தேசிய தொடர்புசாதன வலையமைப்பை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.
தொலைத் தொடர்புகள் கட்டளைகள் ஆணைக்குழுவுக்கு இதனை அமுல்படுத்துவதற்கான அதிகாரம் வழங்கப்படுகிறது. அத்துடன் தகவல் மற்றும் தொடர்புசாதன தொழில்நுட்ப நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு ஏற்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.