வடக்கில் மீன்பிடித்துறை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்!

felixperera.jpgவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் கடற்றொழில்துறையை மேம்படுத்த மீனவக் கிராமங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படும் என மீன்பிடிää நீரியல்வளத்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.

நேற்று ஜா-எலயில்  நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் அமைச்சர் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

இத்திட்டத்தின் கீழ் மீனவர்களுக்குத் தேவையான படகுகள்,  வலைகள் மற்றும் மீன்பிடிக்குத் தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படவுள்ளன. வடக்கில் மீன்பிடித்தடைகள்; இப்பொழுது அகற்றப்பட்டு  24 மணி நேரமும்  மீன்பிடியை மேற்கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 219 மீனவக் கிராமங்களில் உள்ள 39 ஆயிரத்துக்கும்  அதிகமான மீனவர்கள்; நன்மையடையவுள்ளனர்.

1983ஆம் ஆண்டுக்கு முன்னர் வருடாந்தம் 67, 500 மெற்றிக் தொன்னையும் விடக் கூடுதலான மீன்கள் வடக்கில் இருந்து தெற்கிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.. எனினும் வடக்கின்  கடற்றொழில்துறையை மேம்படுத்துவதன் மூலம் அதைவிடக் கூடுதலான மீன்களை தெற்கிற்கு கொண்டுவர முடியும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார் 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *