முட்கம்பி வேலிக்குள் 3 இலட்சம் மக்களை அடைத்துவைத்திருப்பது அப்பட்டமான உரிமை மீறல்

06arliament.jpgஎமது நாட்டுப் பிரஜைகளான மூன்று இலட்சம் மக்களை எந்த சட்டத்தின் அடிப்படையில் முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைத்துள்ளீர்கள்? இது அடிப்படை மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் நடவடிக்கை. எனவே, உடனடியாக அந்த மக்களை அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்ற நடவடிக்கையெடுங்களென ஐ.தே.க. எம்.பி.லக்ஷ்மன் கிரியெல்ல அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் \செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்த அவர் மேலும் கூறியதாவது; வவுனியாவிலுள்ள அகதி முகாம்களுக்குச் சென்று வந்த மருத்துவர்களை நான் சந்தித்தேன். அங்குள்ள மூன்று இலட்சம் மக்களில் 90 ஆயிரம் பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களெனவும் அவர்கள் எதிர்வரும் மாரிகாலத்தினால் பெரும் சிரமங்களை எதிர்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் அங்கு அமைக்கப்பட்டுள்ள அகதிமுகாம்கள் இன்னும் பல வருடங்களுக்கு செயற்படும் நிலைமையே காணப்படுவதாகவும் அந்த மருத்துவர்கள் தெரிவித்தனர். சில அமைச்சர்கள் பாகிஸ்தானிலும் இவ்வாறான அகதிமுகாம்கள் உள்ளதாகக் கூறுகின்றனர். உண்மைதான் அங்கு அகதிமுகாம்கள் உள்ளன. ஆனால், அந்த முகாம்களுக்கு சர்வதேச ஊடகங்கள், சர்வதேச அமைப்புகள் சென்றுவர முடியும். ஆனால், இங்கு நிலைமை அப்படியா உள்ளது? எதனை மறைப்பதற்காக ஊடகங்கள், எதிர்க்கட்சியினர், சர்வதேச அமைப்புகளை அங்கு அனுமதிக்க மறுக்கின்றீர்கள்.

இந்த அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பிச்சைக்காரர்களல்ல. அவர்கள் நன்றாக வசதியாக வாழ்ந்த மக்கள் அவர்கள் எதற்கும் வழியில்லாதவர்களென அரசு நினைக்கக் கூடாது. இந்த அகதிமுகாம்களுக்கு உதவ முன்வரும் நாடுகளிடம் பொருள் உதவிவேண்டாம். பண உதவி செய்யுங்கள் என இந்த அரசு கேட்கின்றது. ஜனாதிபதியை கடுமையாக விமர்சித்தவர்கள் இன்று அரசுடன் இணைந்து கொண்டு தமது புள்ளிகளை  அதிகரிப்பதற்காக கூச்சலிடுகின்றார்கள்.

யுத்தம் முடிந்துவிட்டதென அரசு கூறுகின்றது. உல்லாசப்பயணிகளை இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுக்கின்றது. யுத்தம் முடிந்து விட்டதென்றால் பயங்கரவாதத்திற்கெதிராக கொண்டுவரப்பட்ட சட்டங்கள், அவசரகாலச் சட்டம், காவலரண், சோதனைச் சாவடிகளை நீக்க வேண்டும்.இவ்வாறான நிலைமை ஏற்பட்டால்தான் உல்லாசப்பயணிகள் இந்த நாட்டுக்கு வருவார்கள்.

இதேவேளை, எமது நாட்டுப் பிரஜைகளான மூன்று இலட்சம் மக்களை எந்தச் சட்டத்தின் அடிப்படையிலே முட்கம்பி வேலிகளுக்குள் அடைத்து வைத்துள்ளீர்களென அரசிடம் கேட்கின்றோம். இது ஒரு அப்பட்டமான அடிப்படை மனித உரிமை மீறல் உடனடியாக அந்த மக்களை அவர்களின் இடங்களில் மீளக்குடியேற்றுங்கள்.

யுத்தம் இல்லாத நிலையில் 13 ஆவது அரசியல் திருத்தத்தை நடைமுறைப்படுத்த நாம் முயன்றோம். ஆனால், இவர்கள் யுத்தத்தை நடத்திவிட்டு 13 ஆவது அரசியல் திருத்தத்திற்கு மேலாக தரத்தயார் என்கின்றனர்.  நாம் யுத்தத்தை எதிர்க்கவில்லை ஆனால், யுத்தத்தின் மறைவிலே நடந்த மனித உரிமை மீறல்கள் படுகொலைகளைத் தான் நாம் எதிர்த்தோம். அரசு செய்யும் அனைத்தையும் சரியெனக் கூற நாங்கள் இங்கு வரவில்லை.

Show More
Leave a Reply to மாயா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

16 Comments

  • vanthijathevan
    vanthijathevan

    ஆனால் மாயா சொல்கின்றார்- 3 லட்சத்தை வெளியே விட்டு 19,742,439 மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்க முடியாது.

    Reply
  • மாயா
    மாயா

    ஐதேகட்சிக்கு தேவையாக இருப்பது என்ன என்பது அனைவருக்கும் தெரியும். ஒரு பிரச்சனையின் தீர்வுக்கு யார் எதிர்க் கட்சியாக இருந்தாலும் எதிர்த்தே இருக்கிறார்கள். இந்த 3 லட்சம் மக்களுக்கும் ஆரம்பத்தில் இருந்த பிரச்சனைகள் இப்போது குறைந்துள்ளது. இன்னும் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை என்பதை அதிபரே ஏற்றுக் கொண்டுள்ளார்.

    இம் முகாமிலிருப்போரில் 80 சத வீதமானவர்கள் சிங்களவர்களை தமது வாழ்கையில் பார்த்ததே இல்லை. அதற்கு காரணம் புலிகளின் திறந்த சிறைக்குள் 30 வருடங்களாக வாழ்ந்தவர்கள். இவர்களை சுதந்திரமாக வெளியேற விடலாம்.

    என்ன நடக்கும்?

    இவர்களில் குழந்தைகளைத் தவிர ஏனைய அனைவரும் ஏதோ ஒரு வழியில் ஆயுத பயிற்சி பெற்றவர்கள். தமது கையில் பணம் இல்லையென்றாலே கொலை , கொள்ளைகளில் ஈடுபடலாம். வெளிநாடுகளில் உள்ள புலித் தலமையின் தொடர்புகளின் பணிப்பின் பேரில் குண்டு தாக்குதல்களில் ஈடுபடலாம்.

    இப்போது இவர்களது சுதந்திரம் குறித்து பேசும் இதே ஐதேகட்சியினர் நடக்கும் தாக்குதல்களுக்கு மகிந்த அரசு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என போராட்டங்களில் ஈடுபடுவார்கள்.

    கடந்த காலத்தில் புலிகளின் விமான தாக்குதல்களின் போது ஐதேக கட்சி சொன்னதை நினைவு படுத்த விரும்புகிறேன். “இத்தனை ராடர்கள் இருந்தும் ஒரு புலிகளின் விமானத்தைக் கூட சுட்டு வீழ்த்த முடியவில்லை. இனி அது நடக்காது என்ற போதும் புலிகள் தாக்கிவிட்டு மறைந்து விடுகிறார்கள். கொசு விமானங்களை வீழ்த்த சக்தியற்ற ஒரு அரசு பதவி விலக வேண்டும்” என்றனர்.

    இதைத்தான் இவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதைவிட தமிழரது வாக்குகளை பெற பேசுகிறார்கள். வேறு நாட்டு நலன் என்பது துளி கூட இங்கே இல்லை.

    Reply
  • vanthijathevan
    vanthijathevan

    யார் என்ன பேசினாலும் நமக்கு சாதகமாக அமையும் கருத்துக்கள் வரும்போது அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    கையில் பணமில்லை என்றால் கொலை கொள்ளைகளில் ஈடுபடலாமாம். என்ன இருந்தாலும் உழைத்து உரமேறிய அந்த மக்களைப் பார்த்து இவ்வளவு கேவலமாக எப்படி பேச முடிகிறது. அவர்களுக்குரிய பழைய வாழ்க்கையை அனுமதித்தால் ஏன் அவர்கள் திருடப் போக்ன்நார்கள்?

    வெளிநாடுகளில் உள்ள புலித் தலமையின் தொடர்புகளின் பணிப்பின் பேரில் குண்டு தாக்குதல்களில் ஈடுபடலாம்”

    நம்பக் கூடிய மாதிரி தீர்வை கொடுத்தால் யாரினதும் கட்டளைகளுக்கு ஏன் அவர்கள் செவிசாய்க்கப் போகின்றார்கள்.

    சும்மா புலி புலி என கதை விட வேண்டாம். புலி முடிந்தது.

    80 சத வீதமானவர்கள் சிங்களவர்களை தமது வாழ்கையில் பார்த்ததே இல்லை.
    அதற்காக கம்பி வேலிக்குள் வைத்திருப்பதா? சிங்களவர்களைப் பார்க்காதது அவர்களின் தவறா?

    Reply
  • msri
    msri

    முன்பு பிரபாகரப்புலி! வன்னிமக்களை கேடயமாக வைத்து> சாகடித்தது! இப்போ மகிந்தப் புலி முட்கம்பிவெலிக்குள் வைத்து சாகடிக்கின்றது! முன்பு சொந்த பந்த உறவுகளாக இருந்தவர்கள்> இப்போ உறவுகளே இன்றி தவிக்கின்றனர்! தமக்கு வாக்களித்த மக்களை> அதன் தலைவர்களே பார்க்க முடியா நிலை! மகிந்தப் புலியின் மடிக்குள் இருக்கும் சிலர் > போய் வந்து சொல்பவைகளே> அதிகாரபூர்வ அறிக்கை> இதை வைத்து> முகாம்களில் இருப்பவர்கள்:> எம் இன தமிழமக்களோ > சொந்த பந்த இரத்த உறவுகளோ அல்ல> நீணட காலம் கூண்டில அடைபட்ட பயங்கர மிருகங்கள்> என்ற பாங்கில் > இவர்கள் மகிந்தாவின் முகம் பார்க்கவில்லை>சிங்களமக்களைப் பார்க்கவில்லை> எனவே “இவர்களை” வெளியில் விட்டால் நாட்டிற்கே ஆபத்தென> “மகிந்த மாயாசால வித்தைகள்” காட்டுவார்கள் சில சிங்களப் பேரினவாத எடுபிடிகள்! இவர்களுக்கு எல்லாமே மகிந்தாதான்! மகிநதா எலும்பைப் போட்டால் அது இறைச்சியென காட்டுவார்கள்!

