இலங் கையின் கிழக்கே மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களிலுள்ள சில முஸ்லிம் பிரதேசங்களில் மறைத்து வைக்கப்டப்டிருப்பதாகக் கூறப்படும் சட்ட விரோத ஆயுதங்களை களைவதற்கான விசேட வேலைத் திட்டமொன்றை பாதுகாப்பு தரப்பினர் ஆரம்பித்துள்ளனர்.
இதன் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்தில் சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை எதிர்வரும் ஜூலை 2ஆம் தேதிக்கு முன்னதாக கையளிக்க வேண்டும் என பாதுகாப்பு தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி கலாச்சார மண்டபத்தில் பொலிசாரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சட்ட விரோத ஆயுதங்கள் தொடர்பான விழிப்புணர்வு கூட்டத்தில் கிழக்கு பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் எடிசன் குணதிலக்க இதனை அறிவித்துள்ளார். ஆயுதங்கள் ஒப்படைக்கப்படாத பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
T Sothilingam
இலங்கையின் எந்தப்பாகத்திலும் எந்தப் பிரஜைகளும் ஆயுதங்கள் அல்லது போர்த்தளபாடங்கள் வைத்திருக்க அனுமதித்தலாகாது அரச படைகள் பொலீசார் மட்டுமே ஆயுதங்களை வைத்திருக்க முடியும் அதேவேளை இனிமேல் ஆயுதப்படைகளும் பொலீசாரும் ஆயுத அல்லது சட்டத்ததை துர்ப்பிரயோகம் செய்தால் கடுமையாகவும் தண்டிக்க சட்டவரைகள் உருவாக்கப்படல்வேண்டும்.
palli.
அதே போல் கருனா குழுவினரோ அல்லது டக்கிளஸ் அமைப்பினரோ ஏன் எந்த ஆயுததாரிகளும் ஆயுதம் வைத்திருக்கும் பதவியிலோ அல்லது வேலையிலோ அனுமதிக்க கூடாது எனவும் சொல்லுங்கோ; ஏனெனில் ஆயுதங்கள் மட்டுமல்ல பல ஆயுததாரிகளும் சிலர் அரசிடம் ஒப்படைத்து விட்டனர், எனி இதுவரை திருடனாய் திருடியவர்கள் இனி பொ…..ரா……… திருடுவார்கள், இதுவரை இயக்க அடையாளம், இனிமேல் அரசின் அங்கிகாரம்;
சந்தனம்
டக்ரளஷ்.கருணாவின் ஆயுதம் குறைந்ததமிழரைதான் கொன்றது ஆனால் யாழில் இளம்பரிதியின் தலைமையில் எவ்வளவுதமிழனை கொன்றது என்று பல்லிக்கு நிற்சயம் தெரியும் அவரும் சரண்டர் என்றவுடன் எனது தலையே வெடித்தது.புலியைஅழித்தபெருமையும் அவரையும் சாரும்.சந்தனம்
BC
//palli- அதே போல் கருனா குழுவினரோ அல்லது டக்கிளஸ் அமைப்பினரோ ஏன் எந்த ஆயுததாரிகளும் ஆயுதம் வைத்திருக்கும் பதவியிலோ அல்லது வேலையிலோ அனுமதிக்க கூடாது எனவும் சொல்லுங்கோ;//
என்ன பல்லி அவர் தெளிவாக சொல்லியுள்ளார். இலங்கையின் எந்தப்பாகத்திலும் எந்தப் பிரஜைகளும் ஆயுதங்கள் அல்லது போர்த்தளபாடங்கள் வைத்திருக்க அனுமதித்தலாகாது அரச படைகள் பொலீசார் மட்டுமே ஆயுதங்களை வைத்திருக்க முடியும் என்று. நான் T Sothilingam தின் கருத்தை வழி மொழிகிறேன்.
palli.
BC நானும் அவரது கருத்தை வழி மொழிந்து அத்துடன் இன்னும் சில விடயங்கள் சேர்க்கபடலாம் எனதானே சொல்லியிருந்தேன்: அரச படைகள் இதில்தானே அமைச்சர் முரளிதரன்; அமைச்சர் தேவானந்தா பாதுகாவலர்கள் அடங்குகிறார்கள்; அப்படியாயின் அவர்கள் அமைச்சர் பாதுக்காப்புக்கு மட்டும்தானே ஆயுதம் வைத்திருக்க வேண்டும்; அவர்கள் இதுவரை எத்தனை உயிர்களை தனிபட்ட அல்லது அமைப்பு பிரச்சனைக்கு பலி வாங்கிவிட்டன என பல்லி சொன்னால் அது எழுந்தமானம்; ஆனால் சங்கரியரோ அல்லது பிள்ளையானோ சொன்னால் அது கவலைதர கூடிய விடயம் இல்லையா?? அல்லது புலி மட்டும் சாகடித்தால் மட்டும்தான் அது உயிரா? மற்றதெல்லாம் என்ன …………
எனது நோக்கம் அவர்களை விமர்சிப்பதல்ல தமிழர் மீது எவரின் ஆயுதமோ அல்லது அடாவடிதனமோ அதிகாரமோ இருக்க கூடாது என்பதுதான்; என்னொரு புலியும் மகிந்தாவும் எமது இனத்துக்கு வேண்டாமே;
palli.
சந்தானம் கொலையில் கூட என்ன குறைய என்ன எல்லாமே உயிரின் மதிப்பும் மனிதனின் மதிப்பும் தெரியாத கோளைகள் செய்யும் செயல்தானே,? பல்லி புலியை விமர்சிக்காமல் மற்றவர்களை சீண்டினால் உமது வாதம் சரி; கொலையை எந்தமிருகம் செய்தாலும் முதல் விமர்சனம் பல்லியினதாகதான் இருக்கும்; அந்த வகையில் எனக்கு இளம் வளுதியின் அட்டகாசங்கள் பூரனமாக தெரியாது;ஆனால் அவர்தான் யாழ் முஸ்லீம் மக்களை வெளியேற்ற தலமை தாங்கி காவடி எடுத்தார்; அது பற்றி பல பின்னோட்டம் பல்லி விட்டுள்ளேன்: அதைவிட
உங்களுக்கு தெரிந்தால் எழுதுங்கோ படித்து தெரிந்து கொள்கிறேன்: அத்துடன் அவரது பெயர் வன்னி போருக்கு முன்பே புலிதரப்பில்
அடைபடவில்லை ;ஏனோ தெரியாது;ஆனால் அவர் சரண்டர் ஆகிவிட்டதாய் தாங்கள் தலை வெடிப்புக்கும் ஏதும் தொடர்பு உண்டா?
கண்டிப்பாக அவர் முஸ்லீம் மக்களுக்கு செய்த கொடூரத்துக்கு தண்டனை அனுபவிக்க வேண்டும்; ஆனால் அது கூட மரணமாக இருக்க தேவையில்லை என்பது பல்லியின் கருத்து; சந்தானத்துக்கு ஒரு சந்தேகம் பல்லி புலியென அப்படிதானே; அது மிக தவறு பல்லி புலியல்ல அதனால் மற்றவர்கள செய்யும் கொலைகளுக்கு பூமாலை சூடுபவனுமல்ல; மக்கள் மீது யார் மிதித்தாலும் தேசம் உள்ளவரை விமர்சிப்பேன்; அதனால் எனக்கு எத்தனை பட்டங்கள் இலவசமாக தந்தாலும் அன்புடன் ஏற்று கொள்வேன் ஒகேவா சந்தானம்.