இந்தோ னேஷியாவின் தலைநகரிலுள்ள இரு ஆடம்பர ஹோட்டல்களில் இன்று காலை இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 9 பேர் பலியானதுடன் மேலும் பலர் காயமடைந்திருப்பதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேஷியத் தலைநகர் ஜகர்த்தாவிலுள்ள ரிட்ஸ்-கர்ல்டன் மற்றும் மெர்ரியட் ஆகிய ஆடம்பர ஹோட்டல்களிலேயே இக்குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த குண்டுத் தாக்குதல்களில் 4 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களின் சடலங்கள் அருகிலுள்ள வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக தென் ஜகர்த்தா பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த இரு குண்டுத் தாக்குதல் சம்பவங்களும் ஐந்து நிமிட இடைவெளியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். மெர்ரியட் ஹோட்டலின் மீது கடந்த 2003ஆம் ஆண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதோடு இதில் சுமார் 12 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Kusumbo
இப்ப வெளிநாட்டவர்களுக்குக் குண்டு வைப்பது என்னத்தைக் காட்டுகிறது? முஸ்லீம் நாடுகளுக்கு உல்லாசப்பயணிகளை வரவேண்டாம் என்கிறீர்களா? நல்லது உங்கள் நாட்டு வருமானம் தான் தடைப்படும். முஸ்லீம் நாடுகளுக்குப் போவதைத் தடைசெய்யுங்கள். கண்டறியாத சாதியும் சமயமும்