    Reply
  • rohan
    rohan

    முன்பு பிரபாகரப்புலி! வன்னிமக்களை கேடயமாக வைத்து சாகடித்தது! இப்போ மகிந்தப் புலி முட்கம்பிவெலிக்குள் வைத்து சாகடிக்கின்றது!

    ஆனால் anti-புலி கருத்து எழுதியே உயிருடன் சாகடிக்கிறது.

    Reply
  • nallurkantha
    nallurkantha

    I have to congratulate Thesamnet because it is very democratic.Oppurtunities are there for different opinion.However one thing our tamil breathern should understand.After 3 decade of suffering under LTTE and other outfits(majority period under LTTE)going to a very open life is not possible.Pl revisit the post tsunami period.Communalists were shouting govt was not sending any thing to Tamil areas.Tamil areas were discriminated and so on.Really what happened.Govt sent relief items to Tamil areas first, before that to Mullaitivu.In eatern provinve Tamil and Muslim people are telling Thanga tsunami(golden tsunami).It is bacuse they have been provided with new houses,boats and so on.The same communalists are shouting about welfare camps.These are all temporary.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //ஆனால் anti-புலி கருத்து எழுதியே உயிருடன் சாகடிக்கிறது.- rohan//

    இன்று வன்னியில் நின்றுகொண்டு அந்த மக்களுக்கு ஏதாவது வகையில் உதவிக் கொண்டிருப்பதே புலததிலிருந்து சென்ற புலியெதிர்ப்பாளர்களே. ஆனால் உங்களைப் போன்ற புலியாதரவாளர்களும், புலிப்பினாமிகளும் அந்த மக்களின் அவலங்களை படம் காட்டியே பணம் ஒன்றே குறியென செயற்படுகின்றீர்கள். அதனால்த் தான் அந்தச் சுருட்டல்களையும் பகிரங்கப் படுத்த கருத்தெழுத வேண்டிய நிலைக்கு புலியெதிர்ப்பாளர்களும் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இன்றும் அந்த மக்களின் அவலங்களைச் சிந்திக்காது உயிர்த்தெழுவோம், மீண்டெழுவோம், விழுந்தெழுவோம்,அடங்காப்பற்று, அடங்கினபற்று என்று படம் காட்டுவது யாருங்க. இதனால் அந்த வன்னி மக்களுக்கு என்ன பயன்??

    முன்பு சாவிலும் வாழ்வோமென்று ஒரு நிகழ்ச்சி நடத்தினீர்கள். அப்போது எனக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. ஆனால் வன்னியில் மக்களின் அவலநிலையின் போதுதான் அதன் மர்மம் துலங்கியது. அந்த மக்கள் அவலமாகச் சாகும் போதெல்லாம் அதைப் படம் காட்டியே சேர்த்த பணத்தில் புலிப்பினாமிகள் வாழ்வது தான் அதன் அர்த்தமென்று நன்றாகப் புரிந்தது. அடுத்தவரின் சாவில் தாம் வாழ நினைக்கும் அற்ப கூட்டங்கள்.

    Reply
  • மாயா
    மாயா

    //ஆனால் anti-புலி கருத்து எழுதியே உயிருடன் சாகடிக்கிறது.//

    அவர்களை வெளியில் விட வேண்டாம் என்று சொல்லவில்லை. புலிகள் குண்டுகளை வைத்த போதும் தாக்குதல்கள் நடத்திய போதும் பாதிக்கப்பட்டவர்கள் புலிகளல்ல. ஒன்றுமறியாத அப்பாவி மக்களே? அதை அறியாதோர் கண்ணிருந்தும் குருடர்களே?

    குண்டுகளுக்கு தமிழ் சிங்கள முஸ்லீம் பேதம் இல்லை நண்பர்களே? தற்கொலைதாரிகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் குறிப்பிட்ட நபர் மட்டும் சாகவில்லை. சாகப் போகும் ஒரு தாயின் உயிரைக் காப்பாற்ற மருந்து கொண்டு சென்றவனும் செத்தான்? அங்கு ஒன்றும் தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்த பச்சை பாலகனும் செத்தது? யார் வரவுக்காகவோ காத்திருந்த பெரியவர் செத்தார் அல்லது மூதாட்டி செத்தாள்? பள்ளி சென்று கொண்டிருந்த குழந்தைகள் செத்தன? இவர்களை குறி வைத்து தாக்கியதல்ல அந்த குண்டு வெடிப்பு? இப்படி எத்தனை எத்தனை?

