ஜனாதிபதியினால் ஸ்தாபிக்கப்படவுள்ள சர்வ கட்சிகளை உள்ளடக்கிய அபிவிருத்தித மற்றும் ஒருமைப்பாட்டிற்கான சர்வ கட்சி குழு கூட்டத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது..
ஜனாதிபதி செயலகத்தில் இக் குழுவின் முதலாவது கூட்டம் நடை பெறவிருக்கின்றது.தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தனித்தனி அழைப்பு தங்களுக்கு கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் இந்த அழைப்பிதழ் தங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட அநேகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பிற்கு வெளியே இருப்பதால் கூடி முடிவெடுக்கப்படும் எனவும்அவர் குறிப்பிட்டார்
romeo
சர்வகட்சி குழுக்கூட்டத்திற்கு சமூகமளிப்பவர்களுக்கு ஏதாவது கொழுத்த “சம்த்திங்” கிடைக்குமென்று அரசு அறிவிக்குமெனில் கூத்தமைப்பினர் அனைவரும் தவறாது சமூகமளிப்பார்கள். பணம்தான் இவர்களது இன்றைய குறிக்கோள்.
palli
அப்ப அப்படிதான் மறவர்கள் போய் வருகினமோ; ஆக அரசின் சொல்கேட்டு நடந்தால் ஆதாயம் நிச்சயம்; எப்படி எல்லாம் சம்பாதிங்கிறாங்க,,,