கத்தி(ஏகபிரதிநிதி) போய் மேளம்(21பேர்) வந்தது டும் டும்……!!- வடக்கான் ஆதாம்

வன்னி தடுப்பு முகாம்களில் வசித்து வரும் தமிழ் மக்களின் வாழ்வியலை முன்னேற்றும் நடவடிக்கையாக ஸ்ருட்காட்டில் ஒரு மகாநாடு என்றபோது பொதுவாகவே இம்மாதிரியான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு இருக்கும் எனவே இந்த மகாநாடு சம்பந்தமாக எனக்கும் பல கேள்விகள் எழுந்து மறைந்தது. ஆனால் இந்த மகாநாட்டு ஏற்பாட்டாளர்கள் எல்லாம் புலிப் பாஸிஸ எதிர்ப்பாளர்கள் ஆவர். எனவே பத்தரை மாற்று தங்கத்தை உரசிப் பார்ப்பது தகுமா? அனாவசியமாக புலி முத்திரை குத்தவும் வாய்ப்புள்ளது.

யார் இந்த 21 நபர்கள். நானும் விசாரித்த வண்ணமே இருக்கிறேன். பதில் இன்றுவரை கிடைக்கவில்லை. சரி! இவர்கள் எவ்வாறு தெரிவு செய்யப்பட்டனர்? இவர்களாக போனார்களா? அல்லது தெரிந்தெடுக்கப்பட்டு அழைக்கப்பட்டார்களா? போய் வந்தவர்கள் கண்டு பிடித்தவை என்ன? ஒரு கூட்டு அறிக்கை (21நபர்) விடப்பட்டதா?

இவர்களாகப் போனால் 70 நபர்களிடம் (அதுவும் எவ்வாறு தெரிவு செய்யப்பட்டது என தெரியவில்லை) அதற்கான அங்கீகாரத்தை கோருவது நியாயமல்ல என லாஜிக்காக பேசும் இவர்களுக்கு புரியாததல்ல. சரி அரசு தேர்ந்தெடுத்து அழைத்தால் என்ன அடிப்படையில் அரசு அழைக்கின்றது என விசாரித்தார்களா? அல்லது இவ்வாறு அரசின் விருந்தாளிகளாக செல்வது தம்மேல் நம்பிக்கையீனத்தை உருவாக்கும் என்பதை அறியாதவர்களா? தமது கண்டு பிடிப்புக்களை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பது புரியாதவர்களா?

மனிதநேயம் என்ற குறிக்கோளுடன் மக்கள் சேவையாற்ற களம் இறங்கிய இவர்கள் இலங்கை அரசின் மேலும் அதன் படையின் மேலும் தமிழ் மக்கள் கேட்கும் கேள்விகள் பற்றி விசாரித்தார்களா?

1)முகாம்களில் இருப்போரின் எண்ணிக்கையும் அவர்களின் விபரமும் தேவை ஏற்படின் இதை இணையங்களில் வெளியிடுவது – இதன் மூலம் காணாமல் போவது மற்றும் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் உள்ள உறவினர்கள் தமது சொந்தங்களின் நிலை பற்றி அறிந்து கொள்ள முடியும்.

2)போரின் போது மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணை – இலங்கை அரசின் கருத்துப்படி சர்வதேசம் இலங்கை அரசிற்கு எதிராக தொழிற்படுவதாகவும் ஏனெனில் மேற்கத்தைய நாடுகள் இலங்கை முற்போக்கு அரசிற்கு எதிராக கங்கணம் கட்டி வேலை செய்வதாக கூறுகின்றது. ஏற்றுக் கொள்கிறோம். அப்படியாயின் இளைப்பாறிய நீதிபதி வி.ஆர். கிருஸ்ண அய்யர் போன்ற சமூக நன்மதிப்பு பெற்றவர்களைக் கொண்டு விசாரணை மேற்கொள்ளலாம்.

3)முகாங்களின் வசதி பற்றி- 21 நபர் கொமிற்றி எல்லா முகாம்களுக்கும் சென்றதா? அதிகாரிகள் அற்ற நிலையில் யாரிடமாவது விசாரித்தீர்களா? அப்படி இருப்பினும் முகாம்களில் இருப்போர் உண்மையான கஸ்டங்களை பயமின்றி கூறுவார்கள் என நினைக்கின்றீர்களா?

4)இடம்பெயர்ந்த வன்னி மக்களை மீள்குடியேற்றம் செய்வது – இதற்கான தடைகள் என்ன? எவ்வளவு காலம் தேவை? எவ்வாறு விரைவாக குடியேற்றலாம்? முக்கியமாக கூறப்படுவது மிதி வெடிகளைப் பற்றியே. மிகத்திட்டமிட்டு பகுதி பகுதியாக செய்தால் கடந்த இரண்டு மாதமாக நிறைய மக்கள் குடியிருப்புள்ள இடங்களை துப்பரவு செய்திருக்க முடியும். நாம் உறுதியாக நம்புகின்றோம் அரசிடம் வேறு மறைமுகத்திட்டம் இருக்கின்றது என. இந்த சந்தேகம் உங்களுக்கு வரவில்லையா?

5)இந்த முகாம்களுக்கு மேஜர் சந்திரசிறி நியமிக்கப்பட்டதும் மேலும் வடகிழக்கு மாகாணங்கள் இராணுவ மயப்படுவதும் உங்களுக்குப் புரியாததா? மிகச்சிறந்த சிங்கள சிவில் சேவையாளர் விமல் அமரசேகர (முன்னாள் யாழ். அரச அதிபர்) போன்றவர்களைக் கொண்ட சிவில் நிர்வாகத்தை உருவாக்குவது பற்றி நீங்கள் பேசவில்லையா?

6)சிங்கள, தமிழ், முஸ்லிம் நல் சக்திகளைக் கொண்ட சில கண்காணிப்பு குழுக்களை அரசின் ஏற்பாட்டுடன் செய்து முகாம்களின் நிலைபற்றி கவனம் எடுப்பது என்றெல்லாம் நிறைய விடயங்கள் உள்ளது.

சிவில் சேவையுடன் சம்பந்தப்படாத எனக்கே இவ்வளவு கேள்விகளும் யோசனைகளும் இருக்கும் போது அறிஞர் குழுவில் உள்ள உங்களுக்கு எவ்வளவு கேள்விகள் எழுந்திருக்கும்? இவைகள் பற்றி நீங்கள் கேட்டிருந்தீர்களா? பதில் கிடைத்ததா?

மூன்று லட்சம் மக்களை முகாம்களில் வைத்துப் பார்ப்பது இலகுவான விடயமல்ல என்பது எமக்கு தெரியும். அதற்காக அவர்களை துன்பத்திற்குள்ளாக்குவது முறையாகுமா? அதை விடுத்து மக்கள் நன்றாக இருக்கிறார்கள் எனக் கூறுவது…….?சிங்கள முற்போக்கு சக்திகளே (வாசுதேவ நாணயக்கார) அங்கு பிரச்சினை உள்ளது எனக் கூறும்போது நீங்கள் இங்கிருந்து சென்று நற்சான்றிதழ் கொடுப்பது நல்லதல்ல. மேலும் முப்பது வருடங்களுக்கு மேலாக இங்கிருக்கும் உங்களுக்கு, இலங்கையில் இருந்து வரும் புலி எதிர்ப்பாளர்களை மாத்திரம் சந்திக்கும் உங்களுக்கு, அங்கு சாதாரண மக்கள் படும்பாடு புரியுமா? அல்லது உங்களது நெருங்கிய உறவினர்கள் (இங்கும் அங்கும்) உங்களது இந்த நிலைப்பாட்டை ஆதரிக்கிறார்களா?

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வன்னியில் இருந்து வந்த இந்த அகதி மக்களை அரசு சந்தேகக் கண்ணுடன் பார்ப்பது ஓரளவிற்கு ஏற்கப்படக் கூடியது என்ற காரணத்தை நீங்களும் நாங்களும் ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில், பிரபாகரனுக்கு விசுவாசத்தை காட்டுவதற்காக ஏராளம் கொலைகள் புரிந்த, கொலைகள் மாத்திரம் புரிந்த கருணா போன்றோரும் அரசிலும் அதற்கு நெருக்கமாயும் இருப்பது பற்றி விரல் நுனியில் எல்லா விபரங்களையும் வைத்திருக்கும் பசில் ராஜபக்சேவிடம் வினவினீர்களா?

உங்களது (21 பேர்) இலங்கை விஜயம் வன்னி மக்களின் நலன்சார்ந்தது மாத்திரமா? உங்களில் எத்தனை பேர் வன்னிப் பிரதேசத்துடன் தொடர்புடையவர்கள்? இனப் பிரச்சனையின் ஒரு பகுதிதான் இந்த வன்னி அவலம் என்பது உங்களுக்கு புரியாததா? காயங்களின் ஒரு பகுதியை குணமாக்குவது சரிப்படும் என நினைக்கிறீர்களா?

நிபந்தனை அற்ற ஆதரவு எங்கு கொண்டு போய் விடும் என்பதை நமது கண்களின் முன்னாலேயே புலிகள் செய்து காட்டினார்கள். (எந்தக் கேள்வியும் இன்றி மக்கள் புலிகளை ஆதரித்து விட்டு இன்று நடுத்தெருவில் நிற்கிறார்கள்) எனவே மக்கள் நலன் சார்ந்து ஆதரவு கொடுப்பது தவறல்ல. ஆனால் மனதில் சந்தேகக் கண்ணுடன் ஆதரவு தருவது சரியாகுமா? புலிகள் இருந்த போது புலிக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருவதின் அளவுகோல் வேறு. இப்போது இதற்கான அளவுகோல் வேறு என்பது உங்களுக்குப் புரியாததல்ல! யதார்த்ததத்தின் அடிப்படையில் புலிக்கெதிரான போரில் உயர் பாதுகாப்பு வலயம் மீன்பிடித்தடை போன்ற மனித உரிமை மீறல்கள் கண்டும் காணாமலும் விடப்பட்டன. ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் புலிகள் அழிக்கப்பட்ட பின்னும் மனித உரிமை மீறல்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. ஏனெனில் இலங்கை அரசுகளின் கடந்த காலங்கள் அப்படியானவை என்பது உங்களுக்கு புரியாதவை அல்ல.

இனப்பிரச்சினைக்குரிய தீர்வை கண்டு பிடிப்பதில் தொடர்ச்சியாக வந்த அரசுகள் விட்ட பிழைகளை பாஸிஸ புலிகளின் தவறுகளைக் கொண்டு மூடி மறைக்கக் கூடியதாக இருந்ததை நீங்கள் அறிவீர்கள். மேலும் எவ்வளவு காலம் தீர்வை கண்டுபிடிக்கத் தேவை என்பதை உங்களால் (21பேர்) அறிய முடிந்ததா? அறிஞர் குழுவில் பெரும்பான்மை அறிக்கை என ஒன்று சில வருடங்களுக்கு முன்பு வெளியாக நாங்களும் நீங்களும் வாயைப் பிளந்து நின்றது உங்களுக்கு மறந்து போய்விட்டதா? அடிக்கடி திஸ்ஸ விதாரண இதோ முடித்து விடுவோம், இன்னும் கொஞ்சம் இருக்கிறது என அறிக்கை விடுவது உங்கள் நினைவுக்கு வரவில்லையா?

இன, மத ரீதியாக ஒடுக்கப்படும் மக்களுக்கு புலி செய்த பாவங்கள் போதும். தயவு செய்து நீங்களும் அவர்களுக்கு மேலதிக துன்பத்தைக் கொடுக்காதீர்கள்! வடக்கு, கிழக்கு மக்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை இன்னும் உங்களுக்கு விளங்க முடியவில்லை எனில், நீங்கள் கூறியது மாதிரி மக்கள் உங்களை தூக்கி எறிந்து விடுவார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

95இல் இருந்து இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் யாழ் குடாநாட்டு மக்கள் போர் முடிந்து இரண்டு மாதங்களாகியும் நாட்டின் வேறு பகுதிக்கு போவதற்கு இராணுவத்தின் அனுமதி கோரி நிற்பது வெட்கப்பட வேண்டிய விடயம். அத்தோடு தமது அவசர தேவைகளுக்கு தலைநகர் கொழும்பிற்கு வருவதற்கு விமானப் பயணத்தையே இன்னமும் நம்பி இருக்க வேண்டியுள்ளது. அதேபோல் வெளிநாடுகளில் இருந்து செல்ல இருப்பவர்களும் இதே நிலையிலேயே உள்ளதோடு உள்ளுர், வெளிநாட்டு மக்கள் அந்தப் பயணங்களுக்குரிய கட்டணங்களை கேட்டு தலையில் கைவைத்தபடி உள்ளார்கள். எவ்வாறு புலி கடந்த காலங்களில் பொது மக்களின் பணத்தை பகற் கொள்ளையடித்ததோ அதே பாணியில் இன்றும் அவை நடைபெறுவதாக குமுறுகின்றனர் என்பதையெல்லாம் புரிந்து கொண்டு கடந்த காலங்களில் புலி எதிர்ப்பு போராட்டத்தில் உங்களுக்கு தோள் கொடுத்த எங்களுக்கு தமிழ் மக்களுக்கு எதிரான நிலையை நீங்கள் எடுப்பதன் மூலம் எங்கள் உறவுகளின் முன்னால் எம்மை அவமானப்படுத்தி விடாதீர்கள் என கோருகின்றோம்.

Show More
Leave a Reply to vadakkan aatham Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

41 Comments

  • rohan
    rohan

    வெல் டண், வடக்கான் ஆதாம்.

    நடேசன் எழுதியதை அவரது பத்திரிகையின் மறுவடிவில் படித்தேன். ராஜேஸ்வரி எழுதியதைத் தேனீயில் படித்தேன். கொன்ஸ்ரன்ரைன் எழுதியதைத் தேசத்தில் படித்தேன். சந்திரகாசன் எழுதினார். சதானந்தனும் எழுதினார். நரேந்திரனும் எழுதினார். ஆனாலும், இந்த 21 பிரமுகர்களினதும் பெயர் விபரங்கள் முழுப் பட்டியலாக யாராலும் வெளிடயிடப்படவில்லை.

    சிங்க்கப்பூர்க் கூட்டம் பற்றிய தகவல்கள் கசிந்தன. இலங்கை அரசின் அழைப்பிதழின் பிரதி ஒன்றும் ரயாகரனால் வெளியிடப்பட்டது. அதன் பின்னர், இவர்களுக்கு அரசின் சார்பில் பிரசாரம் செய்யுமாறு அறிவுரை வழங்கப்பட்டதாக வதந்திகளும் வந்தன. இப்படி, முகமில்லாத மனிதர்கள் புலம் பெயர்ந்த தமிழர்களைப் ‘பிரதிநிதித்துவப்படுத்தினர்’.

    வந்தவர்களின் எழுத்துக்களில் பிரசார வாடை வீசியது. இன்றல்ல, அன்றே இவர்கள் முகாம்களின் சிறப்பைச் சிலாகித்து எழுதினர். பசில் ராஜபக்சவின் ஞானத்தை வானுயரப் புகழ்ந்தனர். தமிழர்களின் எதிர்கால வாழ்வு குறித்து யாதும் பேசினாரல்லர்.

    தமிழர்களைக் கடவுள் காப்பாராக!

    Reply
  • PIRABHAKARAN
    PIRABHAKARAN

    தமிழர்களைக் தமிழர் காப்பாராக!

    Reply
  • mutthan
    mutthan

    இவர்கள் யார என்று கண்டுபிடிப்பது மிகவும் சுகமான விடயம். இவர்களில் பலரின் மூலம் தேசிய விடுதலை இயக்கங்கள். சிலர் மதில் மேல் இருப்பவர்கள். இந்த 21 பேரில் ஜெர்மனியின் ஸ்ரீலங்கா தூதுவரும் அடங்குகின்றார்.

    ஜெகநாதன் PLOT இயக்கத்தின் கொள்கை பரப்பும் பிரங்கி. கடந்த 30 வருடங்களாக நாக்குக்கு நரம்பிலை ஏதும் கதைக்கலாம் என்பதற்கான சிறப்பான உதாரணம். இவர் எதாவது எழுதியதாக தெரியாது. அத்துடன் பிரபல்யமான் புலி எதிர்ப்பு அறிவாளன். குமாரதுரை குடும்பம் கனவிலும் புலி எதிற்கும் மிகச் சிறந்த பாரம்பரியத்தை கொண்டவர்கள்.

    பங்குனி மாதத்தில் இவர்கள் விருந்தினராக சென்று வந்த பின்னர் இவர்களுக்குள் இருக்கும் முறுகல் நிலையினை ஸ்ரீலங்கா தூதுவரின் தலையீடல் மூலம் தீர்த்து வைக்க முயற்சி எடுக்கபடுகின்றது. புலிகளின் விரைவான தோல்வியை அரசோ அல்லது இவர்களோ கணக்கில் எடுக்காததால் நிலைமை சிக்கலானது.

    இவர்கள் திரும்பிவந்த பின்னர் அதிரடி இணைத்தளம் ஒரு கட்டுரையை பிரசுரித்திருந்தது. பின்னர் மதி குமாரதுரையின் தலையிட்டால் இக கட்டுரையும் அதற்கான விமர்சனங்கள் கொண்ட பின்னோடமும் அகடப்பட்டது. இதற்கு முதல் Asian Tribune இணைத்தளத்தில் மதி, அதனது பிரமுகரான KT . ராஜசிங்கதிட்கு ஒரு பேட்டி வழங்கியிருந்தார். இந்த பேட்டி மதி ஒரு ஈடு இணையிலாத புலம் பெயர்ந்த மக்களின் தலைவர் என்று அவரை வர்ணித்தது.

    இவர்கள் இந்த stuttgart சந்திப்பில் ஒரு அமைப்பினை உருவாக்கி ஒரு தலைவரும் உருவாக உடன்படலாம். அது அவர்களது உரிமை. இவர்கள் என்ன செய்கின்றார்கள் என்றதிலும் முக்கியம் ஏன் செய்கின்றார்கள் என்பதே.

    இந்தக் கட்டுரையாளன் வடக்கான் ஆதம் இவர்களிடம் கேட்கும் கேள்விகளில் நேர்மை இருக்கின்றது. எனினும் இந்தக் கேள்விகள் ஸ்ரீலங்கா அரசு முகாம்களில் நடத்தும் கொடுமைகளை இவர்கள் முழுமையாய் கவனிக்க இல்லை என்று குறைப்படுவதாக கருத இடம் கொடுக்கிறது. இந்த தரகர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க முடியாது.

