பாதுகாப்புப் படைப்பிரிவின் இரண்டு தலைமையகங்களை முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைக்கப்படும் முல்லைத்தீவு தலைமையகத்தின் கட்டளை அதிகாரியாக மேஜர் ஜனரல் நந்தன உடவத்தையும் கிளிநொச்சி தலைமையகத்தின் கட்டளை அதிகாரியாக மேஜர் ஜனரல் சன்ன குணதிலக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கில்; இராணுவத் தலைமையகங்களாக இதுவரை பலாலி மற்றும் வவுனியா இராணுவத் தலைமையகங்கள் செயல்பட்டு வந்தன. பொதுமக்களின் காணிகளில் உத்தேச இராணுவத் தலைமையகங்களை அமைப்பதற்கு பயன்படுத்தப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது.