வடக்கில் புதிதாக மீட்கப்பட்ட பகுதிகளில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவதற்கான முன்னோடி நடவடிக்கைகளை பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு மேற்கொண்ட வருகிறது. அதற்கான திட்டமொன்று தயார்படுத்தப்பட்டுள்ளதுடன் விரைவில் அதிகாரிகள் குழுவொன்று வடக்கிற்கு செல்லவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் டி. திசாநாயக்க தெரிவித்தார்.
அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்து உடனடியாக அப்பிரதேசங்களில் மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகள் சம்பந்தமாக அறிக்கை சமர்ப்பிக்குசுமாறும் சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அரச அதிபர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வடக்கில் புதிதாகக் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் சிவில் நிர்வாகத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- வன்னியில் பல மாவட்டங்களிலிருந்தும் இலட்சக்கணக் கான மக்கள் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரிக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதற்கு முன் அந்தந்த பிரதேசங்களில் மாவட்டச் செயல கங்கள் பிரதேச செயலகங்கள், கிராம சேவை அதிகாரிகள் அலுவலகங்கள் திறக்கப்படுவது முக்கியம். இதற்கு முன்பதாக சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் மிதி வெடி அகற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது தொடர்பில் அங்குள்ள உயர் படை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
அதற்கு முன்னோடியாக சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் பாதுகாப்புப் படை அதிகாரிகளுடன் இணை ந்து பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களைப் பார்வையிட வுள்ளனர். இதனையடுத்து படிப்படியாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். எவ்வாறாயினும் இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவதற்கு முன்னர் அதற்கு வசதியாக அப்பகுதியில் அரச அலுவலகங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Sooriasegaram, Mylvaganam
மன்னாரில் 24 மணி நேரமும் மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் அது தொடர்பான அனுமதி தமக்கு இன்னமும் வழங்கப்படவில்லை என மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த சனிக்கிழமை அமைச்சர்களான ரிஷாட் பதியுதீன், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ ஆகியோரின் மன்னார் விஜயத்தின் போதே மேற்படி மீன்பிடித்தடை நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
எனினும் தாம் மீன் பிடித்தலுக்கு இன்று வரை அனுமதிக்கப்படவில்லை என மன்னார் மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்
thevi
மன்னாருக்கு தேர்தல் வரும் போது பாருங்கள்!