இலங்கை அரசு, வணங்கா மண் கப்பலை அனுமதிக்காமல் வெளியேற்றியமை சர்வதேச விதிகளுக்கு மாறானது: கப்டன் முஸ்தபா

_vanankaman-captionali.jpgஇலங்கை சென்ற வணங்காமண் கப்பலை சோதனை நடத்தி, ஆயுதங்கள் இல்லை என்று உறுதி செய்த பின்னரும் கப்பலை அனுமதிக்காமல் வெளியேற்றினர். இது சர்வதேச விதிகளுக்கு மாறானது என கப்பலின் கப்டன் முஸ்தபா தெரிவித்துள்ளார்.  பொருட்களை இலங்கை அரசு ஏற்றுக் கொள்வதாக சொன்னாலும், மீண்டும் இலங்கை செல்ல விருப்பம் இல்லை. பொருட்களை இறக்கிவிட்டு, கோல்கட்டா செல்கிறோம் என்றார்.

இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டு, நிவாரணப் பொருட்களுடன் நடுக்கடலில் நின்று கொண்டிருந்த, “வணங்கா மண்’ கப்பல், நேற்றிரவு சென்னைத் துறைமுகத்திற்குள் வந்தது. கப்பலில் இருந்து நிவாரணப் பொருட்கள் இறக்கப்பட்டு, சரக்கு கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளது.

தற்போது கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்களை இலங்கை அரசு ஏற்றுக் கொள்வதாக சொன்னாலும், மீண்டும் இலங்கை செல்ல விருப்பம் இல்லை. பொருட்களை இறக்கிவிட்டு, கொல்கத்தா செல்கிறோம் என்றார். இதைத் தொடர்ந்து, “வணங்கா மண்’ கப்பலில் உள்ள நிவாரணப் பொருட்கள் அனைத்தும் இறக்கப்பட்டு, கன்டெய்னர்களில் ஏற்றப்படுகின்றன.

இவை, வழக்கமாக செல்லும் சரக்கு கப்பல் மூலமாக இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளன. இரண்டு நாட்களில், இந்த பணிகளை முடித்து, நிவாரணப் பொருட்கள் கொண்ட சரக்கு கப்பல் இலங்கைக்கு செல்லும் என, எதிர்பார்க்கப்படுகிறது

Show More

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • nsk
    nsk

    This is a ploy by india to appease the diaspora. It is a nice play done by International Community to show it is India is the man who will deliver. We should not be fooled by Indians.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பாவம் கப்டனும், புலிப்பினாமிப் புண்ணாக்குகளுடன் சேர்ந்து அவருக்கும் புத்தியில் கோளாறு ஏற்பட்டுவிட்டது போலும். ஒரு நாட்டின் கடல் எல்லைக்குள் அந்த நாட்டின் அனுமதியின்றி உட்புக முடியாதென்ற அடிப்படை விதிமுறை கூடவா இவருக்கு தெரியாமல் உள்ளது. இவர்கள் அகதிகளுக்கு உதவுவது போல் படம் காட்டப் பார்த்தார்கள். அது முடியாமல்ப் போனதால் புலம்பலோ??

    Reply
  • nsk
    nsk

    Hello Partiban
    இலங்கை சென்ற வணங்காமண் கப்பலை சோதனை நடத்தி, ஆயுதங்கள் இல்லை என்று உறுதி செய்த பின்னரும் கப்பலை அனுமதிக்காமல் வெளியேற்றினர். இது சர்வதேச விதிகளுக்கு மாறானது என கப்பலின் கப்டன் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

    Please read the one below as well before make any comment which is published in thesam. When I contributed my intention was to give food and medicine to whoever got caught in the war. Many people did do for the same reason.

