அன்பென்று கொட்டு முரசே!!! – தோழர் சிவம் நினைவு நிகழ்வு : தேடகம்

Comrade_Siva_Meetingதோழர் சிவம் அவர்களின் நினைவு நிகழ்வு ரொறன்ரோவில் நிகழ்கிறது. தேடகம் அமைப்பினரால் யூலை 4ல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் இலங்கையில் இருந்து சி சிவசேகரம் கலந்துகொள்கிறார். இவரே தோழர் சிவம் பற்றிய நினைவுப் பேருரையை ஆற்றுகிறார். சமூக ஒடுக்குமுறைக்கு எதிராய் போராளியாய் எழுந்து தன் வாழ்நாய் முழுவதும் மானிடத்திற்காய் உழைத்தவர் தோழர் சிவம் என்ற தோழர் கணேசமூர்த்தி சிவகுமாரன் என தேடகம் அவரை கௌரவித்து உள்ளது. அன்பென்று கொட்டுமுரசே என்ற தலைப்பில் இந்நிகழ்வை தேடகம் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

Further Details : Comrade_Siva_Meeting

Related Articles:

கம்யூனிஸ்ட் ஆர்வலர் சிவம் கனடாவில் மரணம்

கொம்யூனிஸ்ட் சிவா காலமானார்! : தேடகம் (செய்திக் குறிப்பு)

Show More
Leave a Reply to s.raveendran Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

14 Comments

  • karaveddy
    karaveddy

    தோழர் சிவம் பற்றி பேசும்போது தோழர்கள் சிவராசா ரத்தினம் ஆகிய இருவரையும் மறக்கமுடியாது. இவர்கள் மூவரும் கரவெட்டியை பிறப்பிடமாக கொண்டவர்கள். சண்முகதாசன் தலைமையிலான கம்யுனிஸ்ட் கட்சியில் சேர்ந்து புரட்சிக்காக பங்காற்றியவர்கள். மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் அளவிற்கு மூவரும் சேர்ந்து உழைத்ததை மறக்கமுடியாது. குறிப்பாக சாதிப்போராட்டத்தின் போது இந்த தோழர்கள் மூவரும் தங்கள் கட்சி சார்பாக ஆற்றிய பங்கை இன்றும் கூட தாழ்த்தப்பட்ட மக்கள் நன்றியுடன் நினைவுகூறுவதை நாம் காணலாம்.

    1983ம் ஆண்டுக்குப் பின்னர் போராளி இயக்கங்களின் வளர்ச்சியின்போது பல இயக்கங்கள் போராளிகள் மார்க்சிய பாதையை தேர்ந்தெடுக்கவும் மார்க்சிய அறிவை பெற்றுக்கொள்ளவும் இவர்களின் பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை.

    ரெலோ இயக்கத்தில் போராளி தாஸ் அவர்களின் பல நல்ல மாற்றங்களுக்கு இவர்களே பின்னனியில் இருந்தனர். அதனால் ஆத்திரம் கொண்ட “பொபி” பிரிவினர் இவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படும் என எச்சரித்து பிரசுரம் வெளியிட்டனர்.

    அதன்பின்னர் நெல்லியடியில் புலிகள் இயக்கத்தின் பொறுப்பாளராக இருந்த சுக்ளா என்பவர் தோழர் ரத்தினம் சிவராசா இருவரையும் விமர்சனம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பிடித்துசசென்று சித்திரவதை செய்தார். அவர்களை கொல்வதற்கு திட்டமிட்ட வேளை அவர்கள் தப்பித்துச் சென்றனர்.

    இவ்வாறு பல கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் அவர்கள் தங்கள் புரட்சிகரப்பணிகளில் இருந்து ஒதுங்கவில்லை. மாறாக கிடைக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம் பயன்படுத்தி தங்களால் இயன்ற பணிகளை மேற்கொண்டுவந்தார்கள்.

    இயக்க தலைமைகளுடன் முரண்பட்டு பாதுகாப்பு தேடிவந்த பல போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து இந்த மூன்று தோழர்களும் காப்பாற்றியதை இன்றும் கூட பல போராளிகள் நன்றியுடன் நினைவுகூறுவதை நாம் காணலாம்.

