுக்குக் கட்டுக்காசும் கிடைக்காது என்று சொல்கிறார்கள் என் கிழக்கு நண்பர்கள்.

    அது சரி – கருணா எப்படிக் கிழக்கைப் பாதுகாத்தார்?

    Reply
  • மாயா
    மாயா

    றோகன் சொல்வது சரி. இவர் தனது உயிரை பாதுகாத்துக் கொள்ள மரத்துக்கு மரம் தாவியவர். முதலில் ஐதேகட்சியின் உதவியை பெற்றார். பின்னர் இராணுவத்துக்கு உதவி செய்து இராணுவ பாதுகாப்பை பெற்றார். அங்கும் இருக்க பயந்து, கோட்டாபயவின் உதவியை பெற்று லண்டன் வரை வந்தார். அங்கு வந்ததும் கோத்தபயவையே காட்டிக் கொடுத்தார். மீண்டும் இலங்கைக்கு அவர் உதவி பெற்றே சென்றார். இப்போது தன்னை மகிந்த , தம்பி என்று அழைப்பதாக சொல்லி அடாவடித்தனங்களில் இறங்கியுள்ளார். ( சிங்களவர்கள் சாதாரணமாகவே தமிழர்களை மள்ளி , அதாவது தம்பி என அழைப்பது தனது அடிமை அல்லது தன் சொல் கேட்பவன் என்பதான கருத்தாக்கம் கொண்டது என கருணா உணர்ந்திருக்க மாட்டார்?)

    என்னதான் சொன்னாலும் இவர் பிள்ளையானுக்கு பயந்து நாட்டை விட்டு ஓடிவர்தான் என்பதை யாரும் மறக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். பிள்ளையானுக்கு இருக்கும் துணிவும் நேர்மையும் கருத்தும் இவரிடம் இல்லை. கருணா, பிரபாகரன் பக்கத்தில் அமரும் அதிகாரத்தோடு இருந்து விட்டு பிரபாகரனுக்கு செய்த துரோகத்தனம் போல் ஏனையவர்களுக்கும் செய்துள்ளார். இவர் ஒன்றும் கிழக்குக்கு விடிவைத் தேடிக் கொடுத்தவர் இல்லை. அப்படியிருந்தால் இவர் பிள்ளையானது அரசை வீழ்த்துவதற்கு காய் நகர்த்த மாட்டார். பிள்ளாயானது கட்சி தலைவரை கொன்றிருக்க மாட்டார். பிள்ளாயான் – கருணா பிரச்சனையை தீர்க்க மகிந்தவால் கொடுக்கப்பட்டதே அமைச்சர் பதவியும் , சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அந்தஸ்த்தும். பாதாள உலக தாதா போன்ற ஒருவருக்கு இந்த பதவி கொடுக்கப்பட்டது ஒரு விபத்து மட்டுமல்ல, மகிந்த செய்த பெரிய முட்டாள்தனம். கட்சிக்குள் எத்தனையோ திறமையான படித்தவர்கள் மற்றும் நாட்டுப் பற்றாளர்கள் இருக்க ஒரு கொலைகாரனுக்கு இந்த பதவி தவறிய குறி. இது விரைவில் இல்லாமல் போகும் சாத்தியம் கண்ணுக்கு இப்போது தெரிகிறது.

    பிரபாகரன் ஒழிப்புக்குப் பின்னர் கருணாவின் தேவை வெகுவாகக் குறைந்து விட்டது. இவரை விட புலிகளின் அண்மைக் கால நடவடிக்கைகள் தெரிந்தவர்கள் சரணடைந்து அரசுக்கு தகவல்கள் வழங்கி வருகிறார்கள். முகம் தெரியாமல் அரசோடு பணியாற்றியும் வருகிறார்கள். கருணாவை விட விசயம் தெரிந்த புலிகள் அரசோக்கு உதவத் தலைப்பட்டுள்ளார்கள். எனவே விரைவில் கருணாவும் கோவணத்தோடு அல்லது கோவணமே இல்லாமல் ஓடப் போகிறார் என்பதை நம்பலாம். அதற்கான முத்தாய்ப்பாய் மேலே உள்ள வித்தியாவின் பேட்டியை கருதலாம். லஸந்தவின் கொலையின் சூத்திரதாரியாகக் கூட மாட்டுப்படலாம்?

    இவருக்கு உள்ள பாதுகாப்பு இன்றைய அரசுதானே தவிர வேறு எந்த பலமும் இல்லை. இவரது பேச்சுக்கள் அண்மைக் காலமாக தட்டிக் கழிக்கப்படுகின்றன. தமிழ் இராணுவ பிரிவொன்றை உருவாக்கப் போவதான இவரது பேச்சை, அடுத்த தினமே மாற்றி இராணுவத்துடன் அவரது குழுவினர் படையில் இணைந்ததை குறிப்பிடலாம். இவரது அந்த அறிவிப்பு சுய அறிவித்தலான போது படைத் தலைமைக்குள் அதிர்ச்சியாக இருந்தது. புலிகளுக்குள் இருந்து முடிவு எடுத்தது போல அரசுக்குள் முடிவு எடுக்க முயன்றது பலரை அசெளகரியத்துக்கு உள்ளாக்கியது. தெரியாமல் சீலைக்குள் போட்டது கடிப்பதை உணர்ந்தது அரசு.

    அரசியல் கொலைகளுக்கும் காட்டிக் கொடுப்புகளுக்கும் அன்று இவர்கள் தேவைப்பட்டனர். இனி அதை படையே செய்யும் நிலையில் இவர்களை அழிப்பது அல்லது இல்லாமல் செய்வது படையினரது தேவையாக இருக்கிறது. அரசுக்கு சார்பான பாதாள உலகத்தையே இல்லாமல் செய்ய முயன்றுள்ள அரச படைகளால் விரைவில் கருணாவும், அவரது சாகாக்களும் அழிக்கப்படுவார்கள்.

    Reply
  • BC
    BC

    மாயா சொல்வதில் இருந்து பிரபாகரனுடன் அல்லது புலிகளுடன் இருந்தவர்கள் எவருமே மக்களுக்கு எந்தவிதத்திலும் நன்மை செய்பவர்களாக எந்த காலத்திலும் ஒருபோதும் மாற மாட்டார்கள் என்று எடுத்து கொள்ளலாமா?

    Reply
  • மாயா
    மாயா

    BC , புலிகளில் இருப்போர் வடி கட்டவே முடியாத சுயநல பேய்கள். யுத்த காலத்தில் மக்களை கேடயங்களாகவும் , சாகடித்தும் தமது விருப்பங்களை நிறைவேற்ற முயன்றார்கள். கடைசி யுத்த காலத்தில் இராணுவ பகுதிகளுக்கு தப்பிச் செல்வோரை துரோகிகள் என்றனர். இப்போது இராணுவ விசேட முகாம் ஒன்றில் இறுதியாக சரணடைந்த சுமார் 10´000 க்கும் அதிகமான முக்கியமாக பங்காற்றிய புலிகள் (புலிகளது பாஷையில் துரோகிகள்) இருக்கின்றனர். இங்கே இருப்போர் புலிகளின் நடவடிக்கைகள் திட்டங்கள் போன்றவற்றை கக்கி தம்மை நிரபராதிகளாக்கிக் கொள்ள முயல்கின்றனர். தவிரவும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இறந்து போன புலிகளது புகைப்படங்களில் இருப்போரது விபரங்களையும் அவர்கள் வகித்த பதவிகள் மற்றும் செயல்பாடுகளையும் விபரங்களையும் அவர்களது தொடர்புகளையும் தொடர்ந்தும் அம்பலப்படுத்தி வருகின்றனர்.

