ஹிலாரி கிளிண்டன் இன்று இந்தியா செல்கிறார்

hillary_clinton.jpgஅமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஐந்து நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று வெள்ளிக்கிழமை இந்தியா செல்கிறார்.

இலங்கையில் இந்தியாவின் பங்களிப்பு மற்றும் கடல்சார்ந்த இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான புதுடில்லியின் தீர்மானங்கள் தொடர்பாக அமெரிக்கா ஆர்வம் காட்டுவதாக அவர் கூறியுள்ளார். தமது விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோருடன் மிகவும் விரிவான முறையில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுக்கொள்கை,  கேந்திர ரீதியா சவால்கள்,  சுகாதாரம்,  கல்வி,  விவசாயம்,  பொருளாதாரம் மற்றும் அணுவாயுதப்பரிகரணம் உட்பட மிகவும் கடினமான விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 Comments

 • Kusumbo
  Kusumbo

  சரி எந்த இயக்கத்தை பிடித்து ரெயினிங் கொடுத்து மீண்டும் தமிழரை அழிக்கிறது என்று திட்டம் போட வருகிறாவாக்கும். அம்மா……… தயவுசெய்து எங்கள் உடல்களில் இரத்தமோட விடுங்கம்மா

  Reply
 • muni
  muni

  ராஜபக்ஸ வைத்த ஆப்பின் வலி அமெரிக்காவையே இந்தியாவுக்கு ஓடவைத்துள்ளது. வல்லவனுக்கும் ஒரு வல்லவன்.

  Reply
 • சாந்தன்
  சாந்தன்

  குசும்பு,
  முதலாளித்துவ, குட்டி பூர்சுவா, ஜனநாயகவிரோத, மக்கள் விரோத புலிகள் தான் அழிந்து விட்டனரே? அப்போ இனி எந்த இயக்கத்தை முதலாளித்துவ அமெரிக்க அரசின் ஹிலரி பிடிக்க முடியும்?. ஒருவேளை சோசலிச, ஜனநாயக, மக்கள் மய இயக்கங்கள் என தம்மை இணையத்தில் மட்டுமே வெளிப்படுத்திய இயக்கங்கள் அவ்வாறில்லை அவர்களும் சந்தர்ப்பம் கிடைத்தால் காலில் விழுவார்கள் என சொல்ல வருகிறீர்களா?

  Reply
 • mutthan
  mutthan

  சாந்தன்
  தமிழ் இயக்கங்கள் எல்லாம் குட்டி முதலாளித்துவ இயக்கங்கள். இவர்களும். நீர் குறிப்பிடும் இணைதளங்களும் எவ்வளவு தான் சோசலிசம் பேசினாலும் நடைமுறையில் சோசிலிச விரோதிகளாகவே இருக்கின்றார்கள், இருந்திருகின்றர்கள், இருப்பார்கள்.

  அமெரிகாவின் கைபொம்மையாக இருப்பதற்கு இவர்கள் அனைவரும் தயார். ஆனால் இவர்களில் புலிகள் தவிர்ந்தோர் இலங்கை அரசாங்கத்தின் பகிரங்கமான அல்லது மறைமுகமான முகவர்களாக நீண்ட காலத்திற்கு முன்னரே மாறிவிட்டனர். புலிக்கும் அரசாங்கத்திற்கும் இருந்த உறவு சற்று வித்தியாசமானது. பிரேமதாசாவிடம் ஆய்தம் வாங்குவது பின்னர் அவரை கொல்வது. மகிந்தவிடம் காசு வாங்கி ரணிலை தோற்கடிப்பது பின்னர் சண்டையை தொடக்குவது. தமிழரை சுரண்டும் தனி உரிமைக்காக புலிகள் முழுமையான முகர்வர்களாக முன்வரவில்லை.

  அதே நேரத்தில் ஏகாதிபத்தியம் தொடர்பாக புலிகள் தங்கள் வரலாறு முழுக்க நிபந்தனை இல்லாத…… அரசியலை செய்தனர். சர்வதேச சமுகம் என்ற புலிகளின் கோசம் மேற்கு நாட்டு மக்களை நோக்கி ஒருபோதும் இருக்கவில்லை. முதலாளித்துவ அரசுகளை நோக்கி இருந்தது.

  அமெரிக்க தேர்தல் முடிவுகளின் பின்னர் பல கட்டுரைகளில் தமிழ்நெட் ஒபாமா, ஹில்லரி புலிகள் மீது கருணை காட்டும்படி மன்றாடியது.

  பத்மநாதன் பகிரங்கமாக சொல்லுகின்றார் புலிகளின் இறுதி நேரத்தில் தான் பலநாட்டு பிரதிநிதிகளிடம் உயிர் பிட்சை கேட்டதாக. புலிகளின் இந்த முடிவும் அவர்களது தலைவர் கொல்லப்பட்டு கோவணத்துடன் காட்சிக்கு வைகப்பட்டதின் முதன்மையான அரசியல் காரணம் இந்த….. அரசியலாகும்.

  உலக வரலாறில் விடுதலை இயக்கம் என்று சொல்லப்பட அமைப்பு ஒன்றும் புலிகள் போன்று ஏகாதிபத்தியதிட்கு அடிபணியவில்லை.
  இன்றைய பத்மநாதனின். உருத்திரகுமரனின் அரசியல் இதனது தொடர்சியாகும் .

  Reply
 • rohan
  rohan

  //ராஜபக்ஸ வைத்த ஆப்பின் வலி அமெரிக்காவையே இந்தியாவுக்கு ஓடவைத்துள்ளது. வல்லவனுக்கும் ஒரு வல்லவன்.//

  அட, அப்படியா?

  Reply
 • Appu hammy
  Appu hammy

  We applaud the sri lankan ambassador to US, the manner in which he answered the questions. We need a similar figure in Britain controversial questions from the media, politicians and international community.

  Reply
 • Kusumbo
  Kusumbo

  சாந்தன்! முத்தனின் பதில் உங்கள் கேள்விக்கு விடையாக இருக்கிறது. மேலும் இந்தியாவின் அதிகாரமும் பிரசன்னமும் இலங்கையில் இருக்க வேண்டுமானால் அங்கு அமைதி இருக்கக் கூடாது. இலங்கை அமைதியானால் எந்த ஒரு வல்லரசும் உறுதியாக இலங்கையில் குந்திவிடும். ராஜபக்சவின் அரசியல் சதுரங்கத்தைப் பார்த்தீர்களா? இந்தியா உதவுகிறது என்று கூறிக் கூறி நன்றி சொல்லிச் சொல்லி சீனனை வைத்து அடித்துப் புலிகளை முடித்தார். இந்தியா என்றும் உறுதியற்ற போக்கைக் கொண்டவர்கள் என்று கண்டதும் சீனனுடன் கைகோத்தார். தெற்கிந்தியாவில் தமிழர்கள் இருக்கும் வரை இந்தியாவை எப்படி நம்புவது. 5வருடத்துக்கு ஒருதடவை அரசு மாறும் சீனாவில் அந்தப்பிரச்சனையும் இல்லை. ராஜபக்சவை நம்பியே புலிகள் போரை நடத்துகிறார்கள் என்பதை நன்கு உணர்ந்திருந்தார். கருணா போனதின் பின்புதான் புரிந்தது பிரபாகரனும் புலியும் கட்டியது புஸ்வாணங்கள் என்று

  Reply
 • மாயா
  மாயா

  புலிகள் அடிப்படையிலேயே அமெரிக்க ஆதரவுகளாகவே இருந்து வந்தனர். இதற்கு அன்டன் பாலசிங்கம் முக்கிய காரணம். இவர் சீஐஏ என்றுணர்ந்த இந்தியா இவரை ( 1985களில் என்று நினைக்கிறேன்) நாடு கடத்தியது. அந்நேரம் பாலசிங்கத்தோடு சத்தியேன்திரா மற்றும் சந்திரகாசன் ஆகியோரையும் இந்தியா, நாடு கடத்தியது. அதன் பின்னர் பாலசிங்கத்தை இந்தியாவுக்குள் எட்டிப் பார்க்கக் கூட இந்தியா விடவில்லை. இறுதியாக பாலாசிங்கம் மாலைதீவு வழியாகத்தான் வன்னிக்கு செல்ல முடிந்தது.

  அடுத்து அமெரிக்கா புலிகளை வைத்து ராஜீவ் கொலைக்காக பயன்படுத்தியதான வெளியே தெரியாத தகவல்கள் உள்ளே பேசப்படுகின்றன. இதற்கு கேபீயின் தொடர்பும் இருந்தது. இதனால்தான் தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட கேபீயால் உடனடியாக தப்ப முடிந்தது. தாய்லாந்தில் வைத்து கேபீ கைதான செய்தி அறிந்ததும் இந்தியாவும் இலங்கையும் அவரை நாடு கடத்திக் கொண்டு வரச் சென்றவர்களுக்கு அது நடக்காமல் போனது. கேபீ என சொன்னவர் வேறு ஆள் என தாய்லாந்து அரசு சொன்னதுடன் வேறு ஆளையும் வந்த அதிகாரிகளுக்கு அவர்கள் காட்டினர். பின்னர்தான் கேபீயை அமெரிக்க உளவுத் துறை தப்ப வைத்ததாக தெரிய வந்தது.

  தவிர ராஜீவ் கொலைக்கு பாலசிங்கத்தின் உடந்தையும் உண்டு. புலிகளது சர்வேதச ஊடகவியலாளர் கூட்டத்தில் துன்பியல் என்றது பாலசிங்கம்தான். 3வது உலக நாடுகளில் ராஜீவின் போக்கு அமெரிக்காவை சற்று அதிர வைக்கத் தொடங்கியமையால், ராஜீவை விட்டு வைக்க அமெரிக்கா விரும்பவில்லை.

  அடுத்ததாக புலிகளது போராட்டத்தை அமெரிக்கா விட்டு வைத்ததற்கு வேறு சில அரசியல் பார்வையுள்ள காரணங்கள் உண்டு. அவை:-

  1. புலிகள் சோஷலிச சித்தாந்தங்கள் கொண்டதல்ல.
  2. புலிகள் முஸ்லீம்களை வெறுத்தவர்கள். முஸ்லீம்களும் அல்ல.
  3. கிறிஸ்தவர்களுக்கு எதிரானவர்களும் அல்ல
  4. புலிகள் இந்தியாவுக்கு எதிரானவர்கள்.

  மேலே சொன்ன 3 மிக முக்கிய காரணங்களும் , அமெரிக்க சார்பை பெறக் கூடியவையாகும். அத்தோடு அமெரிக்கா உலக அரங்குக்கு முன் புலிகளை தடை செய்தாலும் , புலிகள் அழிவதை விரும்பவில்லை. மூக்குள்ள வரை சளி என்பது போல அங்கே பிரச்சனை இருக்கும் வரை தமக்கு தேவையானதை புலிகள் ஊடாக செய்யலாம் எனும் கருத்து அமெரிக்காவுக்கு இருந்தது.

  நோர்வே அமெரிக்காவின் குரல். அது புலிகளோடு தொடர்ந்து நெருக்கமாக இருந்தது. சமாதான பேச்சு வார்த்தைகள் நோர்வேயூடாக நடந்தாலும் இந்தியா கொதிக்காமல் அமெரிக்கா பார்த்துக் கொண்டது. ஆனால் பாலசிங்கத்தின் சாவுக்குப் பின் புலிகளுக்கும் நோர்வேக்கும் இடையே இருந்த நெருக்கம், சற்று தூரமானது. நோர்வே சொல்வதை புலிகள் பின்னர் கேட்கவில்லை. அதனால் புலிகளுக்கு ஒரு பாடத்தை கற்றுக் கொடுத்து , தன் வழிக்குள் கொண்டு வர அமெரிக்காவும் நோர்வேயும் முயன்றது. அது மகிந்தவால் எல்லை மீறும் என அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. யாருமே எதிர்பார்க்கவில்லை?

  புலிகளின் முக்கியமானவர்களை காப்பாற்ற அமெரிக்க கப்பலொன்று காத்திருந்ததோடு , உலக அழுத்தங்களும் , ஐநாவூடாக பேச்சு வார்த்தையும் தொடர்ந்தமை அமெரிக்காவின் மறைமுக ஆதரவுடன் இல்லை என்று சொல்வதற்கு இல்லை. ஐநாவும், செஞ்சிலுவைச் சங்கமும் விட்ட அறிக்கைகளும் அதை உறுதிப்படுத்தின. இவர்கள் அனைவரும் தம்மைக் காப்பார்கள் என்று புலிகளும் கடைசி நேரம் வரை நம்பினர். உலகத்தின் முன் கொண்டு வரப்பட்ட குரல்கள் காரணமாக உலகம் செவி மடுத்து இலங்கை பிரச்சனையில் தலையிட வைக்கின்றன என அமெரிக்க சார்பு நாடுகள் காட்டிக் கொண்டன. சிறீலங்கா அனைத்து உலக அரசுகளது பேச்சுக்கும் செவி மடுத்துக் கொண்டே சில முடிவுகளை தாமாக எடுத்தது. ஆனால் உலகத்தை மீறி சிறீலங்கா எதுவும் செய்யாது என உலகம் நம்பியது. மகிந்த கூட உலகத்தின் கருத்தை ஏற்று புலித்தலைமைகள் தப்பிச் செல்லட்டும் என நினைத்தார். அதை அவர் இராணுவ மட்டத்தில் நடந்த கூட்டத்தில் கருத்தாக வைத்தார். ஆனால் கோட்டபயவும் சரத் பொண்சேகாவின் இராணுவத் தலைமையும் அதை கணக்கிலெடுக்காமல் தாம் நினைத்ததை செய்து முடித்து விட்டது. எனவே மகிந்த அந்த வெற்றியை பாராளுமன்றத்தின் பதிவில் கூட இடம்பெறாதவாறு, பேசாமல் இராணுவத் தளபதி சரத் பொண்சேகா மூலம் இராணுவ வெற்றியாக அறிவிக்கச் சொன்னார்.

  இறுதி நாட்களில், பாரிய இராணுவ உயிர் சேதத்தை தவிர்க்க, புலிகள் கடைசியாக இருந்த இடத்தை விமான தாக்குதல் மூலம் அழித்து விட வான்படை அனுமதி கோரிய போது , சரத் பொண்சேகா ” எத்தனை படையினர் செத்தாலும் பரவாயில்லை. எனக்கு பிரபாகரனது உடலை பார்க்க வேண்டும்” என கூறிய கடும் உத்தரவு காரணமாக பல படையினர் அநியாயமாக உயிரிழக்கப் போகிறார்கள் எனும் தகவல் இராணுவ அதிகாரி ஒருவரால் நண்பர்களுக்குள் பகிரப்பட்டது.

  ஆனால் புலிகளது தலைமை எவரும் எதிர்பாராத விதத்தில் சரணடைந்த போது கடைசி தினங்களில் யுத்தம் நடைபெறாத காரணத்தால் இரு தரப்பிலும் பல உயிர்கள் தப்பின. இரு தரப்புக்கும் பெரும் அழிவொன்று நடக்கும் என ஊகித்து இரத்மலானை விமான நிலையத்தில் காயமடைந்த படையினரை கொண்டு செல்ல நின்ற அம்பியுலன்ஸ்களுக்கு அதனால் வேலையில்லாமல் போனது. இதற்கு புலிகளது சரணடைதலே காரணமாயின. அத்தோடு அங்கிருந்த மக்களும் எதுவித பெரும் துன்புறுத்தலும் இல்லாமல் வெளியேறினர். பாலகுமார் ,திலகர் , தமிழினி…………போன்றோர் இறுதி நாட்களிலேயே அங்கிருந்து வெளியேறி உள்ளனர். இவர்கள் எதுவித காயங்களுக்கும் உட்படாமை கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

  இப்போது அமெரிக்காவுக்கு இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஒரு பலமான நிலை தேவை எனில், இப்போதைய இந்திய நட்பை பலப்படுத்தியே ஆக வேண்டும். பெரும்பாலான இந்தியர்கள், அமெரிக்க மோக காச்சல் கொண்டவர்கள். எனவே இந்தியா ஊடாக அமெரிக்கா தனது நட்பை பலத்தை கொண்டு பிராந்தியத்துக்குள் தமது பலத்தை பெறும் நடவடிக்கைளில் இறங்கும் வாய்ப்புகள் அதிகம். அது அடுத்த கட்டமாக இலங்கைக்கான உதவி இழுத்தடிப்புகளை நிறுத்தி இலங்கைக்குள் உள்ள பலத்தை பெறவும் ஏதாவது செய்யும்.

  Reply
 • chandran.raja
  chandran.raja

  மாயா உங்கள் கணிப்பு முழுக்க முழுக்க சரியானதே.எனது பாராட்டுக்கள்.

  Reply