    இறுதியாக தோழர் சிவம் அவர்கள் கனடா சென்று இறக்கும் வரை தன்னால் இயன்ற பணிகளை மேற்கொண்டதை தேடகம் பிரிவினர் நினைவு கூறுகின்றனர். அதுபோல் தோழர் ரத்தினம் அவர்கள் இந்தியாவிலும் தோழர் சிவராசா அவர்கள் கொழும்பிலும் இறக்கும் வரை தங்கள் கொள்கையில் உறுதியுடன் இருந்ததையும் தங்களால் இயன்ற பணிகளை மேற்கொண்டு வந்ததையும் நாம் என்றும் நினைவு கூறவேண்டியவை.

    இன்றைய இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இந்த தோழர்கள் எம் மத்தியில் இல்லையே என்ற வருத்தத்தைத் தந்தாலும் அவர்கள் காட்டிய பாதையில் சென்று வெற்றியை அடைய நாம் எடுத்துக்கொள்ளும் திடசங்கற்பமே அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலிகளாக இருக்கும்.

    எவ்வளவு நல்ல தோழர்களாக இருந்தாலும் அவர்கள் தனிப்பட்ட முறையில் எவ்வளவு நல்ல பணிகள் செய்தாலும் ஒரு பலமான கட்சி ஆதாரமாக இல்லாவிடின் அவை யாவும் பயன் உள்ளவையாக அமையமாட்டா. இதுதான் இந்த தோழர்களுக்கும் நடந்தது. எனவே இந்த நிலையை உணர்ந்து இனியும் இவ்விதம் அமையாவண்ணம் ஒரு புரட்சிகர கட்சி கட்டும் பணியில் தோழர்களின் பங்களிப்புகள் அமைய வேண்டும் .

    தோழர்கள் சிவம் சிவராசா இரத்தினம் புகழ் ஓங்குக.
    மார்க்சிய லெனிச மாசேதுங் பாதையில்
    புதிய ஜனநாயகப் புரட்சியை வென்றெடுப்போம்.

    Reply
  • Sooriyasegaram M
    Sooriyasegaram M

    Dear Comrades,

    Why I think that we need a new direction and a new Socialist Party in Sri Lanka and a supporting Socialist Group among Sri Lankans in London

    Exclusive Tamil parties have achieved nothing. On the contrary they have been a disaster. Exclusive Sinhala parties also have been a disaster. Neither of them has solved any of the problems faced by the people of Sri Lanka such as large scale poverty, unemployment, low wages, no livelihood, landlessness, oppression of national minorities and women, caste oppression and suppression of democratic rights including freedom of press, rule of law and independent judiciary.

    Parties on both sides of the sectarian divide, barring a few very small left group-lets, are capitalist and anti-democratic. The small left group-lets are too sectarians to become a people based parties. They are irrelevant today.

    The choice before us today is either Socialism or Barbarism, not only in relation to Sri Lanka but on a world scale. The events in Sri Lanka and around the globe provide ample evidence for this. This evidence is piling up as each day passes by. We cannot simply watch these events in silence while Barbarism triumphs.

    Let us therefore do the historic task of reversing the slide towards Barbarism by first forming a “Sri Lanka Socialist league” in London.

    The aim is to rally all active socialists interested in taking Sri Lanka on a socialist path while promoting and solidarising with like minded groups fighting for the oppressed in other countries. This group has to be actively engaged in the theory and practice of socialism and be prepared to work among people at grass root level and help develop leaders among the oppressed peoples. There is no place in this group for arm chair socialists and sectarians.

    By doing this we have nothing to loose except liberating the oppressed and exploited. Today many people, who supported the Sinhala parties and the Tamil parties, are looking lost and cheated and seeking a new direction.

    Many comrades have expressed enthusiasm to launch a Socialist Group in London among Sri Lankans. We can choose an appropriate name democratically Eg. Sri Lanka Socialist League (SLSL).

    Please let me know if you are interested in coming along to a decision and launch meeting say on Sunday(12 July) – venue to be decided. Each of you can bring along 5 or more like minded people for this launch meeting.

    With fraternal greetings

    Soori

    Reply
  • த ஜெயபாலன்
    த ஜெயபாலன்

    நண்பர் கரவெட்டி மற்றும் ஏனைய நண்பர்களுக்கும் நாங்கள் பயன்படுத்துகின்ற மொழி எங்களையும் அறியாத ஆதிக்க மொழியாக அமைந்து விடுவதை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். சாதிய அமைப்பை தகர்க்க வேண்டும் என விரும்பும் நாம் தோழர்கள் சிவா ரத்தினம் சிவராசா ஆகியோரை பின்பற்ற விரும்பும் நாம் எமது மொழியில் மாற்றத்தை கொண்டுவருவது மிக அவசியம்.

    சாதியம் பற்றி உரையாடும் போது நாம் தலித்துக்கள் தாழ்த்தப்பட்டவர்கள் கீழ் சாதியினர் என்ற சொற்களைப் பயன்படுத்துகின்றோம். ஆனால் அந்த சொற்களே சாதியத்தை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துவதாக உள்ளது. ஆகவே ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுக்குபவர்கள் என்ற பதங்களைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். சாதிய அடிப்படையிலான சமூகங்களை ஒடுக்கப்பட்ட சமூகம் எனக் குறிப்பிடலாம்.

    இதனை ஒரு விவாதத்திற்கான விடயமாகக் கொண்டு ஏனையவர்களும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்வது பயனுடையது என நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களையும் அறிய விரும்புகிறேன்.

    மேலும் நண்பர் கரவெட்டி கூறும் புரட்சிகரக் கட்சி பற்றியும் நண்பர் சூரியசேகரம் குறிப்பிடும் சிறிலங்கா சோசலிஸ்ட் லீக் பற்றியும் உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள்.

    த ஜெயபாலன்

    Reply
  • palli
    palli

    //உரையாடும் போது நாம் தலித்துக்கள் தாழ்த்தப்பட்டவர்கள் கீழ் சாதியினர் என்ற சொற்களைப் பயன்படுத்துகின்றோம். ஆனால் அந்த சொற்களே சாதியத்தை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துவதாக உள்ளது. ஆகவே ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுக்குபவர்கள் என்ற பதங்களைப் பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும் என நிஜனைக்கிறேன்//

    என்ன ஜெயபாலன் தவறை செய்யுங்கள். ஆனால் அழகாய் செய்யுங்கள் என்பது போல் சொல்லுகிறீர்களா? ஏன் அழைப்பதுக்காகதானே பெயர் வைத்துள்ளீர்கள் அதன் பின் எதுக்கு அடை மொழி; ஒரு பெண் கற்பழிக்கபட்டால் அவள் பாதிக்கபடுவது அன்று மட்டும்தான், ஆனால் இந்த சமுதாயம் அந்த செய்தி மறகாமல் அடிக்கடி அது பற்றி பேசுவதால் அவள் தினம்தோறும் கற்பழிக்கபடுவதாக ஒரு வழக்கில் தீர்ப்பில் சமுதாய தவறை நீதிபதி ஒருவர் சுட்டிகாட்டியதாக படித்தேன்; அது போல் இந்த சாதிவிடயத்தையும் ஒரு பொருளாதார பிரச்சனையாக எடுத்து கொண்டு பார்த்தால் எல்லாமே சரியாகி விடும்; அதுக்கு உதாரனம் இன்று புலம்பெயர் தேசம்; ஜெயபாலன் உங்கள் கருத்தையே நான் தங்களுக்கு சுட்டிகாட்ட விரும்புகிறேன், (தலித் மகானாட்டில்) தலித்துக்களுக்கு என இட(கல்வியில்) ஒதுக்கீடு வேண்டாம்; ஆனால் தரமான கல்வியை கொடுக்க வேண்டும்; இட ஒதுக்கீடு என்பதே ஒரு மனிதனை பாவப்பொருளாக்குவதுதான்; மதிப்பவர்களை மதியுங்கள்; மதிக்காதவர்களை மிதிக்க வேண்டாம் விலகி செல்லுங்கள்;