    இவர்களது தகவல்கள் காரணமாக வவுனியாவிலுள்ள ஒரு முகாமிலிருந்த ரூபன் என்பவர் கைதாகியுள்ளார். இவர்தான் 2007.10.22ம் திகதி நடைபெற்ற அனுராதபுர விமான படையக தாக்குதலுக்கு பொறுப்பானவர். தாக்குதலுக்காக 21 பேர் சென்றனர். மூவர் தாக்குதலுக்கு பின் திரும்பியதான செய்தி அப்போது வந்திருந்தது. அப்படி தப்பிச் சென்ற மூவரில் இப்போது முகாமில் மக்களோடு மக்களாக இருந்து கைதான ரூபனும் ஒருவர். இவரைப் போன்று இன்னும் 2000 புலிகளாவது மக்களோடு மக்களாக கருதும் வவுனியா முகாம்களில் இருப்பதாக புலிகளில் இருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அதையே கேபீ போன்றவர்கள் தம்பட்டம் அடித்து , அவர்களையும் மாட்டி வைக்க முனைகின்றனர். அவர்களது சாவில் மகிழ்வதே இவர்களது குறியாக இருக்கிறது?

    மக்களுக்கான முகாம்களில் இருந்த பலர் காசு கொடுத்து தப்புகின்றனர். தப்பிச் செல்வோர் குறித்த தகவல்களும் உள்ளே இருப்போரால்தான் படையினருக்கு தெரிவிக்கப்படுகிறது. மக்களும் தமக்கு பிரச்சனை ஏற்படக் கூடாது எனக் தொடர்ந்து காட்டியும் கொடுக்கின்றனர். தப்பிச் செல்ல உதவும் ஏஜன்டுகளாக முஸ்லீம்களும் தமிழர்களுமே முக்கியமாக செயல்படுகின்றனர். இதில் ஏனைய இயக்கத்தவர்களது பங்கு அதிகம். இவர்கள் புலிகள் என்று தெரிந்து உதவுவதிலிருந்து காசுதான் கண்ணாக இருக்கிறது. சில படையினரும் காசுக்காக உதவுகின்றனர். இந்த முகாமிலுள்ளோர் மீள் குடியேறக் கூடாது என்பதில் அதிக கரிசனை கொண்டவர்களாக இருப்பவர்கள் பணத்தை நோக்காக கொண்ட இவர்களேயாகும். இது இவர்களுக்கு நல்ல வருவாய் தரும் தொழிலாகியுள்ளது. அதுவும் வெளிநாட்டில் உறவுகள் உள்ளோர்தான் சிறப்பான காசு மரங்கள்.

    இவ்வளவு காலமும் முகாமில் உள்ளோரது விபரங்களை அரசு வெளியிட முடியாததற்கு அதற்கு பொறுப்பான இஸ்லாமிய அமைச்சரும், அரசாங்க அதிபரும் முக்கிய காரணமாகும். இவை பதிவானால் யாரையும் விடுவிக்க முடியாமல் போகலாம். இவர்களுக்கும் பண மரம் காய்க்கிறது. இலங்கையில் அதிக ஊழல் நடைபெறும் இடங்களில் முக்கியமான இடமாக முகாம்கள் மாறியுள்ளன.

    புலத்தில் , தமது இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள அங்கு புலிகள் காடுகளில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது உண்மைதான். காடுகளில் சில புலி உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இடையிடையே சிறு தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. அவை வெளிவரவில்லையே தவிர தேடுதலும் தாக்குதல்களும் நடைபெறுகின்றன.