    அது அத்தோடு முடிந்ததா? குண்டு வெடித்தது எதுக்கென்று தெரியாது வீடகளில் இருந்தவர்களும் /தூங்கியிருந்தவர்களும் கூட கைது செய்யப்பட்டார்கள்? செய்தவர்கள் ஓட அவ்வழி நடந்தோ அல்லது வாகனத்திலோ சென்றவர்கள் கைதானார்கள்? இவர்களுக்கும் இச் சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை. வலது குறைந்தோர் கூட இறந்தார்கள்?

    இவர்கள் எவருக்கும் அந்த தாக்குதலில் அல்லது குண்டு வெடிப்பில் சம்பந்தம் இல்லை. இவர்களது சாவுகளும் கைதுகளும் தேவையற்றவை. இவை அப்பாவிகளது வாழ்வை சேதப்படுத்தின.

    புலத்து புலிகளும், எதிர்க்கட்சிகளும், சில வெளிநாட்டு சக்திகளும் தென் இலங்கையில் 1983ம் ஆண்டு ஜுலை கலவரம் போல ஒன்றை எதிர்பார்க்கிறார்கள்? அதை வைத்து நாட்டில் உள்ள பிரச்சனையை உலக அரங்குக்கு கொண்டு சென்று அரசுக்கு எதிரான அழுத்தங்களைக் கொடுக்கவும், நாட்டு மக்களின் எதிர்ப்போடு அரசைக் கலைக்கவும் வழி தேடுகின்றனர். இவை நடக்காது. அது இனி பகற் கனவே? மகிந்த உண்மையில் யதார்த்தவாதிதான். அவர் தனது பலம் மற்றும் பலவீனத்தை நன்கு உணர்ந்தவர். எனவே கடந்த காலத் தவறுகள் நிகழாமல் இருக்க மகிந்த அரசு முனைகிறது. இனியொரு பயங்கரவாத நடவடிக்கை நாட்டில் தலை தூக்காது.

    ஐதேகட்சியின் சமாதான காலத்தில் புலிகள் என்ன செய்தார்கள் என்பது பலரும் அறிந்ததே? புலிகள் நாடு முழுவதும் ஆட்களை திரட்டினார்கள். ஆயுதங்களை கொண்டு வந்து நாடு முழுதும் பதுக்கினார்கள். போட்டுத் தள்ள வேண்டியவர்களை போட்டுத் தள்ளினார்கள். பலரை சிங்களப் பகுதிகளில் சிங்களவர்களாக பதிந்து சிங்கள பாடசாலைகளுக்குள் கல்வி கற்க விட்டார்கள். பலரை , சிங்கள மற்றும் மலையக பகுதிகளில் நிறுவனங்களை உருவாக்கியும் , புலி ஆதரவு நிறுவனங்களிலும் வேலைக்கு அமர்த்தினார்கள். இராணுவ முக்கியஸ்தர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி இராணுவ இரகசியங்களை பெற்றார்கள். எல்லாவற்றிற்கும் பணத்தை தண்ணீராக கொட்டினார்கள். புலத்துக்கு புலிகளை அனுப்பி பல நாடுகளின் பிரஜா உரிமையை பெற்று பழைய புலித் தலைமைகளை கண்காணிக்க புலனாய்வு பகுதியினரை அனுப்பியதோடு , தவறானவர்களை ஓரம் கட்டினார்கள். புலத்துக்கு கரும்புலிகளையும் அனுப்பினார்கள். அவர்கள் மீண்டும் நாட்டுக்குள் வந்து தாக்குதல் நடத்தக் கூடிய திட்டங்களாக. இவைக்கும் மேல் உண்டு.

    சமாதானம் குறித்து பேச வேண்டிய புலிகள் சமாதான காலத்தில் சாவுகளை உருவாக்குவதிலேயே கண்ணாக இருந்தார்கள்.

    சமாதான பேச்சுகளின் போது, தமிழீழ பகுதிகளுக்கு தேவையான பொருட்களும் – வசதி வாய்ப்புகளும் போய்ச் சேரும் போது மக்கள் யுத்தத்தை வெறுத்து சகஜ வாழ்வுக்கு திரும்புவார்கள் என்பது ரணிலின் கருத்தாக இருந்தது. மக்களின் தேவைகள் நிர்வர்த்தி செய்யப்படும் போது மக்கள் ஆயுத போராட்டத்தை வெறுப்பர் என ரணில் நினைத்தார். அது பெரிதாக பலன் தராவிட்டாலும், ஓரளவு நடந்தேறியது உண்மை. அப்படி சில நடந்ததாக நினைத்தாலும் , புலிகளுக்கு விரும்பாதவர்களை படுகொலை செய்வதூடாக புலிகள் ரணிலின் கருத்தை தவிடு பொடியாக்கி புலிகளின் பலத்தை அதிகரிக்கவே முயன்றனர். அக்காலத்தில் சிலரை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பினர். இவர்களும் ஒன்று மத்திய கிழக்கில் உள்ள எதிரிகளை கண்காணிப்பது போட்டுத் தள்ளுவது மற்றும் அங்கிருந்து கொழும்பு திரும்பி தாக்குதல் தொடுப்பது என்பனவே குறியாக இருந்தது. புலிகளில் சேராதோரை புலிகளின் போலீஸுக்கு என்று வஞ்சகமாக ஆள் சேர்த்தனர். அவர்களும் பின்னர் புலிகளாயினர்.

