அதிஉயர் பாதுகாப்பு வலயமாக முல்லைத்தீவு பிரகடனம் : அரசாங்க அதிபர்

mullai-ga.jpgமுல்லைத் தீவு நகர் அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி மேரி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார் என இணைய தள செய்தி ஒன்று குறிப்பிடுகிறது.  அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது :

திருகோணமலை புல்மோட்டையிலுள்ள ‘சகனகம’ நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட இடம்பெயர் மக்களை நேற்று ஞாயிற்றுக்கிழமை நேரில் வந்து பார்வையிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வன்னியில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையையடுத்து அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது புல்மோட்டை சகனகம நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களைச் சந்தித்த அரச அதிபர் அந்த மக்களின் குறை,நிறைகள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன் அவர்களது கேள்விகளுக்கும் பதிலளித்தார். இதன்போது அவர் கூறுகையில்,

“தற்போதைய நிலையில் குறைந்தது அடுத்த மூன்று மாதங்களுக்கு இங்குள்ள முகாம்களிலேயே நீங்கள் தங்க வேண்டியிருக்கும். அதன்பின் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் பணிமனை மாங்குளம் பகுதியிலேயே அமையவுள்ளது.

இடம்பெயர்ந்த முல்லைத்தீவு மக்கள் அனைவரும் மாங்குளம் பகுதிக்கே அழைத்துச் செல்லப்படுவர். முல்லைத்தீவு நகர் அதிஉயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எனவே முல்லைத்தீவுக்கு எவரையும் அழைத்துச் செல்ல முடியாது. அதனால் அனைவரையும் மாங்குளத்திற்கே அழைத்துச் செல்வோம்” என்றார். இவ்வாறு அச்செய்தியில் குறிப்பிடப்படுகின்றது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • நண்பன்
    நண்பன்

    // முல்லைத் தீவு நகர் அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி மேரி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.//

    இப்படி தான் தெரிவிக்கவில்லை என நேற்றைய பீபீசி தமிழ் சிங்கள சேவைகளில் இமெல்டா தெரிவித்துள்ளார்.

    தவிரவும் அப்பகுதி வீடுகளில் சேதமின்றி இருப்பதாகவும் , அப்பகுதியில் மக்கள் குடியமர்த்தலுக்கான பணிகள் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

    அவரது செவ்வியைக் கேட்க:
    http://www.bbc.co.uk/mediaselector/check/tamil/meta/tx/tamil_1545?size=au&bgc=003399&lang=ta&nbram=1&nbwm=1

    Reply
  • vanthijathevan
    vanthijathevan

    இந்த அம்மணிக்கு இதுவே வேலையாப் போச்சு. முதலில் சொல்லுவார். பிறகு இல்லையென்பார். (முன்னரும் இப்படித்தான் வன்னியின் சனத்தெகை பற்றி என நினைக்கிறேன்) பிரச்சனைக்குள்ளானார். பொறுப்போடு தகவல்களை சொல்லுங்கள். அது சரி சண்டை எல்லாம் முடிந்த பின்பு பாதுகாப்பு வலயம் எதற்கென்று சின்னப் பிள்ளை கூட யோசிக்குமே? சட்ட விரோத செயல்கள் எதையோ செய்யப் போகின்றார்கள்.

    Reply