கச்சதீவில் இலங்கை இராணுவ முகாம் : தீவிர கண்காணிப்பு அவசியமென மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கடிதம்

karunanithi.jpg“இலங்கை கடற்படை கச்சத்தீவில் மையம் அமைக்கவிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து மத்திய அரசு கவனிக்க வேண்டும். இதுதொடர்பாக தீவிரமாக கண்காணிக்க வேண்டியது அவசியம்” எனக் குறிப்பிட்டு முதல்வர் கருணாநிதி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கையில் போர் முடிவடைந்துள்ள நிலையில், புலிகள் மீண்டும் தலைதூக்காமல் தடுக்கும் முயற்சிகளில் படைகள் இறங்கியுள்ளன. இதன் ஒரு முயற்சியாக கச்சத்தீவில் கடற்படைத் தளத்தை அமைக்க இலங்கை அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனைக் கச்சத்தீவுக்கு அருகே சென்று மீன் பிடித்துத் திரும்பிய தமிழக மீனவர்களும் உறுதி செய்துள்ளனர்.

கச்சத்தீவில் இலங்கை கடற்படை முகாம் அமைந்தால் அது ஒட்டுமொத்த தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் சீர்குலைத்து விடும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், முதல்வர் கருணாநிதி இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், கூறியிருப்பதாவது:

“மாநில அரசு பல்வேறு முறை கேட்டுக்கொண்டும், இந்திய அரசுக்கு இலங்கை அரசு பலமுறை உறுதியளித்த நிலையிலும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்தும் தாக்கப்பட்டு வருவதை உங்கள் கவனத்திற்கு வருத்தத்துடன் கொண்டு வருகின்றேன்.

உங்களின் கனிவான பார்வைக்கு சில நிகழ்வுகளைத் தெரிவித்து அதன் அடிப்படையில் தொடர் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கின்றேன்.

மீன் இனப்பெருக்கத்திற்கு பாதகம் ஏற்படக்கூடாது என்பதற்காக, இயந்திரப்படகுகளையும், சாதாரண படகுகளையும் கொண்டு, ஆண்டுதோறும் சில கால கட்டங்களில் மீன் பிடிக்கக் கூடாது என்று தமிழக அரசு விதித்திருந்த தடையானது கடந்த மே மாதம் 29ஆந் திகதியுடன் முடிவடைந்தது.

அந்தக் காலகட்டங்களில் இலங்கையில் உள்ள அரசியல் நிலைமை மாறுதலடைந்துள்ளது என்பதால், எவ்வித சிரமமுமின்றி அமைதியாக மீன்பிடித்து தமது வாழ்வாதாரத்தைச் சீர் செய்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் ராமேஸ்வரம் பகுதி வாழ் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படும் அவலம்

ஆனால் அவர்கள் அதிர்ச்சியுறும் வகையில், இலங்கை கடற்படையினர், தொடர்ந்து தமிழக அப்பாவி மீனவர்களை கடுமையாகத் தாக்கி வருகின்றனர்.

தமிழக மீனவர்களின் படகுகளைச் சேதப்படுத்தியும், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை அபகரித்தும், நடுக்கடலில் வழி மறித்து அவர்களைக் கடுமையாகத் தாக்கியும், துன்புறுத்தியும் வருகின்றனர்.

இம்மாதம் 9ஆந் திகதி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் இரண்டு படகுகளைக் கைப்பற்றி, 9 மீனவர்களையும் பிடித்துச் சென்று, தலைமன்னார் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, அங்கே அவர்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாநில மற்றும் மத்திய அரசுகளின் தீவிர முயற்சியின் காரணமாக தூதரக மட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் அவர்கள் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளனர்.