    சிவம்,சிவா,ரத்தினம்; கரவெட்டி மக்களுக்கு பல நல்ல விடயங்களை செய்தார்கள் என்பதில் கருத்து முரன்பாடு இருக்காது; ஆனால் அங்கேயும் லெனின்;புகழ் ஓங்குக. மார்க்சிய லெனிச மாசேதுங் பாதையில் செயல்பட்டதை என்னால் ஏற்க்க முடியவில்லை; சில இடங்களில் மனிதராக இருக்க வேண்டாமா, இவர்கள் ஒடுக்கு முறைக்கு எதிராக செயல்பட்டனர் என்பது என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை; அதுக்கு உரிய காரனம் வாதம் செய்யவும் நான் விரும்பவில்லை, இறந்தவர்களை மதிப்பதும் அவர்கள் செய்யத நல்ல காரியங்களை பாராட்டுவதும் மனிதனாக பிறந்த அனைவரும் பின்பற்ற வேண்டியதே; இதுக்கு ஒரு உதாரனம் இன்று புலம் பெயர் தலித்திய கொஸ்ற்றி எதோ ஒருவழியில் தமது பெயரை வெளி கொணர முயல்வதால் இப்படி சின்னபிள்ளைதனமாக செயல்பட துடிக்கின்றனர்;

    கம்பர் மலை குடும்ப கொலை; (கூலிக்காக)
    வல்லைவெளி ஆறுபேர் வெட்டி கொலை; (கூலிக்காக)
    கமிலினி கொலை (காமத்தால்)
    தென்மராட்ச்சியில் கோவில் கொலை (தேர் இழுப்பால்)
    இப்படி என்னால் பல சம்பவங்களை சுட்டி காட்ட முடியும் இதில் அனைத்திலும் ஏதோ ஒரு வழியில் சாதி ஒழிந்து இருந்தது; ஆனால் யாரும் இதை அன்று கண்டுக்கவில்லை; ஆனால் பின்பு சிலகாலம் களித்து இதில் சம்பந்த பட்ட அனைவருக்கும் சாதி வேறுபாடு இன்றி தண்டனை கிடைத்தது; யாரால் என்பது வேண்டாம்; இதில் வேடிக்கை என்ன எனில் சமுதாயத்துக்காக வாழ்ந்த வாழ்கின்ற யாரும் அங்கு வரவில்லை என்பது வேதனைதான்; ஆகவே இனிமேலாவது மனிதர்களது தேவைகள் தேடல்களை பாருங்கள்; நிறம்; குணம்; குலம் ;கோத்திரம்; தகுதி; சரித்திரம் ;இப்படி தேவையற்றதை பாராதையுங்கள்; பேசாதீங்கள், கேக்காதீர்கள்;
    தொடரும் பல்லி;;;

    Reply
  • R.S.Ganeshan
    R.S.Ganeshan

    Kindly inform me about Com.Soori’s Lankan Socialist League’s inaugural meet and venue.

    Reply
  • Jeyabalan T
    Jeyabalan T

    //என்ன ஜெயபாலன் தவறை செய்யுங்கள். ஆனால் அழகாய் செய்யுங்கள் என்பது போல் சொல்லுகிறீர்களா? ஏன் அழைப்பதுக்காகதானே பெயர் வைத்துள்ளீர்கள் அதன் பின் எதுக்கு அடை மொழி; // பல்லி

    உலகில் இரு சாதிகள் உண்டு. ஒன்று ஒடுக்குகின்ற சாதி மற்றையது ஒடுக்கப்படுகின்ற சாதி. இவ்வாறு குறிப்பிடுவது தவிர்க்க முடியாதது. பொருளாதார அடிப்படையில் கீழ் நிலையில் உள்ளவர்களே மிகுந்த ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. பொருளாதார காரணங்கள் தவிர்ந்த காரணங்களும் ஒடுக்குமுறைக்கு காரணமாக அமைகின்றது.

    இலங்கையில் தமிழ் மக்கள் பொருளாதார காரணங்களுக்காக மட்டும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகவில்லையே. தமிழர்கள் என்ற காரணத்தாலேயே பெரும்பாலும் ஒடுக்கப்படுகிறார்கள். அடிப்படையில் சாதியும் அவ்வாறு தான் உள்ளது.

