பாக்கு நீரிணை மீது பாலம் குறித்து மீண்டும் பேச்சு

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாக்கு நீரிணையூடாக பாலமொன்றை நிர்மாணிக்கும் யோசனை குறித்து கொழும்பில் இடம்பெறவுள்ள பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க (சார்க்) போக்குவரத்து அமைச்சர்கள் மாநாட்டில் ஆராயப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் அமால் குமாரகே கூறியுள்ளார்.

இந்தப் பாலமானது இலங்கையானது பிராந்தியத்தில் தனது அடையாளத்துவத்தை மீளப்பெறவும் கண்டத்தில் ஓர் அங்கமாக இருப்பதற்கும் உதவியாக அமையுமென்றும் அவர் கூறியுள்ளார். மணல்மேடுகளை உள்ளடக்கியதாக தற்போது இருந்து வரும் ஆதாம் பாலத்தின் மீது இந்தப் பாலம் அமைவது இரு நாடுகளுக்குமிடையில் கிட்டத்தட்ட தொப்புள்கொடி உறவை ஏற்படுத்தும் விடயமாக அமையுமென்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவுடன் தரைவழி தொடர்பை நாம் ஏற்படுத்திக்கொண்டால் பயணத்துறையில் புரட்சியை ஏற்படுத்தியதாக அமையுமென்று கைத்தொழில் நிர்மாண சம்மேளனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கொன்றில் உரையாற்றுகையில் அமால் குமாரகே கூறியுள்ளார். இலங்கையின் வட, கிழக்குப் பகுதியில் போக்குவரத்தை மேம்படுத்துவது தொடர்பாக இந்தக் கருத்தரங்கு இடம்பெற்றது. இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலத்தை நிர்மாணிக்க குறைந்தது 10 வருடங்களாவது எடுக்குமென்று தெரிவித்த குமாரகே இதனை நீண்டகால திட்டமாக கருதி செயற்படவேண்டுமென்று குறிப்பிட்டார்.

அடுத்தவாரம் கொழும்பில் தெற்காசிய போக்குவரத்து அமைச்சர்கள் ஒன்றுகூடவுள்ளனர். அச்சந்திப்பின்போது இலங்கை இந்திய பாலம் அமைக்கும் விடயம் ஆராயப்படுவது நிகழ்ச்சிநிரலில் இருப்பதாக அவர் கூறினார்.

இந்த யோசனையின் ஆரம்பகட்டத்தில் வீதி, பாலம் அமைப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தது. இப்போது புகையிரதப்பாதை அமைப்பதற்கு முன்னுரிமை கொடுப்பது பற்றி சிந்திக்கப்படுகிறது.தூரத்தைக் கவனத்தில் கொண்டால் உபகண்டத்தை இலங்கையுடன் போக்குவரத்திற்கு இணைப்பதில் புகையிரதப்பாதை சிறந்த விடயமாக காணப்படுகிறது. குறுகியகால அடிப்படையில் இரு நாடுகளும் கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் அதிவேகப்படகு சேவைகளை மேற்கொள்ளமுடியுமென்றும் குமாரகே கூறியுள்ளார்.

Show More
Leave a Reply to mike Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • mike
    mike

    பாக்குநீரிணையில் அமையவிருக்கும் இப்பாதை தலைமன்னர் மேற்கு கிராமத்திற்கும் தனுஸ்கோடி அரிச்சல்முனைக்குமிடையில் அமையவிருக்கின்றது. 1964 பெரும்புயலின் பின்பு இவ்வழியில் பெரும்மாற்றமேற்பட்டுள்ளதை தொடர்ந்து, தலைமன்னார் கரையிலிருந்து சுமார் 6-8 கிலோமீற்றர்கள் தூரம்வரையில் சிறிய ஆறுகள் மூடப்பட்டு தொடர் மணல் பாதையாகவே காட்சியளிக்கின்றது. அதேபோன்றுதான் ஐந்தாம் தீடைப்புட்டி அருகிலும் தொடர்ந்து காணப்படுகின்றது. தனுஸ்கோடியருகில் ஓடும் சேதுக்கரை ஆறு ஒன்றுதான் ஆழமான ஆறாகும். இதற்குமேல் மட்டும் மேல்ப்பாலம் அமைக்கப்பட்டால் இப்பாதை வெகு இலகுவாகவும் விரைவிலும் முடிந்துவிடும். இதற்கு பத்து வருடங்கள் தேவையில்லை. ஏதோ அரசியல் காரணம்போல் தெரிகிறது. உலகவங்கி நினைத்தால் உடனே முடிக்கலாம். தெற்காசிய விவகாரமென்றால் சுணக்கம்தான் “சிங்களத்தீவினுக்கோர் பாலமமைப்போம்- சேதுவை மீதுறுத்தி வீதியமைப்போம்” என்ற பாரதியின் கனவு நனவாக

    Reply