இம்மாதம் 15ஆந் திகதி, ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவுக்கு அருகே மீன்பிடிக்கச் சென்றபோது, அவர்கள் இலங்கை கடலோர காவல் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டுள்ளதோடு, அவர்களின் மீன்பிடி வலைகளையும், பிடிபட்ட மீன்களையும் கைப்பற்றி உள்ளனர். அதன் பிறகு அவர்கள் துரத்தி அடிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு படகு, பதிவு எண் டி.என்/10/எம்எப்பி/660 என்ற படகு, கடுமையாக தாக்கப்பட்டு மோசமாக சேதப்படுத்தப்பட்டு, அதில் இருந்த மீனவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் மூழ்கடிக்கப்பட்டது.

பதிவு எண் : டி.என்/10/எம்எப்பி/573 என்ற படகும் மோசமாக சேதப்படுத்தப்பட்டுள்ளது. அதிஷ்டவசமாக இந்த இரு சம்பவங்களிலும் எவருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படவில்லை.

இந்தச் சம்பவங்கள், உண்மையிலேயே ராமேஸ்வரம் பகுதி மீனவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதோடு, அவர்கள் பாதுகாப்பற்ற நிலையிலும், உதவி பெற முடியாத நிலையிலும் ஒரு வித அச்சத்திலும் இருந்து வருகின்றனர்.

இதுவும் தவிர, இலங்கை இராணுவத்தினர் கச்சத்தீவு பகுதியில் இராணுவ மையத்தையும், கண்காணிப்பு கோபுரத்தையும் அமைக்க விரும்பி அதற்காக திட்டமிட்டுள்ளதாக நாளிதழ்களில் செய்தி வந்துள்ளது.

தன்னிச்சையான நடவடிக்கை

இலங்கை கடற்படையினரின் தன்னிச்சையான இந்த நடவடிக்கை மாநில அரசுக்கும், மீனவர்களுக்கும் பெருத்த வருத்தத்தை அளித்துள்ளது. இலங்கை கடற்படையின் அத்தகைய நடவடிக்கை, இந்திய அரசின் நிறுவனங்களால் கண்காணிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்திய அரசும், இலங்கை அரசும் 26.10.2008 அன்று ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி சர்வதேச கடல் எல்லையை தாண்டும் இருநாட்டு மீனவர்களும் அமைதியாக, எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாதவாறு நடைமுறை ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், அவர்கள் மீன்பிடி பணியை மேற்கொள்ளவும் அந்த ஒப்பந்தத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

இத்தகைய நிலையில், கச்சத்தீவு பகுதியில், இலங்கை கடற்படையினரின் தாக்குதல் தொடர்பான சம்பவங்களை அறியும் போது, அது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கின்றது.

எனவே, தூதரக அளவில் ஒப்புக்கொண்ட முடிவுகளை எந்த வகையிலும் மீறக்கூடாது என்றும், மீனவர்களைத் தாக்கக் கூடாது என்றும் இலங்கை அரசுக்கு தெரிவிக்குமாறு உங்களை கேட்டுக் கொள்கின்றேன்.

இத்தகைய பதற்றமான பிரச்சினையில் மீனவர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளது என்பதால், உடனடியாக இலங்கை அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் இந்தப் பிரச்சினையைக் கொண்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.” இவ்வாறு முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்

Show More
Leave a Reply to santhanam Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

15 Comments

  • rony
    rony

    இலங்கை அரசுக்கு சொந்தமான கச்சதீவில் இலங்கை இராணுவம் முகாம் அமைப்பதில் MR.கருணாநிதிக்கு எனோ பொறுக்கவில்லை.
    ஒருவேளை இவர் கச்சதீவுக்கு மகன் பெயரில் கள்ள உறுதி வைத்திருக்கிறாரோ.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    rony,
    கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்றாலும், தமிழக மீனவர்கள் கச்சதீவுப் பகுதியில் மீன் பிடிக்கவும், வலைகளை கச்சதீவில் உலர்த்தவும் ஒப்பந்தப் பிரகாரம் அனுமதி உண்டு. அதன் அடிப்படையில் கச்சதீவில் தற்போது அமையும் இலங்கை இராணுவ முகாமால், தமிழக மீனவர்களுக்கு ஏதாவது பாதிப்பு வராமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசிற்கும், தமிழக அரசிற்கும் உண்டல்லவா??

    Reply
  • சங்கர்சன்
    சங்கர்சன்

    கச்சதீவில் அமையும் ஸ்ரீலங்கா ராணுவமுகாமால் தமிழக மீனவர்களுக்கு பாதிப்பா? நம்ப முடியவில்லையே! புலிகளால் தான் பாதிப்பு என சொன்னார்களே, இப்பொ புலி இல்லையே? உண்மைகள் உறங்காது!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சங்கர்சன்,
    இல்லாத புலிகளா இப்போ ஒவ்வொரு பெயரில் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கினம்?? ஒரு வேளை ஆவியின் விளையாட்டோ??

    Reply
  • சங்கர்சன்
    சங்கர்சன்

    …..அதன் அடிப்படையில் கச்சதீவில் தற்போது அமையும் இலங்கை இராணுவ முகாமால், தமிழக மீனவர்களுக்கு ஏதாவது பாதிப்பு வராமல் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு …………

    இதுக்கு என்ன அர்த்தம் பார்த்திபன்? இலங்கை இராணுவ முகாமில் என்ன புலிகளா இருக்கப்போயினம்?

    Reply
  • palli.
    palli.

    கச்சதீவை சிங்கள மீனவர் யாரும் பாவிப்பதில்லை; அதை எம்மவர் மட்டுமே தமது பாதுகாப்புக்கும் (மீனவர்)கருவாடு காய போடவும்; காத்துள்ள
    காலங்களில்; பாதுகாப்புக்கும் பாவிப்பதாக இலங்கை தமிழ் மீனவர் ஒருவர் சொல்லி பல்லி கேட்டேன்; ஆக திரும்பவும் இலங்கை தமிழ் மீனவருக்கு ஆப்புதான்; இந்தியா புலி அழிப்புக்கு உதவியதுக்காக இலங்கை அரசு கச்சைதீவை இந்தியாவுக்கு பரிசாக கொடுக்க முன்வரலாம்; காரணம் இலங்கை அரசுக்கு (சிங்களவர்களுக்கு) என்றுமே கச்சதீவு தேவையில்லை;

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சங்கர்சன்,
    ஒரு விடயம் பற்றி கருத்தெழுதும் போது அவற்றைப் பற்றி கூடியளவு தெரிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியம். இலங்கைத் தமிழர்களின் மீன்பிடித் தடையால், தமிழக மீனவர்கள் பலர் எல்லை தாண்டி இலங்கைப் பகுதிகளுக்குள்ளும் வந்து மீன்பிடிப்பதை தமிழக மீனவத் தலைவரே பலமுறை பிபிசி தமிழோசையில் ஒப்புக் கொண்டுள்ளார். இதனைப் பயன்படுத்தி விடுதலைப்புலிகளும், தமிழக மீனவர்கள் மூலம் தமக்குத் தேவையான பொருட்களை தமிழகத்திலிருந்து கடத்தி வரச் செய்தனர். தற்போது விடுதலைப்புலிகளின் தலைமைகள் உட்பட பெரும்பகுதிகள் இலங்கை இராணுவத்தால் அழிக்கப்பட்டு விட்டாலும், எல்லை தாண்டி மீன் பிடிக்க வரும் தமிழக மீனவர்கள் அதைத் தொடரவே பார்ப்பார்கள். இதன் மூலம் தமிழகத்திலுள்ள புலிக்காய்ச்சல் பிடித்த சில கோமாளி அரசியல்வாதிகள், இலங்கையில் மிஞ்சியுள்ள சில விடுதலைப்புலிகளை உருவேற்றி தமது அரசியல்ப் பிழைப்பை தொடர ஏதாவது செய்ய முயற்சிப்பார்கள். எல்லாவற்றையும் கண்காணிக்க கச்சைதீவில் இராணுவ முகாமை இலங்கை அரசு அமைக்க முடிவெடுத்துள்ளது. இந்த இராணுவத்தால் நிச்சயம் எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்குப் பிரைச்சினை வரும்.

    Reply
  • சங்கர்சன்
    சங்கர்சன்

    ஒரு விடயம் பற்றி கருத்தெழுதும் போது அவற்றைப் பற்றி கூடியளவு தெரிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியம் என்பது எவ்வளவு உண்மை என நீங்கள் சொன்னது சரிதான். இலங்கைத் தமிழர்களின் மீன்பிடித் தடையால், தமிழக மீனவர்கள் பலர் எல்லை தாண்டி இலங்கைப் பகுதிகளுக்குள்ளும் வந்து மீன்பிடிப்பதாக தமிழக மீனவத் தலைவர் சொல்லவில்லை. அவர் சொன்னது தமது பகுதியில் மீன்கள் இல்லாததனாலே அவர்கள் அங்கு போகின்றனர் என்பது. தற்போது விடுதலைப்புலிகளின் தலைமைகள் உட்பட பெரும்பகுதிகள் இலங்கை இராணுவத்தால் அழிக்கப்பட்டு விட்டாலும், எல்லை தாண்டி மீன் பிடிக்க வரும் தமிழக மீனவர்கள் அதைத் தொடரவே பார்ப்பார்கள என சொல்கிறீர்களே. அப்போ மீன்பிடித்தடை என்ற கருத்து எங்கே பொருந்துகிறது? இதன் மூலம் தமிழகத்திலுள்ள ”புலிக்காய்ச்சல்” பிடித்த சில கோமாளி அரசியல்வாதிகள் அரசியல்ப் பிழைப்பை தொடர்வார்வதற்கே ஸ்ரீலங்கா ராணுவமுகாம் அமைக்கிரது கசதீவை கண்காணிக்கவேண்டும் என ஏதாவது செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள் போலும். இதில் கருணாநிதி முதன்மையானவர். அவரும் எல்லாவற்றையும் கண்காணிக்க கச்சைதீவில் இராணுவ முகாமை இலங்கை அரசு அமைக்க முடிவெடுத்துள்ளது. இந்த இராணுவத்தால் நிச்சயம் எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்குப் பிரைச்சினை வரும் என கதை விட்டு பார்க்கிறார். அப்போ அந்த முகாமை எவ்வாறு கண்காணிக்கலாம்? சுற்றிவர பைனாக்குலருடன் நிற்கலாமா? இந்திய வெளியுறவு அமைச்சர் சொன்னது போல அல்லது இந்திய நேவி சொன்னது போல ‘இவங்கள் ஏன் அந்தப்பக்கம் போறாங்கள்’ சொல்லலாமே? பார்திபன் இனித்தான் ஆரம்பம் அரசியல் நகர்வு போல இருக்கிறது நிலைமைகள்.

    Reply
  • msri
    msri

    கலைஞர் மத்திய அரசிற்கு எழுதிய கடிதத்தை> மகிந்தாவிற்கு எழுதியிருக்கலாம்!

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //இலங்கைத் தமிழர்களின் மீன்பிடித் தடையால், தமிழக மீனவர்கள் பலர் எல்லை தாண்டி இலங்கைப் பகுதிகளுக்குள்ளும் வந்து மீன்பிடிப்பதாக தமிழக மீனவத் தலைவர் சொல்லவில்லை. அவர் சொன்னது தமது பகுதியில் மீன்கள் இல்லாததனாலே அவர்கள் அங்கு போகின்றனர் என்பது.- சங்கர்சன்//

