கோரம் இன்மையால் இன்று பிற்பகல் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது. கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சுக்கான குறை மதிப்பீட்டு விவாதம் சபையில் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை சபையில் போதிய கோரம் இல்லை என்பதை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களை சபைக்கு அழைக்கும் மணி ஒலிக்கப்பட்டது.
02:05 மணி முதல் 02:10 மணிவiரை மணி ஒலித்தபோதும் மொத்தம் 8 உறுப்பினர்களே அங்கு ஒன்று கூடினர். சபையை தொடர்ந்து நடத்துவதற்கு குறைந்தது 21 உறுப்பினர்கள் தேவை என்பதால் கோரமின்றி சபை ஒத்திவைக்கப்படுவதாக பிரதி நிருவாகத் தலைவர் அறிவித்தார்.