    Stop nonsense “புலிப்பினாமிப் புண்ணாக்குகளுடன்”

    ஐரோப்பிய மக்களால் வன்னி மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் எதிர்வரும் 8ஆம் திகதி சென்னை துறைமுகத்திலிருந்து பிறிதொரு கப்பல் மூலம் கொழும்பை வந்தடையவுள்ளது. வணங்காமண் கொண்டு வந்த பொருட்களை இந்திய கப்பலில் தான் அனுப்பி வைக்க வேண்டும் என்று இலங்கை அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

    இக்கப்பலிலிருந்த பொருட்களை சென்னை துறைமுகத்தில் வைத்து ஏற்றிக்கொண்டு இந்தியாவின் கொலரா எனும் கப்பல் எதிர்வரும் 6ஆம் திகதி கொழும்பு நோக்கிப் புறப்படவுள்ளது. பின்னர் 8ஆம் திகதி அக்கப்பல் கொழும்பு சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதைத் தொடர்ந்து நிவாரணப் பொருட்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களுக்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

    Stomach is one for all and food on the system cannot be stored whether you are rich or poor. So don’t say bad about sending the food items even LTTE supporters had not genuine intention.

    Partiban Are you expert on International sea water rules as you are making comment on the captain.

    Thanks

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    nsk . இலங்கை அரசு தமது எல்லைக்குள் அனுமதியில்லாமல் வந்த கப்பலை கைப்பற்றி சோதனை செய்தது. சோதனையின் பின் சந்தேகப்படும்படி ஆயுதங்கள இல்லையென்று உறுதி செய்தது என்பதற்காக, அதிலிருந்த பொருட்களை இறக்க அனுமதிக்க வேணுமென்று தாங்கள் சொல்வது எந்த விதியில் உள்ளது??

    இலங்கை சோதனை செய்து ஆயுதம் இல்லையென்று உறுதிசெய்த கப்பலைத் தான் இந்திய அரசும் கப்பலில் சந்தேகமாக இருக்கின்றதென்று தமது எல்லையை விட்டு வெளியேறுமாறும் பணித்து வெளியேற்றியது. பின்பு தமிழக முதல்வரின் கோரிக்கைக்காக செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக அனுப்பினால் தாம் ஏற்றுக் கொள்வோமென்று இலங்கை அரசு சம்மதித்ததால் இந்திய அரசும் சென்னைக்குள் நுழைந்து பொருட்களை இறக்கச் சம்மதித்தது. இவ்வளவு பிரைச்சினைகளும் எதனால் வந்தது. ஆரம்பித்திலேயே பலர் ஐ.நா ஊடாகவோ அல்லது செஞ்சிலுவைச் சங்கம் ஊடாகவோ பொருட்களை அனுப்புமாறு கோரிக்கை வைத்தும் அதனை ஏற்காது வீம்பாக வீரம் பேசி “வணங்காமண்” என்று ஆரம்பித்தவர்கள் பின்பு “கப்டன் அலி”யாக உருமாறி உருக்குலைந்தது எதனால். இவர்களை புலிப்பினாமிப் புண்ணாக்குகள் என்று நான் சொன்னது தவறென்று எடுக்கலாம் தான், ஏனெனில் நான் புண்ணாக்கை இவர்களோடு ஒப்பிட்டு புண்ணாக்கை கேவலப்படுத்தியதற்காக. சில அடிப்படை விதிகள் சாதாரணமாகவே எவருக்கும் தெரிந்தவை தான். அதற்காக அந்த விதிகளை படிச்சுத் தான் தெரிந்து கொள்ளனும் என்றில்லை. ஒரு வீட்டினுள் செல்வதென்றாலே அழைப்பு மணியை அழுத்தி வீட்டுக்காரரின் அனுமதியின் பின் தான் உள்ளே செல்கின்றோம். வீடு திறந்திருந்தால்………. உள் நுழைய முடியாது. இவற்றைக் கூட தெரிந்து கொள்ள முடியாத தாங்கள் எனக்கு அறிவுரை கூற முயலலாமோ??

    Reply