    சில புலி உறுப்பினர்கள் திருமணம் செய்தது : வெளிநாடு சென்றது மற்றும் கருணா போன்றவர்கள் பிரிந்தது போன்ற ஒரு சில நடந்தாலும் அவைகள் புலிகளை பின்னர் பெரிதும் பாதித்தது. யுத்தமே குறியாக இருந்தவர்களுக்கு இது பலவீனமே. சமாதானம் வேண்டியிருந்தால் அது எப்பவோ கிடைத்திருக்கும். சொல்கெய்மே , பிரபாகரன்தான் சமாதான பேச்சு வார்த்தையை கெடுத்தவர் என தெரிவித்துள்ளார்.
    http://www.youtube.com/watch?v=q-nkX22BQ20
    http://www.youtube.com/watch?v=1QX7xPPaW9Q&feature=related

    இப்போது முகாமிலிருக்கும் மக்களின் சோகத்தில் எமக்கு சந்தோஷமில்லை. அவர்களது பாதுகாப்பு அந்த முகாமாக இப்போது உள்ளது. இதை யதார்தமானவர்கள் உணர்வர். அவர்களை திடீரென வெளியில் விடுவது அவர்களுக்கு பாதிப்பையே உண்டு பண்ணும். இப்போது கூட தொடர்ந்து பல புலி முக்கிய உறுப்பினர்கள் முகாமுக்குள் இருந்து கைதாகி வருகிறார்கள். அவர்களில் பலர் புலிகளின் புலாய்வுப் பிரிவினர். அவர்கள் குறித்த தகவல்களை பிடிபட்டுள்ள புலி உறுப்பினர்களே தெரிவித்துக் காட்டியும் கொடுக்கின்றனர். பலர் பணம் கொடுத்து வெளியேறியும் உள்ளனர். அங்கும் ஊழல் நடக்கிறது. அப்பாவிகள் ஒருபோதும் அச்சப்படத் தேவையில்லை. அவர்களுக்கு புனர் வாழ்வு அல்ல புதிய வாழ்வே கிடைக்கும்.

    180 நாட்களுக்குள் பலர் மீள் குடியமர்த்தப்படுவார்கள். அவர்கள் தமது பகுதிகளில் இருந்து சகஜ வாழ்வுக்கு திரும்பும் போது, அதுவே பெரும் மாற்றமாக இருக்கும். இன்று அவர்களுக்கு நேரத்துக்கு உணவு இல்லையென்றாலும் 3 வேளை சாப்பாடு கிடைக்கிறது. வைத்திய வசதிகள் உண்டு. வெளியில் வந்து வைத்தியசாலைகளில் மருந்துகளை எடுக்கவும் அனுமதிக்கப்படுகின்றனர். மக்கள் போஷாக்கின்றி இருப்தற்கு அரசு காரணமல்ல. அதற்கு காரணம் புலிகளே.

    மாத – வருடக் கணக்கில் முறையான உணவு இன்றி கஞ்சியோடு வாழ்ந்தவர்கள் அப்படி ஆகி உள்ளனர். இதற்கு புலிகளே காரணம். போஷாக்கின்மை என்பது விபத்து அல்ல. அது ஒரு நாளில் மாறாது.

    நாட்டில் தொடர்ந்து மக்கள் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழ சில நடைமுறைகள் கடினமானாலும் பொறுத்தே ஆக வேண்டும். அரசு எவரையும் போர்க்களத்துக்கு அனுப்பவில்லை. குண்டை கட்டி வெடிக்க வைக்கவில்லை. மக்கள் முட்கம்பி வேலிக்கள் வாழ்கின்றனர் என்பது வேதனைதான். இவை மாற வேண்டும். மாறும். புலம் பெயர்ந்த நாமும் இப்படியான வதைகளை அனுபவித்தே இருக்கிறோம். அகதியாக வந்ததும் நம்மை எவரும் திறந்து விடவில்லை. பல காலம் முகாம்களுக்குள் இருந்தோம். மன அழுத்தங்களை அனுபவித்தோம். பலர் நாடு கடத்தப்பட்டார்கள். சிலர் ஓடினார்கள். நமக்கு இருக்கக் கிடைத்தது. இதற்கு பொறுமை தேவை.

    முகாமில் வாழ்வோரில் பலர் வெளியேற விரும்பவில்லை. காரணம், இராணுவ அடையாள அட்டை பெற்றவர்களுக்கு வீடுகளும் வாழ்வாதாரத்துக்கான வசதி வாய்ப்புகளையும் செய்ய அரசு செயல்படுகிறது என்பது அந்த மக்களுக்கு தெரிந்தே உள்ளது. அவர்கள் தமது பகுதிக்கு போகும் போது அவர்களுக்கான தொழில் செய்யக் கூடிய உதவிகளை அரசு செய்ய திட்டமிட்டுள்ளது. திரும்பவும் அவர்கள் ஒன்றுமில்லாதவர்களானால் மீண்டும் ஆயுதம் தூக்க முனைவார்கள் என்பதை தடுக்க முடியாது என்பதை அரசு உணர்ந்துள்ளது. அதை தெரிவித்தும் வருகிறது. எனவே ஜேவீபீ கூட தனது நிலையை தற்போது மாற்றிக் கொண்டுள்ளது .

