பாப் உலகின் முடி சூடா மன்னன் மைக்கேல் ஜாக்சன் இன்றுடன் இந்த உலகுக்கு பிரியா விடை கொடுக்கிறார். அவரது உடல் இன்று லாஸ் ஏஞ்சலெஸில் அடக்கம் செய்யப்படுகிறது.
லாஸ் ஏஞ்சலெஸில் உள்ள ஸ்டேபிள்ஸ் மையத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. இதையொட்டி ரசிகர்கள் பெருமளவில் குவிந்துள்ளனர். இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்காக டிக்கெட்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுடன் வருவோர் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர். டிக்கெட் இல்லாமல் வர முயல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.
இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்கான டிக்கெட் கோரி ஆன்லைன் மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் விண்ணப்பித்தனர். ஆனால் 17 ஆயிரத்து 500 பேருக்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்பபட்டுள்ளது. டிக்கெட் கிடைக்காதவர்கள் தொலைக்காட்சிகள் மூலம் நேரடி ஒளிபரப்பில் இறுதிச் சடங்குகளைக் காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ரசிகர்கள் பெருமளவில் கூடி வருவதால் பாதுகாப்புக்காக ஏகப்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கலவரம் ஏற்பட்டால் தடுக்கவும் போலீஸார் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ஜூன் 25ம் தேதி ஜாக்சன் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவருக்கு வயது 50. அவரது மரணத்தில் ஏகப்பட்ட சர்ச்சைகள் நிலவுகின்றன.
அவரது பிரதேப் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் இன்னும் கூட வெளியாகவில்லை. இரண்டு முறை அவருக்குப் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதையும் தனது இசையாலும்இ நடனத்தாலும் கட்டிப் போட்ட ஜாக்சன் இன்று நிரந்தரமாக இந்த உலகத்தை விட்டு பிரிகிறார். இதனால் அவரது கோடானு கோடி ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
பார்த்திபன்
ஜாக்சன் மரித்தாலும், அவரது பாடல்கள் மூலம் மக்கள் மனதில் என்றும் உயிர் வாழ்வார். இருந்தபோது கிடைக்காத நிம்மதி எனியாவது அவரது ஆன்மாவிற்குக் கிடைக்கட்டும். ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்.
அஜீவன்
Michel , you are the world , you allways with us.
உன்னதமான ஒரு கலைஞனது மறைவு மனதை வருடுகிறது.
மைக்கல் ஜாக்சனது ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்.
vanthiyadevan
(Michel , you are the world , you allways with us.
உன்னதமான ஒரு கலைஞனது மறைவு மனதை வருடுகிறது)
he is a black man but he lost his identy
because he was trying to mix with white
but he could!t
நண்பன்
vanthiyadevan, identy என்பது ஒரு வகையில் மறைமுக இனவாதம். இனவாதத்தை இல்லாதொழிக்க நினைப்பவன் இனவாதம் பேசக் கூடாது. அதாவது தன்னை அடையாளப்படுத்தக் கூடாது. ஒருவனது சாதனைகள் அவனது இனத்துக்கு தானாக மரியாதை அளிக்கும். மைக்கல் ஒரு போதும் இனவாதம் கலந்த படைப்புகளை உருவாக்கியதில்லை.
எனவே பரந்த உலகத்தில் உயர்ந்த கலைஞனாக மைக்கல் கருதப்படுகிறான். அவனைப் போல அவன் மட்டுமே. இன்னொருவன் இல்லை. அது தனித்துவம். மனித நேயம் கொண்ட படைப்புகளே அவனது படைப்புகளில் சிறந்ததாகவும் சாகா வரம் கொண்டதாகவும் இருக்கும்.
கீல் த வேர்ல்ட் , வீ ஆர் த சில்ரன் போன்றவை குறிப்பித்தக்கவை. அவனது படைப்புகள் காலத்தால் அழிக்க முடியாதவை. அது ஒரு இனத்துக்குள் முடங்கி சாகாது.
உதாரணத்துக்கு: Michael Jackson – man in the mirror
http://www.youtube.com/watch?v=ltfqHMS03DI&feature=player_embedded
நண்பன்
கோடிக்கணக்கான ரசிகர்களின் கண்ணீருடன் விடைபெற்றார் ஜாக்ஸன்!
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்ணீர் விட்டு விடை கொடுக்க, பல்லாயிரக்கணக்கானோரின் நேரடி அஞ்சலியுடன், பொப் இசை உலகின் முடி சூடா மன்னன் மைக்கல் ஜாக்ஸன் நேற்றிரவு விடை பெற்றார்.
இதுவரை உலகில் யாருடைய இறுதிச் சடங்கும் இந்த அளவுக்குப் பிரமாண்டமானதாக இருந்திருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு மிகப் பிரமாண்டமாக, ஜாக்ஸனின் இசையை சுவாசித்தபடி, அவருக்குக் கண்ணீர் மல்க விடை கொடுத்தனர் அவரது ரசிகர்கள்.
ஜூன் 25ஆம் திகதி மரணமடைந்த ஜாக்ஸனின் உடல் அடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
தங்க முலாம் பூசப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த மைக்கல் ஜாக்ஸனின் உடல், பாரஸ்ட் லான் ஹில்ஸ் பகுதியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சி தனிப்பட்ட குடும்ப நிகழ்ச்சியாக மட்டும் நடத்தப்பட்டதால், குடும்பத்தினர் தவிர வேறு யாரும் அதில் கலந்து கொள்ளவில்லை. ரசிகர்களும் பார்வையிட அனுமதிக்கப்படவில்லை.
அதன் பின்னர் மைக்கேல் ஜாக்ஸனின் கடைசி விருப்பப்படி அவரது நினைவஞ்சலி பிரபலமான ஸ்டேபிள்ஸ் மையத்தில் பிரமாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது.
உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து குவிந்திருந்த 20 ஆயிரம் பேர் இந்த நினைவஞ்சலியில் கலந்து கொண்டனர்.
பாதிரியார் லூசியஸ் ஸ்மித் பிரார்த்தனையுடன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் மரியா கேரி, டிரே லோரன்ஸுடன் இணைந்து பாடினார். கோடிக்கணக்கான ரசிகர்களின் கண்ணீருடன் விடைபெற்றார் ஜாக்ஸன்!
ஜாக்ஸனின் புகழ் பெற்ற பாடல் ஒன்றை அவர் பாடினார்.
இசையுலகைச் சேர்ந்த பாரி கோர்டி, கூடைப்பந்தாட்ட வீரர்கள் மாஜிக் ஜான்ஸன், கோபே பிரையன்ட், ஜெனிபர் ஹட்சன், ஜான் மேயர் என பிரபலங்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
பாடகர் ஸ்டீவி ஒன்டர் உருக்கமாகப் பேசி பாடினார். ஜாக்ஸனின் நெருங்கிய தோழியான டயானா ரோஸ் மற்றும் நெல்சன் மண்டேலா ஆகியோர் விடுத்த இரங்கல் செய்திகளைப் பாடகர் ஸ்மோக்கி ராபின்சன் வாசித்தார்.
முன்னதாக ஜாக்ஸனின் உடல் ஸ்டேபிளஸ் மையத்திற்கு ரசிகர்கள் அஞ்சலிக்காகக் கொண்டு வரப்பட்டது. நிகழ்ச்சியில் ஜாக்ஸனின் ஐந்து சகோதரர்கள், இரு சகோதரிகள், மூன்று குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
ஜாக்ஸனின் மகள் பாரீஸ் தனது தந்தை குறித்து பேசி முடித்ததும் அடக்க முடியாமல் கதறி அழுதார். அதேபோல ஜாக்ஸனின் சகோதரரான ஜெர்மைன் ஜாக்ஸனும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல், ஸ்மைல் என்கிற பாடலைப் பாடினார்.
ஜாக்ஸனின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கார்களில் ரசிகர்கள் கிளம்பியதால் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
உலகம் முழுவதும் ஜாக்ஸனின் நினைவஞ்சலி நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. மொத்தம் 16 டிவி நிறுவனங்கள் இதை நேரடியாக ஒளிபரப்பு செய்தன. கிட்டத்தட்ட உலகம் முழுவதும் உள்ள டிவி நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்பு செய்தன.
உலகின் மிகப் பெரிய மீடியா நிகழ்ச்சியாக மாறிப் போயிருந்தது ஜாக்ஸனின் நினைவஞ்சலி நிகழ்ச்சி.
ரசிகர்கள் கண்ணீர் மல்க விடை கொடுக்க பூவுலகிலிருந்து விடை பெற்றார் ஜாக்ஸன்.
Michael Jackson Memorial ( மைக்கல் இறுதி மரியாதை நிகழ்வு ஒளிப்பதிவு)
“We Are The World” / “Heal The World”
http://www.chicagonow.com/blogs/gowhere-hip-hop/2009/07/michael-jackson-memorial.html