கனடியத் தமிழ் மாணவர் சமூகம், கனடியத் தமிழர் சமூகத்துடன் இணைந்து முன்னெடுக்கும் ‘உயிர்த்தெழுவோம்’ எழுச்சி நிகழ்வு ரொறன்ரோவில் குயின்ஸ்பாக் – ஒன்ராரியோ பாராளுமன்ற முன்றலில் நாளை சனிக்கிழமை 4 ம் திகதி மாலை 4.00 மணி- முதல் 8.00 மணி வரை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
palli
தலையை கிட்டதட்ட ஜேசுநாதருக்கு சமனாக கொண்டு வந்து விட்டார்கள்; அரசு கல்வி; போக்குவரத்து; குடியேற்றம் மின்சாரம்; சுகாதாரம் இப்படி நடந்தவைகளை மறந்து நாட்டை வளம் பெற செய்ய சிந்திப்பதுபோல் பாசாங்கு செய்ய ;இந்த குறவர் கூட்டமோ உயிர்த்தெளுவோம்!அடஙாமல் ஆடுவோம்; ஆறுதல் ஆட்டம்; அரவணைப்பு சதிராட்டம்; சங்கதி இல்லா பேயாட்டம்;புலம்பெயர் தேசத்தில் தமிழருக்கு ஒரு சின்னவீடு; பறக்காத விமானம் இப்படி சீர்கெட்டதனமான நடவெடிக்கயில் முனைய அங்கு மக்களோ இருமிருகமும் செய்யும் பங்காளி சண்டையில் நிலை குலைந்து சின்னா பின்னமாக்கபட்டு அழுவது யாருக்கும் கவலையில்லை;;
பார்த்திபன்
பல்லி,
நீங்கள் அவசரத்தில் தப்பாக விளங்கியுள்ளீர்கள். தலையங்கத்தை வடிவாக கவனியுங்கள் “உயிர்த்தெழுவார்” அல்ல “உயிர்த்தெழுவோம்” என்பதே. அதாவது நிகழ்ச்சியை நடத்துவோர் ……………….. இனித்தான் உயிர்த்தெழப்போகின்றார்கள். அந்த வகையில் அவர்கள் சொல்வது சரிதானே……
Summer boy
கோடை காலத்தில ஒரு முசுப்பாத்தி தேவைதானே?