    தற்போதைய நிலையில் , அந்த மக்களை வெளியே விட்டால் அவர்கள் குற்றச் செயல்களில் நிச்சயம் ஈடுபடுவார்கள். வெளிநாட்டு உறவுகளற்ற பலரிடம் பணம் இல்லை. தொழில் இல்லை. வெளிநாட்டு உறவுகள் உள்ளவர்களால் இப்போதும் பணம் அனுப்ப உள்ளெ வங்கி கிளைகள் திறக்கப்பட்டுள்ளன.

    எத்தனையோ சிறார்களும் பெரியோர்களும் யாரும் பொறுப்பெடுக்காத நிலையில் சில சமூக நிறுவனங்கள் அவர்களை பொறுப்பெடுத்துள்ளன. இங்கே பேசுவோர் இவர்களை பொறுப்பேற்கலாமே?

    அனைவரையும் வெளியே விட்டு , குற்றச் செயல்களில் அல்லது அடையாள அட்டை இல்லாமல் சிறைகளுக்கள் அடைப்பதை விட முகாம்களுக்குள் இருப்பதில் உயிர் அச்சம் இல்லை மற்றும் 3 வேளை சாப்பாடாவது கிடைக்கிறது. மருந்துகளும் கிடைக்கிறது. சில அசெளகரியங்கள் இருப்பதை மறுக்க இயலாது. உள்ளே உள்ள குழந்தைகள் தமது கல்வியைக் கூட தொடருகின்றனர். இவை இன்னும் மேன்மை அடைய வேண்டும். தவிர, விரைவில் அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு கூடிய விரைவில் குடியமர்த்ப்பட வேண்டும் என்பதே எமது பிராத்தனையும் தேவையுமாகும்.

    அதைத் தவிர்த்து மக்களை குற்றவாளிகளாக்கி சிறைகளுக்குள் அடைக்கவோ அல்லது துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாக்குவதோ எமது நோக்கமல்ல. அந்த நோக்கில் எமது கருத்து யதார்த்தமாகும். புலிகளாக அல்லாமல், அந்த மக்களுக்கு உங்களால் எந்த வழியில் உதவ முடியுமோ உதவுகள். அதற்கு அங்கு தடையில்லை. அது குறித்து விவாதியுங்கள்.

    ஆனால் anti-புலி கருத்து எழுதியே உயிருடன் சாகடிக்கிறது என்பதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான். இருந்தாலும் புலி வால்களுக்கு தலைவருக்கு எல்லாம் தெரியும் என்ற கருத்தியலை விட வேறு எதுவும் கடைசி வரை இருந்ததில்லை என்பதும் எமக்குத் தெரியும்.

    Reply
  • Kumaran
    Kumaran

    புலிகளை எதிர்த்து நேரம் கழிப்பது எங்கள் நோக்கம் அல்ல. புலிகளின் சண்டித்தனத்தையும் அராஜகத்தையும் கண்முடித்தனமாய் ஆதரித்து எல்லர்ருடைய வாயையும் அடைத்து வைத்திருந்துவிட்டு இப்ப ஒப்பாரி வைத்து என்ன பிரஜோசனம்.

    அதன் விளைவு தான் வன்னி மக்களின் அவலம்.

    பதினெட்டு வருடங்களுக்கு முன் அகதியான முஸ்லிம் மக்கள் இன்னும் அகதி முகாமில் இருக்கும் நிலையில், ரண்டு மாதங்களுக்கு முன் புலிகளின் கட்டுபாட்டில் இருந்து மீட்கப்பட்ட மக்கள் எப்படி மீள் குடி அமர்த்த முடியும்?

    Reply
  • BC
    BC

    சாவிலும் வாழ்வோமென்று மக்கள் அழிவில் பணம் பண்ணிய புலி ஆதரவாளர்கள் மனித விரோதிகளே.

    Reply
  • BC
    BC

    மாயா, நீங்கள் கூறியது உண்மை.எல்லா விதமான பயங்கரவாதம், பொய், புரட்டுகள், மேசடிகள் செய்தும் தோல்வி அடைந்து விட்டனர்.ஏதாவது ஒரு குழப்பத்தை ஏற்படுத்த முடியாதா என்று ஒரு நப்பாசை தான் அவர்களுக்கு. அதனால் anti-புலி கருத்து அவர்களுக்கு கோவத்தை தருகிறது.

