புதுக்குடியிருப்பு, விசுவமடு பிரதேசங்களில் பெருந்தொகையான ஆயூதங்கள் மீட்பு – பிரிகேடியர் உதய நாணயக்கார தகவல்

udaya_nanayakkara_brigediars.jpgமுல்லைத் தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, விசுவமடு பிரதேசங்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின்போது பெருந்தொகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். ஐயாயிரம் துப்பாக்கி ரவைகள், 1250மோட்டார் குண்டுகள், அதி சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் உட்பட பெருமளவு ஆயுதங்களை படையினர் மீட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு,  கிளிநொச்சி பிரதேசங்களில் பாதுகாப்புப் படையினர் பாரிய தேடுதல் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் எட்டாவது அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நடத்திய தேடுதலின்போது,  ரி56 ரக துப்பாக்கி ரவைகள் 5000, 60மி.மீற்றர் மோட்டார் குண்டு 40,  80மி.மீற்றர் ரக மோட்டார் குண்டுகள் மற்றும் கைக்குண்டுக்களையும் மீட்டெடுத்துள்ளனர்.  புதுக்குடியிருப்பு மேற்கு பகுதியில் இராணுவத்தின் இரண்டாவது அதிரடிப்படையினர் நடத்திய தேடுதலில் 81மி.மீற்றர் ரக மோட்டார் குண்டுகள் 550,  60மி.மீற்றர் மோட்டார் குண்டுகள் 468,  120மி.மீற்றர் மோட்டார் குண்டுகள் 330,  12.7மி.மீற்றர் ரவைகள் 470,  வெடிமருந்து 400கிறாம் மற்றும் ஆயுதங்களை படையினர் மீட்டுள்ளனர் என்று பிரிகேடியர் மேலும் தெரிவித்துள்ளார்

Show More

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • chandran,raja
    chandran,raja

    இறைக்க இறைக்க வற்றாதது பிரபாகரனின் ஆயுதக்கிணறு. புலம்பெயர் புண்ணியவான்களின் கிருபையில்லாவிட்டால் இந்த நிலாவரைக் கிணறை படைத்திருக்க முடியுமா? இந்த பிரபாகரால்? நாம் சாப்பிடும் ரொட்டியை ஈழமக்களும் சாப்பிடவேண்டும் என்ற சிந்தனை மனத்தில் இருந்திருந்தால் நிலமைகள் வேறுவிதமாக இருந்திருக்கும். மாண்டவர்போக மீதியுள்ளவரையாவது நாம் பேணமுடியும்.பணக்கிணறுகள் இருந்தும் அதை பயன் படுத்துவதிற்கு மனம் இல்லாத நிலையே இன்றைய நிலை. இது ஈழமக்களின் துரதிஷ்ரம் இல்லாமல் வேறு எதுவாக இருக்கமுடியும்?.

    Reply
  • thurai
    thurai

    முன்பொருகாலம் பத்திரிகைக்கு தலைவர் சொன்னார் எங்களிற்கு ஆயுதம் தருபவர்கள் இலங்கை இராணுவம்தானென்று. இதனைகேட்டு புலத்துப்புலிகள் களிப்புற்ரார்கள்.

    இன்று சொன்ன தலைவரையும் காணோம், இலங்கை இராணுவம் சண்டை போடாமலே ஆயுதங்களையும் மீட்கிறார்கள். புலத்துப் புலிகளிற்கோ அதனைப் பற்ரிக் கதைக்கவே முடியாமல் பணத்திற்கும் பதவிக்கும் போராடத் தொடங்கிவிட்டார்கள்.

    துரை

    Reply
  • நண்பன்
    நண்பன்

    அழிவை மட்டுமே குறியாக கொண்டதின் பலன். மக்களின் அழிவுக்கும் காரணமாயின.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    புலத்தில் கற்பனைகளில வாழ்ந்து காலத்தை ஓட்டியவர்களுக்கு, இப்போதாவது நிசங்கள் புரியுமா என்பது தான் எனக்கும் புரியவில்லை.

    Reply