    அவர்களது இருப்பதை காட்டிக் கொடுத்து தமது இருப்பை நிலைநாட்டிக் கொள்ளவே புலத்து புலிகள் உறுமுகின்றன. முகம் காட்டாத கேபீ போன்ற வில்லத் தனமான கொள்ளையர் போன்ற தலைமை கூட அதையே தெரிவிக்கிறது. மக்களுக்கான மீள் குடியமர்த்தச் சொல்லும் கோஸம் கூட மக்களை மீட்கும் நோக்கில் அல்ல. அங்கே விசேட முகாமில் சரணடைந்துள்ள 10,000 புலிகளை விடுவிக்கும் நோக்கமாகவே இருக்கிறது. புலத்து புலிகள் எவரும் மக்களுக்காக அழவில்லை. தமக்காகவும் அல்லது தமது இருப்புக்காகவும் அழுவது போல காட்டிக் கொண்டு கூட்டங்களையும் , அஞ்சலி நிகழ்வுகளையும் நடத்தத் தொடங்கியுள்ளார்கள்.

    புலிகளுக்கு ஆயுதங்களை விற்றவர்களும் , இலங்கை நாடு சுபீட்சமடைக் கூடாது என எண்ணும் அமெரிக்க , ஐரோப்பிய நாடுகளும் இவற்றை மீண்டும் ஊக்குவிக்கும் ஒரு அங்கமாகவே chennal 4 கேபீயின் பேட்டி வந்துள்ளது.

    கடந்த காலங்களில் , திருகோணமலையில் புலிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றினால் தமிழ் சிங்கள மக்களிடையே பதட்டம் தோன்றிய வேளையில், அந் நிகழ்வு குறித்து புலி முக்கியஸ்தர் ஒருவரோடு அப்பாவி தமிழர்கள் சாகடிக்கப்படுவது உங்கள் செயல்களினால் என்பதை உணரவில்லையா என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில், ” நாடும் கிடைக்க வேணும் , ஆக்களும் சாகக் கூடாதென்றால் எப்படி அண்ண. ஆக்கள் செத்தால்தானே அண்ண நாடு கிடைக்கும் என்றார்.”

    இதுதான் புலிகளின் தத்துவம். இதற்கு மேல் அவர்களிடம் எதையும் எதிர்பார்க்க இயலாது. எனவே புலிகளோ அல்லது புலிகளில் இருந்தவர்களோ அல்லது புலி ஆதரவாளர்களோ இந்த எண்ணத்திலிருந்து மனம் மாற வாய்பே இல்லை. ரஜனியின் பாட்சா எடுபடுற அளவுக்கு குசேலன் எடுபடாது. அதுமாதிரி ஒரு கூட்டம் புலிக் கூட்டம் என்பதை விளங்காதவர்கள் விளங்கிக் கொள்ளலாம்.

    Reply
  • appu
    appu

    சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போலிருக்கின்றது கருணா அம்மானைப் பார்த்து வித்தியா உரைப்பது. வாழ்வது சொற்பகாலமே. அதை சந்தோஷமாக வாழ்ந்துவிட்டு போகலாமே. அம்மான் இலங்கையில் அநுபவிக்கட்டும், அதுபோல் அம்மணியும் இங்கிலாந்தில் அனுபவிக்கட்டுமே. அதில் ஏன் அடுத்தவர்களுக்கு இவ்வளவு பொறாமை. தொப்பிக்கலையில் தெரியாத இருளா குப்பிவிளக்கு அணைவதில் தெரியப் போகின்றது. விட்டுத்தள்ளிவிட்டு வேலையைப் பாருங்கையா.

    Reply
  • muniamma
    muniamma

    புதிதாக புலத்தில் புனரமைக்கப்பட்ட புலிகளின் நீதிமன்றத்திற்கு புதிதாக பதவியேற்ற பெண் நீதிபதி போலல்லவா இருக்கின்றது இவரின் பேச்சும் ஒரு மாத காலக்கேடு கொடுக்கும் பாணியும். உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என்பது தெரிந்த விடயம்தானே.

    Reply
  • kumarathasan
    kumarathasan

    I think maya opinion is most of us opinion but there stil whisitle blow its take time.

    Reply
  • BC
    BC

    மாயா, உங்கள் விளக்கத்திற்க்கு நன்றி.

    Reply