    Reply
  • vanthijathevan
    vanthijathevan

    நீங்கள் நினைப்பது போல மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப் பட மாட்டார்கள். அவர்களின் நிலம் நீர் மற்றும் வாழவாதாரங்கள் அன்னிய நாடுகளுக்கு தாரை வார்க்கப்பட்டு அவர்களின் இலாபங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்பு தான் இந்த மக்களை என்ன செய்வது என யோசிப்பார்கள். நிறைய அழிவுகளை கண்டு விட்டோமாயினும் புலிகளின் அழிவு தமிழ் மக்கள் நிதானமாக சிந்தித்து இலங்கை பேரினவாத அரசை நோக்கி ஒரே திசையில் செலுத்தும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    //சாவிலும் வாழ்வோமென்று ஒரு நிகழ்ச்சி நடத்தினீர்கள். அப்போது எனக்கு அதன் அர்த்தம் புரியவில்லை.- பார்த்திபன் //

    புலத்து புலிப் புண்ணூக்குகள் தலைவர் செத்தாலும் வாழ்வார்கள். இவர்களால் வன்னி மக்கள் ஒரு போதும் வாழ மாட்டார்கள். அவர்களது சாவைக் காட்டி பணம் பண்ணிய வல்லூறுகள் இவர்கள்.

    அரசு வன்னி மக்களுக்கு ஒளிவிளக்கேற்றப் போகிறது.

    NEWS
    ——–
    // கிளிநொச்சி நகரத்துக்கு இன்னும் இரு வாரங்களில் மின்சார வசதி அளிக்க உள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு தெரிவித்தது. கிளிநொச்சி நகரத்துக்கு மின்சார வசதி அளிக்கும் திட்டத்துக்கு 600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியது. வடக்கு வசந்தம் திட்டத்தின் கீழ் வட பகுதிக்கு மின்சார வசதி அளிக்க 6000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வவுனியாவில் இருந்து மாங்குளம் வரை 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின்சாரத் தொகுதி அமைக்கப்பட்டு வருவதோடு மாங்குளத்தில் இருந்து கிளிநொச்சி வரை 30 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுவதாக அமைச்சு கூறியது. இது தவிர கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு வரை 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின் மாற்றித் தொகுதி அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்படுகிறது. இந்தப் பணிகள் இரண்டு வாரங்களில் பூர்த்தி செய்யப்பட உள்ளதாக அமைச்சு கூறியது.//

    புலிகள் இருளை மக்களுக்கு கொடுத்தனர். இனியாவது அந்த மக்களது வாழ்வு ஒளிமயதானதாக இருக்கட்டும்.

    Reply
  • மாயா
    மாயா

    இவர்களையெல்லாம் வெளியே விட்டால் நாட்டின் கதி என்ன?

    ராதா படைப்பிரிவை சேர்ந்த புலி உறுப்பினர் கைது

    இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள வவுனியா நலன்புரி நிலையத்தில் இருந்து புலிகளின் ராதா படைப்பிரிவின் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் கண்ணன் எனப்படும் தவரூபன் என தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தனிப்பட்ட பாதுகாப்பினை வழங்குவதற்கு ராதப்பிரிவு அமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவர் ஆயுத களஞ்சியத்திற்கு பொறுப்பாக இருந்ததோடு ராத படைப்பிரிவின் தலைவர் ரத்னம் மாஸ்டரின் செயலாளராகவும் இருந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவருக்கு புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் விசாரணையின் போது புலிகள் இயக்கம் குறித்த பல தகவல்களை வழங்கிவருவதாகவும் குற்ற புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவரின் தகவலின் அடிப்படையில் புலிகளின் ஆயுத களஞ்சியத்தை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கென குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசட பிரிவொன்று விசுவமடுவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    Reply
  • மகுடி
    மகுடி

    //vanthijathevan on July 10, 2009 10:27 am நீங்கள் நினைப்பது போல மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப் பட மாட்டார்கள். அவர்களின் நிலம் நீர் மற்றும் வாழவாதாரங்கள் அன்னிய நாடுகளுக்கு தாரை வார்க்கப்பட்டு அவர்களின் இலாபங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்பு தான் இந்த மக்களை என்ன செய்வது என யோசிப்பார்கள். நிறைய அழிவுகளை கண்டு விட்டோமாயினும் புலிகளின் அழிவு தமிழ் மக்கள் நிதானமாக சிந்தித்து இலங்கை பேரினவாத அரசை நோக்கி ஒரே திசையில் செலுத்தும் காலம் வெகு தூரத்தில் இல்லை.//

    நாடு கடந்த தமிழீழ அரசை அமைத்து, நாடு கடக்க வச்சு, புலிகளோடு இருந்த வன்னி மக்களுக்கு வழி காட்டுங்கோ. எல்லாரையும் வெளிநாட்டுக்கு எடுத்து விடுங்கோ. உங்கள் உழைப்புக்கு அது மிக முக்கியம்.