    த ஜெயபாலன்

    Reply
  • palli
    palli

    //உலகில் இரு சாதிகள் உண்டு. ஒன்று ஒடுக்குகின்ற சாதி மற்றையது ஒடுக்கப்படுகின்ற சாதி. இவ்வாறு குறிப்பிடுவது தவிர்க்க முடியாதது//
    நான் வாழும் நாட்டில் அப்படி இல்லை; முதலாளி தொழிலாளி எனதான் இருக்கின்றனர்; அதில் பல தொளிலாளி இன்று முதலாளி ஆகிவிட்டனர் என்பது கண்முன்னே பார்க்கின்றோம்; சோம்பேறியாக இருந்து விட்டால் சோறும் கிடைக்காது தம்பி இதல் நான் சொல்லவில்லை;

    //இலங்கையில் தமிழ் மக்கள் பொருளாதார காரணங்களுக்காக மட்டும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகவில்லையே//
    அதே இலங்கை தமிழரை புலம்பெயர் தேசம் வந்தபின் சாதியோ அல்லது ஒடுக்கு முறையோ ஒன்றும் செய்ய இல்லையே; என்ன காரனம் உழைப்பு உழைப்பு உழைப்பு. அங்கு ஒடுக்கபட்டவர்கள் என சொல்லும் பலர் இங்கு பலருக்கு வாழவோ அல்லது முன்னேறவோ முன் உதாரணமாக உள்ளதை ஜெயபாலன் மறுக்க முடியுமா; நான் தலித்தென நாடகமாடும் நபர்களை சொல்லஇல்லை; அதில்கூட சிலர் தமது ஸ்தாபனங்களில் பலருக்கு வேலைவாய்ப்பு கொடுத்திருப்பதை பார்க்கலாம்: ஜெயபாலன் திருமபவும் சொல்கிறேன் எவருக்கும் உழைக்கும் எண்ணமும் அதுக்குரிய வழியும் கிடைத்து விட்டால் எவராலும் எவரையும் அடக்க முடியாது; அடக்கிய புலி அழிந்து போனகதை தெரியும்தானே; ஆண்சாதி; பெண்சாதி இரண்டுமே தவறென இப்போது மனிதசாதி என நினைக்கும் காலத்தில் எமது ஏலாதனத்துக்கு யார் மீதோ தவறை சொல்லி நாம், முன்னுக்கு வர நாமே தடஙலாக இருக்க வேண்டாம் என்பதுதான் பல்லியின் கருத்து;

    Reply
  • மாயா
    மாயா

    பல்லி ,நாட்டில் சாதிப் பிரச்சனை தீர பலர் போராடினார்கள். புலத்தில் , சாதிப் பிரச்சனை குறித்து ஏனைய இனத்தவருக்கு (வெள்ளைகள் என வைத்துக் கொள்ளலாம்) தெரியாது. எனவே வந்த அனைவரும் ஒன்றாக முகாமில் இருந்து , ஒன்றாக வாழ வேண்டியேற்பட்டது.

    பின்னர் ஏன் சில புண்ணாக்குகள் தங்களை தலித்துகள் என்று மீண்டும் இல்லாததை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகினம். அங்கு நாறிச்சாம். இங்க என்ன அது மட்டும் மணக்குதா?

    Reply
  • palli
    palli

    மாயா ஏற்கனவே பல்லிக்கு வாய்கொழுப்பு என சிலர் பேசிக்கிறார்கள்; அதுவும் இந்த தலித்தியம்; பெண்ணியம்; கமினிஸ்ட்; புலம் பெயர் அறிவுஜீவிகள்; மாற்று கருதாளர்கள் இவைக்கெல்லாம் பல்லி பாவபட்ட ஜீவன் ஆகவே உங்கள் கருத்து உங்களுடையதாகவே இருக்கட்டும்; ஆனாலும் மறுக்க முடியாத யதார்த்தம்; இதைதான் ஜெயபாலன் தலித்மகாநாட்டில் சொல்லி சிலரது அன்புக்கு ஆளானார்; முடியாது எனநினைப்பவன் முன்னுக்கு வர முடியாது; முன்னுக்கு வரநினைப்பவன் முடியாது என கனவிலும் நினைக்கமாட்டான்; பல்லி இரண்டாவது ரகம்;,மாயா எப்படி;