    முகாமில் சிறை வைக்க பட்டிருக்கும் மக்கள் தொடர்பான கோரிக்கைகள்

    1 அரசு சுயாதீனமான வெளிநாட்டு, உள்நாட்டு உதவி நிறுவனகள் தங்கு தடை இன்றி முகாம்களுக்குள் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும்.
    2 பத்திரிகையாளர்கள், பார்வையாளர்கள் தங்கு தடை இன்றி முகாம்களுக்குள் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும்.
    3 புலம் பெயர்ந்த்தோர் சுஜாதீனமாக செய்கும் உதவிகள் கிடைக்க வழி செய்ய வேண்டும். இதற்காக புலிகள் பாணியில் இல்லாத சுயாதீனமான அமைப்பை உருவாக்கலாம்.
    4 உடனடியாக முகாமில் இருந்து வெளியேறி தங்களது சொந்த இடங்களுக்கு செல்வதற்கான அனுமதி, நிதி உதவி அரசினால் வழங்கப்படவேண்டும்.

    இந்த கோரிக்கைகளுக்கு இந்த தரகர்கள் தேவையில்லை. ஸ்ரீலங்கா அரசின் வெளிநாட்டு செயலகமாக இயங்க முயலும் இவர்களின் நோக்கம் சுயாதீனமான சிந்தனைகளை முளையில் கிள்ளி விடுவதாகும்.

    Reply
  • மாயா
    மாயா

    யுத்தம் நடந்து கொண்டிருக்கும் சமயம், அரசுக்கு எதிரான புலிகளது கோஸங்கள் உலக வீதிகளுக்கு புலம் பெயர்ந்தவர்களிடம் இருந்து வந்த போது, இப்படியான ஒரு குழுவின் தேவை அரசுக்கு அன்று தேவைப்பட்டது. அது புலத்தில் புலி எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள் என உலக அரங்குக்கு காட்டுவதற்கானதாக இருந்தது . இனி இவர்கள் பெரிதாக தேவைப்பட மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். இக் குழுவில் இடம்பெற்ற அதிகமானவர்கள் தகுதியானவர்கள் இல்லை என்பதை அவர்களது பேச்சுக்களும் செயல்களும் காட்டியதாக சிறீலங்காவிலேயே சிலர் பேசிக் கொண்டனர். அது தேசம் கட்டுரை ஒன்றிலிருந்தும் வெளிப்பட்டிருந்தது. அங்கு போன பலரும் தம்மை முதன்மைப்படுத்திக் கொள்ள விரும்பினர் என்பதை அவர்கள் உணர்ந்தனர். இருந்த போதும் அதை அவர்கள் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை என்றே கருதுகிறேன்.

    இப்போது யுத்தம் முடிவுக்கு வந்து விட்டது. இப்போதைய தேவை வேறு. அதற்கு இவர்களிடம் இருக்கும் சரக்கு போதாது. கடந்த காலங்களில் சிறீலங்கா சார்பில் பதவி வகித்து வந்த, உலக அழுத்தங்களை எதிர் கொண்ட சுவிஸ் ஜெனீவாவில் உள்ள சிறீலங்காவின் நிரந்தர பிரதிநிதியான தயான் ஜயதிலக்கவின் பதவியையே பறித்து , அவரை உடனடியாக கொழும்புக்கு திரும்பி வருமாறு அரசு நேற்று ஒரு தொலைநகல் வழி பணித்துள்ளது.

    இவர்களுக்கே இந்த நிலை என்றால்? சசரக்கே இல்லாத அடுத்தவர் நிலை என்ன என்பதை ஊகிக்க முடியும்?

    Reply
  • msri
    msri

    மகிந்த அரசின் ஏவலர்கள்!
    பிரபாகரப் புலி போன்று> மகிநதப் புலியும் பணத்தை அள்ளிக் கொட்டி> வெளிநாடுகளில் தன் சி.ஐ.ஏ.க்களை உருவாக்குகின்றுது! இதுபோன்ற உளவுக்கள் புற்றீசல்கள் போல் (பணம் வாங்கி) பெருகப்போகின்றன!

    Reply
  • original srilankan
    original srilankan

    யார் இந்த 21 ஆட்களும்? இவர்களுக்கும் இலங்கையில் இருக்கும் மக்களுக்கும் என்னதான் சம்மந்தம்? எங்கள் தேசியதலைவர் ( மகிந்த) தமிழ் மக்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் எப்ப கொடுக்க வேண்டும் ( புலிக்கு கொடுத்ததைதத் தான் பார்த்தீர்களே) என்பதெல்லாம் துல்லியமாய் அறிவார். இந்த 21 பேரும் சொல்ல என்ன இருக்கிறது?

    Reply
  • sarana
    sarana

    இந்த 21 பேரும் ஒவ்வொரு ரகம், ஆனால் அரசுக்கு பாமாலை வாசிப்பதில் ஒத்த கருத்து உடையவர்கள். புலி பலமாக இருந்தபோது அவர்களுக்கு சாமரம் வீசியவர்கள், மெளனமாக இருந்தோர், ஒருவரையும் பகைக்காமல் சுழியோடியோர். கிழக்குப் பிரிந்த பின் அங்கும்நீச்சல் அடித்து, அதுவும் சரிவராமல் போக ,அரச மரமுமில்லை, வெட்டினாலும் பிரச்சனை. வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து 18 வருடங்களாக அகதிகளாக இருக்கும் இஸ்லாமியர்களுக்கும்; சுனாமி வந்து 5வருடங்களாக கொட்டகைகளில் இருக்கிறார்கள் —எதுவுமே இல்லை. இப்படியிருக்க இப்போமட்டும் அப்படியொரு கருசனை. பணம், புகழ், பதவி…… இவைகளினுடே சமூக சேவை. இனியும் தமிழ் மக்கள் இப்படிப்பட்டவர்களை நம்பினால்….. கடலும் கை கொடுக்காது. அங்கு உள்ள மக்கள்தான் தங்களுக்கு தகுதியானவர்கள் யார் என்பதை தீர்மானிக்க வேண்டும். அந்த மக்களுடன் வாழ்ந்தவர்கள்தான் அவர்களுக்கு தலமை தாங்கவேண்டும். புலம் பெயர்ந்து வாழும் நாங்கள் அவர்களுக்காக குரல் கொடுத்தால் மட்டும் போதாது… மற்றைய உதவிகளையும் செய்ய வேண்டும். இதை விடுத்து மேடை நிகழ்ச்சிகள் மாதிரி நாடகம் ஆடமுடியாது. இவற்றிற்க்கு செலவிடும் பணம் அங்கு ஒரு கிராமம் செப்பனிடப்போதும்.

    Reply
  • Raw Agent
    Raw Agent

    தற்போது ஜேர்மனியிலிருந்து நடைபெறும் இக் கூட்டத்தில் 100 பேர்வரையில் கலந்து கொண்டுள்ளதாகவும் மிகவும் காரசாரமான விடயங்கள் பேசப்பட்டதாயும் எமது நண்பர்கள் கூறுகின்றனர்.

    Reply
  • மகுடி
    மகுடி

    //msri on July 19, 2009 7:08 am மகிந்த அரசின் ஏவலர்கள்!
    பிரபாகரப் புலி போன்று> மகிநதப் புலியும் பணத்தை அள்ளிக் கொட்டி> வெளிநாடுகளில் தன் சி.ஐ.ஏ.க்களை உருவாக்குகின்றுது! //

    சீ.ஐ.ஏ , அமெரிக்க உளவு நிறுவனம்? சிறீலங்கா உளவு நிறுவனம் பெயர் வேற? ஐயோ சாமியோவ்.

    Reply
  • msri
    msri

    மகுடி!
    நான் தமிழில்தான் எழுதியுள்ளேன்> சிலவிடயங்களை “சிலேடையாக” விளங்குவதில் புரிதலில் உங்களுக்கு உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும்! சி.ஐ.ஏ. அமெரிக்க உளவு என்பபது > நீங்கள் சொல்லித்தர தேவையில்லை! சிறீலங்கா உளவு நிறுவனத்தின் பெயர் என்னவோ?

    Reply
  • மகுடி
    மகுடி

    msri
    தெரியாட்டி யாரிக்கிட்டயாவது கேட்டு எழுத வேண்டியதுதானே? உங்கள் குறைபாடுக்கு முதலில வைத்தியம் செய்யுங்கோ. சிலேடையாகவோ சிலாவியோ எழுத வேணாம்.

    // சிறீலங்கா உளவு நிறுவனத்தின் பெயர் என்னவோ?// நிச்சயமா சீ.ஐ.ஏ. இல்லை?

    Reply
  • msri
    msri

    மகுடி!
    சிறீலங்கா உளவு நிறுவனத்தின் பெயர் உமக்கே தெரியவில்லை என்றால்> இதைப் போய் நான் எப்படி மற்றவர்களிடம் கேட்பது?

    Reply
  • Stuttgart
    Stuttgart

    Members of the Sri Lankan Diaspora Memorandum

    18-19th, July, 2009
    Stuttgart, Germany
    His Excellency T.B. Maduwegedera
    Ambassador of Sri Lanka
    Embassy of Sri Lanka
    Germany

    Your Excellency,
    The members of the Sri Lankan Diaspora which met with the Sri Lankan government delegation, coordinated by its Foreign Affairs Ministry in March 2009 stated that this “start should lead to many endeavours leading to a road map for all communities in SriLanka to co-exist in a non-violent environment.” In continuing this vision, the Diaspora delegates, on return, interacted amongst themselves and others interested, but could not make to the dialogue in March 2009 about
    ways to continue the interactions with the people of Sri Lanka and their government, in contributing meaningfully to that road map. Suggestions were agreed to, that while suitable groups be formed within every diaspora country, an umbrella body be formed to formulate directions and policies to charter a course, in the continued interaction towards this road map. Accordingly the delegates from Denmark, France, Germany, Holland, Norway, Switzerland and United Kingdom met in Stuttgart, Germany on 18th and 19th July 2009, for a further dialogue to look towards the future and reached consensus to:

    · Establish an umbrella organisation, consisting of different entities from diaspora various countries could become constituent members to facilitate the continued
    interactions. In forming this umbrella group, the delegates considered the new developments within Sri Lanka and amongst the Sri Lankan Diaspora communities.

    · The objectives and vision for the umbrella group and its constituent members are to pursue dialogue:

    o The organisation shall be a secular, non-profit body and shall remain nonaligned to any political party.

    o To promote durable solutions to the problems confronting the people in SriLanka and to facilitate all of them to achieve sustainable peace, justice and equality.

    o To promote understanding, cooperation, goodwill, harmony and friendship amongst all the people of the Sri Lanka and facilitate them to live as citizens with equal rights, within a united Sri Lanka.

    o To assist all the displaced persons within Sri Lanka in their rehabilitation and in the reconstruction of their lives.

    o To foster and promote amongst all people of Sri Lanka an awareness and respect for other people’s rights, liberty, dignity, aspirations and to assist towards their reconciliation.

    All should become involved in the present climate to be united and in a constructive dialogue to find an acceptable and durable solution to all communities within a Sovereign State of Sri Lanka.

    As a step towards the path of such reconciliation and to facilitate acceptance of a durable political solution, the meeting in Stuttgart, Germany urge the people of Sri Lanka and their government to do all they can to:

    · Enlist all the assistance available from the Sri Lankan Diaspora, and harness them to provide:
    a. Immediate medical and counselling for the people in the IDP centres to cope with their traumas and to eliminate further preventable mortalities.

    b. To release all children, aged people, pregnant women and other vulnerable people from the IDP camps who have their own places of habitation.

    c. Meaningful steps be initiated to ensure the assurance that all people in the IDP camps to return to their places of original abode and habitation of their choice,
    before the end of December 2009.

    d. To provide a mechanism for the Sri Lankan diaspora to liaise with minimum bureaucracy as possible with the government to channel their efforts in providing
    humanitarian assistance to the people in the IDP centres, and others to be rehabilitated.

    e. All surrendered, captured or located cadres are to be treated in accordance with international humanitarian law and arrangements must be made for them to be in contact with immediate family members and also for legal or other assistance for evaluation of their situation, leading to their rehabilitation and amnesty.

    f. Take necessary action to resettle and rehabilitate Northern Muslim IDPs in Puttalam.

    Members of the Sri Lankan Diaspora
    Stuttgart, Germany
    18th-19th July 2009

    Reply
  • Stuttgart
    Stuttgart

    Dear All,

    I herewith forward the presentation submitted on behalf of Little Aid at the International Diaspora Conference in Stuttgart, Germany – 17-19 July 09. I hereby list down some very useful follow ups / responses we received. Obviously we will follow up it and report to you in near future..

    Delegation from Switzerland was very keen to work with Little Aid or to set up a separate organization in Switzerland. Meantime they agreed to translate this report into local language (Dutch) and circulate widely. As an immediate activity they agreed to collect funds from their friends and family and send it to us.

    One of the members from French delegation gave the detail of a costal area in Paddithcheri (South India) where 130 recent arrivals from Vanni are living without any basic facilities. This particular member has visited them and witnessed this human tragedy. Also the local authorities are not allowing them to go out and seek job or food. According to this delegate, some local people have assaulted these unfortunate new arrivals on several occasions. We have agreed to assist these people though a local contact in Panichcheri.

    Mr. Vathanan Kumarathurai commented that the Little Aid website is very basic hence need to be developed. Mr. Kumarathurai is an IT professional. He undertook the responsibility to upgrade the site where we can share our contacts (where possible); provide useful information and also providing facilities to work with partnership with individuals and other charities/groups. We have gratefully accepted his offer and provided the passwords to the site.

    SIVA 4 KIDS, a charity from Holland requested us to obtain a proposal from the authorities in Rehabilitation Ministry with clear objective and cost (Similar to Ambepussa Project carried out by Little Aid). In return SIVA 4 KIDS will take up that project. We will facilitate this request.

    Dr Bala explained the need of a permanent water bowser for Vavunia hospital. We hope Little Aid can take on this project with the help of our donors. We will work with Dr Bala to accomplish this project.

    Thank you
    Tarrin Constantine
    LITTLE AID

    Reply
  • jalpani
    jalpani

    Stuttgart ,
    Tamil please!

    Reply
  • thayan jeyathilaka
    thayan jeyathilaka

    சமூகநலன் கருதி சில முக்கியமான முடிவு எடுக்கும் நிலையில் இருப்பவர்கள் அல்லது சமூக மாற்றத்திற்கான வழிமுறைகளை ஆதரிப்பவர்கள் சிலவேளை தவறுகளை இழைப்பது மனித இயல்பு. ஆனால் இத்தவறுகள் ஊடாக தம் சொந்த நலன்களை பேண முயல்பவரே சமூக விரோதிகளாவர்.

    இதை சரியாக சொல்வதென்றால் இலங்கைப் பிரச்னையில் சரியான வழிகாட்டலின்றி இலங்கை அரசிற்கோ அல்லது புலிகளுக்கோ ஆதரவு தெரிவித்தவர்கள் அதன் மூலம் இலங்கை அரசிடமிருந்தோ அல்லது புலிகளிடமிருந்தோ தமக்கென சில சலுகைகளை பெற்றுக் கொண்டு அவர்களை ஆதரிப்பதே பிழை என்கிறோம்.

    தமிழ் ஈழத்தைப் பெற்றுத் தரும் என்ற குருட்டு நம்பிக்கையில் புலிகளை ஆதரித்தவர் பலர். இவர்கள் இலங்கை அரசின் விட்டேற்றியான இனவாத இலங்கை அரசின் தவறுகளால் புலிகளை ஆதரித்தனர். சாதாரண வேலை செய்து கொண்டு புலிக்கு பெருந்தொகைப் பணத்தை கொடுத்தனர். இவர்கள் புலியிடமிருந்து எந்த சலுகையையும் மொத்தமாக எதிர்பார்க்கவில்லை. புலிகளுடன் வியாபாரம் செய்தவர்கள் பிரமுகத்தனத்திற்காக ஆதரித்தவர்கள் என்போர் சமூக விரோதிகளே. சமூகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள்.

    அதே போல் புலிகளை ஆதரிப்பதன் மூலம் இலங்கையில் ஒரு சுமுகமான வாழ்வை ஏற்படுத்தலாம் என நம்பியவர்கள் இலங்கை அரசை ஆதரித்தனர் என்ற போதிலும் அவர்களுக்கு இலங்கை அரசின் மேல் ஒருவகை நம்பிக்கையீனமே இருந்தது. அதனை புலிகளின் அழிவிற்தான் கண்டீர்கள்.

    ஆனால் இலங்கை அரசை ஆதரிக்கும் ஒரு பிரிவினர் புலிகளைப் போலன்றி ஓரளவேனும் அரசுக்கு பிரச்சனைகளை கூறக் கூடியதாக இருந்தும் அவை பற்றிப் பேசாது தமது நலன்களையே முன்னிறுத்தி இப்போது வியாபாரத்தை தொடங்கியுள்ளனர். இவர்களும் சமூக விரோதிகளே. இனப்பிரச்சனையில் இருந்து விலக்கப்பட வேண்டியவர்களே ஆவர்.

    தயான் ஜெயதிலக.

    Reply
  • மாத்தையா
    மாத்தையா

    சுவிஸில் புலிகள், அம்மன் கோயில் ஒன்றில் நடத்திய இறந்தவர்களுக்கான நிகழ்வில் பங்கு கொள்ள பெளத்த குருமாருக்கு புலிகள் அழைப்பு விடுத்ததன் பேரில் வந்திருந்தனர். நிகழ்வில் கலந்து கொண்ட சிங்கள பெளத்த குருமாருக்கு நடந்த நிகழ்வுகளை பார்த்த போதுதான் இது புலிகளுக்கான நிகழ்வென்று புரிந்துள்ளது. அம்மன் கோயில் சர்மா, புளொட்டிலிருந்து புலிக்கு தாவி, புலியிலயிருந்து மகிந்தவோடு இணையும் திட்டமா? அல்லது புலியின் ஊடறுவலுக்கான திட்டமா? இல்லை, புலித் தொண்டர்கள் அரசோடு சேரும் உத்தேசமா? அந்த அம்மனிடம்தான் கேட்க வேண்டும். அம்மனைக் கூட தன் சுயநலத்துக்காக விற்க தயங்கார்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    வடக்கான் ஆதாம் எவர் எதைச் செய்தாலும் விமர்சிக்க வேண்டுமென்ற நோக்கில் செய்வது எந்த வகையில் நன்மை தருமென்பது புரியவில்லை. முதலில் ஒரு விடயத்தைப் பற்றி விமர்சிக்கும் போது அது பற்றி கொஞ்சமாவது தெரிந்து கொண்டு பின் விமர்சிப்பது பிரியோசனமானதாக இருக்கும். வெறும் ஊகங்களை மட்டும் வைத்து கொண்டு அடுத்தவர்களை விமர்சிப்பது அல்லது அடுத்தவர்களைக் கேவலப்படுத்துவதென்பது புலிப்பினாமிகளின் கைங்கரியம். அதே பாணியையே வடக்கான் ஆதாமும் கைக்கொள்கின்றார். புலிகளின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவோர் எல்லாம் புலிப் பாஸிஸ எதிர்ப்பாளர்கள் என்று எப்படிக் கட்டுரையாளர் கணிக்கின்றார்?? இதற்கு பின்னூட்டம் எழுதிய பலரும் இதே பாணியில் கருத்தை முன் வைத்திருப்பதும் வேதனைக்குரியது. அடுத்தவர்களை விமர்சித்து புத்தி சொல்ல வருபவர்கள் சரியான வழிமுறையில் தாம் செய்து காட்டலாமே?? செய்யவும் மாட்டார்கள் செய்பவர்களையும் விடமாட்டார்கள். புலிமாயையில் சிக்குண்டிருக்கும் “புலன்” பெயர்ந்திருப்பவர்களை அந்த மாயையிருந்து மீட்டு சகச நிலைக்கு திருப்புவது கடினமானது தான்.

    நான் அறிந்த வகையில் மாநாடு குறிப்பிட்ட அந்த 21 பேர்கள் மட்டும் கலந்து கொண்டதல்ல. இந்த மாநாட்டில் பல நல்ல நோக்கம் கொண்டவர்களே கலந்து கொண்டுள்ளார்கள். இவர்களில் பலர் வன்னியில் புலம்பெயர்ந்து வாழும் மக்களிற்கு தொடர்ந்து சேவையாற்றி வருபவர்கள். இவர்கள் தமது சேவைகளை இணைந்து செய்யும் நோக்கோடும், அந்த மக்களின் மீள்குடியேற்றம், வாழ்வாதாரம் போன்றவற்றில் அரசோடு இணைந்து செயலாற்றுவது பற்றி விவாதித்துள்ளார்கள். வெறுமனே அரசாங்கத்தை விமர்சனம் செய்து கொண்டிருப்பதால் அந்த மக்களின் வாழ்க்கையில் மாற்றம் வந்துவிடப் போவதில்லை. அதனால் அரசிற்கு நட்புரீதியாக ஒரு அழுத்தத்தை கொடுத்து ஆக்கபூர்வமான செயற்பாடுகளை செய்ய முனைவதில் என்ன தவறு என்று எனக்குப் புரியவில்லை. எதையும் விமர்சிக்க வேண்டாமென்று நான் சொல்ல வரவில்லை. முதலில் செயற்பாடுகளை கவனியுங்கள். அவற்றில் தவறுகள் இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். அது விமர்சனம்.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    பொதுசொத்துக்கு சேதம் விளைவிப்பவனும் பொதுஜனங்கள்- சந்தடியுள்ள இடங்களில் வெடிகுண்டு வைப்பவனும் தற்கொலைக்கு தூண்டி விடுபவனும் சமூகத்துரோகியே! புலிகளின் மிலேச்சத்தனமான போக்குகளே எம்மை மகிந்தா அரசுக்கு ஆதரவுவளிக்க தூண்டியது. அர்தமில்லாமல் இலங்கைதீவில் தொடர்ந்து வந்த பேரழிவுகளே எம்மை ஐக்கியத்துடன் வாழலாம் என்ற பேருண்மையை போதித்தன. இதுவரை கால வந்த சிங்கள தலைவருக்குள் மகிந்த ஜனாதிபதிக்குரிய தகமையுள்ளவாகவே கணிக்கப்படுகிறார். யுத்தம் முடிவுக்கு வந்து இரண்டு மாதங்கள் தான் முடிவடைகிறது. அமைதிக்கும் சீர்பெறுவதற்கும் இது குறுகிய காலங்களே! சீர்பெறுவதற்கான அசைவுகள் தென்படுகிறது என்றால் அதுமிகையில்லை. போராட்டம் என்றால் அது ஆயுதத்தையும் மக்களின் இழப்பையும் அர்தப்படுத்துதாகாது. சமாதானத்துடனும் போராட்டம் நடத்தமுடியும். தொடர்சியான பேச்சுவார்தை மூலமாகவும் போராடமுடியும். இந்த இடையில் யாருக்கும் சமூகவிரோதி பட்டம் சூட்டுவது குறுகிய எண்ணப்புத்தியே!

    Reply
  • thevi
    thevi

    இந்த சேவையாற்றுவது என்பதற்கும் அப்பால் இனப்பிரச்சனைக்கான உறுதியான தீர்வே உடனடித் தேவை. வெறும்சேவைகள் என்று எவ்வளவு காலம் தான் இழுத்துக் கொண்டு போவது? தீர்வுகள் கொடுக்கப்பட்டால் மக்களுக்கு எந்த பிச்சையும் தேவையில்லை. சேவை என்றல்லாது தமது உரிமை என்ற அடிப்படையில் மக்கள் தங்கள் தேவைகளை தாமாக நிறைவேற்ற வேண்டும் .யாருடைய கைகளையும் எதிர்பார்த்தல்ல. சேவை என்ற போர்வையில் சமுதாயப் புல்லுருவிகளையே இதுவரை நாம் கண்டோம். தமிழ் மக்களுக்கான தீர்வுதான் என்ன என்பது குறித்து உரத்து உரையாட யாரும் தயாரில்லை.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    //thevi on July 21, 2009 11:04 am இந்த சேவையாற்றுவது என்பதற்கும் அப்பால் இனப்பிரச்சனைக்கான உறுதியான தீர்வே உடனடித் தேவை. வெறும்சேவைகள் என்று எவ்வளவு காலம் தான் இழுத்துக் கொண்டு போவது? தீர்வுகள் கொடுக்கப்பட்டால் மக்களுக்கு எந்த பிச்சையும் தேவையில்லை. சேவை என்றல்லாது தமது உரிமை என்ற அடிப்படையில் மக்கள் தங்கள் தேவைகளை தாமாக நிறைவேற்ற வேண்டும் .யாருடைய கைகளையும் எதிர்பார்த்தல்ல. சேவை என்ற போர்வையில் சமுதாயப் புல்லுருவிகளையே இதுவரை நாம் கண்டோம். தமிழ் மக்களுக்கான தீர்வுதான் என்ன என்பது குறித்து உரத்து உரையாட யாரும் தயாரில்லை.//

    சேவை என்பதுதான் மக்கள் தீர்வுக்கு வழி காட்டுகிறது. நல்ல பல உள்ளங்கள் இணைந்து ஏதாவது நல்லது செய்ய விளைகின்றனர். தேவி சொல்லும் புல்லுருவிகளில் பெரும்பாலானோர் புலிகள்தான். புலிகள் அளவு மக்களிடம் கொள்ளையடித்த எவரையும் எங்குமே தேட முடியாது. இன்றும் புலிகளின் தரகர்களிடமும் , புலி வால்களிடமும் புதைந்துள்ள சொந்துக்களுக்காகத்தான் சாப்பிட்ட கை காயுமுன் சண்டையிட்டுக் கொண்டு பிரிந்து வசைபாடுகிறார்கள். வேறு எதுவாக இருக்க முடியும்? தமிழீழம்தான் தீர்வு என்றால் , அதற்காக இதுவரை இருந்தவர்கள் துண்டு துண்டாகி கழுத்துகளை டிரெகியுலா போல் கடித்துக் கொள்ளத் தேவையில்லை. எல்லோரும் ஒரே குரலாக பேசலாமே?

    வன்னி முகாமிலிருக்கும் மக்களுக்கு நேரடியாக சென்று உதவி செய்தவர்கள் புலிகளைச் சேர்ந்தோராக இல்லை. புலிகள் அந்த மக்களை துரோகிகள் என்று ஒதுக்கி, அவர்களது சாவை விரும்புவோராகவே இன்றும் இருக்கின்றனர். இப்படியானவர்கள் தமிழர்களுக்கான தீர்வு குறித்து பேச எந்த அருகதையும் இல்லாதவர்கள். புலிகளோ அல்லது புலி சார்பாளர்களோ இலங்கை வாழ் தமிழருக்கு எந்த விமோசனமும் கிடைக்க உதவப் போவதில்லை. அது ஏனைய சமூக அக்கறை கொண்ட வேறு பிரிவினராலேயே நடக்கும். புலத்து புலிகளும் கூடிய விரைவில் கடையை மூடிவிட்டு அடுத்தவர் கடையில் பொருள் வாங்க போகும் சுயநலக் கூட்டமாகவே மாறும். இது நனவாகும் நாள் தொலைவில் இல்லை.

    அரசிடம் பிச்சையெடுத்து, அதையும் தம்மை நம்பிய மக்களுக்கு விற்று வயிறு வளர்த்த புலிக் கூட்டம் , அவர்களையே நம்பிய மக்களுக்கு கஞ்சியை மட்டும் கொடுத்து போசாக்கு இல்லாத சமுதாயத்தை உருவாக்கி தொலைக் காட்சியில் அதையும் விளம்பரமாக்கி காசு புடுங்கிய கூட்டம் இன்று தீர்வு கிடைத்தால் பிச்சை தேவையில்லை எனப் பேசுவதற்கு எப்படித்தான் முடிகிறதோ?

    புல்லுருவிகளே அடுத்தவரை கை நீட்டு முன் வன்னியிலிருந்து மீட்கப்படும் தங்க நகைகள் யாரால் புதைக்கப்பட்டது. இவை அனைத்தும் எங்கிருந்து கிடைத்தது. இது யாருக்காக புதைக்கப்பட்டது என்பது போன்ற கருத்துகளையாவது பகிர்வீர்களா? இப்போது சர்வதேச ரீதியில் இருக்கும் புலிகளின் சொத்துகள் குறித்த உண்மைகளை புலிகளோ அல்லது புலி ஆதரவாளர்களோ பகிரங்கப்படுத்துவார்களா?
    புலிகளிடம் இருக்கும் சொத்துக்களும் , பணமும் தமிழ் மக்களுடையவை. அவை புலிகளுடையவை இல்லையே?

    Reply
  • indiran.raja
    indiran.raja

    பார்த்திபன் அவர்களே
    எனக்கு வயது 52. எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். செல்வநாயகத்திற்கு தாறம் தாறம் என சொல்லி தந்து விட்டார்கள். பிறகு புலியும் வாங்கித் தாறன் என்று எங்களுக்கும் (உங்களுக்கும்) நல்லா தந்ததுதானே. பிறகு இப்போது நீங்கள் சொல்கிறீர்கள் அவர்கள் தருவார்கள் தரப்போகின்றார்கள் என. நீங்களும் நல்லா வாங்கி……வாங்கி தருவீர்கள் அடம் பிடிக்கிறீர்கள். தருவார்கள் என்றால் நீங்கள் ஏன் வெளிநாட்டில் இருக்கிறீர்கள? உங்களுக்கு ஆபத்து இல்லை என்றால் கோதபயாவின் ஊருக்கு போக வேண்டியதுதானே!

    Reply
  • thevi
    thevi

    தமிழ மக்களுக்கான தீர்வு தனிஈழம் தான் என்று நண்பன் நினைக்கக் கூடும். மாறியுள்ள உலக சூழ்நிலையில் ஐக்கிய இலங்கைக்குள் கெளரவமாக வாழக் கூடிய தீர்வுகள் தான் மக்களின் தேவை. ஆனால் அது பற்றி அரசு அலட்டிக் கொள்ளப்போவதில்லை. அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்தால் சமாதானம் நிலைக்கும் என அரசு தப்பக் கணக்கு போடுகிறது. நாளை ஒரு இனக்கலவரம் வராது என்பது கூட நிச்சயமற்ற அரசியல் சூழ்நிலையில் தமிழ் மக்களை இனி நம்ப வைக்க முடியாது. அபிவிருத்தி பணிகளை சொல்லிக் காட்டியே தமிழருக்கு அடிக்க வைப்பார்கள்.

    Reply
  • original srilankan
    original srilankan

    டக்ளஸ் தேவானந்தாவிற்கே இலங்கை அரசு ஒன்றும் தராது என தெரிந்துள்ளது. அதனால் தான் அவர் சுதந்திரக் கட்சியில் இணைவதாக தெரிவித்துள்ளார். நீங்கள் என்னவென்றால் அரசை கண்ணை மூடிக் கொண்டு நம்புவது போல் மற்றவர்களையும் நம்பச் சொல்கின்றீர்கள். நம்பாதவர்களை புலியென்று முத்திரை குத்தி அலுத்துப் போன புலிப்புராணம் படிக்கிறீர்கள்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    indiran.raja
    வயதிற்கும் அனுபவத்திற்கும் எந்தவித சம்மந்தமுமில்லையென்பதற்கு உங்கள் கருத்தே போதுமான ஆதாரம். மேலே நான் எங்காவது தீர்வுத் திட்டத்தைப் பற்றி எழுதியிருக்கின்றேனா?? தற்போது அகதி முகாம்களில் வாழும் அந்த மக்களின் விடிவிற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி மட்டுமே எழுதியுள்ளேன். இதற்கு நான் கோத்பாயாவின் ஊரில் சென்று குடியேற வேண்டிய அவசியம் என்ன?? எனக்கு சொந்தமான ஊர் இருக்கும் போது?? சமாதான ஒப்பந்த காலத்தில் வெளிநாடுகளிலிருந்து ஊருக்குச் சென்று வந்த பல இலட்சக் கணக்கான மக்களும், கொழும்புப் பகுதிகளில் வாங்கிக் குவிக்கப்பட்ட வீடுகளும் என்ன ரணில் தீர்வைத் தந்து விடுவார் என்ற நம்பிக்கையிலா நடந்தது. புலிகளை நம்பியவர்கள் எல்லாம வன்னியில் சென்றா குடியேறினார்கள்??

    எங்கள் மக்களைக் காப்பாற்றுவதற்கு வெறுமனே அரசை விமர்சனம் செய்து கொண்டிருப்பதை விட, ஏதாவது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் நாம் மேற்கொள்ள வேண்டுமென்பதே எனது கருத்து. ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கோண்டவாறு, ஒரு நிலையான தீர்வை முன்வைக்க அரசையும் நாம் நிர்ப்பந்திக்கலாம். சரி இவையெல்லாம் தவறு என்று தங்களுக்குத் தெரிந்தால், எப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமென்ற தங்கள் பொன்னான கருத்தையும் முன்வைக்கலாமே!!

    Reply
  • நண்பன்
    நண்பன்

    // அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்தால் சமாதானம் நிலைக்கும் என அரசு தப்பக் கணக்கு போடுகிறது. – thevi //

    புலிகள் குப்புற விழுந்தது மகிந்தவால் அல்ல. அது ரணிலால் என்பது புரியுமா? சமாதான காலத்தில் ரணில் அரசு முடிந்த அளவு சுதந்திரத்தை மக்களுக்கு கொடுத்து , வன்னி அபிவிருத்திப் பணிகளுக்கு ஏகப்பட்ட பணத்தை கொடுத்தது. புலிகள் ஏப்பம் விட்டது போக மிகுதியாகக் கிடைத்த பணத்தில் மக்கள் சற்று மூச்சு விட்டார்கள். இந்த மூச்சை தொடர்ந்து சுவாசிக்க முடியுமா என்று மக்கள் நினைத்ததன் மாற்றம்? புலிகளில் இருந்தோர் திருமண பந்தத்துக்குள் நுழைந்தனர். அவர்களுக்கு வாழ்வு இனித்தது. எங்கும் சுதந்திரமாக போக முடிந்த போது , வன்னிக்கு வெளியே உள்ள நிலை புரிந்தது. நாடு நாடாக சுற்றிய புலிகள், உலகம் என்வென்று கண்டனர். அன்றைய போர் நிறுத்தம், பலரின் மனதில் ஆயுதத்துக்கு விடை கொடுக்க வைத்தது. முடிந்தோர் வெளியேறினார்கள். அதில் கருணா மட்டும் கண்ணுக்குத் தெரிபவர். ஏகப்பட்ட கருணாக்கள் கண்ணுக்கு தெரியாதவர்கள்.

    கரும்புலியாக கொழும்புக்கு வந்தவர்களை வெளிநாட்டு உறவினர்கள் மனதை மாற்றி தாம் வாழும் நாடுகளுக்கு அழைத்து வந்தனர். இதெல்லாம் அபிவிருத்திதான். இன்றைய மக்களது மாற்றத்துக்கும் நாளைய மக்கள் தெளிவு பெறவும் அபிவிருத்தி மிக முக்கியம். தமிழன் , எப்பவும் தன்னைத் தவிர அடுத்தவன் கீழ் நிலையில் இருக்க வேண்டும் என்று மட்டுமே நினைப்பவன். நீங்கள் எல்லாம் புலத்துக்கு வந்தும் திருந்தவில்லை என்றால் சுவர்க்கம் போனாலும் திருந்தப் போவதில்லை.

    நீங்கள் வரும் போது தற்போது நீங்கள் வாழும் நாடு எப்படி இருந்தது என்று யோசியுங்கள். இன்று எப்படி இருக்கிறது என்று யோசியுங்கள். அடுத்து உங்கள் நாடு நீங்கள் வரும் போதைய நிலையையும் , இன்றைய நிலையையும் யோசியுங்கள் உண்மையை உணரலாம். நீங்கள் என்னவோ உலக சூழ்நிலையில் ஐக்கிய இலங்கைக்குள் கெளரவமாக வாழக் கூடிய தீர்வுகள் தான் மக்களின் தேவை என்கிறீர்கள்.

    இன்னமும் புலிகள் என்னவோ தமிழீழம்தான் தீர்வு என்று இணையத்தில் நாடு தேடி உலகமெல்லாம் அலைகிறார்கள்?

    கீழே உள்ளதை படித்துவிட்டு ஐக்கிய இலங்கைக்குள் வாழ்வா? இல்லை புலிகள் சரியா? என்று எழுதுங்கள். தமிழரை ஒரு வழி பண்ணியே ஆவதென்று சிலர் காவடி ஆடுற முடிவு மாறாது போல. சிறுபான்மையினரை இல்லாமல் ஆக்குவதை மகிந்த செய்கிறாரோ இல்லையோ, புலிகள் நிச்சயம் அந்த கடமையை செய்வார்கள்.

    Reply
  • original srilankan
    original srilankan

    சமாதான ஒப்பந்த காலத்தில் வெளிநாடுகளிலிருந்து ஊருக்குச் சென்று வந்த பல இலட்சக் கணக்கான மக்களும், கொழும்புப் பகுதிகளில் வாங்கிக் குவிக்கப்பட்ட வீடுகளும் என்ன ரணில் தீர்வைத் தந்து விடுவார் என்ற நம்பிக்கையிலா நடந்தது.”

