தமிழர் களுக்குச் சிறந்த எதிர்காலம் உண்டென்பதனை அரசாங்கம் யதார்த்தபூர்வமாக நிரூபிக்க வேண்டுமென இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் பெட்ரிக்கா புட்டீனிஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான போரில் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வாழ்கின்றனர். இவ்வாறு வாழும் தமிழ் சிறுபான்மை மக்களது உரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். படுகொலைகள், சட்டவிரோத கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
சமாதானத்தை ஏற்படுத்தக் கூடிய சிறந்த சந்தர்ப்பத்தை இலங்கை அரசாங்கம் கைநழுவ விடக் கூடாது.ஐக்கிய இலங்கைக்குள் தமக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாக தமிழ் மக்கள் உணரக் கூடிய வகையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.
விடுதலைப் புலிகள் தனிநாடு கோரி 30 வருடங்களாகப் போராடி வந்தனர். ஆனால் கடந்த மாதம் அரச படைகள் அவர்களைத் தோற்கடித்து விட்டனர். சுமார் 3 லட்சம் மக்கள் இன்று இடம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சர்வதேச சமூகத்தினால் இலங்கைக்கு அளிக்கப்பட்டு வரும் ஆதரவு குறித்து அரசாங்கம் திருப்தியடைய வேண்டும். இடம்பெயர்ந்தோர் முகாம்களில் சுதந்திரமாக பணியாற்ற தொண்டு நிறுவனங்களுக்குப் பூரண அனுமதியளிக்கப்பட வேண்டும்” என்றார்.
rony
அமெரிக்கர்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு என்பதை முதலில் அமெரிக்கா உறுதிப்படுத்தட்டும், அதன்பின்பு இலங்கையில் தமிழரின் எதிர்காலம் பற்றி யோசிக்கலாம்.