தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வினை இழுத்தடிக்க ஜனாதிபதிக்கு உரிமையில்லை -மனோ கணேசன்

mono.jpgதேர்தல் களைக் குறிக்கோளாகக் கொண்டு காலத்தை வீணடிப்பதற்கும் தமிழர் பிரச்சினைக்கான தீர்வை இழுத்தடிப்பதற்கும் ஜனாதிபதிக்கு உரிமையில்லை. இதய சுத்தியுடன் செயற்பட்டால் கட்சி பேதமற்ற வகையில் இணைந்து செயற்படுவதற்கு தயாராகவே இருக்கின்றோம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் மக்கள் கண்காணிப்புக்குழுத் தலைவருமான மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

அதிகாரப்பகிர்வு தொடர்பில் அரசாங்கத்துக்குள் மாத்திரமல்ல ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் குழப்பநிலை நிலவிக் கொண்டிருக்கின்றது. எனவே, சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை உடனடியாக நடத்துவதன் மூலம் தேசிய பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கான மக்கள் ஆணையைப் பெறமுடியும் என்றும் அவர் சொன்னார். சமாதானத்தை வென்றெடுக்கும் அரசியல் தீர்வைப் பெற்றுத்தாரும் என்ற தொணிப்பொருளில் ராஜகிரியவில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவு அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே மனோ கணேசன் எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

Show More
Leave a Reply to romeo Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • romeo
    romeo

    எல்லோரும் ஏறி விழுந்த நொண்டி குதிரையில் இப்போது சக்கடத்தார் மனோகணேசனும் ஏறியிருக்கிறார். பொறுத்திருந்துதான் பார்ப்போமே.

    Reply
  • msri
    msri

    இழுத்தடிக்க உரிமையில்லை> ஐனநாயக மீறல்>பாசிசம்>சர்வாதிகாரம் பத்திரிகைச் சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் போன்றன பற்றி கதைக்கவோ கேள்வி கேட்கவோ கூடாது! அவர் தருவதை நாம் பெறவேண்டும்!

    Reply