மட்டு. நகரில் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தம் : பயணிகள் மகிழ்ச்சி

sri_lankan_policeman.jpgமட்டக் களப்பு மாவட்டத்தில் பிரதான நெடுஞ்சாலைகளிலுள்ள அநேகமான வீதித் தடைகளும் பொலிஸ் சோதனைச் சாவடிகளும் தற்போது அகற்றப்பட்டுள்ளன. இதனால் உள்ளூர், வெளியூர் பயணங்கள் கடந்த காலங்களை விட இலகுவாக இருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக மட்டக்களப்பு – கொழும்பு பயணத்தின் போது மட்டக்களப்பிலிருந்து மன்னம்பிட்டி வரை 7 சோதனைச் சாவடிகளும் 10இற்கும் மேற்பட்ட வீதித் தடைகளும் அமைந்திருந்தன.

சோதனைகளின் போது பயணிகள் பாதுகாப்பு கெடுபிடிகளையும் தாமதங்களையும் எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. தற்போது இவை அகற்றப்பட்டுள்ளதாலும், சோதனைச் சாவடிகளில் சோதனைகள் நிறுத்தப்பட்டுள்ளதாலும் பயணங்கள் இலகுவாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

“ஏற்கனவே இந்த வீதித் தடைகளினாலும், சோதனைச் சவடிகள் காரணமாகவும் மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கான பயணத்திற்கு 10 முதல் 12 மணித்தியாலங்கள் தேவைப்பட்டது. இப்போது 7 முதல் 8 மணித்தியாலங்கள் போதுமானது” என தெரிவிக்கின்றனர்.  இருப்பினும் ஓட்டமாவடி-மன்னம்பிட்டி ,வெலிக்கந்தை பொலிஸ் சோதனைச் சாவடிகளில் வாகன இலக்கங்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றது

“மட்டக்களப்பிலிருந்து வெளியிடங்களுக்கான பயணங்கள் தற்போது இலகுவாக இருந்தாலும், வாகனத்திற்கு இன்னமும் பொலிஸ் பாஸ் பெற வேண்டும் என்ற நடை முறை அமுலிலிருப்பதால் அதனையும் நீக்க வேண்டும்”  அதே வேளை மட்டக்களப்புக்கு வடக்கே பயணங்கள் இலகுவாக இருந்தாலும் தெற்கே வீதி தடைகளையும் சோதனைச் சாவடிகளையும் இன்னமும் காணக் கூடியதாக உள்ளது.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை வரையிலான 43 கிலோ மீற்றர் தூரத்திற்குள் மட்டும் ஓந்தாச்சி மடம், கல்லாறு ,நீலாவணை ஆகிய இடங்களிலுள்ள சோதனைச் சாவடிகளில் தொடர்ந்தும் சோதனைகள் இடம் பெறுகின்றன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

 • நண்பன்
  நண்பன்

  மெதுவாக சுமுக நிலைக்கான மாற்றம் மகிழ்வைத் தருகிறது. ஒட்டு மொத்த நாடும் சுதந்திரமாக மக்கள் பயணிக்கும் நிலைக்கு வர வேண்டும்.

  Reply
 • பார்த்திபன்
  பார்த்திபன்

  மொத்தத்தில் இலங்கை மக்களுக்கு நிம்மதியான வாழ்வு மீண்டும் திரும்ப வேண்டும். அது படிப்படியாக நிறைவேறுமென்று நம்புவோம். அதற்கு அனைத்து மக்களும் அரசிற்கு தமது பூரண ஆதரவையும் வழங்க வேண்டும்.

  Reply