    நிச்சயமாய் அந்த நம்பிக்கையில் தான் அவை நடந்தன. புலி மீதான கண்மூடித்தனமான மிதப்பு அவ்வாறு செய்ய வைத்தது. தமிழ் மக்களின் அரசியல் அறிவும் உணர்மையும் வியாபாரத்தனம் இழையோடிய தன்மை வாய்ந்தது. மே 18 ம் திகதியில் இருந்து தான் தமிழ் மக்கள் திடுக்குற்று விழித்து கொஞ்சம் கொஞ்சமாக யோசிக்க தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் துரதிஸ்டம் அதே வியாபாரிகள் மாற்றம் வராமல் இருக்க தலையால் மண் கிண்டுகிறார்கள். பார்ப்போம்! மக்கள் முந்துகிறார்களா வியாபாரிகள் முந்துகிறார்களா?

    Reply
  • indiran.raja
    indiran.raja

    தற்போது யாராவது கொழும்பில் வீடு வாங்குவதாக சொல்ல முடியுமா? புலி இருக்கும் போது இருந்த நம்பிக்கை இப்போது அங்கு இருக்கிறதா?

    சிங்கள இனவாத அரசுகள் காலம் காலமாக ஏமாற்றி வந்தததைதான் நான் குறிப்பிட்டேன். என்னிடம் தீர்வு என்ன என கேடகிறீர்கள். தீர்வு இல்லையென்றால் நடந்தவை பற்றி சொல்லக் கூடாது என்றா சொல்கிறீர்கள் பார்த்திபன்!

    Reply
  • indiran.raja
    indiran.raja

    நீங்கள் வரும் போது தற்போது நீங்கள் வாழும் நாடு எப்படி இருந்தது என்று யோசியுங்கள். இன்று எப்படி இருக்கிறது என்று யோசியுங்கள். அடுத்து உங்கள் நாடு நீங்கள் வரும் போதைய நிலையையும் இன்றைய நிலையையும் யோசியுங்கள் உண்மையை உணரலாம்.”

    நாங்கள் வாழும் நாடுகளுடன் இலங்கையை ஒப்பிட முடியாதுதான். ஆனால் நாங்கள் வரும் போது இநத நாடுகள் இருந்த நிலையில் இப்போது பெரிய மாற்றங்கள் எதையும் குறிப்பிட முடியவில்லை. மேலும் துன்ப துயரங்கள அதிகர்தது வாழ்வு சுமையானதாகவே உள்ளது. எனினும் நாடுகளின் முன்னேற்றங்களுக்கும் பின்னேற்றங்களுக்கும் அந்நதந்த நாட்டு அரசுகளே பொறுப்புடையவையாகும் தமது நாடு முன்னேற வேண்டும் என அரசியல்வாதி ஓரளவு தன்னும் நேர்மையுடன் அர்ப்பணிப்புடன் செயற்பட வேணடும். இலங்கை அரசுகள் என்ன செய்தன?

    சமாதான காலத்தில் ரணில் அரசு முடிந்த அளவு சுதந்திரத்தை மக்களுக்கு கொடுத்தது என்கிறீர்கள். அக்காலப்பகுதியில் வடகிழக்கில் ஒவ்வொரு நாளும் கொல்லப்பட்ட மாற்று கருத்துடையோர், பொது மக்கள் என்போருக்கு என்ன சொல்வீர்கள் நண்பனே?

    புலிகளின் மிலேச்சத்தனங்கள் குறித்து என்னிடம் வேறு கருத்து இல்லை. இனவாத அரசு எத்தனை கொடுமைகளை எமக்கு செய்தது? யாழ் பொது நுhலகம் ஒரு பொது சொத்து .அதை அழித்தது சமூக விரோதம் இல்லையா? புலிகள் பெரும் பலமடைய முனனமே, தென்னிலங்கையில் அதன் அட்டகாசம் தொடங்கமுன்னமே எங்கள் மேல் எண்ணெய் நிரப்பபட்ட எரியும் பீப்பாய்கள் வானிலிருந்து ஏன் விழுந்தன? இந்தக கொடுமைகளுக்கெல்லாம் இலங்கை அரசுகள் ஏதாவது ஆறுதல் சொல்லியிருக்கின்றனவா?

    Reply
  • BC
    BC

    //நண்பன்-புலிகளை நம்பியவர்கள் எல்லாம வன்னியில் சென்றா குடியேறினார்கள்??//
    நல்லா தான் குடியேறுவார்கள்! தமிழீழதாயகம் அவர்களுக்கல்ல. தீவர புலி ஆதரவாளர்கள் தான் வெளிநாடுகளில் சொந்த வீடுகள் வாங்கியும் பாட்டி அப்புவையும் இங்கு அழைத்து வைத்திருக்கிறார்கள்.

    //Indiran.raja – தற்போது யாராவது கொழும்பில் வீடு வாங்குவதாக சொல்ல முடியுமா? புலி இருக்கும் போது இருந்த நம்பிக்கை இப்போது அங்கு இருக்கிறதா?//

    புலிகள் இருந்த போது புலிகளில் நம்பிக்கை இல்லாத படியால் தான் அப்போது கொழும்பில் வீடு வாங்கினார்கள்.

    Reply
  • மகுடி
    மகுடி

    // indiran.raja on July 21, 2009 6:59 pm தற்போது யாராவது கொழும்பில் வீடு வாங்குவதாக சொல்ல முடியுமா? புலி இருக்கும் போது இருந்த நம்பிக்கை இப்போது அங்கு இருக்கிறதா?//

    வாங்கிறவன் வாங்குறான். புலிகளுக்கு பயந்து கொழும்பு போகாதவன் எல்லாம் இப்ப கொழும்பில இறங்கிறாங்கள். பிஸ்னஸ் வேற தொடங்கிறாங்க.

    Reply
  • msri
    msri

    ஏன் இந்தப் பெரும் விவாதங்கள்!
    யேர்மனியல் நடைபெற்ற அரச ஆதரவாளர்களின் கூட்டம்> ஏதோ அறிக்கைகள் தீர்மானங்களை விட்டு> அதன் அடைப்படையில் நண்பர்கள் விவாதிக்கின்றார்களா? அல்லது கேள்வி ஞானத்தில் இருந்து பட்டிமன்ற விவாதங்கள் செய்கின்றார்களா?

    Reply
  • indiran.raja
    indiran.raja

    புலிகளுக்கு பயந்து கொழும்பு போகாதவன் எல்லாம் இப்ப கொழும்பில இறங்கிறாங்கள். பிஸ்னஸ் வேற தொடங்கிறாங்க”

    இந்த மாநாடுகளும் அதற்காகத்தான் என்றுதான் நாங்கள் சொல்லுகிறோம். எல்லாம் பிஸினஸ் மயம்.

    Reply
  • vadakkan aatham
    vadakkan aatham

    இங்கு அடிக்கடி விமர்சனம் எழுதும் நபர் ஒருவர் (பெயர் வேண்டாமே) நான் எல்லோரையும் குறை கூறி எழுதுவதாக தெரிவித்திருந்ததார். முதலில் தர்க்கப்படி பார்த்தால் நான் குறை கூறுவதாக அவர் குறை கூறுகிறார். இதுவே தனது கருத்துடன் தானே முரண்படுகிறார்.

    அடுத்த விடயம் நான் கேள்வி எழுப்பிய நபர்கள் தமிழ் மக்களுக்காக தங்களை அர்ப்பணித்து வேலை செய்ய நினைப்பவர்கள் யார் என இதுவரை தங்களை வெளிப்படுத்தவில்லை. இந்த கட்டுரை வந்த நேரத்தில் நீங்களும் பின்னூட்டம் விடவில்லை. ஏன் நீங்களும் ஸ்ருடகாட்டில் இருந்தீர்களா? மேலும் வட கிழக்கு பகுதிகள் மேலும் மேலும் ராணுவமயப்படுத்தப் படுவதையே நான் குறை கூறுகின்றேன். சிவில் சேவை சம்மந்தப்பட்டவர்களை பாவிக்குமாறு வழிமுறைகளை கூறினேன்.

    அதிகார பரவலாக்கம் சம்பந்தமாக அவர்களின் பேச்சுக்கள் நடத்தைகள் எங்களுக்கு நம்பிக்கையை தரவில்லை என்கிறோம். போருக்கு திட்டம் தீட்டியவர்கள் போருக்கான சிறுபான்மை மக்களின் பிரச்சனைக்கு திட்டம் தீட்டவில்லை என்றால் …… அல்லது அவர்கள் எதிர்பாராமல் புலிகள் வேகமாக அழிந்து விட்டார்களா? பரவாயில்லை. மேலும் இரண்டு வருடம் மகிந்தவுக்கு கொடுப்போம். ஏனெனில் மேலும் ஐந்து வருடங்களில் அவரது ஆட்சி முடிந்து விடும். பிறகு வருபவரும் இரண்டு ஐந்து வருடங்களை கேட்பார். பாவம் சிறுபான்மையின மக்கள்!…….

    இந்த விடயத்தை 52 வயதுடைய நபர் எழுதிய போது நீங்கள் வேறு பக்கத்திற்கு இழுத்து உங்களுக்கு அனுபவம் போதாது என்கிறீர்கள்.