    நீங்கள் நேற்றைய பிபிசி செய்தியை மட்டும் கேட்டுள்ளீர்கள். ஆனால் அதில் கூட அவர் நீங்கள் சொன்னது தமது பகுதியில் மீன்கள் இல்லாததால் அங்கு போவதாகச் சொல்லவில்லை. தயவுசெய்து செய்திகளைக் கேட்கும் போதாவது ஒழுங்காகக் கேளுங்கள். நேற்றைய பிபிசி செய்தியில் தமிழக மீனவத்தலைவர் தமக்குத் தேவையான மீன் வகைகள் இலங்கைப் பகுதியில் கிடைப்பதாகவே சொல்லியுள்ளார். அதற்கு முன் தமிழக மீனவத் தலைவர் பல தடவை பிபிசி பேட்டியில் இலங்கை மீன்பிடித் தடையால் அங்கு நிறைய மீனுள்ளது. அதனால் எமது மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடிக்கின்றார்கள் என்று குறிப்பிட்டுமுள்ளார். அதனை நீங்கள் கேட்கவில்லையென்பதற்காக நான் சொன்னது தவறென்று ஆகி விடாது.

    மத்திய அரசும் தமிழக அரசும் பலதடவை தமிழக மீனவர்களை எல்லை தாண்டிச் சென்று மீன் பிடிக்க வேண்டாமென கூறியிருந்தாலும் பல தமிழக மீனவர்கள் எல்லையைத் தாண்டுவதை நிறுத்தவில்லை. அவர்கள் எல்லையைத் தாண்டுவதால் இலங்கை இராணுவத்தால் உயிராபத்து ஏற்படுவதை அவர்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் இந்திய கடலோரப் பாதுகாப்புப்படை அப்பகுதியில் தமது ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்தால் எல்லை தாண்டும் தமிழக மீனவர்களையும் தடுக்கலாம். இலங்கை இராணுவத்தால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளையும் தடுக்கலாம்.

    ஆனால் நீங்கள் இவற்றை வெறும் அரசியலாக்கி ஆதாயம் உண்டா எனப் பார்க்கின்றீர்கள். உங்கள் கனவுகள் நிறைவேறப் போவதில்லை.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    இடம்: சென்னை
    காலம்: அடுத்த இலெக்சன் காலம்….

    உடன்பிறப்பே….ஸ்ரீலங்கா ராணுவத்தின் கொடிய கோரப்பற்களில் இருந்து எமது தமிழ் மீனவராம் மானம் மற்றும் உயிர் காத்திட எமதன்னை சொக்கத்தங்கம் சோனியாவுக்கு காலக்கெடு விதித்து கடிதம் எழுதினேன்….

    என வரப்போகும் அறிக்கைக்கு ஏன் கருத்தெழுதி புடுங்குப்படுகிறீர்கள்?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    சாந்தன்,
    புலம்பெயர்ந்த தமிழீழ அரசு பற்றியும், பிரபாகரன் மீண்டு வந்து மாவீரருரையாற்றுவார் என்றும் வரும் பீலாக்களை மட்டும் நம்பிக் கருத்தெழுதினால் போதுமென்கின்றீர்களா?? அட தேசத்திற்கு இது தெரியாமல் போய்விட்டது…..

    Reply
  • palli.
    palli.

    கச்சைதீவை பொறுத்த மட்டில் சத்தம் இல்லாமல் மாமியார் இலங்கைக்கு கொடுத்ததை;ஆடம்பர மேள தாளத்துடன் மருமகள் திரும்ப பெற்று கொள்ள போகிறார்; இந்தியா வன்னி போருக்கு செய்த கைமாறுக்கு இலங்கை ஏதாவது செய்ய வேண்டாமா??

