ஆயுதங்களுடன் சரணடையுமாறு பாதாள உலகக் குழுவினருக்கு, பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அருகில் இருக்கும் காவல்துறை நிலையத்தில் ஆயுதங்களுடன் பாதாள உலகக் குழுவினர் சரணடைய வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு அரசியல் தலைவரும் பாதாள உலகக் குழுவினருடன் தொடர்புகளைப் பேணக் கூடாது எனவும் அவ்வாறு பேணுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
துறைமுகத்தில் தேயிலை ஏல விற்பனை நடைபெறும் போது கூட பாதாள உலகக் குழுவினர் லஞ்சம் பெற்றுக் கொள்வதாகத் தமக்கு தகவல் கிட்டியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில உயர் காவல்துறை அதிகாரிகளும் பல்வேறு வழிகளில் கப்பம் கோரி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். கப்பம் அல்லது லஞ்சம் பெற்றுக் கொள்ளும் காவல்துறை அதிகாரிகள் குறித்து தகவல்களை வழங்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாதாள உலகக் குழுவினரைப் பூண்டோடு அழிக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதென கோதபாய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
valarmathi
பாதாள உலகக் குழு என்பது என்ன? தயவு செய்து விளக்க வேண்டுகிறேன். அப்படியான இயக்கத்தவர் யாரேனும் ஈழத்தில் இருக்கின்றனரா? அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன்.
வளர் …
chandran.raja
பாதாள உலக்குழுவை மாபிய எனவும் அர்தப்படுத்தலாம். இவர்களை அரசியல்வாதிகளும் தங்கள் தேவைக்காக பயன்படுத்துவதுண்டு. பணமும் கொலைகளே இவர்களுடைய குறிக்கோள்கள். ஒப்பந்த அடிப்படையிலேயே இவர்கள் இணைந்து கொள்வார்கள். உயிரை துஞ்சமாக மதித்து தலைவன் இட்ட கட்டளைகளை நிறைவேற்றுவார்கள. கட்டளைமீறப்படும் போது தலைவனாலும் உயிர் பறிக்கப்படுவதுண்டு. நாட்டில் வாழும் மக்களைப் பற்றியோ அன்றாட அரசியல் நகர்வைப் பற்றியோ இவர்களுக்கு அக்கறை இல்லை.கொலைகளும் பணமும் பிரதானமாக இருக்கும். இவர்களுக்கு “புலிகள்” என்றும் ஓர் பெயர்யுண்டு.
மகுடி
chandran.raja சொன்னதோடு + இங்க சிங்களவரும், சோனகரும், தமிழரும் இருக்கிறான்கள். காசுக்கு என்னவும் செய்வான்கள்.
jalpani
வெள்ளைக் கொடியுடன் சரணடையவும். அல்லாவிடின்…………….
paramu
It includes Pillian Group,Karuna Group,Douglas Group,….and Srilankan Police…
mano
பாதாள உலகத்தவர்களைப் பயன்படுத்துபவர்கள் அரசியல்வாதிகள் மட்டுமல்ல புலிகள் உட்பட அனைத்து இயக்கங்களும் தான். கடந்த காலங்களில் மாற்றுக் கட்சிகள் தமக்கு பிரச்சினையான உறுப்பினர்கள் சிலரை இந்தப் பாதாள உலகத்தவர்களைப் பயன்படுத்தியே கொலை செய்ததாகவும் அதன் தொடர்ச்சியாக அவர்களிடம் மாட்டிக்கொண்டு முழிக்கும் தமிழ் கட்சி உறுப்பினர்களும் உள்ளதாக இங்கொரு கருத்து நிலவுகிறது.
மாயா
மகிந்தவோடு முரண்பட்டுக் கொண்டிருந்த சிங்கள ஊடகவியலாளர் லசந்தாவின் கொலையை ஐதேகட்சி இந்த பாதாள உலகத்தின் ஒரு குழுவைக் கொண்டு செய்ததாக வெளிவராத தகவல்களாக கசிந்துள்ளன.
லசந்தவுக்கான ஆபத்து குறித்து லஸந்த, ரணிலிடம் சொன்ன பின்னர், மகிந்தவுக்கு சர்வதேச அளவில் பிரச்சனையை கொடுக்க இக் கொலை நடத்தப்பட்டுள்ளதாகவும் பலர் பேசிக் கொள்கின்றனர். லஸந்த, ரணிலிடம் தனக்கு மகிந்தவால் ஆபத்து வரும் என்பதையும், தனக்கு ஏதாவது நடந்தால் மகிந்தவை குறிவைத்து எழுதப்பட்டிருந்த தனது கடிதம் குறித்த விபரத்தையும் ரணிலிடம் தெரிவித்த சந்திப்பின் பின்னரே லஸந்த படுகொலை செய்யப்பட்டார்.
புதிய எதிரிகளின் மோதலின் போது பழைய எதிரி மறைந்திருந்து தாக்கினாலும் மாட்டிக் கொள்வது என்னவோ புதிய எதிரிதான் எனும் டெக்னிக்கை இங்கே பாவித்துள்ளனர் போல் உள்ளது.
இப்படியான செயல்கள் தொடரலாம் என்பதால், பாதாள கோஸ்டிகளில் உள்ளோர் சரணடைய வேண்டும் அல்லது அழிக்கப்பட வேண்டும் என்பதில் மகிந்த அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. மகிந்த அரசு, அசைக்க முடியாத அரசாக தெரிந்தாலும் அதை ஆட்டம் காண வைக்க, இப்போது எதிர்க் கட்சிகளுக்காக மட்டுமல்ல , புலிகளுக்காகவும் காசு கிடைத்தால் இவர்கள் எதுவும் செய்வார்கள். பிரேமதாஸ காலத்தில்தான் இவர்களது உருவாக்கம் அதிகமாக தொடங்கியது. எனவே இதில் ஆரம்ப ஐதேகட்சியினரே அதிகம். மகிந்தவுக்கு சார்பான ஒரு குழுவும் இருக்கிறது. எனவே இவர்களது அஸ்தமனம் இப்போதைய கால கட்டத்தில் மிக அவசியமானது மட்டுமல்ல தேவையுமானது.
சரணடைய விரும்பாத பலர், நாட்டை விட்டு ஓடுவர். அதையும் அரசு ஓரளவு தடை செய்ய நினைக்கிறது. வேலை வாய்ப்புக்காக என வெளியேறுவோர் கூட போலீஸ் கிளியரன்ஸ் எடுக்க வேண்டும் என்ற ஒரு சட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. பக்கத்து நாடுகளுக்கு உல்லாசப் பிரயாணிகளாகவோ அல்லது கடல் மூலமோ சென்றால் சில வேளை தப்பலாம். அதுவும் தவறினால், என்கவுண்டர்கள் வழி பலர் கொல்லப்படலாம்.
பாதாள கோஸ்டிகளின் துன்புறுத்தலால், அச்சமடைந்த பெரும்பாலான மக்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. இருந்தாலும் இன்றைய நிலையில் இவர்களையெல்லாம் பிடித்து வைக்க சிறைகள் போதுமானதாக இல்லை? மரண தண்டனையை வேற கொண்டு வர இருக்கிறார்கள்? இனி………..? கொலையா? தூக்கா? என்கவுண்டரா? பார்க்கலாம்?
Valarmathi
அடக் கொடுமையே!
Underground movement என்பதைத்தான் “பாதாள உலகம்” என்பதாக எழுதியிருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டுதான், இந்தச் சொற்தேர்வு சரியா என்ற கேள்வியை எழுப்பத்தான் பின்னூட்டமிட்டேன்.
இங்கே தமிழ்நாட்டில் underground movement என்பதை “தலைமறைவு இயக்கம்” என்றுதான் அழைப்பார்கள். அதுவே சரியான மொழியாக்கமும்கூட.
ஏன் தேசம்நெற்றில் வரும் பல கட்டுரைகளில் “தலைமறைவு இயக்கம்” என்ற சொல்லே பாவிக்கப்பட்டிருக்கிறது. ”பாதாள இயக்கம்” என்ற பிரயோகம் literal ஆன “பெயர்ப்பு”.
இதைச் சுட்டிக் காட்ட வந்தால், ”பாதாளத்திற்கு” ”ஜெய் பாதாள பைரவி” என்று விளக்கங்கள் வேறா!!!
chandran.raja
“தலைமறைவு இயக்கம்”- இவர்களுக்கு சரிபிழையுடன் கூடவே அரசியல் சாயம் கலந்திருக்கும். மாவோவாதிகள் பலரிடம் மனிதநேயமும் அரசியல் ஆளுமையும் இருப்பதைக் காணலாம். தலைமை தவறான பாதையை வரிந்து கொண்டால் சதாரண உறுப்பினர்கள் என்ன செய்யமுடியும்?
பாதாள உலகக்குழு அப்படிப்பட்டதல்ல குத்தகைக்கு வாங்கும் கொலைகாரர்கள். அரசுடன் தொடர்பு கொண்டது தான் வரி என்பது. இவர்கள் வாங்குவது “கப்பம்”.
Valarmathi
எனக்கு பதில் சொல்வதாக எடுத்துக் கொள்கிறேன் திருவாளர் chandran.raja அவர்களே!
முதலாவதாக literal translation குறித்த எனது கேள்வியை மறந்துவிடுவோம்.
ஏனென்றால், அதையும் புறந்தள்ளிவிட்டு நீங்கள் இன்னொரு தளத்திற்கு கேள்வியை நகர்த்திச் செல்கிறீர்.
அதன் சாரம் இதுதான்: “புரட்சிக்காரர்கள் (மாவோயிஸ்டுகள், லெனினிஸ்டுக்ள் வங்கிகளைக் கொள்ளையிடலாம், அரசியல் தவறுகள் செய்யலாம் … அதை ‘கனிவோடு’ நாம் அணுகலாம் … ஆனால் முட்டாள் புலிகள் (அதன் முழு கோபத்துடன் சொல்கிறேன்) அதைச் செய்தால் அதை (நீங்கள் இந்த வார்த்தைகளிலோ அர்த்தத்திலோ சொல்லவில்லை … ஆனாலும் … அவர்கள் செய்யாததா? … அது தொடர்பான உங்கள் விமர்சனம் உண்டா?} அந்தத் தவறுகளை கரிசணையோடு பார்ப்பதற்கு ஆள் கிடையாது …
மன்னிக்க …
ஈழத்து நிகழ்சுகள், அதன் வரலாறு, சமூகச் சூழல் நன்கு அறிவேன்.
ஆதாரபூர்வமாக பேசவும் விஷயங்கள் இருக்கின்றன.
நான் புலி ஆதரவாளன் அல்ல என்பதும் ‘உலகறிந்த விடயம்’.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக புலிகளின் நடைமுறைகளை விமர்சித்து வந்தவர்களில் அடியேனும் ஒருவன்.
பல விபரங்களைச் சொல்ல முடியும்.
இங்கு ”தேசம் நெட்ற்றில்” பின்னூட்டமிடுபவர்களை தொடர்ந்து அவதானித்தால் அது மிகச் சிறிய்தொரு கும்பலின் திட்டமிட்ட செயல்பாட்டுத் தளமே என்பதை எவரும் புரிந்துகொள்ள முடியும்.
இங்கு … தேசம் நெற்றில் புலிகள் மீதான விமர்சனத்திற்கு … பெரும்பாலானவை பொய்யானவை … அவற்றை ஆவண ரீதியான ஆதாரங்களோடு நிரூபிக்க நான் தயார்.
இங்கே பின்னூட்டமிடும் ஒரு நபராவது அத்தகைய பகிர்த்ல்களுக்கு தயாராயிருப்பார்களா/
thambi
//இங்கு ”தேசம் நெட்ற்றில்” பின்னூட்டமிடுபவர்களை தொடர்ந்து அவதானித்தால் அது மிகச் சிறிய்தொரு கும்பலின் திட்டமிட்ட செயல்பாட்டுத் தளமே என்பதை எவரும் புரிந்துகொள்ள முடியும்//வளர்மதி
இந்த திட்டமிட்ட பின்னூட்டம் விடும் கும்பலில் நீங்களும் உள்ளடக்கம்தானே
chandran.raja
வளர்மதி…..
சவால் விடுவதற்கு இது குத்துச்சண்டை மேடையல்ல. “தேசம்நெற்” தமது ஊடகதர்மத்துக்கு உட்பட்டவரை யாருடைய கருத்தையையும் பதியவிடும். அது செ.பத்மநாதன் உடைய கருத்தாக இருந்தாலும் கூட. வரும் கருத்துக்கள் தமிழ் மக்களையும் கூடிவாழும் மக்களின் வாழ்வையும் உயர்த்துமென்றால் பெருமை கொள்ளும்.
என்னை பொறுத்த வரை நீங்கள் குறுகியபுத்தியுடனே தேசம்நெற்றை அணுகியிருக்கிறீர்கள். உங்களுக்கு ஏற்ற ஆரோகியமான தளங்களை நீங்கள் தேடிப்போவதே உகந்தது. கருத்து என்பது தான் பட்டது கற்றது அறிந்ததை நாம் வாழும் சமூகத்திற்கும் பயன்படும் விதத்தில் கருத்தாக்கி துணிகரமாக பிரயோகிப்பவே சிறந்த சமூகசேவகன்யாகிறான்.