    என்னால் உங்களுக்க எழுதி விளங்கப்படுத்த முடியவில்லை. முயற்சிக்கிறேன்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    //Indiran.raja – தற்போது யாராவது கொழும்பில் வீடு வாங்குவதாக சொல்ல முடியுமா? புலி இருக்கும் போது இருந்த நம்பிக்கை இப்போது அங்கு இருக்கிறதா?//

    // புலிகள் இருந்த போது புலிகளில் நம்பிக்கை இல்லாத படியால் தான் அப்போது கொழும்பில் வீடு வாங்கினார்கள்.- BC //

    BC சொல்வது 100 சதவீதம் உண்மை. புலிகளை நம்பியிருந்தால் வன்னியில் அல்லவா வீடு வாங்கியிருக்க வேண்டும்?

    Reply
  • indiran.raja
    indiran.raja

    பொதுவாக வியாபாரிகள் மேலும் வசதியான வாழ்வை தேடுபவர்கள் வளர்ச்சியடைந்த நகரங்களையே தேர்வு செய்வது இயல்பு. தமிழர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. புலி இருக்கும் போது கொழும்பில் வீடு வாங்கியது தம்மை அசைக்க முடியாது தங்களை ஒன்றும் செய்ய ஏலாது என்ற எதிர்பார்ப்பில்தான். இன்றைக்கு எல்லாம் நிச்சயமற்றதாக தலைகீழாக மாறி விட்டது. தமிழ் ஈழம் வரும் போது கொழும்பை உலுப்பலாம் (முதலீடுகள் மூலம்) என்றிருந்தவர்கள் என்ன நடக்கப’ போகின்றதோ என பீதியில் உறைந்து போயுள்ளனர். புலி இருக்கும் வரை நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு கதை சொன்னவர்களை நீங்கள் காணவில்லை.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    vadakkan aatham,
    நீங்கள் எனது பெயரைக் குறிப்பிட்டே எழுதியிருக்கலாம். ஒருவரின் கருத்திற்குப் பதிலளிக்கையில் அவரின் பெயரைக் குறிப்பிடுவதில் தவறில்லை. நான் விமர்சனம் செய்ய வேண்டாமெனறு குறிப்பிடவில்லையே? அதனை செயற்பாடுகளை அவதானித்த பின், செய்தால் நல்லதென்பதையே குறிப்பிட்டுள்ளேன். ஒரு விடயத்தை பதிவு செய்தவுடன், பார்த்து கருத்து வைக்க வேண்டுமென்று தேசம்நெற்றில் ஏதாவது விதிமுறை உண்டா? எப்போது பார்க்கின்றோமோ அப்போது அதற்கு கருத்தெழுத விரும்பினால் எழுதுகின்றோம். அதற்காக உடன் கருத்தெழுதவில்லை என்பதற்காக நானும் ஸ்ருடகாட்டில் இருநதேனா என்று எதற்காக கேள்வி கேட்கின்றீர்கள். உங்கள் கற்பனைகளை உங்களுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். நீங்களோ இந்திரன் ராஜாவோ அடுத்தவர்களைக் குறை கூறும் அளவிற்கு மாற்றீடாக எதையும் சொல்லவில்லை. நான் உங்களிடம் தீர்வை என்னவென்று கேட்கவில்லை. குறைந்த பட்சம் வன்னியில் அகதிகளாக மாட்டுப்பட்டிருக்கும் அந்த மக்களை எப்படி நடைமுறைச் சாத்தியமாக மீட்கலாமென்பதையே நான் கேட்கிறேன். அதற்கு எந்த நடைமுறையைக் கையாளலாமென்று தாங்களோ அல்லது இந்திரன் ராஜாவோ தெரிவிக்கலாமே.

    புலிகளின் பலத்தை வைத்தே கொழும்பில் நம்மவர்கள் வீடுகளை வாங்கிக் குவித்தார்கள் என்று இந்திரன் ராஜா அதி உச்ச நகைச்சுவையாக கதை விடுகின்றார். இவ்விடயமாக கொழும்பில் வீடு வாங்கிய பலர் முன்பு குறிப்பிட்ட விடயம், புலிகளின் பகுதிகளில் சொத்துகளை வாங்கினால் வாங்கும் பெறுமதியின் குறிப்பிட்ட சதவீதத்தை புலிகளுக்கு வரி என்று பெயரில் அளக்க வேண்டும். அதனை பின்பு விற்க வேண்டி வந்தாலும் திரும்பவும் அளக்க வேண்டும். ஆனால் இந்தப் பிரைச்சினைகள் கொழும்பில் வீடு வாங்கும் போது இல்லையென்பதே. உண்மைகள் இப்படியிருக்க எப்படி இப்படி எல்லாம் உங்களைப் போன்றவர்களால் கதை அளக்க முடிகின்றது.

    Reply
  • thalaphathy
    thalaphathy

    Dear Readers,

    There are lot of comments about 21 persons who went Colombo and negotiated with Sri Lankan government on the behalf of Tamil people in Sri Lanka.

    Please see the below link, if you want to find out those persons.

    http://www.mediafire.com/?sharekey=54ba2be870db7a661686155677bb268524e07eb037dd3658

    If you want to share your ideas to achieve everlasting peace and brotherhood in Sri Lanka, then you can contact “Federation of Sri Lankan Diaspora”.

    Thank you.

    Reply
  • Colvin
    Colvin

    Mr. Thalaphathy
    Thanks for the link to see the images. They are very smart, elegant storng men. oh yes a few ladies too.

    “Federation of Sri Lankan Diaspora” is a Sri Lankan government organaisation? What do they want to do? Collecting money?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பொதுவாகவே தமிழனின் பிணங்களைக் காட்டியே பணம் பார்த்தவர்களுக்கு, எவரைப் பார்த்தாலும் பணம் சேர்ப்புத்தான் எனத் தோன்றுவதில் வியப்பில்லைத் தான்…….

    Reply
  • Thinakaran Daily
    Thinakaran Daily

    இடம்பெயர்ந்தோரை சொந்த இடங்களில் குடியமர்த்துவதில் ஜனாதிபதி துரித செயற்பாடு
    இலங்கை வந்துள்ள புலம்பெயர் தமிழர் குழு திருப்தி தெரிவிப்பு

    (விசு கருணாநிதி, எஸ். சிவசண்முகநாதன்)

    இடம்பெயர்ந்து நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்து வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ துரித நடவடிக்கைகளை மேற்கொள்கிறாரென்று இலங்கை வந்துள்ள புலம்பெயர் தமிழர்கள் குழு நேற்று (28) திருப்தி தெரிவித்தது.

    சகலவற்றையும் இழந்து வந்துள்ள மக்களை எடுத்த எடுப்பில் வெறுமையாக மீளக் குடியமர்த்துவதைவிட அவர்களின் வாழ்வாதார ஸ்திரத்தன்மையைக் கருத்திற்கொண்டு நீண்டகால செயற்திட்டங்களின் அடிப்படையில் குடியமர்த்தப்பட வேண்டுமென அவர்கள் தெரிவித்தனர்.

    இலங்கையில் இறுதிக் கட்டப் போரின் பின்ன ரான நிலைமைகளை நேரில் அவதானிக்கவென்றும், இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதில் புலம்பெயர்ந்த தமிழர்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வதைப் பற்றி ஆராயவும், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டொக்டர் நொயல் நடேசன் தலைமையிலான குழுவினர் இலங்கை வந்துள்ளனர்.

    லண்டனைச் சேர்ந்த எழுத்தாளரும், மனித உரிமை ஆர்வலரும், சமூக சேவையாளருமான திருமதி ராஜே ஸ்வரி பாலசுப்பிரமணியம், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சமூக சேவையாளர் இராஜரட்ணம் சிவநாதன், கனடா விலிருந்து ஊடகவியலாளரும் அரசியல் சமூக ஆய்வா ளருமான எஸ். மனோரஞ்சன், சவூதியிலிருந்து டொக்டர் இராஜசிங்கம் நரேந்திரன் ஆகியோர் டொக்டர் நொயல் நடேசனுடன் கொழும்பு வந்துள்ளனர்.

    அரசியல் தலைவர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், இடம்பெயர்ந்த மக்கள், உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசிய இந்தக் குழுவினர், தமது அனுபவங்களையும் கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

    இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆனந்த சமரக்கோன் கலையகத்தில் நேற்று முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட அவர்கள், இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு ஒரு அமைப்பாகச் செயற்படு வது பற்றிக் கவனம் செலுத்தியுள்ளனர்.

    அரசாங்கம் மேற்கொள்ளும் மீள்கட்டுமானப் பணிக ளுக்குப் புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதா கத் தெரிவித்தனர்.

    இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்கவின் வழிகாட்டலின் கீழ் ஆலோசகர் வீ. ஏ. திருஞானசுந்தரத்தின் நெறிப்படுத்தலில் தென்றல், தமிழ்ச் சேவைப் பணிப்பாளர் கே. ஜெயகிருஷ்ணா, கட்டுப்பாட்டாளர் இராஜபுத்திரன் யோகராஜன் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந் தனர். இதில், அறிவிப்பாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள் எனப் பெருந்திரளா னோர் கலந்துகொண்டனர்.

    இடம்பெயர்ந்த மக்களின் சொந்த வாழ்விடங்களில் அனைத்து உட்கட்டமைப்பு வளங்களும் சிதைக்கப்ப ட்டுள்ளதால், அவற்றை மீளக் கட்டியெழுப்பியதன் பின்னர் மீள்குடியேற்றத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பது சரியானதென்றும் புலம்பெயர் தமிழர்கள் தெரிவித்தனர். (ரு – ஜ

    Reply