    Reply
  • msri
    msri

    பல்லி!
    சிவம் சிவா ரத்தினம்> இவர்கள் சண் தலைமையிலான க.கடசியின் வெகுனை அமைப்பான> தீணடாமை ஒழிப்பு வெகுனை இயக்கம் 66-ல் நடாத்திய வெகுனைப் போராட்டங்களில் பங்குபற்றியதை நேரில் கணடறிந்தவன்! இவர்கள் சாதி ஒடுக்குமறைக்கு எதிராக செயல்ப்படவிலலை! இதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்னகின்றீர்கள்! வாதம்செய்யவும் விரும்பவில்லை என்கின்றீர்கள்! உங்களது இப்போக்கை என்னாலும் எற்க முடியவில்லை! இதுபற்றிய உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்! சரி பிழை பற்றி விவாதிப்போம்! அடுத்து தற்போதைய புலம்பெயர் தலித் கம்பனிகளுகளுக்கும் > சிவம போன்றவர்களுக்கும்>அவர்களின் போராட்டங்களுக்கும் என்ன சமபந்தம் இருந்ததது> இருக்கின்றது!

    Reply
  • msri
    msri

    பல்லி
    இலங்கைத் தமிழர் புலம்பெயர் தேசங்களுக்கு வந்தபின்> சாதியோ> ஒடுக்குமுறையோ ஒன்றும் செய்யவில்லை என்கின்றீர்!:> புலம் பெயர் தேசங்களில் திருமணப் பேச்சை எடுத்தாலே> முதலில் கேட்கப்படும் கேள்வி இவர் என்ன சாதி என்பதே! அதன்பின்பே மற்றவைகள்! புலம்பெயர் வாழ்வில்> சாதி மாறிய ஏத்தனை காதல்கள் பிரிக்கப்பட்டுள்ளன! அடிபிடி சண்டைகள் > ஏன் கொலைகள் கொலைமுயற்ச்சிகள்! இதொண்டும் இந்த பல்லிக்கு தெரியாதோ?………………………

    Reply
  • palli
    palli

    M சிறி தாங்கள் சொன்னவைகளை நான் மறுக்க இல்லை;கவனிக்கவும் எனது பின்னோட்டத்தை; அழிந்து போன அழியவேண்டிய விடயத்தை வாதத்துக்காககூட எடுக்க வேண்டாமே என சொல்கிறேன்; அவர்கள் போரடியது பற்றி நான் குறை சொல்லவில்லை; சில விடயங்களை குறிப்பிட்டுள்ளேன் இவை 78 80ல்நடந்தவை. அதுவும் கரவெட்டியை களமாக வைத்து நடந்தவை. அப்போது இவர்கள் எங்கே போனார்கள் அது பற்றி ஏன் பேசஇல்லை; பேச வேண்டிய இடங்களில் பேசாமல் இருந்து விட்டு; காலம் கடந்து அதை பேசுவதும் பல போராட்ட தோல்விக்கு காரணம் என்பது சிறிக்கு தெரியாதா என்ன;

    Reply
  • palli
    palli

    சிறி நான் சொன்னது ஒடுக்குமுறை அடக்குமுறை இதைதான் ஜெயபாலனும் எழுதி இருந்தார்; திருமணம் காதல் உங்களது தனிபட்ட பிரச்சனை அதுக்குதான் நான் சொன்னேன் எம்மை மதித்தால் மதிப்போம் இல்லையேல் விட்டு விலகுவோம் அவர்களுடன் மல்லு கட்டுவது எமது நேரத்தை வீண் அடிக்கும்; ஆகநீர் சொல்லும் காதலோ கத்தரிக்காயோ பற்றி பேசுவது எனக்கு உடன்பாடு கிடையாது; இது குடும்ப பிரச்சனையே தவிர அதை சமுதாய பிரச்சைனையாக்கி சூடுகாய நினைப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது;

    Reply
  • s.raveendran
    s.raveendran

    i know sivaraja @sivam.they very forwerd peoples. sivaraja is best actor. remember again kanthan karunai nadagam.narather part is very suitable to his acting. siva is avery silence person. he is very intrusted in foot ball @ other games. these 2 are ‘samuga pooraligal’.

    Reply