    உன்மையில் கச்சைதீவு அரசுகளுக்கு சொந்தமானது அல்ல; மீனவருக்கு தேவையானது; இது பற்றி பலர் ஏற்க்கனவே சொல்லி விட்டனர்; இப்போது அரசு கச்சை தீவை பாதுகாப்பு தளமாகதான் தொடங்கியுள்ளது இதில் இலங்கை எல்லைக்குள் தமிழக மீனவர்கள் வருவதால் அதை பார்க்கதான் அங்கு குடிகொண்டோம் என சொல்லுவது பொய் என்பது இரு அரசுக்கு தெரியும்; எப்படி பிரபாகரன் இந்தியாவிடம் பயிற்ச்சி எடுத்து அங்கே தன்னை வளர்த்து சகல உதவியையும் பெற்று கொண்டு பின்பு அவர்களுடன் மல்லுக்கு நின்றாரோ அதேபோல் இலங்கை அரசும் தனது தேவையான புலி அழிப்பு முடிந்த கையுடன் இந்திய அரசின் உறவை முறிக்க முயலக்கூடும்;அப்போது இந்தியா புலிமாதிரி ஒரு புலியையோ அல்லது ஒரு ப்ண்ணியையோம் உருவாக்கலாம் அதுக்கு இந்த கடல்பரப்பு மிகவும் தேவைபடும் (அந்தகால அனுபவம் கடல் படைக்கு) ஆகவேதான் ஆரம்பத்திலேயே கடல்பரப்பு பாதுகாக்கபடுகிறது; இதில் என்னொரு பகுதிதான் மீனவர் 15குதிரைபவர் மோட்டார்கள் மட்டுமே பாவிக்க அனுமதி வழங்கியமை; இந்த மோடாரை விட சில மீன்கள் வேகமாக ஓடும் என்பது சம்பந்தபட்ட துறைக்கு தெரியாதா?? அப்படியாயின் வடக்கேயோ அல்லது வின்னியிலோ எனி மாட்டு வண்டிதானா? பாதுகாப்பு மிக அவசியம் ஆனால் அதுக்காக இப்படி மாமியார் மருமகள் சண்டை போல் எடுத்ததுக்கெல்லாம் சந்தேகமா?

    இதுவே மீண்டும் ஒரு அவலத்தை உருவாக்கும்; சிங்கள மீனவர்களுக்கு என்ன கட்டுபாடோ அதே கட்டுபாடுதானே தமிழருக்கும் இருக்க வேண்டும்; அதைவிட்டு புலிபிறந்த மண்ணில் பிறந்ததால் இப்படி எல்லாம் தண்டிக்க வேண்டுமா?? ஆக கச்சதீவில் இலங்கை கடல்படை ஆக்கிரமிப்பு இந்திய கடல்படைக்கு ஒரு சந்தேகத்தை உருவாக்கி விட்டது;அதனால் மத்திய அரசு தனக்கே உரிய பாணியில் மானில அரசு மூலம் ஒரு எதிர்ப்பை உருவாக்கி அதைசாட்டு சொல்லி கச்சைதீவை மீண்டும் தனது கட்டுபாட்டில் வைத்திருக்க போகிறது; இது ஈழவர்க்கு சாதகமாக அல்ல தமது பாதுகாப்பு கருதியே ஆகும் இதுவே பல்லியின் ஊகம் வன்னி போருக்கு பின்பு எல்லாமே ஊகம்தானே;

    Reply
  • palli.
    palli.

    //அதனால் இந்திய கடலோரப் பாதுகாப்புப்படை அப்பகுதியில் தமது ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்தால் எல்லை தாண்டும் தமிழக மீனவர்களையும் தடுக்கலாம். இலங்கை இராணுவத்தால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் ஆபத்துகளையும் தடுக்கலாம். //
    இரு அரசாலும் ஏற்றுகொள்ள கூடிய தீர்வு பார்த்திபன் சொல்லியது;யதார்தமானதும் கூட ஆனால் இதுக்கு இலங்கை அரசு சம்மதிக்குமா? அதை அவர்கள் பின் பலம் அனுமதிக்குமா என்பதுதான் ????

    Reply
  • santhanam
    santhanam

    ……இது ஒரு அரசியல் நரிதந்திரத்தின் அடிக்கள் மக்களை வேறுதிசைக்கு கொண்டுசெல்வதற்கு டெல்லியும் கருணநிதியின் நாடகம்.

    Reply