விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச உறவுகளுக்கான செயலகத்திற்கென பிரத்யேக இணையதளம்

ltteir-banner-1.jpgவிடு தலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச உறவுகளுக்கான செயலகத்திற்கென பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விடுதலைப் புலிகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் இன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் நிலைப்பாடுகள், அனைத்துலக உறவுகளுக்கான செயலகம் மேற்கொண்டு வரும் ராஜதந்திரப் பணிகள் போன்றவற்றை மக்களுக்கு அறியத்தருவதும் அவை தொடர்பான கருத்துக்களை மக்களுடன் பரிமாறிக் கொள்வதும் அவசியம் என எமது இயக்கம் உணர்கின்றது.

இதற்கு துணைபுரியும் வகையிலேல் www.ltteir.org என்ற இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

மேலும் – மக்களோடு நெருங்கி செயல்படும் நோக்குடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் அவர்களுக்கு என பிரத்தியேகமாக – ‘பத்மநாதன் பக்கங்கள்’ எனும் ஒரு சிறப்புத் பகுதியும் இந்த தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.  வாரம் தோறும் சனிக்கிழமைகளில் தமிழிலும், புதன்கிழமைகளில் ஆங்கிலத்திலும் அவர் தனது கருத்துக்களை இச்சிறப்புப் பக்கத்தில் பதிவு செய்வார். அதில் அவர் மக்களுடன் கருத்துப் பரிமாற்றங்களைச் செய்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ltteir-banner-1.jpg

Show More
Leave a Reply to palli Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • நண்பன்
    நண்பன்

    அன்று பூவொன்று புயலானது
    இன்று புலியொன்று பூனையானது

    Reply
  • thurai
    thurai

    திட்டம் போட்டு திருடிய கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது.
    அதனைத் தட்டிக்கேட்கும் நம்மைப்பார்த்து துரோகிகள் எனகத்துது.

    துரை

    Reply
  • palli
    palli

    அப்ப இவர் வருடத்தில் ஒருமுறைதான் ஏசுவாரா. அல்லது நாள் தோறும் கண்டபடி திட்டுவாரா; மாவீரர் நாள் என தலையின் பிறந்த நாளை அமோகமாக கொண்டாடியும் பணம் பார்த்தும் மகிழ்ந்த கூட்டம்; இப்போது தலை இறந்த தினத்தையும் அழிக்கபட்ட புலிகள் ;மறுக்கபட்ட ஈழம் இப்படி ஏதாவது சொல்லி அன்று மட்டும் மல்லாக்க படுத்து துப்ப கூடும்; எது எப்படியோ பல புண்ணாக்குகள் அசிங்கபட போவது உன்மை;

    அதுசரி நேற்று கனடாவில் உயிர்பெறுவோம் நிகழ்வு; இன்று பாரிஸ்சில் ஆறுதல் ஆட்டம்; நாளை எங்கு என்னவோ; இதில் வேடிக்கை என்னவெனில் கனடா புலிக்கும் பாரிஸ்புலிக்கும் உடன்பாடு இல்லையாம்; பாரிஸ் புலி சொல்கிறது கனடா புலி(KP) திருடர்களாம்; உன்மைதானே; கனடா புலி இறுமுகிறது பாரிஸ் புலி மட்டுமல்ல தலை இருக்கு என சொல்லும் அத்தனை புலியும் முட்டாள்கள் என அதுவும் நிஜம்தானே; ஆக இதுவரை முட்டாள் கூட்டமும் திருடர் படையும் தான் புலி புண்ணாக்குகள் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கின்றனர்; எந்த ஒரு இயக்கமும் இப்படி பிரிந்து சின்னாபின்னமாக்க படவில்லை; அனைத்து அமைப்புகளும் இதுவரை செயல்படுவது கண்முன் பார்க்கிறோம்; அதேபோல் கருனாபோல் டக்கிளசோ அல்லது பரந்தன் ராசனோ அல்லது சிவாஜிலிங்கமோ; அடைக்கலனாதனோ ஏன் பாலகுமாரோ கூட காட்டி கொடுக்க இல்லை என்பது இன்று இந்த ஒட்டுகுழு என கிண்டல் அடிதவர்களுக்கு புரியுமா;

    Reply