    நீங்கள் முன்ன சொன்னீங்கள்? போறவங்களிட கிட்னி களட்டுறாங்கள். நிர்வாணமா கெட்வோக் நடத்துறாங்கள்……….என்னென்னவோ சொன்ன நீங்கள்தானே? முள்ளியவளையில வாழ்ந்த என்னுடைய மாமாவும் கடைசி வரை புலிகளோட இருந்துட்டு 17ம் திகதி இராணுவ பகுதிக்கு வந்தவர். போர் காலத்தில என்னோட கதைக்கும் போது 17 வயது மகளை இராணுவ பகுதிக்கு அனுப்ப தயங்கியவர். இல்லை, அனுப்புங்கோ ஒன்றும் நடக்காது என்று சொன்ன பிறகு அவர் வயசான ஒரு ஆச்சியோட தாய் தகப்பன் செத்துட்டது என்று சொல்லச் சொல்லி அனுப்பினவர். இப்ப மகள் முகாமில இருந்து படிக்குது. தலையில பேன் என்று பிள்ளைக்கு இராணுவம் மொட்டை அடிச்சுட்டாங்கள் என்றதுக்கே அழுதவர். இராணுவத்தால் வேறு கெடுதல் இல்லையென்றார். அவர் முகாமில இருந்து வவுனியா ஆஸ்பத்திரிக்கு வந்து என்னோட போனில கதைக்கிறவர். கடைசி வரை புலிகளோட கட்டுப்பாட்டில் இருந்தவர். அவரே புலிகள் செய்த கொடுமைகளின்ட பல உண்மைகளை சொல்லுறார். வெளிநாடு வாறீங்களே என்றதுக்கு, இல்ல கெதியா ஊருக்கு பேகலாம் என்கிறார். இனி பிரச்சனை வராது. இராணுவம் நட்பாய் இருக்கிறார்கள். புள்ளைகளுக்கு பேனா பென்சில் வாங்க வெளியே போக அனுமதி கேட்டாலே, தங்கட பொக்கட்டில இருக்கிற பேனையைத் தந்துட்டு போறாங்கள். மாற்று இயக்கங்கள் கூட எந்த வேறுபாடும் இல்லாமல் உதவுவதாகவும் , நம்பிக்கை தருவதாகவும் சொன்னார். ஆஸ்பத்திரிக்கு மருந்து எடுக்கவென்று வாரத்தில 2 – 3 நாள் வாரவர். முகாம் பாதுகாப்பான இடம். இருந்தாலும் ஊர் போல வராதென்றார். அந்த நாட்கள்தான் அவர்களது எதிர்பார்ப்பு. நீங்கள் என்னடா என்றால் கிணத்து தவளையாக வெளிநாடு வந்தும் புலத்தில இருந்து புடுங்கப் பார்க்கீறீங்கள்.

    Reply
  • msri
    msri

    கனவுலகில் சஞசரிக்கும்
    பிரபாகர+மகிந்தப் புலிகளின் “புலன்பெயர்வுகள”!
    புலிகளின் அழிவிற்குப் பிற்பாடு> அதன் “புலன்பெயர்வுகள்” > தலைவர் உயிருடனேயே உள்ளார! விரைவில் வருவார்!என ஏதோ உயிர்த்தெழுவோம் விழித்தெழுவோம் என்கின்றனர்! அத்தடன் நாடு கடந்த ஈழம் என்ற களவுலகிலும் மிதக்கின்றனர்! இத ஒருபுறம் மறுபுறத்தில் மகிந்தப் புலியின் “புலன்பெயர்வுகள்” கனவுலகம் பாரீர்! மகிந்தா தமிழ்மக்களுக்கு சமஆட்சி இல்லை! 13-வதே இல்லை! நான் தருவதைப் பெறவேண்டுமே ஒழிய> நீங்கள் விரும்புவதைப் பெறமடியாது என்று சொல்லியும்!> நம்புங்கள் அவர் ஒரு நல்லவர்> டக்கிள்சு சொல்ல இன்னும் கூடத்தருவார்! என > தாங்கள் மாத்திரமல்ல> மற்றவர்களையும் கனவுலகிற்கு அழைத்துச் செல்கின்றனர்! இவர்களுக்கு பார்ப்பதெல்லாம் மகிந்த டககிளசாகவே(வசந்தம) தெரிகின்றது! மகிந்த அரசு புலிகளை இல்லாதொழித்தபின்> வடக்கில் எதைச் செய்யவேண்டுமோ? அதில் சிலதை செய்கின்றது! யாழில் ஒரு மணி நேரம் ஊரடங்கு குறைத்தால்> பேரூந்து ஒருமணிநேரம் பிந்திச் செனறால்! பாருங்கள் வடக்கின் வசந்தத்தை> இது தமிழ்மக்களின் விடிவில்லையா? என விழுந்தடிதது பின்னோட்டம் எழுதுகின்றார்கள்! கிளிநொச்சிககு மின்சாரம் வரகின்றது என்றவுடன்> பாருங்கள் மகிநதா கிளிநொச்சியை “காவிரிப் பூம்பட்டினம்”ஆக்குகின்றார்> டக்கிளசு மகிந்தாவில் பாடிக் பால் கறக்கின்றார் என புளகாங்கிதம் கொள்கின்றனர்! இப்போ பிரபாகரப் பலிகளை விட > மகிந்தப்புலிகளின் (காகிதப்புலிகள) அறுவை தாஙக முடியவில்லை!

    Reply